தனால்,'புறவிகண் உயர்கோவலர்க்கு நடுநின்று முன்வளர்ந்த முகில்' என்றார். பி-ம்: வலம்புரிவலம்புரியே. (484) 88.- கண்ணனது சங்கநாதத்தாற் பகைவர்கள் மோகமடைதல். நாகர்பொற்றருவையம்புவியிலன்றுதருநாதன்வச்சிரவலம் புரிமுழங்குகுரன், மேகமொக்குமெனவெண்டிரையெறிந்துபொருவேலையொக்கு மெனவெங்கணுமெழுந்தபொழு, தாகமுற்றுறநெகிழ்ந்துபுளகம்புரியவாகவத்தெழுகடுஞ்சின மடிந்தவிய, மோகமுற்றனரெதிர்ந்துபொருமண்டலிகர்மோழைபட்டது கொலண்டமுகடுஞ்சிறிதே. |
(இ-ள்.) நாகர் - தேவர்களது, பொன் தருவை - பொன்மயமான பாரிஜாதவிருஷத்தை, அன்ற - முன்னொருகாலத்தில், அம்புவியில் தரு - அழகிய பூலோகத்திற் கொணர்ந்திட்ட, நாதன்- தலைவனான கண்ணபிரானது, வச்சிரம் வலம்புரி - வயிரம்போலுறுதியுள்ள சிறந்த சங்கம், முழங்கு- மிகஒலித்த, குரல் - ஓசை, மேகம் ஒக்கும் என - மேகத்தின் இடியோசையை யொக்குமென்று சொல்லும்படியாகவும், வெள் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என- வெண்ணிறமான அலைகளை வீசிமோதுகிற கடலின் ஆரவாரத்தை யொக்கு மென்றுசொல்லும்படியாகவும், எங்கண்உம் எழுந்த பொழுது - எல்லாவிடங்களிலுஞ் சென்றுபரவினபொழுது,- எதிர்த்து பொரு மண்டலிகர் - எதிர்த்துப்போர்செய்கிற பூமண்டலாதிபதிகளான அரசர்கள் (எல்லாரும்), ஆகம் முற்றுறநெகிழ்ந்து - உடம்புமுழுவதுந் தளர்ந்து, புளகம் புரிய - மயிர்ச்சிலிர்ப்புச் செய்யவும், ஆகவத்து எழு கடுஞ்சினம் - போர்செய்தலில் மிகுதியாகவுண்டான கொடிய கோபம், மடிந்து அவிய - குறைந்து ஒடுங்கவும், மோகம் உற்றனர்-; (அப்பொழுது), அண்டம் முகடுஉம் - அண்ட கோளத்தின் மேகமுகடும், சிறிது-, மோழை பட்டது கொல் - (சங்கின பேரொலியாலாகிய அதிர்ச்சியினால்) வெடிப்படைதது போலும்; (எ -று.) இப்பொழுது கண்ணன் பகைவர்களைத் தனது சங்கினொலியால்மயங்கி யழியச்செய்தமை, முன்பு தேவலோகத்தினின்றுபாரிசாததருவைப் பூலோகத்துக்குக்கொணர்ந்தபொழுதுஎதிர்த்த தேவர்களைத் தனது சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினமை போலு மென்பார்,கண்ணபிரானுக்கு 'நாகர்பொற்றருவை யம்பு வியி லன்றுதரு' என்ற அடைமொழிகொடுத்தார்; கருத்துடையடை மொழியணி, வரலாறு.- கண்ணன் நரகாசுரனை யழித்தபின்பு, அவனால் முன்பு கவர்ந்துபோகப்பட்ட (இந்திரன்தாயான அதிதிதேவியின்)குண்டலங்களை அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன் தோளின்மேலே தேவலோகத்துக்குச் செல்ல அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச்சகலஉபசாரங்களைச் செய்தும், தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம்மானுடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், இவள் அதனைக் கண்டுவிருப்புற்றவளாய், சுவாமியைப்பார்த்து,'பிராண நாயகனே! இந்தப் பாரிஜாததருவைத் துவாரகைக்குக்கொண்டு போகவேண்டும்' என்றதைக் கண்ணபிரான் திருச்செவிசாத்தி, |