பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்357

மருச்சுதன்வளைத்ததொர்தனுவினாற்சிலவடிக்கணைதொடுத்தலு
                                   மிரவுலாத்தரி.
துருத்தனும்வளைத்தனனெடியகாற்சிலைதொடுத்தனனிலக்கறு
                          தொடைகள் வாய்க்கவே.

     (இ-ள்.) அருக்கனை மறைத்தவர்- சூரியனைமறைத்தருளியவரான
கண்ணபிரான், கடவு-செலுத்துகிற, தேர்த்தலை - தேரிலேயுள்ள, அருச்சுனன்
முதல்- அருச்சுனன்முதலான, பல துணைவர் -  பலதம்பிமார்களும,் சாத்தகி-
சாத்தகியும்,செருக்கு உடைய மைத்துனர்-போர்க்களிப்பையுடைய
(திட்டத்துய்மன்முதலிய தமது) மைத்துனன்மார்களும், குமரர்-(தமது)
புத்திரரானஉபபாண்டவர்கடோற்கசன்முதலியோரும், காத்திடு-பாதுகாத்து வருகிற,
செருகளம்-போர்க்களத்தை, வெருகொள-அச்சங்கொள்ளும்படி, வளையும்
மாத்திரை-(அலாயுதனும்பல அரக்கர்களும்)சூழ்ந்தவளவிலே,-மருத்சுதன்-
வாயுகுமாரனான வீமன், வளைத்தது ஒர்தனுவினால்-வணக்கின (தனது)
ஒருவில்லினால், சில வடிகணை தொடுத்தலும்-கூரியசிலஅம்புகளைத்
தொடுத்தவுடனே, இரவு உலா திரி துருத்தன்உம்-இராத்திரியில்உல்லாசமாகத்
திரிகிற வஞ்சகனான அலாயுதனும், நெடிய சிலை கால் வளைத்தனன்-நீண்ட
விற்கழுந்தை வளைத்து, இலக்கு அறு தொடைகள் - எண்ணிக்கையில்லாத
அம்புகளை, வாய்க்க தொடுத்தனன் - பொருந்தப் பிரயோகித்தான்;

     துணைவர்-தம்பியர்மூவர் - தூர்த்த னென்ற வடசொல் விகாரப்பட்டது
வாய்க்க-பலிக்க எதிரிகள் மேற்சென்றுதைத்துத் தவறாது பயன்பட என்க. (594)

198.- பின்பு வீமன் அலாயுதனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருச்சுதன்வடிக்கணையமரர்மாற்றலன்வடிக்கணைதடுத்தும்
                                வல்லிரதமாற்றியும்
விருப்புடன்விரித்தணிதுவசம்வீழ்த்தியும்விறற்பரிகளைத்துணி
                                     துணிகளாக்கியு
முரத்தொடுசெலுத்தியவலவன்மாத்தலையுருட்டியுமணிச்
                                சிலையொடியநூக்கியு
மிருட்டொளியுடற்பலதுளைகளாக்கியுமிமைப்பொழுதினிற்றிறன்
                                   மடியமாய்த்தவே.

     (இ-ள்.) மருத் சுதன் வடி கணை-வீமசேனனது கூரிய அம்புகள்,-அமரர்
மாற்றலன் வடி கணை தடுத்துஉம் - தேவர்கட்குப்பகைவனான அவ்வரக்கனது
கூரிய அம்புகளைத் தடுத்தும், வல்இரதம் மாற்றிஉம்-(அவன் ஏறியிருந்த) வலிய
தேரை யொழித்தும், விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்திஉம்  - (அவன்)
விருப்பத்தோடு விரித்துக்கட்டிய கொடியை அறுத்துத் தள்ளியும் விறல் பரிகளை
துணிதுணிகள் ஆக்கிஉம்-வலிமையையுடைய குதிரைகளை வெட்டிப் பல
துண்டுகளாகச்செய்தும், உரத்தொடு செலுத்திய வலவன் மா தலை உருட்டிஉம்-
வலிமையோடு தேர் செலுத்தி வந்த சாரதியின் பெரிய தலையைப் புரளச்செய்தும்,
மணிசிலை ஒடிய தூக்கிஉம் - உறுதியான வில்லை ஒடிபடும்படி துணித்துத்
தள்ளியும்,இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கிஉம்-இருட்டுப்போன்ற
கரியஒளியையுடைய உடம்பைப் பலதுளைகளாகச்செய்தும், இமைபொழுதினில் -
ஒருமாத்திரைப் பொழு