பக்கம் எண் :

18பாரதம்துரோண பருவம்

 சிந்துபூபதிசெயத்திரதன்வெஞ்சினமுற
வந்துவெங்குசிலைவாளியிற்றகையவே.

இதுவும், வருங் கவியும் - குளகம்.

     (இ-ள்.) முந்து - சிறந்த, வாள் - ஆயுதப்பயிற்சியையுடைய, அபிமன்-, மூரி
வில் -வலியவில்லையுடைய,  அ குமரனை- அவ்விலக்கணனை, உந்து தேர்மீது
கொண்டு- செலுத்தப்படுகிற (தனது) தேரின்மேற் பிடித்து வைத்துக்கொண்டு,
ஓடலும் -வேகமாகச் செல்லுமளவில்-, - ஒரு புடை - ஒரு பக்கத்திலிருந்து, சிந்து
பூபதிசெயத்திரதன் - சிந்துதேசத்தரசனான ஜயத்ரதனென்பவன், வெம் சினம் உற -
கடுங்கோபமுண்டாக, வந்து- (எதிரில்) வந்து, வெம் குனி சிலை வாளியின் - கொடிய
வளைந்தவில்லினின்று  (எய்யப்படும்) அம்புகளால்,   தகைய - தடுத்துபோர்செய்ய,-
(எ - று) -" மன்னவன் றோளுரந் தொலைந்தபின்... தேர்ம(ன்)னர்,.... அமர்
செய்தார்" என அடுத்த கவியில் தொடர்ந்து முடியும்.

     முதலில் அபிமனது வில்லைத் தன்வில்வலியால் துணித்திட்டனனாதலால்,
'மூரிவிற்குமரன்' எனப்பட்டான். வாள் - ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது.
ஜயத்ரதன் - துரியோதனாதியருடன் பிறந்தவளான துச்சளையின் கணவன்;
சிந்துதேசத்தரச னாதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு ஒரு பெயர் வழங்கும்.பி-
ம்
:  வன் செயமுற.                                                (24)

25.- சயத்திரன் வலிதொலைய, பிறகு கர்ணன் முதலியபலர்
அபிமனொருவனை வளைதல்.

மடங்கலைவளைவதோர்சிலம்பிநூல்வலையெனத்
தொடங்கியமன்னவன்றோளுரந்தொலைந்தபின்
திடங்கொடோளங்கர்கோன்முதலியதேர்மன
ரடங்கவந்தபிமனாமொருவனோடமர்செய்தார்.

     (இ-ள்.) மடங்கலை - ஆண்சிங்கத்தை, வளைவது - சூழந்து
அகப்படுத்துவதான, ஓர் - ஒரு, சிலம்பி நூல் வலை என - சிலந்தி யென்னும்
பூச்சியின் நூலினாலாகிய வலைபோல, தொடங்கிய -(அபிமனை வளைந்துகொள்ளத்)
தொடங்கின, மன்னவன் - சயத்திரதராசன், தோள் உரம் தொலைந்த பின் -
(அவ்வபிமனாயுதங்களால் தன்)தோள்வலிமை அழிந்த பின்பு, - திடம் கொள்
வலிமையைக்கொண்ட, தோள் - தோள்களையுடைய, அங்கர் கோன் முதலிய -
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன் முதலான, தேர் ம(ன்)னர்-
இரதாதிபதிகளான அரசர்கள், அடங்க - எல்லோரும், வந்து - (எதிர்த்து) வந்து,
அபிமன் ஆம் ஒருவனோடு - அபிமந்யுவாகிய ஒருத்தனுடனே, அமர் செய்தார் -
போர் செய்தார்கள்

     சயத்திரதனுக்கும் அபிமந்யுவுக்கும் விளைந்த மகாயுத்தத்தில் தேருஞ் சிலையும்
அழிப்புண்ட அபிமன், கதாபாணியாய்ப் பாய்ந்து புடைத்துச் சயத்திரனை முடிபிடித்து
இழுத்துத் தேரினின்று கீழ்விழத் தள்ளினா னென்று பாரதவெண்பாவிற் கூறியுள்ளது.
மடங்கலை வளைவதோர் சிலம்பி நூல்வலை - இல்பொருளு வமை;