பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்57

அங்கு எழுந்தருளிப் பாண்டத்தைப் கொண்டுவரச்சொல்லி அதிலுள்ளதொரு
சோற்றுப்பருக்கையைத் தாம்உண்ட மாத்திரத்தில், அம்முனிவர்யாவரும்
வயிறுநிரம்பிப் பசி தணிந்து தெவிட்டித் தெக்கெறிந்து மனமிகமகிழ்ந்து இவர்களுக்கு
ஆசிர்வாதஞ் செய்துவிட்டுப் போயின ரென்பது. கண்ணன் தூதுசென்ற பொழுது
இந்திரனை வரவழைத்து, 'கர்ணன் தன்னுடன் பிறந்த கவசகுண்டங்களோடும்
இருந்தால் அவனைக்கொல்லுதல்எவர்க்கும் முடியாது: அருச்சுனன் சபதம்
பொய்த்துவிடும்; அவன் அருச்சுனனைக் கொன்றுவிடுவான்; ஆதலின், நீ
ஒருமுனிவடிவங் கொண்டு சென்று கேட்டவற்றையெல்லாங்கொடுக்கிற அவனிடத்துக்
கவசகுண்டலங்களை இரந்து வாங்கிவருவாய்' என்று சொல்ல, அங்ஙனமே அவன்
ஒரு விருத்த வேதியனுருவத்தோடு சென்று இரந்து அவற்றைப்பெற்றுவந்தானென்ப.
'பல்வினைகள்' என்றது - அசுவத்தாமனிடந் துரியோதனாதியர்க்கு
உள்ளநம்பிக்கையை உபாயத்தால் ஒழித்ததும், கர்ணனை நாகாஸ்திரத்தை
இரண்டாமுறை அருச்சுனன்மீது விடாதபடி குந்தியைக்கொண்டு வரங்கேட்பித்ததும்
முதலியன. மானவமுனிவன் - முன்கோபமுடைய முனியுமாம்.             (101)

11.களப்பலிநாககன்னிகைபுதல்வன் கருதலான்றனக்கு
                            நேர்ந் திடவுங்,
கிளப்பருந்திதியைமயக்கிவான்மதியங்கிளரொளியருக்
                            கனைக் கேட்ப,
வளப்படுந்திதியைமுந்துறவெமக்கே வழங்கிடும்படிமதி
                               கொளுத்தி,
யுளப்பொலிவுடனேவிசயனுக்கருளா லுருளுடைக்கொடி
                          கொடேரூர்ந்தாய்.

     (இ-ள்.) நாக கன்னிகை புதல்வன் - நாககன்னிகையாகிய உலூபியின்
புத்திரனான இராவான், கருதலான் தனக்கு - பகைவனாகிய துரியோதனனுக்கு,
களம்பலி - போர்க்களத்திற் பலி கொடுக்கப்படுதற்கு, நேர்ந்திடஉம் -
சம்மதித்திருக்கவும்,கிளப்பு அரு திதியை - மாற்றுதற்கு அரிய திதியை, மாற்றுதற்கு
அரியதிதியை -மயக்கி - மாற்றி, வான் - ஆகாயத்தில், மதியம்  - சந்திரன்,
கிளர்ஒளி அருக்கனை- விளங்குகிற ஒளியையுடைய சூரியனை, கேட்ப -
சேரும்படி, வளம் படும் -மேன்மைப்பட்ட, திதியை - அமாவாசையை, முந்துற -
முற்படும்படி செய்து,எமக்குஏ - எங்களுக்கே, வழங்கிடும்படி - (அவன் தன்னைப்
பலியாகக்)கொடுக்கும்படி மதி கொளுத்தி - (அவனுக்கு) அறிவை உண்டாக்கி,
உளம்பொலிவுடன் - மன மகிழ்ச்சியோடு, விசயனுக்கு - அருச்சுனனுக்கு,
அருளால் -கருணையினால், உருள் உடை கொடி கொள் தேர் -
சக்கரங்களையுடையதுவசத்தைக்கொண்ட தேரை, ஊர்ந்தாய் - ஓட்டினாய்;
(எ - று.) பி - ம்: திதியின்

     அமாவாசையாவது - சூரியனுஞ் சந்திரனும் கூடும்நாள்: கிருஷ்ணபக்ஷத்துப்
பதினைந்தாந்திதி. கேட்டல் - சேர்ந்துநண்பாதல்; இதற்கு இப்பொருள்,
கேண்மையென்பதன் சம்பந்தமாக வந்தது; இனி, வானத்திற் சந்திரன் சூரியனை
'இதுஎன்ன' வென்று கேட்கும்படி யென்றுமாம்.                      (102)