வானவர்குலப்பகைதொலைத்தவன், சல்-66: வானவர்ஊர்புரந்தவன், சல்-180: வாசவன்தருபூண்அணிமார்பன்,சல் - 181: வான்அரிகாளை, சல் - 183. இராமன் -தொட்டவரிசிலைத்தடக்கையின், தொடுத்தகணைதப்பாது, சல் - 73: கடல்நோகும்படிபாணம்விட்டான், சல் - 74: போரிலங்கைவழிகாணப் பொருதவாளி எரிபுவனம் [நீர்] நுகர்ந்தது, சல்- 137.
உத்தமோசா -[உத்தமௌஜஸ்]:- உத்தமபானுவென்றும் வழங்கப்படுவன்: அசுவத்தாமனால் கொல்லப்பட்டபாஞ்சாலராசரிலொருவன், துருபதனுக்குஉறவினன், சௌ-11.
உதாமன் -[யுதாமந்யு]:- துருபதனுக்கு உறவினனாகிய பாஞ்சாலராசன், அசுவத்தாமனால் கொல்லப்பட்டான்,சௌ-11.
உபபாண்டவர் -பஞ்சத்திரௌபதேயர், சௌ - 14: பஞ்சபாண்டவர்க்குத் திரௌபதியினிடம் பிறந்தகுமாரரைவர், இவர்கள் பெயர் - முறையே விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன்,சயனேனன் என்பன; பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்று பெயர்வழங்குதலும் உண்டு. இவர்கள் வடிவத்தில் தம்தம் தந்தையை முற்றிலும் ஒத்திருப்பர்,சௌ - 20: இவர்களை அசுவத்தாமன் தலைதுணித்தல், சௌ-13. உலூகன் -புரோகிதன்; [பாண்டவர்களால் துரியோதனாதியரிடம் முதன்முதலில் தூதனாய் அனுப்பப்பட்டவன்];இவன் சொற்படி தருமன் கன்னன் முதல் யாவருக்கும்அந்திமக்கிரியைகளைச்செய்தான்;சௌ - 44.
கயமுனி -சஞ்சீவிநிமந்திரத்தைஅசுரர் குருவான சுக்கிரனிடமிருந்து கற்றுவந்து தேவரைக் காத்தவன்[பிருகஸ்பதியினுடைய மூத்தமகன்]; சல் - 101. கர்ணன் -வெயிலோன்மகன், சல்- 4, 9, 10, 11, 34: அங்கர்கோன், சல்-40. கர்ணனுடையகுமாரர்கள் -சித்திரசேனன், சூரியவர்மன், சித்ரகீர்த்தி முச்சுடரோடொப்பர்; நகுலனோடுபொருதுஇறந்தனர், சல் - 34.
காந்தாரி -ஐயிருபதரசரையும் அளித்துவாழ்ந்துவாடிய மெய்ச்சவுபலை, சௌ - 35: சேனாவிந்துவைமுதலாம்மைந்தரைவரும் இறந்தநாட்டொட்டு ஆனாமற்சொரிகண்ணீராறு பெருங்கடலாக வழுதுசோர்வாள்,சுபலன் பாவை, சௌ-36: காரிருக்குமலரளகத்தினள், சௌ - 41. காளிந்தி -யமுனாநதி, சல் - 162. [களிந்தம் என்னும் மலையினின்று உண்டாவது.]
கிருட்டிணன் - அலக்கைவித்த கனிளவல்; அருச்சுனனுக்குத் தேரோட்டினான், சல்-51: பொதுவியர்தனந்தோயும்தூர்த்தன், சல் - 52: தண்துழாய்முடிமாயவன், சல் - 56: நாமமாயிரமுடைக்கடவுள், சல் - 66: பின்னைக்கு வாய்த்தகணவன், சல் - 113: கருமுகிலனையமேனிக் கண்ணன், சல் - 127: நேமிநெடியவன்,தன்னைச்சேர்ந்தோர் இடுக்கணும் இளைப்புமாற்றநின்றவன், சல்-128:புவனம்உண்டு உமிழ்ந்தோன், சல்-137: கொண்டல்நிகர்திருமேனிக்கோபாலன், சல்-144:பொய்விடை ஏழ் அடர்த்தோன், ஆனிரைப்பினபோய் வேயூதுந் திருநெடுமால், சல் - 146: மதுரைநகர்க்கரசானமாயன், சல் - 148: நராந்தகன், |