நீத்தம்-வெள்ளம், 139 நீபம்-செங்கடப்பமாம், 62 நீறு-சாம்பல் பொடி, 47, 77 நீறுஎழுதல்-பொடிபடுதல், 185 நுதல்-நெற்றி, 6, 57, 175 நுதி-கூர்மை,74 நெடியவன்-திருமாலாகிய கண்ணன்,128 நெறிபடர்தல்-வழிச்செல்லல், 155 நேமி-சக்கரம், 91, 128; தேர்க்குச்சினையாகுபெயர், 44; கடல், சக்கரவாளமலை, 66 நேமிநெடியவன்-சக்கரப்படையையுடைய கண்ணன், 128 நேர்-ஒப்பு,71 ப்ரதாபம்-பராக்கிரமம், 167 பகடு-யானை,31 பகழி-அம்பு,42 பச்சைமயில்வேள்-முருகன், 66 பஞ்சானனம்சிங்கம், [விரிவானமுகத்தையுடையது), 28 படி-விதம்,63; பூமி (இராச்சியம்,) 133 படுதல்-இறத்தல், 85 பணி-பாம்பு,73, 100 பணிப்பதாகன்-துரியோதனன், 73 பணிமாறல்-வீசுதல், 75 பணை-வாத்தியம், 14, 172, பருத்த, 24 பத்திரம்-மூவகையானையுள்முதலதாகச் சிறந்தது, 31 பதம்-கால்,190 பதயுகம்-இரண்டு கால்கள், 172 பதாகினி-சேனை, 20 பதாகை-கொடி, 36 பதாதி-காலட்சேனை, 84 பதுமம்-தாமரை, 193 பம்புதல்-நிறைதல், 99, 155 பரபாவகம்-பகைவர்க்குத் தீ; x அசுவத்தாமன், 107 பரவை-கடல்,82, பரப்பு, 139 பரி-குதிரை,22, 27, 179 பரிசு-விதம், 146, 156 பரித்தாமா-அசுவத்தாமா, 19, 52 பரிதி-பரிவேஷம், ஊர்கோள், 170 பரிமா-குதிரை, 32 பரியாள்-கற்கியவதாரம், 1 பரிவு-விசனம், 108; அன்பு, 193 பருவரல்-துன்பம், 10 பரூஉ-பருத்த,31 பலபத்ரராமன்-பலராமன், 196 பவனம்-காற்று, 67 பவுரி-சுழற்சி, 170 பற்பம்-நாபீகமலம், 171 பற்பராகம்-பதுமராகம் என்ற இரத்தினம், 2 பாகு-பாகனுக்கு இலக்கணை, 43, 54 பாங்கர்-இடம், 125 பாசறை-படைவீடு, 10, 197 பாடி-படைவீடு, 125 பாணம்-அம்பு, 27 பாணி-கை,90 பாவகம்-அக்கினி, 107 பானன்-வாயுகுமாரனான வீமன், 138, 192 பிதிர்படுதல்-பொடியாய் விடுதல், 22 பிரளயம்-வெள்ளம், 70 பிராணவாயுவைஅடக்குதல், 104 பிறங்கல்மலை, 82 பிறங்குதல்-விளங்குதல், 84 பிறிதினவிற்சியணி, 34, 36 பின்னை-நப்பின்னை, 113 பின்னைக்குவாய்த்தோன்-கண்ணபிரான், 113 பீடிகை-பீடம், 31 புங்கம்-சிறந்த, 36, 44 புடை-பக்கம், 75, 198 புடைத்தல்-தாக்குதல்,32, 192 புயங்ககேதனன்-பாம்புக்கொடியையுடையவனானதுரியோதனன், 54, 58, 146 புயங்கம்-பாம்பு, 36, 54, 58, 146 புயல் ஏழ்,24 புரூர்பாகம்புருவம், 171 புரை-பழுது,26 புல்லர்-நீசர், 136 புல்லார்-பகைவர், 143 புலவோர்-தேவர், 76 |