இராத்திரியும், சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்-சுவேதனது எதிரிலே மத்திரதேசாபதியான சல்லியனது சேனைபோல, மாய்ந்தது- (இருந்தவிடந் தெரியாமல்)அழிந்தது; (எ-று.)-அம்மா-ஈற்றசை; அழித்தற்கரிய இருள் எளிதில் ஒழிந்தது பற்றியவியப்பிடைச்சொல்லென்றுமாம். முன்நடந்தவை, இப்பொழுது நடக்கிறவை, இனிநடப்பவை என்னும் அனைத்தையும் அறியும் திரிகாலஞானி, திருமால். கேள்வியாவது-கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்; இது-கற்றவர்க்கு அதனாலாகிய அறிவை வலியுறுத்துதலும், கல்லாதவர்க்கும் அவ்வறிவை உண்டாக்குதலும் ஆகிய சிறப்புடைமையால், எடுத்துக்கூறப்பட்டது. முற்று முணர்ந்த முழுமுதற் கடவுளுக்கு ஒருவரிடம் தாம் கேட்டறிய வேண்டுவது ஒன்றும் இன்றாயினும், ஆராத அருளாற் கொண்ட அவதாரவிசேடத்திற்கு ஏற்பக் கண்ணன் சாந்தீபினிமுதலியோர் பக்கல் நூற்பொருள்களைக் கற்றுங் கேட்டும் ஒழுகியதனால், பரத்துவம் சௌலப்பியம் என்னும் அவ்விரண்டு திருக்கலியாணகுணங்களும் விளங்க, 'முப்பொழுது முணர்கேள்வி முகுந்தன்' என்றார். இனி, மூன்று காலங்களிலும் உள்ளார் அனைவராலும்கேட்டு அறியப்படும் புகழுடைய கண்ணனெனினும் அமையும்; கேட்கப்படும் பொருள்க ளெல்லாவற்றினும் எம்பெருமான்புகழ் சிறத்தலாலும், செவிபடைத்ததற்குப்பயன் அதனைக்கேட்டலே யாதலாலும், அது, கேள்வியெனப்பட்டது. முதல்நாட் போரில் தாம் அடைந்த தோல்வி நீங்க மறுநாள்போர்செய்யவேண்டுமென்று எழுந்த மிக்கசிந்தையால், பாண்டவர் பக்கத்தார் பொழுதுவிடிவதை எதிர்நோக்கியிருந்தனரென்க. தேவர்கள் தத்தம்வாகனத்தின்மீது வானத்துவந்து போர்காணுதல் இயல்பாதலாலும், சூரியன் 'கண்' எனப்படுவனாதலாலும்,'இரண்டுபோருங் காண்டற்கு வருகின்றானென' என்று உத்பிரேட்சித்தார்.சுவேதனெதிர் மத்திரத்தான் வரூதினி மாய்ந்ததைக் கீழ் (இச்சருக்கத்து)ஐம்பத்துநான்காம்பாட்டிற்காண்க. சுவேதனது சிறந்த பராக்கிரமத்தில் ஆழ்ந்த சிந்தைஅவனிறந்த பின்பும் மீண்டதில்லையாதலால், கவி அதனை உவமை கூறியதோடுஇச்சருக்கத்தை முடித்தார். கேள்வி - தொழிலாகுபெயர். ஆங்கண் - அக்கண்என்பதன் மெலித்தலாகியஅங்கண் என்பதன் நீட்டல்; இனி, ஆங்குஎன்ற இடைச்சொல்லின்மேல், அண் -இடப்பொருள்காட்டும் விகுதியென்றலும் 'ஆன்' என்றது கண் என்பதனோடுசேர்க்கையில் திரிந்த தென்றலும் உண்டு. அர்க்கன், வரூதிநீ - வடசொற்கள். (77) முதற்போர்ச்சருக்கம் முற்றிற்று, |