பக்கம் எண் :

124பாரதம்சல்லிய பருவம்

யழித்துஅரசுரிமை முழுவதும் பெறுதல் எளிதென்பதுபட இரண்டாமடியிற்
கூறியது.  உன் உடன்பிறந்தார் நால்வருள் அருச்சுனனிடத்து மதிக்கப்படுகிற
சிறிது பலபராக்கிரமமும் அவனுக்கு இயல்பாய் அமைந்ததன்று;  கண்ணன்
தேர் செலுத்துதலாலாகிய செயற்கை யாற்றலேயாம்.  அந்தக்கண்ணன்தானும்
நேர்படநின்று வெற்றிகாட்டுந் திறமுடையானல்லன்; மாயையை
மேற்கொண்டேதொழில்செய்யுந் தரமுடையா னென்று பழிப்பான்,
'மாயோனடத்து தேருடையநுசன்' என்றான்.

     உலகுஒருகுடைமாநீழல் வைத்தல் - பூமிமுழுவதையுந் தனியே
அரசாளுதல்.  வாளாண்மை - ஆயுதங்களாற் செய்யுந் திறமை; வாள் -
இங்கே, ஆயுதப்பொது.  மூவர் - தொகைக்குறிப்பு.

    இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும்,
மூன்றாஞ்சீரும், ஏழாஞ்சீரும் புளிமாச்சீர்களும், நான்காஞ்சீரும்,
எட்டாஞ்சீரும்கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியசந்தவிருத்தங்கள்.

     தனதனதானா தனத்த தானன தனதன தானா தனத்த தானன
என்பது,இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.                       (166)

167.-இருவரும் போர்தொடங்கல்.

நடையொழியாதோன்விறற்குமாரனு நயனமிலாதோன்முதற்
                                        குமாரனும்,
அடலொடுகார்வானிடிக்குமாறென வதிர்வுறவேயோடிமத்த
                                         வாரணம்,
விடையரிமாவேறெனப்ரதாபமும் விசயமும்மேன்மேன்
                                    மிகுத்துமேலிடு,
கடையுகநாள்வாயுவொத்துநீடியகதைகெழுபோராதரித்துமூளவே.

     (இ -ள்.) நடை ஒழியாதோன் - (எப்பொழுதும்) சஞ்சரித்தல்
இடையறாதவனான வாயுதேவனது, விறல் குமாரனும் - வெற்றியையுடைய
மகனான வீமசேனனும், நயனம் இலாதோன் - கண்களில்லாதவனான
திருதராட்டிரனது, முதல் குமாரனும் - முதல்மகனான துரியோதனனும்,-
அடலொடு கார் வான் இடிக்கும் ஆறு என - வலிமையோடு
கார்காலத்துமேகம் இடியிடிக்கும் விதம்போல, அதிர்வு உற -
அதிர்ச்சியுண்டாக, ஓடி - விரைந்து வந்து நெருங்கி,-மத்தம் வாரணம்
(என) -மதயானைகள்போலவும், விடை (என) - விருஷபங்கள் போலவும்,
அரி மாஏறு என - ஆண்சிங்கங்கள் போலவும், ப்ரதாபமும் விசயமும்
மேல் மேல்மிகுத்து - பராக்கிரமமும் வெற்றியும் மேன்மேல்
அதிகமாகப்பெற்று,-யுகம்கடை நாள் மேல் இடுவாயு ஒத்து -
கற்பாந்தகாலத்தில் மிகுதியாக வீசுகிறஊழிப்பெருங்காற்றைப் போன்று [மிக
உக்கிரமாய்], நீடிய  கதை கெழு போர்ஆதரித்து மூள - நீண்ட
கதாயுதங்களைக்கொண்டு செய்யும் போரைவிரும்பிமுயல; (எ - று.)

    மத்தவாரணம், ப்ரதாபம் - வடசொற்கள்.                    (167)