னுடன் கடும் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணி சேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தனது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டா னென்பது வரலாறு; ஜமதக்நிமகாமுனிவரைக் கார்த்தவீரியன் யாதொரு காரணமுமின்றிக் கொன்றிட்டா னென்றும் நூல்களிற் கதை கூறப்படும். வாணாசுரன் வரலாறு: - பாணாசுரன் சிவபெருமானருளால் ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்த வலிமையையும் சிவபெருமான் பரிவாரங்களோடு மாளிகைவாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும் பெற்றான். அந்தப் பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒருபுருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரரேகை மூலமாய்அந்தப் புருஷனைக் கிருஷ்ணனுடைய பௌத்திரனான அநிருத்தனென்று அறிந்து அத்தோழியினால் அநிருத்தனைத் தன் அந்தப்புரத்திலே கொணரப் பெற்று அவனோடு போகங்களைஅநுபவித்துவர, இச்செய்தியை அந்தப் பாணன் காவலாளராலறிந்து தன்சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாற்பொருது நாகாஸ் திரத்தினாற்கட்டிப்போட்டிருந்தான். அப்போது நாரதமகாமுனிவனால் நடந்த வரலாறுசொல்லப்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணபகவான், அநிருத்தனை மீட்டுவர எண்ணி, கருடன்மேல் ஏறிக்கொண்ட பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளினார். அப்போது அப்பட்டணத்தின் சமீபத்திற் காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, க்ருஷ்ணன் அவர்களை யெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு ஜ்வரதேவதை பாணனைக் காப்பாற்றுதற்பொருட்டுத் தன்னோடு யுத்தஞ் செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி இதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்டான். பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காத்திருந்த அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்து வர, அவர்களையும் நாசஞ்செய்தான். அப்பால் பாணாசுரன் போர், தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போர்புரிய, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவிவிட்டுக்கொண்டு சோர்வடைந்து போம்படிசெய்து, சுப்பிரமணியனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஒட்டி, பின்னர், அநேகமாயிரஞ் சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனது சக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிர மொழுக அறுத்து அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்தனால், அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளினா னென்பது. நான்குதோள் குறைவாகத் துணிக்கப்பட்டிருக்கவும், 'துணிப்புண்ட ஆயிரம்புயத்தவன்' என்றது, சுருங்கச்சொல்லல் என்னும் அழகுபடவாகும்; அன்றியும், அவை அருள் பற்றியே விடப்பட்டனவாதலும் அறிக. (435) |