யுத்தத்தைஇன்றைக்கே முடிக்கக்கடவேனென்னும் எண்ணத்தோடு, பொர - போர் செய்யும்பொருட்டு, நீள் களம் புக்கனன் - பெரிய (குரு க்ஷேத்திரமாகிய)போர்க்களத்தை யடைந்தான்; (எ - று.)
சிவாநுக்கிரகத்தாற் பிறந்தவனாதலால், 'கடவுள்மருகன்' எனப்பட்டான். கிருதவர்மா என்ற பெயர் கிருதனென விகாரப்பட்டு நின்றது; வடமொழியில் 'நாமைகதேசே நாமக்ரஹணம்' எனப்படும். இவன் - துரியோதனன் கண்ணனைப் படைத்துணையழைக்கப்போனபொழுது அவ்வெம்பிரானால் அவனுக்குத் துணையாகக்கொடுக்கப்பட்ட யாதவசேனைக்குத் தலைவனாக அனுப்பப்பட்டவன். துரியோதனனுக்கு "ராஜ ராஜன்" என்று ஒருபெயராதலால், 'நிருபாதிபன்' எனப்பட்டான். (8) 9.-சல்லியன் தன்பக்கத்துச்சேனையை அணிவகுத்தல். தாமன்றராதிபர்கள்பலரொடும் வலப்புடைசலிப்பின்றியணிய விறல்கூர், மாமன் தராதிபர்கள் பலரொடுமிடப்புடை வகுப்பொடணியத் தினகரன், கோமைந்தன் மைந்தனிருவோ ரொடுஞ்சேனையைக் கொண்டுற வணிந்தனனிகற், சாமந்தர்மண்டலிகர் முடிமன்னர் சூழ்வரத்தரணிபதி பின்னணியவே. |
(இ -ள்.) தாமன் - அசுவத்தாமன், தராதிபர்கள் பலரொடும்- பூமிக்குத்தலைவரான அரசர்கள் பலருடனே, வலம் புடை - வலப்பக்கத்தில், சலிப்புஇன்றி - நிலைகுலைதலில்லாமல், அணிய - அழகிதாய்நிற்கவும்,- விறல் கூர் -வெற்றிமிக்க, மாமன் - சகுனியும், தராதிபர்கள் பலரொடும் - பலஅரசர்களுடனே, இடம்புடை - இடப்பக்கத்தில், வகுப்பொடு அணிய - ஒழுங்கோடு அழகிதாய் நிற்கவும், - தினகரன் கோ மைந்தன் மைந்தன் - சூரியனது சிறந்தகுமாரனான கர்ணனது புத்திரனான சித்திரசேனன், இருவோரொடும் - (தனது) உடன்பிறந்தவரான (சூரியவர்மா சித்திரகீர்த்தியென்னும்) இரண்டு பேருடனே, சேனையை கொண்டு-(தனது) சேனையை உடன்கொண்டு, உற - முன்னே செல்லவும்,- இகல் - வலிமையையுடைய, சாமந்தர் - சாமந்தரென்னும் அரசர்களும், மண்டலிகர் - மண்டலாதிபதிகளான அரசர்களும், முடி மன்னர் - கிரீடந்தரித்து அரசாளும் மகுட வர்த்தனராசர்களும், சூழ்வர - சுற்றிலும்வரவும் -, தரணிபதி- பூலோகத்துக்குத் தலைவனான துரியோதனன், பின் அணிய - பின்வகுப்பில் நிற்கவும்,-அணிந்தனன் - (சல்லியன் சேனையை) அணிவகுத்தான்; (எ - று.) கர்ணன்புத்திரர்மூவர் பெயரை 34 - ஆம் செய்யுளால் அறிக; அம்மூவருள் சித்திரசேனன் பிரதானனாதலால், 'அவன் மற்றை இருவரோடும் சேனையைக்கொண்டுற' என்றார்; 34-ஆங் கவியிலும் அவனையும் மற்றை யிருவரையும் வேறுபாடுதோன்றக் கூறுமாற்றை உணர்க. ஆதலால், 'கோமைந்தன் மைந்தரொடு மூவரொடு சேனையுங்கொண்டு' என்றபாடம் சிறவாது. ஒருபேரரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுடைய நாட்டின் கடைக்கோடியை ஆளுஞ் சிற்றர |