போகட்டன; எழு கவந்தம்-எழுந்த உடற்குறைகள், பல பவுரிகள் இட்டன- அநேகவகைப் பௌரியென்னுங் கூத்தை யாடின; எதிர் அழி படை-எதிரிலே அழிந்தசேனைகள், இரு புறங்கள் இட்டன -இரண்டுபக்கங்களிலும் விழுந்தன; ஒழுகு செம்புனல் குருதியின் வரும் நதி -வழிகிற செந்நீராகிய இரத்தவெள்ளத்தாலுண்டானஆறுகள், உததிஉம் சிவப்பு உறும் வகை-(தான் சென்று சேருஞ்) கடலும் செந்நிறம்மிகும்படி, பெருகலின்-பெருகுதலால், முகிலின் வெம் குரல் கச தர துரகம்-மேகம்போலப் பயங்கரமான முழக்கத்தையுடைய யானைதேர்குதிரைகள், முழுகி-(அவ்விரத்தப்பெருக்கில்) அமிழ்ந்து, சுழி இடை இடை- (அதிலுள்ள)சுழிகளினிடந்தோறும், எஞ்சி யிட்டன - மறைந்து அழிந்தன; கரணம் - கூத்தின் ஓர்விகற்பம்; அதனை இடுதல் - ஆடுதல், மிகப்பலர் இறக்கையில் கவந்தம் எழுந்தாடுதல், முற்கூறப்பட்டது. பவுரி - தானே சுழன்று ஆடுங்கூத்து. (265) 128. - அபிமன் கதாயுதப்போரி லிளைத்தல். முறைமையின்றி யெத்தரணிபர்களுமெதிர் முடுகவந்துமுற் றெறுதலினவரவர், பொறையழிந்துகெட்டனைவரும்வெருவொடுபுறமிடும்படிக் கொருதனிபொருதபி, னிறைவலம்புரித்தொடைகமழ்புயகிரிநிருபதுங்கன்மைத் துனனுளம்வெருவர, வறைபெருங்கதைப்படைகொடுவலியுறவமர்புரிந்திளைத் தனனடலபிமனே. |
(இ - ள்.) எ தரணிபர்கள்உம்- எல்லா வரசர்களும், முறைமை இன்றி - (ஒருவர்பின் ஒருவர் என்ற) முறைமை யில்லாமல், முடுக-வேகமாக, எதிர் வந்து- (தன்னொருத்தனை) எதிர்த்து வந்து, முன் தெறுதலின்- முன்னே போர்செய்தலால்,- அடல் அபிமன்-வலிமையையுடைய அபிமந்யு,-அவர் அவர் - வந்த வந்த அவ்வீரர்கள், பொறை அழிந்து- (துன்பத்தைப்) பொறுக்குந் தன்மை யொழிந்து, கெட்டு-தோற்று, அனைவர்உம்-எல்லோரும். வெருவொடு-அச்சத்தோடு, புறம் இடும்படிக்கு-முதுகுகொடுக்கும்படி, ஒரு தனி - தன்னந் தனியாய், பொருத பின் - போர்செய்த பின்பு,-நிறை-நிறைந்த. வலம்புரி தொடை - நஞ்சாவட்டைப்பூமாலை, கமழ்- வாசனைவீசுகிற புயம்கிரி-மலைகள்போலுந் தோள்களையுடைய, நிருப துங்கன்-அரசரிற் சிறந்த துரியோதனனுக்கு, மைந்துனன்-உடன்பிறந்தவள் கணவனானசயத்திரதன், உளம் வெருவர-மனம் அஞ்சும்படி, அறை பெரு கதை படை கொடு-தாக்குகிற பெரிய கதாயுதத்தால், வலி உற-பலமாக, அமர் புரிந்து- (அவனுடன்)போர்செய்து, இளைத்தனன்-சோர்ந்தான்: ஏற்கனவே தன்னந்தனியனாய் அபிமன் பலருடன் பொருது இளைத்துள்ளானென்பதை, முன்னிரண்டடிகள் காட்டவந்தன, தெறுதல்- வருத்துதலென்பாருமுளர். அழிந்துகெட்டு-ஒருபொருட்பன்மொழியுமாம், அறை- சிறப்பித்துச்சொல்லப்படுகிற என்றுமாம். (266) |