பக்கம் எண் :

70பாரதம்கன்ன பருவம்

            செய்யு மசரையு மிருமருங்கு மணிக ளாக்கி,
நுணிநிறுத்திச் சகுனிமுத லானோர் தம்மை நுவலருநா
                          ளுடுக்கோளி னடுவண்வான,
மணிநிறுத்தி வைத்ததெனப் பவள மேரு வரைநின்ற
                    தெனநின்றான் வண்மை வல்லான்.

     (இ-ள்.) வண்மை வல்லான் - தானத்தில் வல்ல கர்ணன்,- பார்க்கவன்
போல் -(அசுரசேனாபதியாகிய) சுக்கிரன்போல, பணி நிறுத்தி எழில் உறு பொன்
பாதகையானை - பாம்பை யெழுதி அழகுபொருந்திய பொற்கொடியையுடைய
துரியோதனனை, படாது ஒழி தம்பியரோடுஉம் -(பதினாறுநாட்களிலும்)
இறவாதொழிந்த தம்பியரோடுஉம் - (பதினாறுநாட்ளிலும்) இறவாதொழிந்த
தம்பிமார்களுடனே, அணி நிறுத்தி - (படைவகுப்பில்) ஒழுங்காக நிற்கச்செய்து,
கிருபனையும்-, அடு போர் செய்யும் அரசரைஉம்- கொல்லுகின்ற போரைச்செய்யும்
மற்றை அரசர்களையும், இரு மருங்குஉம் - இரண்டுபக்கங்களிலும், அணிகள்
ஆக்கி- வரிசைகளாக நிறுத்தி, சகுனி முதலானோர் தம்மை - சகுனி முதலிய
சிலவீரர்களை, நுணி நிறுத்தி - (படைவகுப்பின்) நுனியிலே நிற்கச் செய்து,
நுவல் அரு- (கணக்கிட்டுச்) சொல்லுதற்கு அரிய - நாள் - (இருபத்தேழு)
நக்ஷத்திரங்களும்,உடு - மற்றைத் தாரகைகளும், கோளின் - கிரகங்களும் ஆகிய
இவற்றின், நடுவன் -நடுவிலே, வானமணி - ஆகாயத்தில் இரத்தினம்போல்
விளங்குகிற சூரியனை, நிறத்திவைத்தது என நிறுத்திவைத்ததுபோலவும்,
பவளம் மேரு வரை நின்றது என -மேருமலைபோலப் பெரியதொரு பவழ
மயமான மலை நின்றதுபோலவும், நின்றான் -(சேனைமுகத்து விளக்கமாகவும்
கம்பீரமாகவும் நின்றான்) (எ -று.) - பி -ம்:-கிருபகிருதரையும்பல்போர்.     (123)

வேறு.

33.- போர்க்களத்திற் கன்னன் தானஞ்செய்தல்.

கோவல்சூழ் பெண்ணை நாடன் கொங்கர்கோன் பாகை வேந்தன்
பாவலர் மானங் காத்தான் பங்கயச் செங்கை யென்ன
மேவல ரெமரென் னாமல் வெங்களந் தன்னி னின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி.

     (இ-ள்.) கோவல் சூழ் - திருக்கோவலூரைச் சூழ்ந்த, பெண்ணை -
பெண்ணையாறுபாய்கிற, நாடன் - திருமுனைப்பாடி நாட்டையுடையவனும், கொங்கர்
கோன் - கொங்கநாட்டார்க்குத் தலைவனும், பாகை வேந்தன் - வக்கபாகையென்னும்
நகரத்துக்கு அரசனும், பாவலர் மானம் காத்தான் - கவிகளுக்கு (வேண்டியவற்றை
யெல்லாங் கொடுத்து அவர்கள்) மானத்தை (அழியாமற்) காப்பாற்றினவனுமாகிய
வரபதியாட்கொண்டானது, பங்கயம் செம் கை என்ன - செந்தாமரைமலர்போலுஞ்
சிவந்த கைபோல, வெம் களம் தன்னில் நின்ற - கொடிய போர்க்களத்தில் நின்ற,
வெம் களம் தன்னில் நின்ற - கொடிய போர்க்களத்தில் நின்ற, காவலன் கன்னன் -
காத்தலில்வல்ல கர்ணனது, கையும்-, மேவலர் எமர் என்னாமல்- (இவர் எமக்குப்)
பகைவர் (இவர்) எம்மைச் சேர்ந்தவர் என்ற பேதம் பாராட்டாமல் [யாவர்க்கும்
ஒருதன்மையாக], கனகம் மாரி - பொன் மழையை, பொழிந்தது - சொரிந்தது;