சல்-151:நிலவொளியால்சோமனுக்கு நிகரானோன் இளவல், சல்-152: முகில் ஒப்பானதிருமேனியும்பர்பிரான், சல்-159: கனத்தில்வடிவுடையோன், சல்-161: துரியோதனன்உயிர்நிலையை அருச்சுனன்மூலம் வீமனுக்கு இங்கிதமாகத் தெரிவித்தான், சல்-181-183:போர்தோறும் துரியோதனனுக்குப் பிழைசெய்தவன், சல் - 189: இதயமலர்தோறுமேவருநாயகன், சல்- 193: துரியோதனனுக்காகப் பரிந்து வீமன்மேல் போரிடச்சென்ற பலராமனைச் சமாதானப்படுத்தினான், சல்-194, 195: அசுவத்தாமனிடமிருந்து காக்கப் பாண்டவர்ஐவரையும்தனியிடத்துக்கு அழைத்துச்சென்றான், சல்-198: வீரனான அசுவத்தாமன்மேல் துரியனுக்குநம்பிக்கையில்லையாம்படி செய்தவன், சல்-201: தப்பாமல் நிலமடந்தை தன் பாரம்அகற்றுவித்த சார்ங்கபாணி, சௌ-38: பாண்டவரைவருயிரையும் பாதுகாப்பேன் என்று வாக்குத்தத்தஞ் செய்தவன், சௌ-43: சூழ்ச்சிவல்லான், சௌ - 43: திரௌபதியைத்தேற்றினமை, சௌ - 44: வினையகற்றும்பசுந்துளவோன், சௌ - 46. கிருதவன்மன்-தனக்குநிகர்தானானவன், சல்-79: பாண்டவரின் படைவீடுபுகுமளவில்பூதம் இவனைவலியழித்தமை, சௌ - 2: வெஞ்சராசனவீரன், சௌ - 27:வியாசரால் தன்ஊர்க்குச் செல்லும்படி விடைகொடுக்கப்பட்டான், சௌ - 34. கிருபன் -அசுவத்தாமனுடையமாமன், சல் -53: சௌ-2:பாண்டவர் படைவீடுபுகுமளவில் பூதம்வலியழித்தமை, சௌ-2வியாசர்சொற்படி கானில் சிவபெருமானைநினைந்து தவஞ்செய்தவன், சௌ - 34.
கேதுதரன் -துரியோதனனால் கொல்லப்பட்டான், சல்-36.
சகதேவன் - வீமன்இளவலான போர்மீளி; சபதவாய்மைகோடாமல், கண்ணனுதவிய வேலெறிந்து சகுனியைக் கொன்றான்,சல்-97.
சகுனி - காந்தாரர்காவலன், சல்-83: துரியோதனன்மாமன், சல்-96: சகதேவனால் வேலெறிந்து கொல்லப்பட்டான்,சல்-96, 97: சௌபலராசன், சல்-98. சகுனிபுத்திரர் -உலூகன், சைந்தவன் என்போர்; நகுலனோடு பொருதுவெந்நிட்டனர், சல்-35.
சஞ்சயன் -திருதராட்டிரனின் நண்பன்;வேதமுனி; இரவில் திருதராட்டிரனுக்குப் போர்நிகழ்ச்சிபற்றிக்கூறியவன்: துரியோதனன் தடம்புக்கதை அசுவத்தாமனுக்குச் சொன்னவன்;துருபதன் மகனாதியரால் இவன்கொல்லப்படாதபடி கண்ணன்காத்தான், சல்-110-113: இவன்மொழிவல்லபம்தூயசிந்தைச்சுரர்களும் வல்லரல்லர்,சௌ-28: தன் பெற்றோர்களைத்தேற்றும்படியும் தருமனொடுகோனிலம்புரக்கும்படி தன்தந்தைக்குக்கூறும்படியும்துரியோதனனால்வேண்டப்பட்டனன், சௌ-28, 29:வணங்காமுடி மன்னனாகியதுரியோதனனும் தன்னிணைத்தாண்மலர்சென்னிமீதும்விழியினும் சேர்த்திடப் பெற்றவன், சௌ-30: நாடிய சொற் சுருதிநிகழ்நாவினான், வாய்மைவல்லான், சௌ-35.
சம்பரன் -காமனுடன் பொருதஅசுரன், துரியோதனனுக்கு உவமை, சல்-60. சமந்தபஞ்சகம் -பரசுராமனாற்சொல்லப்பட்ட அரசர்களுடைய |