பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்27

களையுஞ்சூழ்ந்த ஏழுகடல்கட்கும் அப்புறத்தில் வட்டவடிவாகச் சுற்றி
யிருப்பதொருமலை.                                           (45)

46.- கைகயனும் சுருதகீர்த்தியும் பொர , கிருதவர்மாவோடு பொருது
சிகண்டி தோற்றல
்.

கருதிவாய்த்ததுபோரெனாமெய்களித்தகைகயனுஞ்
சுருதகீர்த்தியுமுடன்மலைந்துதொடங்கினாரொருபாற்
கிருதபார்த்திவனுடன்மலைந்துசிகண்டிகெட்டனன்மா
விரதமேற்கொடியாடைவீழ்தரவேகினானொருபால்

     (இ - ள்.) 'போர்- (சிறந்த) யுத்தம், வாய்த்தது - நேர்ந்தது', எனா - என்று,
கருதி - எண்ணி, மெய் களித்த - மனங்களிக்கப்பெற்ற, கைகயன்உம் - கேகய
நாட்டரசனும், சுருதகீர்த்திஉம் - சுருதகீர்த்தி யென்பவனும், உடன் மலைந்து -
ஒருவரோடொருவர் எதிர்த்து, ஒரு பால் - ஒருபக்கத்தில், தொடங்கினார் -
(போர்)தொடங்கினார்கள்; சிகண்டி-,ஒருபால் - மற்றொருபக்கத்தில், கிருத
பார்த்திவனுடன் -கிருதவர்மாவென்னும் அரசனோடு, மலைந்து - போர் செய்து,-
மா இரதம்மேல் -பெரிய தேரின்மேற் கட்டப்பட்டுள்ள, கொடிஆடை-
கொடிச்சீலை, வீழ்தர -(அறுபட்டுக்) கீழேவிழும்படி, கெட்டனன்- தோற்று,
ஏகினான் - போனான்; (எ -று.)

     'கருதிவாய்த்தது போரெனாமெய்களித்த' என்ற அடைமொழியைச்
சுருதகீர்த்திக்கும் இயைக்க, கைகயன்பெயர் - விந்தன்; இவன், கௌரவர்
பக்கத்தான்.ஸ்ருதகீர்த்தியென்பதற்கு - பிரசித்தமான கீர்த்தியை யுடையவன்
என்றுபொருள்;இவன் , அருச்சுனனுக்குத் திரௌபதியிடம் பிறந்தவன்.
கொடியாடை - த்வஜபடம்.                                   (46)

47.- திட்டத்துய்மன் கிருபனை யெதிர்த்துத் தோற்றல்.

தருமபூபதிசேனையின்பதிசாபவாசிரியன்
கிருபனோடுமலைந்துவெஞ்சமர்கெட்டுநீடிரதம்
புரவிபாகுதரித்ததிண்சிலைபொன்றவன்னுயிரோ
டரிதுபோயினன்வேள்வியாகுதியங்கிவாய்வருவோன்.

     (இ -ள்.) ஆகுதி - நெய்ம் முதலியவற்றை விட்டு ஓமஞ் செய்யப்பட்ட,
வேள்வி அங்கிவாய் - யாகத்தீயினிடத்தில், வருவோன் - தோன்றினவனாகிய,
தருமபூபதி சேனையின் பதி - தருமராசனது சேனைக்குத் தலைவனான
திட்டத்துய்மன்,- சாப ஆசிரியன் -(கௌரவ பாண்டவர்க்கு முதல்)
வில்லாசிரியனான,கிருபனோடு - கிருபாசாரியனுடனே, வெம் சமர் மலைந்து -
கொடி போரைச்செய்து,- நீடு இரதம் - உயர்ந்த தேரும், புரவி - குதிரைகளும்,
பாகு - சாரதியும்,தரித்த திண் சிலை - பிடித்த வலிய வில்லும், பொன்ற -
அழியும்படி, கெட்டு -தோற்று,- அன்று அப்பொழுது, உயிரோடு அரிது
போயினன் -- அருமையாகத்தப்பி(ப்பிழைத்து) உயிருடன் போனான்; (எ -று.)-
வருவோன்=காலவழுவமைதி.                                     (47)