சீனர் சாவகர் சிங்களர் குலிங்கர் மாளவர் களமர் ஓட்டியர் குகுரர் கொப்பளர் கூபகர்- இந்நாட்டுவீரர்கள், புலிங்க சாலம்என - தீப்பொறிகளின் கூட்டம்போல, சதாகதி புதல்வனோடு -வாயுபுத்திரனான வீமனுடன், உறு போர் செய்தார் - மிக்கபோரைச்செய்தார்கள்; (எ - று.) போசம்என்பதுதவிரப் போசலமென்று ஒருதேசம் கூறப்படுதல்போல, கொப்ப மென்பது தவிரக் கொப்பளமென்பது ஒருநாடு போலும். இப்பாட்டில் முதல்மூன்று அடிகள் - அடைமொழியின்றிவந்தது ஒர் அழகாம். (174) 37.-வீமனுடன்வந்த பலமன்னர் சக்கரவியூகத்திலிருந்த வீரர்களை வெட்டுதல். பொருதபற்பலபாடைமன்னவர்பொன்னிலங்குடிபுகுதவே விருதவித்தகனுடன்வரும்பலபாடைமன்னவர்வெட்டினார் ஒருதிறத்தவலீமுகங்களுறுக்கியோடியுடன்றநா ணிருதர்பட்டதுபட்டிறந்தனர்நேமியுட்படுநிருபரே. |
(இ-ள்.) பொருத - (எதிர்த்துப்) போர்செய்த, பல்பலபாடை மன்னவர் - (துரியோதனன்சேனையிலுள்ள) பலபல பாஷைகளைப் பேசும் அரசர்கள், பொன் நிலம் குடிபுகுத- பொன்னுலகமான தேவலோகத்திலுள்ள வீரசுவர்க்கத்திற் குடியேறும்படி, - விருதன் வித்தகனுடன் வரும் பல பாடை மன்னவர் - வீரனும் அறிவுடையவனுமான வீமனுடன்வந்த அநேகபாஷைபேசும் (பலதேசத்து) அரசர்கள், வெட்டினார் - துணித்தார்கள்; (துணிக்கவே), நேமியுள்படும் நிருபர் - சக்கரவியூகத்திற் பொருந்திய (துரியோதனனைச் சார்ந்த) அரசர்கள்,- ஒரு திறந்த வலிமுகங்கள் உறுக்கி ஓடி உடன்ற நாள் - ஓரேவிதத் தன்மையுடையனவான (இராமனுடன் சென்ற) குரங்குகள் சினங்கொண்டு ஓடிப்போர் செய்த காலத்தில், நிருதர் பட்டது-அரக்கர்கள் அடைந்த துன்பத்தை, பட்டு-(தாம்) அடைந்து, இறந்தனர்-; (எ - று.) வலீமுகம் - வடசொல்: தோற்சுருக்கங்கொண்ட முகமுள்ளதென்று காரணப்பெயர். பி- ம்: ஒருதலத்து. ஒருதிறத்து, வலீமுகங்கொடு, சிலீமுகங்கள். (175) 38.-வீமன் தண்டுகொண்டு சக்கரவியூகத்தைப் பிளத்தலைத் துரியோதனன் காணுதல். மண்டு கொண்டலின் மிகவ திர்ந்தும ருத்தின்மைந்தனுருத்தெழுந் தண்டு கொண்டுவி யூக மாகிய சக்க ரத்தையு டைத்தலால் விண்டு கொண்டுமு ருக்கு மாருதி மீள வந்தன னாமெனக் கண்டுகொண்டனன்வெஞ்சினக்கனனின்றுகாய்தருகண்ணினான். |
(இ-ள்.) மருத்தின் மைந்தன் - வாயுபுத்திரனான வீமன்,- மண்டு கொண்டலின்- நெருங்கிய காளமேகம்போல, மிக அதிர்ந்து, மிகுதியாக ஆரவாரித்து, உருத்து- கோபித்து, எழும் தண்டு கொண்டு - உயர்ந்த (தனது) கதாயுதத்தால், வியூகம் ஆகிய சக்கரத்தை உடைத்தலால் - சக்கரவியூகத்தை உடைத்ததனால், வெம் |