பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி 199

 வேண்டினன்,இருப்புத்தூணைத்தழுவிநெரிக்க அம்மாத்திரத்தால் அது
 துகள்களாயது, சௌ-45.

திரௌபதி -அழற்பிறந்தாள், சல் - 165;
 மைந்தருடற்குறைதழுவியாகுலித்துமெலிந்தரற்றும்மான், சௌ-39.

துரியோதனன் - இருகண்ணிலான்மதலை, சல்-3; நிருபாதிபன், சல் -
 8: உரகதுவசன், சல்-10, 54, 58, 81,96, 133, 146, 173, கேதுதரனைக்
 கொன்றான், சல்-36;புன்படைப்பினில் அயன்படைத்தபூபன், சல்-59;
 தீமனத்தரசன், சல்-60; வலம்புரிப்பூந்தாமவேந்தன், சல்-82, 144,
 சௌ-32; இறந்தாரைப்பிழைப்பிக்கும்சஞ்சீவிநி மந்திரத்தை நீருள்மறைந்து
 உச்சரித்தான், சல் - 104, 105; குருகுலத்தோர்கோ, சல் - 133;
 முகுரானனன் காளை, சல்-150; விதி தனக்கும்விதி போல்வான், சல்-156;
 கைப்பான் வன்னெஞ்சக்கடுங்கண்ணான், சல்-159; தருமன்இரங்கிக்
 கூறியதை மறுத்து,உறவினர் இறந்தபின் தானுமிறத்தலே
 தக்கது எனல், சல்-160; காந்தாரிபுதல்வன், கந்தருவரால் 
 கட்டிச்செல்லப்பட்டான்,சல்-164; நயனமிலாதோன் முதற்குமாரன்,
 சல் - 167; மாறாடுசர்ப்பகேது, சல் - 175;மாமேகம் ஒத்தகாயமுடையவன்,
 சல்-177; முகுரானனன் தருசேய், சல்-181; நூறுமைந்தரின் ஆதிபன்,
 சல்-182; தன் உயிர்நிலையை இங்கிதமாக அருச்சுனனைக்கொண்டு
 வீமனுக்குத் தெரிவித்த கண்ணனைஇகழ்ந்தான், சல்-188; வீமனால்
 தொடையிலடிக்கப்பட்டு இறந்தான், சல்-184 - 187;மானகவசவரராசன்,
 சல் - 199; குரு மரபினுக்குஒரு திலகமாம் மூர்த்தி, சல்-202;
 உபபாண்டவர் தலை களைக்காட்ட இரங்கியமை, சௌ, 21-25;
 குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை என இரங்கினான், சௌ-23;
 என் வினைதான் என்னையேசுடக் கூற்றின்வாய் புகுந்தேன் என்றனன்,
 சௌ-24; துரியோதனன் மரணம், சௌ-31.

துரியோதனன்தம்பியர் -தொண்ணூற்றொன்பதின்மரும் வீமன்
 சரத்தாலும்தண்டினாலும் இறத்தல்:

அவர்களுட்சிலவர்பெயர்: -செயகந்தன், செயவன்மன்,
 செயசேனன், சேனாவிந்து,செயத்திரதன், செயவிந்து,
 விக்கிரமன், சல்-78: சித்திரவாகு,பெலசேனன், செயசூரன், சித்திரன்,
 உத்தமவிந்து - இவர்கள் புலன்கள்போல்வார், சல்-80: உத்தமன்,
 உதயபானு, கீர்த்தி, பெலவன்மன்,பெலவீமன்.  பிரபலதானன்,
 விக்கிரமவாகு, சுசீலன், சீலன், சல்-84.

நகுலன் -கர்ணகுமாரர்கள் மூவரையும் பொருதுகொன்றான், சல்- 34:
சகுனியின் மக்களை வெந்நிடச்செய்தான், சல் - 35:சல்லியனுடைய மருகன், சல்-56.

பரசுராமன்
-தபனனிகர்மழுப்படையோன், மூவெழுகால் முடிவேந்தர் 
  அனைவரையுமுடிப்பித்து அக்கினிதேவன் களிக்கநரமேதம்செய்தவன்,
  சல்-153.

பலராமன் -இரும்புனல் ஆடுதற்ககன்றோன், சல்-147; தாலகேதனன்;
  சல்-151; நிலவொளியாற்சோமனுக்குநிகரானோன், சல் - 152;
  கைலைவடிவுடையோன்; சல்-161; அலாயுதன், சல் - 190, சௌ - 46;
 துரியோதனனது ஊருவில் மோதுதல்கண்டு மனம் பொறாது
  வீமனைவெகுண்டவன், சல்-191, முசலத்தால்வீமனைப்