பக்கம் எண் :

138பாரதம்சல்லிய பருவம்

(தேவர்கள்சொரிந்த) புஷ்பவர்ஷம், சால - மிகவும், மேல் விழுந்தது -
வீமன்மேலே விழுந்தது: (எ - று.)

    கண்ணன்சொற்படி அருச்சுனன் காட்டிய குறிப்பையுணர்ந்த வீமன்
துரியோதனனது உயிர்நிலைத்தானமான தொடையிலே தாக்கவே, அவன்
அத்தாக்குதல்பொறாமற் பின்னிட்டனனாக, அது கண்ட தேவர்கள் இவன்
அழிதலும் பாண்டவர் வெல்லுதலும் தவறாவென்று கருதிக் களித்துத் துந்துபி
முழக்கித் தேவலோகத்துக் கற்பகமலர்களை வீமன்மேல் மழைபோல
மிகுதியாகச் சொரிபவராயினர்என்பதாம்.  சமயத்திற் குறிப்பறிந்துகொண்ட
நுட்பத்தைப் பாராட்டி, 'ஞானபண்டிதன்' எனக் கொண்டாடினார்.
மொழிமோன வண்குறி - வாயினாற்பேசாமல் தெரிவித்த நல்ல குறிப்பு. 
மொழி- பேசாதது பேசினது போலச் சொல்லப்பட்டது; மரபுவழுவமைதி;
[நன் -பொது. 58] "முன்னம் முகம்போல முன்னுரைப்பதில்" என்ற
விடத்தில்,'உரைப்பது' என்பதற்குப் போல, இங்கே 'மொழி' என்றதற்கு -
தெரிவித்தஎன்று பொருள்.  மௌநம் - வடசொல்; மோனம் என
விகாரப்பட்டது:கௌசிகன் - கோசிகன், கௌதமன் - கோதமன்,
கௌசல்யை - கோசலை,மௌலி - மோலி என்பனபோல.  துரியோதனன்
மானத்தையே தனதுஉயிர்க்காவலாகப் பாவித்து அதனைக் கைவிடாது
நின்றதனால், 'மானகஞ்சுகன்'எனப்பட்டான்.                       ()

185.-மீண்டும் வீமன்துரியோதனனது தொடையில் தாக்கல்.

மாறிநின்றசுயோதனன்மீளவும்வாயுமைந்தனைவாகுவுமார்பமும்
நீறெழும்படிசாடியபோதவனீணிலந்தனிலோடிவிழாதுதன்
ஊறின்மிஞ்சியபேருடலோடெதிரோடிவன்றொடைகீறிடமாறடும்
வீறுகொண்டகதாயுதம்வீசினன்வீரனம்புவிமீதுறவீழவே.

     (இ -ள்.) மாறி நின்ற - (ஆறு ஏழு அடி பின்னிட்டு) நிலைமாறி
நின்ற,சுயோதனன் - துரியோதனன், மீளவும் - மறுபடியும், வாயு
மைந்தனை -வீமனை, வாகுவும் மார்பமும் நீறு எழும்படி சாடியபோது -
தோள்களும்மார்பும் பொடிபடும்படி தாக்கியபொழுது, அவன் - வீமன், நீள்
நிலந்தனில்ஓடி விழாது - நீண்ட நிலத்தில் ஓடி விழாதபடி (அரிதில் நின்று),
தன் - தனது,ஊறின் மிஞ்சிய பேர் உடலோடு - வலிமையால் மிக்க பெரிய
உடம்புடன்,எதிர்ஓடி - எதிரில் ஓடிவந்து, வல்தொடை கீறிட -
(துரியோதனனது)வலியதொடை பிளக்கும்படியாகவும், வீரன் அம் புவிமீது
உறவீழ - வீரனானதுரியோதனன் அழகிய தரையிலேபொருந்த
விழும்படியாகவும், மாறு அடும்வீறு கொண்ட கதா ஆயுதம் -
பகைவரையழிக்கும் மேன்மையைக் கொண்டதன் கதாயுதத்தால், வீசினன் - தாக்கினான்; (எ - று.)

    சுயோதநன் - நல்ல போரையுடையவனென்று பொருள்படும்; வெற்றி
நிகழும்படி போர்செய்ய வல்லவனென்க.  'ஊறின்மிஞ்சிய பேருடல்'
என்பதற்குத் துரியோதனன் தாக்கியதனாலாகிய தழும்புகளால் மிக்கபெரிய
உடம்பு என்று பொருளுரைப்பினுமாம்.  மாறு - மாற்றார்க்குப் பண்பாகுபெயர்.
அம்புவியென்று பூமிக்குப் பொலி