'போரில்வந்த பாவந்தொலையத் தவஞ்செய்து உய்ந்திடுவாய்' என்று உறுதிமொழி கூறினான். இங்ஙனங் கூறியதனால், துரியோதனனுக்கு அந்திமதசையிலுண்டான நல்லெண்ணம் வெளியாம். உயர்விடை நல்குதல் - மரியாதையோடு அனுமதிகொடுத்து அனுப்புதல். (230) 27.-கிருதனும் கிருபனும்சென்றபின் துரியோதனன் சஞ்சயனோடு பேசுதல். வெஞ்சராசனவீரனுமாமனும் நெஞ்சமாழ்குறநின்றவர்போனபின் கஞ்சநாண்மலர்க்கண்புனல்சோர்வருஞ் சஞ்சயாரியன்றன்னொடுகூறுவான். |
(இ -ள்.) வெம் சராசன வீரனும் - கொடிய வில்லில்வல்ல வீரனான கிருதவர்மாவும், மாமனும் - (அசுவத்தாமனது) மாதுலனான கிருபாசாரியனும், நெஞ்சம் மாழ்குற நின்றவர் - மனங்கலங்க நின்றவர்களாய், போனபின் - (அவ்விடம்விட்டுச்) சென்றபின்பு, - நாள் கஞ்சம் மலர் - அன்று மலர்ந்த [புதிய] தாமரைமலர்போன்ற, கண் - கண்களினின்று, புனல் சோர்வரும் - நீர்பெருகப்பெற்ற, சஞ்சய ஆரியன் தன்னொடு - சஞ்சய முனிவனுடனே, கூறுவான் - (துரியோதனன் சிலவார்த்தை) சொல்பவனானான்; (எ - று.) கீழ்க் கவியினால் அசுவத்தாமன் துரியோதனனிடம் விடைபெற்றுச் சென்றமை பெறப்பட்டதனால், மற்றைய கிருதனும் கிருபனும் சென்றதனை இதிற் கூறினார். கீழ்க்கவியில் அசுவத்தாமனது பிரஸ்தாபம் வந்ததனால், இக்கவியில் 'மாமன்' என்றது, அவனுடைய மாமன்மேல் நின்றது. இனி 'வெம்சராசனவீரன்' என்பதற்கு - அசுவத்தாமனென்றே உரைத்து, கிருதவர்மாவை உபலட்சணத்தாற் பெறவைத்தலும் உண்டு. (231) 28.-இரண்டு கவிகள் -சஞ்சயனை நோக்கித் துரியோதனன் கூறியன. யாயொடெந்தையிரக்கமுறாவகை ஆயவின்சொலினாற்றுயராற்றிட நீயெழுந்தருணின்மொழிவல்லபந் தூயசிந்தைச்சுரர்களும்வல்லரோ. |
(இ -ள்.) யாயொடு - (எனது) தாயும், எந்தை - (எனது) தந்தையும், இரக்கம் உறா வகை - (யாங்கள் இறந்ததனால்) விசனம் மிகாதபடி, ஆய இன்சொலினால் - பொருந்திய இனிய வார்த்தைகளால், துயர் ஆற்றிட - (அவர்களுடைய) துன்பங்களைத் தணிப்பதற்கு, நீ எழுந்தருள் - நீ சென்றருள்வாயாக; நின் மொழி வல்லபம் - பேசுவதில் உனக்குள்ள வல்லமையை, தூய சிந்தை சுரர்களும் வல்லரோ - பரிசுத்தமான மனத்தையுடைய தேவர்களும் உடையரோ? [அல்லரென்றபடி]; (எ - று.) யாய்- காந்தாரி, எந்தை - திருதராஷ்டிரன், ஆய இன்சொல் - பயனில்நன்மையானவையும் சமயத்துக்கு ஏற்றவையும் கேட்பதற்கு |