பக்கம் எண் :

86பாரதம்வீட்டும பருவம்

வடிகளை, ஒரு நாள்உம் மறவாதார்ஏ-ஒருபொழுதும் மறவாதவர்களே, பிறவாதார்-
பிறப்பில்லாதவராவர்; (எ - று.)

     ஒருநாளும் மறவாதார்-இடைவிடாதுதியானிப்பவரென்றபடி. "பிறவிப்
பெருங்கடனீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்" என்றபடி எம்பெருமானை
இடைவிடாதுதியானிப்பவர்க்குப் பிறவியறுதலும் அங்ஙனம் தியானியாதவர்க்குப்
பிறவியறாமையுமாகிய இரண்டும் நியமமாதலால், 'மறவாதாரே பிறவாதார்' எனக்
கூறினார்.பிறவாதா ரென்றதனால், பிறப்பற்றுக் கருமசரீரமொழிந்து திவ்வியசரீரம்
பெற்றுமீளாதமுத்தியுலகஞ் சேர்ந்து நிரதிசயவின்ப மடைந்து அங்கு என்றும்
ஒருபடிப்படவாழ்வரென்பதாம். 'செய்யுட் கேற்புழி" என்றதனால், அவர் என்னுஞ்
சுட்டுப்பெயர்கோவியரென்னும் இயற்பெயரின்முன் வந்தது. வெண்ணெய்=
வெள்நெய் -உருக்காதநெய். பசுக்களைக் காப்பவனென்ற காரணத்தால்,
இடையனுக்கு -வடமொழியில் 'கோபன்' என்று பெயர்; அதன்பெண்பாலான கோபீ
யென்பதுவிகாரப்பட்டு, கோவியென்று ஆகி, பின்பு பலர்பால்விகுதியேற்றுக்
கோவிய ரென்றுநின்றது. நந்தன் என்ற வடசொல்லுக்கு - ஆனந்த
முடையவனென்றும், யஸோதாஎன்ற வடசொல்லுக்கு - (தனது
நற்குணநற்செய்கைகளால் தான் பிறந்த குலத்துக்கும்புகுந்தகுலத்துக்கும்)  புகழைத்
தருபவ ளென்றும் பொருள். மைந்தன் - அழகனும்,மிடுக்கனுமாம்.'அசோதையிரு
நயனங்களிக்க விளையாடும் மைந்தன்' என்ற விடத்து,'முழுதும் வெண்ணெய்
அளைந்து தொட்டுண்ணும்' என்ற பெருமாள்திருமொழிப்பாடலும் 'ஏரார்ந்தகண்ணி
யசோதை' என்ற திருப்பாவைத் தொடர்க்குவியாக்யாநமும் நினைக்கத்தக்கது.
ஒருநாளும் என்ற உம்மை - இழிவுசிறப்பு. ஏகாரம்- பிரிநிலை.

     வடமதுரைக்குச் சமீபத்திலுள்ள கோகுலபிருந்தாவனமெனப்படுகிற
திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களுக்கெல்லாந் தலைவர் நந்தகோபரும், அவரது
மனைவி யசோதையு மாவர்; இவர்கள், கண்ணனை வளர்த்த தந்தைதாயர்.
வசுதேவரும் தேவகியும் கம்சனால் சிறையிலிருத்தப்பட்டுத் தளை பூண்டிருக்கையில்
திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன் வழக்கப்படி கொன்றுவிடக் கூடுமென்கிற அச்சத்தால்
தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச்சிசுவை அதுபிறந்த
நடுராத்திரியிலேயே நந்தகோபரது திருமாளிகையிலே இரகசியமாகக்கொண்டு
சேர்த்துவிட்டு அங்கு அப்பொழுது யசோதைக்கு மாயையின் அம்சமாய்ப்
பிறந்திருந்ததொருபெண்குழந்தையை யெடுத்துக்கொண்டுவந்து விட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் இளம்பருவத்திலெல்லாம் கண்ணபிரான்
அவ்வாய்ப்பாடியிலேயே பலவகைத் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளின்
ரென்பது வரலாறு.

     இது முதற் பதின்மூன்று கவிகள் - மூன்று ஆறாஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
மற்றைநான்கும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரிய விருத்தங்கள்.     (110)