பக்கம் எண் :

136பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) வளைய - சுற்றிலும், முத்து உதிர் - முத்துக்கள் சிந்துகிற, விழி
உடை-கணுக்களையுடைய, வரி சிலை - கட்டமைந்த (கரும்பு) வில்லையுடைய,
மதனன் -மன்மதனுக்கு, மைத்துனன் - அத்தைமகனான அபிமந்யு,- இளை என -
மேகம்போல, அவனிபர் பலரைஉம் புறம் இட அமர் பொருதபின்-அரசர்கள்
அநேகரையும்முதுகு கொடுக்கும்படி போர் செய்த பின்பு, இளைய வித்தகன்-
இலக்கணகுமாரன்,எதிர் உற வருதலும்- எதிரிற் பொருந்த வந்தவளவில்,-முளை
எயிறு-முளைத்துள்ளபற்களின், இள நிலவு-இளமையான சந்திரகாந்திபோன்னற
வெள்ளொளி, எழ -வெளித்தோன்றும்படி, அகல் வெளி முகடு உடைப்பது ஓர்
நகை செய்து-பரந்த(அண்டகோளத்தின்) மேல்முகட்டை (அதிர்ச்சியால்)
உடையச்செய்வதானஒருபெருஞ் சிரிப்பைச் செய்து, கடவினன் -(அவன் மேல்
தன் தேரைச்)செலுத்தினான்; (செலுத்தவே), உளை வய பரி இரதம்உம் இரதம்உம்-
பிடரிமயிரையுடைய வலிய குதிரைகளையுடைய இருவர்தேர்களும், உருள்கள்உம்
உடைய-சக்கரங்களும் உடையும்படி, உரனொடு ஒத்தின-வலிமையோடு
(ஒன்றையொன்று) தாக்கின; (எ - று.)

     சிறந்தகரும்பினின்று முத்துப் பிறக்குமென்பது நூற்கொள்கை யாதலால்,
கரும்புவில்லை 'வளையமுத்துதிர்விழியிடை வரிசிலை' என்றார், 'வளையமுத்துதிர்'
என்பதற்கு-தான் வளைதலால் முத்தைச்சொரிகிற எனினுமாம். விழி என்பது-
கண்ணை உணர்த்த, அது-கணுவைக் குறிக்கும்; இங்ஙனம் குறித்தல், வடநூலில்
'லக்ஷிதலக்ஷணா' எனப்படும்: தமிழ் நூலில் ஆகுபெயரிலக்கணத்திலாவது,
பிறகுறிப்புவகையிலாவது இது அறிந்து அடக்கத்தக்கது: (திவ்வியப்  பிரபந்தத்தில்,
பக்தியை "எட்டினோடிரண்டு" [பத்து] என்றும், சிந்தாமணியில் புத்திசேனனை
"திங்கள் [மதி]  விரவியபெயரினான்" என்றுங் கூறியவை இத்திறத்தன.)

   அத்தை மைந்தனை 'மைத்துனன்' என்பது, முற்காலவழக்கு; பாண்டவர்களைக்
கண்ணனுக்கு 'மைத்துனன்மார்' என்று பலவிடத்திலும் கூறுதல் காண்க. இங்கே,
'மதனன்' என்றது. மன்மதனது அமிசமான பிரத்யும்நனை.  சிவபிரான்
மன்மதனை யெரித்த காலத்தில் அம்மன்மதன் மனைவியான ரதீதேவி
மிகவருந்திப்பரமசிவனைச் சரணமடைந்து பலவாறு பிரார்த்திக்க, அக்ககடவுள்
அவளுக்கு மாத்திரம் அவன் ரூபமுடையவனாகவும், மற்றையோர்க்கு,
ரூபமில்லாதவனாகவும் இருக்கும்படி அருள்செய்ய, அவ்விரதி 'எண்கணவன்
என்னை உருவமுடையவனாய் மீளவும் கூடுங்காலம் எப்பொழுது?' என்று வினாவ,
'பூமிபாரநிவ்ருத்தியின் பெருட்டுத் திருமால் கண்ணனாகத் திருவவதரிக்கையில்,
அப்பிரானுக்குக் குமாரனாய்க் காமன் தோன்றி நின்பால் கூடுவன்' என்று
சிவபெருமான் அருளிச்செய்திருந்தான்:  அதன்படி பின்பு கண்ணனுக்கு மனைவியும்
திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென வரலாறு காண்க. பிரத்யும்நனது
தந்தையான கிருஷ்ணனுக்கு உடன்பிறந்தவளான சுபத்திரையினிடந்
தோன்றினமைபற்றி, அபிமன், மதனன்மைத் துன்னாவன். 'வளையமுத்துதிர்விழி'
என்ற சொற்போக்கில், முற்