பக்கம் எண் :

196பாரதம்துரோண பருவம்

கந்தனிற்சிறந்தநின்கனிட்டனாளையே
மைந்துறப்பொருதவன்மகுடங்கொள்ளுமே.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) சிந்துவின் தலைவனை - சைந்தவனை, இந்திரன் காக்கின்உம் -
தேவேந்திரன் (வந்து) பாதுகாப்பனானாலும், ஈசன் காக்கின்உம்-சிவபிரான் (வந்து)
பாதுகாப்பனானாலும், தேவர் காக்கின்உம்-, கந்தனின் சிறந்த நின் கணிட்டன்-
முருகக்கடவுளினும் மேம்பட்ட உனது தம்பியான அருச்சுனன். நாளைஏ-
நாளைத்தினத்திலே, மைந்து உற பொருது-வலிமை மிகப் போர் செய்து, அவன்
மகுடம் கொள்ளும் - அவனது தலையைத் துணித்திடுவான்; (எ - று.)

     தந்தையும் தேவராசனு மாதலால் இந்திரனையும், அழித்தற்றொழிற் கடவு
ளாதலால்உருத்திரனையும் இங்குத் தலைமையாக எடுத்துக்கூறினார். காக்கினும்
என்றஉம்மையால், அவர்கள் காவாரென்பதும் விளங்கும். கநிஷ்டன்-வடசொல்;
இளையோன் - நாளையே, ஏ - பிரிநிலை. மகுடமென்ற கிரிடத்தின் பெயர் -
தானியாகுபெயராய், அதற்கு ஆதாரமான தலையைக் குறித்தது. தேவர் என்ற
வடசொல்-விண்ணுலகத்திலுள்ளவரென்றும்.  ஒளிவிளங்குபவ ரென்றும்
பொருள்படும். ஈற்று ஏ-தேற்றம். பி-ம்: இமயங்

190.-ஸ்ரீக்ருஷ்ணன் சூரியோதயத்துக்குமுன் கயிலைப்பொருப்பனைக்
கண்டு வருவோமெனல்.

வெயிலெழுவதன்முனிவ்விசயன்றன்னொடுங்
கயிலையம்பொருப்பனைக்கண்டுமீளவுந்
துயிலுணர்த்திடும்படிதோன்றுவோமெனா
வயிலணியாழியானவனொடேகினான்.

     (இ-ள்.) வெயில் எழுவதன் முன் - சூரியன் உதிப்பதன்முன்,
இவிசயன்தன்னொடுஉம்-இந்தஅருச்சுனனுடனே (சென்று), கயிலை அம்பொருப்பனை
- கைலாசகிரியையுடைய சிவபிரானை, கண்டு -  தரிசித்து, மீளவும்-பின்பு, துயில்
உணர்த்திடும்படி- (உன்னைத்) தூக்கத்தினின்று எழுப்பும்படி பொழுதுவிடிவதற்குள்),
தோன்றுவோம்-(இங்கு) வந்திடுவோம், எனா - என்று (தருமனை நோக்கிச்) சொல்லி,
அயில் அணி ஆழியான்-கூர்மையையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
கண்ணபிரான், அவனொடு-அருச்சுனனுடனே, ஏகினான்-(கயிலைக்குப் புறப்பட்டுச்)
சென்றான்: (எ - று.)

     இங்கே 'ஆழியான்-ஏகினான்' என்றதனால், அச்சயத்திரதனைத்தான்
நேரிலேஅழிக்கக் கண்ணன் வல்ைமையில்லாதவனல்லனென்றும், இந்தத்
திருவாழியேஅவனை அழிக்கும்பொருட்டுச் சூரியனைமறைத்தற்கு நாளை உதவுவ
தென்றும்.இங்ஙனம் கைலாச யாத்திரை சென்றது மனிதனாக அவதரித்தற்கு
உரியதொருதிருவிளையாட்டே யென்றும் குறிப்பிக்கப்படும். வெயிலெழுவதன்முன்
மீளவும்தோன்றுவோம் என இரண்டடித்துங் கூட்டுக. 'வெயிலெழுவது' என்பதனை,
காரியம்காரணத்தின்மேல்நின்ற உபசார வழக் கொன்னலாம். திருமாலின்
சுதரிசநமென்றசக்கரம் ஆயிரம்