பக்கம் எண் :

252பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) (19) முனைகள் தோறுஉம் - போர்க்களத்தின் இடங்கள்தோறும்,
முன்னர் முன்னர் வந்து வந்து - (ஒருத்தரினும் ஒருத்தர்) முற்பட்டு மிகுதியாகவந்து,
முந்துறும் - எதிர்ப்பட்டுப் பொருகிற, மன்னர்தம்தம்- அந்த அந்த அரசர்களது,
வில்உம் வேல் உம் வாள்உம் - வில்முதலிய ஆயுதங்கள்) வென்றி வாளியின் -
வெள்ளியைத்தருகிற (தனது) அம்புகளால், சின்ன பின்னம் ஆக-
பலபலதுண்டுகளாய்முறியும்படி, எய்து - அம்புதொடுத்துக்கொண்டு, செல்லும் -
செல்லுகிற, அ தனஞ்சயன் - அந்த அருச்சுனன்,- கன்னன் நின்ற உறுதி கண்டு-
(அவ்விடத்திற்) கர்ணன் (பெருமிதம் பட) நிற்கிற வலிமையைப் பார்த்து,- (20)
'விடதன்- விடதன் என்னும் அரசனும், வில்சுதக்கணன் - விற்போர்வல்ல
சுதட்சிணன் என்ற அரசனும், அலங்கல் வேல் அவந்தி மன்னன்- (போர்)
மாலையைத் தரித்த வேலாயுதத்தையுடைய அவந்தீ நகரத்து அரசனும், அவன்
புதல்வன் - அவனது புத்திரனும், ஆதி ஆ - முதலாக, வலம் கொள் வாகை
வீரர் -வலிமையைக்கொண்டவரும் வெற்றியையுடையவருமானவீரர்கள், சேனை -
சேனைகளொடு, வளைய- (தன்னைச்) சூழ்ந்துநிற்க, நம்மை விலங்கி அமர்
திளைக்கநின்ற - நம்மைக்குறுக்கிட்டு விடாப்போர் செய்ய நின்றுள்ள,
கன்னனை - கர்ணனை,கலங்கும் ஆறு - (அவ்வுறுதிநிலை) கலங்கும்படி,
பொருது - போர்செய்து வென்று,போக வேண்டும் - (நாம்) அப்பாற்
செல்லவேண்டும்,' என்று கருதி - என்றுஎண்ணி, (19) (அக்கருத்தை),
கண்ணனோடு உம் உரைசெய்தான்-;(எ -று.)

     பொருட்குஏற்றபடி சொற்களை யெடுத்துத் கொண்டுகூட்டிப் பொருளுரைத்தல்
தொல்காப்பியத்திற் கூறப்பட்ட செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் 'மாட்டு' என்னும்
உறுப்பாம். 19.- கண்ணனோடும், உம் - அசைநிலை. 20-சுதக்ஷிணன் -
கம்போஜராஜன் மகன். விந்தஅநுவிந்தர், அவந்தியரசர். இவை, வடநூலிற்
கண்டவை. பி -ம்: அவன்மகன்றனாதியா.                       (416,417)

21.- அருச்சுனன் கர்ணனை எதிரிடுதல்.

ஒக்குமென்றுசெங்கண்மாலுமுளவுகோல்கொடிவுளியைப்
பக்கநின்றபானுமைந்தன்முனையுறப்பயிற்றலு
மிக்கவெம்பதாதியோடுசூழநின்றவிருதருந்
தொக்குவந்துவிசயன்மீதுசுடுசரந்தொடுக்கவே.

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) (அங்ஙனம் அருச்சுனன்சொன்னவுடனே), செம் கண் மால்உம் -
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானும், ஒக்கும் என்ற- (அது) பொருந்தும்
என்று அங்கீகரித்து, உளவு கோல் கொடு - குதிரை தூண்டுங்கோலினால்,
இவுளியை- (தன்) தேர்க்குதிரைகளை, பக்கம் நின்ற பானுமைந்தன் முனை உற -
அருகிலேயுள்ள சூரியகுமாரனான கர்ணனது முன்னே சேரும்படி, பயிற்றலும் -
செலுத்தினவளவிலே,- மிக்க வெம் பதாதியோடு - மிகுதியான கொடிய
காலாட்சேனையுடனே, சூழ நின்ற - (அக்கர்ணனது) சுற்றிலும் நின்ற, விருதர்
உம் -வீரர்களும், தொக்கு வந்து