யாமல், அரிது - அருமையாக, பொருத பின் - போர்செய்தபின்பு, நிறம் ஒன்றும் - ஒளிபொருந்திய, ஏழுபகழி - (தருமபுத்திரன்எய்த) எழம்புகள், நிருபன் தன்மார்பு - துரியோதனனது மார்பில், குருதி பொழிய - இரத்தம் வழியும்படி, முழுகின-; (எ -று.)-முழுகுதல் - நெடுந்தூரம் பாய்தல். (76) 77.-துரியோதனனம்புகளினால் தருமன்மார்பிற் குருதிசொரிதல். விரிகின்றநீலகிரியிலிளவெயில் விழுகின்றதாரையனையவழ கொடு, சொரிகின்றசோரியுடையமகிபதி சுளிவின்றிமீளவொருகைந் நொடியினின், முரிகின்றநீடுபுருவநிகரென முனைகின்றசாபமுரியவிரைவொடு, தெரிகின்றகோல்கண்முழுகியறனரு டிருமைந்தன்மார்புகுருதி பொழியவே. |
இதுமுதல் மூன்றுகவிகள் - குளகம் (இ -ள்.) விரிகின்ற - பரந்த, நீலகிரியில் - நீலநிறமாகிய மலையில், இளவெயில்- இளஞ்சூரியகிரணம், விழுகின்ற-, தாரை- ஒழுங்கை, அனைய - ஒத்த, அழகொடு- அழகுடனே, சொரிகின்ற சோரி உடைய- (மார்பில்) வழிகிற இரத்தத்தையுடைய,மகிபதி- (துரியோதன) ராசன், சுளிவு இன்றி - வாட்டமில்லாமல், மீள - திரும்பவும்,ஒரு கை நொடியினில் - ஒருகைந் நொடிப்பொழுதிற்குள்ளே, முரிகின்ற நீடு புருவம்நிகர் என - நெறிகின்ற நீண்ட புருவம் ஒப்பென்னும்படி, முனைக்கின்ற சாபம் முரிய- பொருகின்ற வில் வளைவுற,(அதில்), விரைவொடு தெரிகின்ற - வேகத்தொடுஆராய்ந்து விடுகிற, கோல்கள் - அம்புகள், முழுகி - அழுந்துதலால், அறன் அருள்திரு மைந்தன் மார்பு - தருமராசன் பெற்ற சிறந்த குமாரனாகிய யுதிட்டிரனதுமார்பிலே, குருதி பொழிய - இரத்தம் வழியாநிற்க; நீலகிரி - இந்திரநீலரத்தினமயமான மலை: இது - கருநிறமுடைய துரியோதனனது வலிய பரந்த மார்புக்கும், அதில் விழுந்துவிளங்குகிற இளவெயில் -மார்பிற் பெருகிவழிகிற செந்நீர்க்கும் உவமை. புருவங்கள் கோபத்தால்நெறிப்படைதல் - அம்பையெய்யும்போது வில் அசைவுறுதற்கு உவமை. முழுகி =முழுக. (77) 78.- தருமன் துரியோதனனது தேர்முதலியவற்றை யழித்தல். மருமங்கள் சோரிவடியவிருவருமலைகின்றபோதின்மதுகை நிலையொடு, தருமன்குமாரனகைகொடவனிபர் தலைவன்குமாரனுரக துவசமு, மருமந்ததேரும்விசயவலவனு மடல்கொண்டுபாய்புரவியு மழிவுற, வுருமஞ்சநாணியெறியுமொலியெழவொளிவிஞ்சுநாலுப கழியுதையவே. |
(இ-ள்.) மருமங்கள் - மார்புகள், சோரி வடிய - இரத்தம் வழியும்படி, இருவரும் -, மலைகின்ற போதில்-,- தருமன் குமாரன் - தருமபுத்திரன், மதுகை நிலையொடு - வலிமையான நிலையோடு (நின்று), நகை கொடு - (கோபத்தாற்) சிரித்துக்கொண்டு,- அவனிபர் தலைவன் குமாரன் - அரசர்க்கு அரசனான திருதராட்டிரனது புத |