பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அபிதான சூசிகை யகராதி198

துன்முகன்-12-12:துரியோதனன்
   தம்பி, வீமனாலிறந்தான்,14-140.
   இவன் மகன் சுவாது, 17-132.
நகுலன்- அசுவினீதேவர் புத்திரன்:
   11-8: சகதேவனுக்குஅண்ணன்,
   11-10: மாத்திரியின் மகன், 13
   175: புரவி வித்தகன்,16 . 42.
நாராயண கோபாலர்,12 - 7:
   16-67: இவர்களை அருச்சுனன்
   தொலைத்தான், 16 - 68.
நிவாதகவசர்அருச்சுனனாற் கொல்
   லப்பட்ட அசுரர்.
பகதத்தன்-விண்ணாடருக்கா அசுரரா
   தியரைப் போரில் வென் கண்ட
   வன், 4-30: பதினாயிரம் யானை
   வலியுடையான், 12-46: இவன்
   யானையின் பெயர் சுப்பிரதீபம்,
   12-52:   இது வெண்ணிற முடை
   யது, 12-60:  திருமாலை வழிபட்
   டுப்பெற்ற வேலைஅருச்சுனன்
   மீது இவன் எறிய, திருமால்மார்
   பில் ஏற்ற அருச்சுனனைப்  பாது
   காத்தான், 12-63: திருமால்
   தந்த படைகொண்டு அருச்சுன
   னாற் கொல்லப்பட்டான், 12,66.
பகன்- வேத்திரகீயத்தில் வீமனாற்
  கொல்லப்பட்டவன், 8-19: 14-
  178.
பலராமன்-கிருஷ்ணன்தமையனான
  இவன் எவர் பக்கத்துஞ்சேராது,
  வீதுரனோடுதீர்த்தயாத்திரை
  சென்றான், 17 - 47.
பன்னவாதை- வருணன் மனைவி
  யாயிருந்தவள், சுதாயுவின்தாய்,
  14-35.
பாண்டு- பஞ்சபாண்டவர் தந்தை,
  10-47.
பிங்கலசன்- துரியோதனன்தம்பி, வீம
  னாற்கொல்லப்பட்டான், 4-28,
பிருகன்- துரியோதனன் தம்பி, 14-
  176,
பூரி-பூரிசிரவாஎன்பதன் திரிபு என்பது
  பலர்கொள்கை; தனியே
  யொருவன் என்பாரு முளர்;
பூரிசவா-துரியோதனன் பக்கத்து
 

  அதிரதவீரன், சோமதத்தன்மக
  னென்ப,5-13. இவனை அருச்
  சுனன் க்ருஷ்ணன் மொழியால்
  தோள் துணித்தான்; பிறகு இவ
  னைச் சாத்தகி தலைதுணித்தான்,
  14-158.
பௌதுண்டன்- துரியோதனன்
  தம்பி,  8-6.
மகோதரன்
- துரியோதனன் தம்பி
  8-6.
மனுகுலச்சோழன் - மாகதனுயிரைக்
  கொண்டவன் 17-67, சோழன்
  சிறப்பு, 17-68
மாகவிந்து-துரியோதனன்தம்பி,8-6.
மாத்திரி- நகுலசகதேவரின் தாய்,
   13 -175.
யாகசேனன்- துருபதனைப்பார்க்க.
வாலவீமன்- துரியோதனாதியர்
 பக்கத்தான்: அருச்சுனனாலழியுண்
 டான், 15-4.
விகருணன்- துரியோதனன் தம்பி
 ஞானி.6-19, 20.இவனை
 மனமில்லாது வீமன்கொன்றான்:
 14-145, 151.
விசாலக்கண்ணன்-துரியோதணன்
  தம்பி, 8-6.
விடசெயன்- சகுனிதனயரி லொரு
   வன்; அருச்சுனன்பாற் பிராண
   னையிழந்தான், 12-69.
விடசேனன்- துரியோதனன் பக்
   கத்து வீரன், 14-130: 17-63
   கர்ணன்மகன், 17-169. இவனை
   அருச்சுனன் கொன்றான். 17-176.
விடதரன் - பாண்டவர்
   பக்கத்தவனான  
   ஓரரசன்; இவனைக் கன்னன்    
   கொன்றான்; 16-35.
விடதன்- துரியோதன் பக்கத்தவ
    னான ஓாரான்,14-20.
வீதுரன்-துரியோதனனுக்குச்சிறிய  
    தந்தை முறையாகுபவன்; இவன்
    துரியோதனன் கூறிய கடுஞ்
    சொல்லை யாற்றாது
    வில்லைமுறித்
    துப் போட்டிட்டான்; 8-14; 12-
    38: 14-64: தீர்த்த யாத்திரை
    சென்றான், 17 - 46.