பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன209

புலிகண்டமிருகம்  x  வளவற்கு முதுகுதந்தவிதமண்டலீகர், 106
புவனம்-நீர், உலகு, 137
புறக்கிடுதல்-முதுகுகாட்டியோடுதல், 79
புறங்காணல்-முதுகுகாணல்,முதுகுகாட்டியோடச் செய்தல், 143
புறம்-முதுகு,143
புன்மை-இழிவு, 59
பூ-பூமி, 76
பூகம்-பாக்குமரம், 141
பூங்கவனம் -பூஞ்சோலை, [பூங்காவனம்என்பதன்குறுக்கல்], 163
பூபன்-அரசன், 59
பூமிஅமரன்-பூதேவனாகிய[அந்தணனான]அசுவத்தாமா, 94
பொதுவியர்-கோபஸ்திரீகள், 52
பொய்விடைஏழ் அடர்த்தோன்-  வஞ்சனையமைந்த
 எருதுகளேழைப்பொருதுஅழித்த கண்ணபிரான், 146
பொருட்பின்வருநிலையணி, 53
பொருப்பு-மலை, 50
பொருவு-ஒப்பு, 76
பொன்றல்-இறத்தல், அழிதல், 107, 117
பொன்னுலகு -சுவர்க்கலோகம், 153
போதரல்-செல்லல், 198
போற்றலன்-பகைவன், 28
மகிதலம்-தரை, பூமி, 175
மகிபன்[மகீபன்]-அரசன், 97, 89
மகிபாலர்-அரசர், 194
மங்கலவழக்கு, 129, 200
மடக்கு, 131
மடங்கல்-சிங்கம், 158
மடல்-பாளை,141
மண்டலிகர்-மண்டலாதிபதிகள் [நாற்பதுகிராமம்ஆள்பவர்]9, 106
மணிக்கழுத்துடையவன்-சுக்கிரீவன், 25
மத்தவாரணம்-மதயானை, 33, 167
மதங்கயம்-யானை, 100
மதங்கள்ஏழு, [யானைமதம்], 78
மதம்-கொழுப்பு, 136; மதநீர், கோபம்,186
மதலை-புத்திரன், 3, 21
மதிஇரவியோடுபோர்செயும்ஆறு  x  பலராமன்வீமனொடு போர்
 தொடங்கும் விதம், 193
மதிகண்டபெருங்கடல்  x தருமனது
 வெற்றிகண்டபாண்டவர்சேனை 74
மதுரவாய்மை- இனிமையானவார்த்தை, 193
மரபுவழுவமைதி, 184
மருத்-வாயுதேவன், 203
மருச்சுதன்[மருத்ஸூகன்]-வாயு குமாரனானவீமன், 203
மருத்தீன்றவன்-வாயுமகனான வீமன் [மருத்து-வாயு], 57, 59
மருப்பு-தந்தம், 186
மருவலன்-பகைவன், 48
மருவுதல்-பொருந்துதல், 33
மல்-வலிமை,25, 65
மலைதல்-போர்செய்தல், 29
மழு-கோகிரலி, 1, 153
மழுப்படையோன்-பரசுராமன், 153
மறம்-வலிமை, 32, 150
மறித்து-மீண்டுவந்து, 2
மறை-வேதமந்திரம், 30
மறைவாணர்-அந்தணர், 7
மன்-பெரிய,6
மன்றல்-வாசனை, 115
மனுகுலேசன்-சோழன், 95
மனோகரம்-அழகிய, 171
மா-குதிரை,33
மாதுயர்அகற்றும் வாய்மை கேட்டுஞானஊதியம் பெற்றாலென்ன
  ஒடுங்கியஓடை, 114
மாதுலன்-மாமன், 53, 99, 123
மாயவன்-கிருஷ்ணன், 130
மாயன்-கண்ணன், 148
மாயை-வஞ்சனை, 12
மாயோன்கிருஷ்ணன், 12
மாரசாயகம்-மன்மதபாணம், 70
மாரதர்-மகாரதர், 5
மாரன்-மன்மதன், 70