செருவிலரியேறனையான்றிட்டத்துய்மனும்வெகுண்டு பொருசிலைவெங்கணைபொழிந்தான்போர்வேந்தர்பலர்மடிந்தார் |
(இ-ள்.) இருவர் பெரு சேனைஉம் - (இந்த) இருதிறத்தாரது பெரிய சேனைகளும், எதிர் எதிர் உற்று - ஒன்றற்கொன்று எதிராகப் பொருந்தி, ஆயுதம் ஏந்தி - ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு, ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர் - ஒருதிறத்தார் மற்றொருதிறத்தாரைச் சயித்தற்கு முடியாத போரை, உடற்ற, -உக்கிரமாகச்செய்ய, (அப்பொழுது), செருவில் அரி ஏறு அனையான் - போரில் ஆண்சிங்கத்தை யொத்தவனான, திட்டத்துய்மனும்-, வெகுண்டு - கோபித்து, பொருசிலை - போருக்குரிய வில்லினின்று, வெம் கணை - கொடிய அம்புகளை, பொழிந்தான் - சொரிந்தான்; (அதனால்), போர் வேந்தர் பலர் மடிந்தார் - போர்செய்கிற பகையரசர் அநேகர் இறந்தார்கள்; (எ-று.) - பி-ம் ஆயுதமெடுத்தங்கு. (56) 12.- திருஷ்டத்யும்நனாலழிந்த சேனை துரோணனை யடைதல். துன்முகனைப்புறங்கண்டுதுன்மருடன்முனைசாய்த்து கன்முகமாங்காந்தாரர்கலிங்கர்கவுசலர்நிடதர் புன்முகராயிளைத்தோடப்பொருதழித்தான்பொருதழிந்த மன்முகவெம்பெருஞ்சேனைமறையவன்பாலடைந்தனவே. |
(இ -ள்.) (திட்டத்துய்மன்), - துன்முகனை - துர்முகனென்னும் அரசனை, புறம்கண்டு - முதுகுகொடுக்கச்செய்தும்,- துன்மருடன் - துர்மர்ஷணனென்பவனது, முனை - போரை, சாய்த்து - ஒழித்தும்,- கல் முகம் ஆம் - கல்லின்தன்மையுடைய, காந்தாரர் - காந்தாரதேசத்துவீரரும், கலிங்கர் - கலிங்கதேசத்துவீரரும், கவுசலர் - கோசலதேசத்துவீரரும், நிடதர் - நிஷததேசத்துவீரரும், புல் முகர் ஆய் - வாடிய முகமுடைவர்களாய், இளைத்து ஓட - மெலிந்து தோற்று ஓடும்படியும், பொருது - போர்செய்து, அழித்தான் - சிதைத்தான்: பொருது அழிந்த -(அங்ஙனம்) போர்செய்து சிதைந்த, மன் முகம் வெம் பெரு சேனை -மிகுதியைத் தன்னிடத்திலுடைய கொடிய பெரிய சேனைகள், மறையவன்பால்அடைந்தன - துரோணாசாரியனிடம் சேர்ந்தன; (எ-று.) துர்முகன் என்பதற்கு - கொடிய முகமுடையவனென்றும், துர்மர்ஷணன் என்பதற்கு - (பகைவராற்) பொறுக்கவொண்ணாதவனென்றும் பொருள். இவ்விருவரும் துரியோதனன் தம்பியர். துன்மருடன் - மகாரதவீரரில் ஒருவன். கீழ் அணிவகுப்புச்சருக்கத்தில் இவனை மகாரதனாகவும், மற்றைத் துரியோதனன் தம்பிமார்களை அர்த்தரதராகவும் பிரித்து வகுத்துக் கூறியுள்ளமை காண்க. கல் - வலிமைக்கு உவமை. கல்முகமாங் காந்தாரர் - கல் நெஞ்சரான காந்தாரருமாம்; என்றது, அந்நாட்டரசனான சகுனி கொடுமனத்தவ னாதலால். 'கோஸலம் என்ற வடசொல்- க உஸல எனப் பிரிக்கப்பட்டு, படைத்தற்கடவுளான பிரமனும் உல்லாஸப் படத்தக்க தென்னும் பொருளைத் தரும். இப்பெயரால் அந்நாட்டின் சிறப்பு விளங்கும். நிடதம் - நிஷதம் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு - (பலருந்) தங்குமிட மென்று வடநூலார் |