இரத்தம்பெருகித்தேங்கியதனாலாகியஐந்துதடாகங்கள்;இந்த இடத்துக்குஒப்பான சிறந்தஇடம் வேறில்லை யாதலின், கண்ணன் இதனைப்போர்க்களமாக்குறித்தல், சல் - 153,154: இவ்விடஞ்சார யமுனைகடத்தல், சல் - 162: வீமனும் துரியனும் போரிட வீமன்துரியனைவீழ்த்திய இடம், சல் - 187. சல்லியன் -வெயிலோன்மகற்கு முடனெண்ணத்தகுந்திறலினான்; வில்லாண்மையாலும் வடிவாளாண்மையாலும் அயில் வேலாண்மையாலுமவனே யல்லாது வேறுசிலரிலர், சல் - 4: மத்திரன் புத்திரன், சல்-10,24:கிரித்தடங்குவடனைய கேசரிநிகர்த்தவன், வில்வலோர் எவரினும்மிக்கோன், சல்-27:தருமனைத்துரத்தினான், சல் - 37: சுமித்திரன் முதலியோரைக்கொன்றான், சல் - 38:தனக்கெதிர்தானே யானவன், சல் -39: அங்கர்கோன்பாகன், சல் - 40: ஏவினுக்கு இராமன் போல்வான்,சல்-42: ஆளியேறனையான், சல்-55: தருமனால்கொல்லப்பட்டான், சல்-73.
சாத்தகி -கண்ணபிரானின் தம்பி,சல்-40, 56, 69: கண்ணனுடன் துவாரகைமீளுதல், சௌ-46.
சிகண்டி -துருபதனதுகுமாரரில்ஒருவன்; அலிவடிவாகப்பிறந்து பத்தாநாட்போரில் வீடுமன்அழிதற்குக்காரணமாய் முன்நின்றவன்; இவனை அசுவத்தாமன் கொன்றான், சௌ-10, 11. சுமித்திரன்முதலியோர் - சல்லியனாற்கொல்லப்பட்டனர், சல் - 38. சேனாவிந்து - துரியோதனன்தம்பி தொண்ணுற்றொன்பதின்மரில் முதன் முதல் வீமனால் கொல்லப் பட்டவன்எனத்தெரிகிறது, சௌ-36:[நான்காம்போர்ச்சருக்கம், செய்யுள் - 28: உம் காண்க]. சோழன் -பாண்டவர்க்கு உதவியாய்ப்போரிட்டனன்: பொன்னி நன்னதியும் நேரியம்பொருப்பும்புகாரெனும்நகரியும்படைத்த சென்னியாவன், அசுவத்தாமனோடு பொருது இறந்தவன், சௌ-14, 15. தருமன் -தருமன்மாமதலை, சல்-21, 24, 37, 45, 159: இமிழ்முரசெழுதிய கொடிநராதிபன்,சல் - 22, 71: மனத்தழுக்கிலாவாய்மைப்புலவன், சல்-28: விந்தைகாளையோடுவமைகூர் வலியினான்வேந்தர்யாரினும் புகழ் மிக்கோன்,சல் - 29: அறத்தின் மைந்தன், சல்- 46, 57, 58, 150: நீதிமான், சல்-66:சல்லியனைப் பொருதுகொன்றான்:இராமனொத்துத் தவறாமல்கணைதொடுப்பவன்,முருகனைஒத்தவன், சல் - 73: பவளமேனித்தருமன், சல் - 127;படையிழந்து தனியனாய்த் துரியன் கால்நடையாகச்செல்லுதலைக்கண்டுஇரங்கினான், சல் - 157, 158: இருவினை கூறாதவன், சல்-174: கன்னன் முதல் யாவருக்கும்ஈமத்து அந்தமுறுகடன்கழித்தவன், சௌ-44: அறத்தின்மைந்தன், சௌ-46: பாரளித்து அறநெறியேகருதிவாழ்ந்தான், சௌ-46. திட்டத்துய்மன் -பாஞ்சாலன் காதன்மைந்தன், சல் - 14: விற்குருவை முன்பொருதவன், சோமகேசபதிமெய்ப்புதல்வன், சல் - 69: பொருவருமுனைக்குக் குரிசிலாய் எல்லாப்போரினும்புறமிடாதடர்த்தவன், சௌ-9: அசுவத்தாமனால் தலைதுணிக்கப்பட்டான், சௌ-9. திருராஷ்டிரன் - முகுரானனன், சல்-150, 194: ஆடிமுகத்தரசு, சௌ-35: வீமனைத்தழுவ |