யொருதனிநிழற்றக்கரைகாணாத, உவரிநிகற்பெருஞ்சேனை வெள்ளஞ்சூழவுயிரனைய துணைவருடன்மாமன்சூழத், தவர்முதலாம்படைகளொடுதன்னைவென்றுதரணிகொளவரு நிருபன்றன்னைச்சார்ந்தான். |
(இ -ள்.) அவர் அளவோ - அவ்வெழுநூறுபேர் மாத்திரமோ, அரவு உயர்த்த அரசன்தானும் - பாம்புக்கொடியை உயரநாட்டிய துரியோதனராசனும், ஆகுலத்தோடு - வருத்தத்துடனே, அருசமரில்-அரிய போரில், அரி ஏறு என்ன - ஆண்சிங்கம்போல, கவரிபுடை பணி மாற-சாமரங்கள் பக்கங்களில் வீசவும், ஒருதனி தவளம் கொற்றம் கவிகைநிழற்ற - ஒப்பற்ற ஒற்றை வெண்கொற்றக்குடை நிழலைச்செய்யவும், கரை காணாத உவரி நிகர் பெரு சேனை வெள்ளம் சூழ-கரைகாணவொண்ணாத கடல்போன்ற பெரிய சேனைத்தொகுதி சூழ்ந்துவரவும், உயிர் அனைய துணைவருடன் மாமன்சூழ - தனது உயிர்போன்ற தம்பிமார்களுடன் மாமனான சகுனியும் சுற்றிலும் வரவும், தவர் முதல் ஆம் படைகளொடு - வில்முதலிய ஆயுதங்களுடனே, தன்னைவென்று தரணி கொள வரும் நிருபன்தன்னை சார்ந்தான் - தன்னைச் சயித்துப் பூமியைப்பெற்றுக் கொள்ளுதற்கு வருகிற தருமராசனை நெருங்கினான், (எ - று.) அரவுபாம்பின்வடிவ மெழுதிய கொடிக்கு, இருமடியாகுபெயர், கவிகை- கவிந்துள்ளது. அரியேறென்னச் சார்ந்தானென இயையும், வெள்ளம்- ஒருபெருந்தொகை, தவர்-வில். (75) 76.- வீமன் முதலியோர்பகைவர்களை யெதிர்த்தல். வீமன்முதற் றம்பியரும்பொருவிலாத வெஞ்சேனைத்தலைவரும் போர்வென்றிகூருஞ், சோமகருமுதலாயதறுகண்வீரர்தும்பிகளையரியினங் கடுரக்குமாபோல், தாமமணித்தடஞ்சிகரத்தோளுமார்புஞ்சரமுழுகத்தனுவணக்கிச் சாய்ந்தசோரி, பூமுழுதும் பரந்துவரப்பொருதவீரம்புலவோர்க்கு மதிசயித்துப் புகலலாமோ. |
(இ -ள்.) வீமன் முதல்-வீமசேனன் முதலான, தம்பியரும்-(தரும புத்திரனது) தம்பிமார் நால்வரும், பொருவு இலாத - ஒப்பிலாத, வெம் சேனைதலைவரும் - கொடிய சேனைத்தலைவர்களான திட்டத்துய்மன் முதலியோரும்,போர் வென்றி கூரும் - போரில் வெற்றி மிகுகிற, சோமகரும்- சோமககுலத்துவீரர்களும், முதல் ஆய - முதலான, தறுகண் வீரர் - அஞ்சாமையையுடைய வீரர்கள், தும்பிகளை அரி இனங்கள் துரக்கும் ஆ போல் - யானைகளைச்சிங்கக்கூட்டங்கள் ஓடச்செல்லும்விதம்போல, (பகைவரையெதிர்த்து),- தாமம்-(போர்) மாலையை யணிந்த, மணி-அழகிய, தட - பெரிய, சிகரம்-மலைச்சிகரம் போன்ற, தோளும் - அவர்கள் தோள்களிலும், மார்பும் - மார்பிலும், சரம் முழுக-அம்புகள் தைத்து அழுந்தும்படி, தனு வணக்கி-வில்லை வளைத்து, சாய்ந்த சோரி பூ முழுதும் பரந்துவர - (அவர்களுடம்பு) சொரிந்தஇரத்தம்பூமிமுழுவதிலும்பரவிவரும்படி, பொருத - போர் செய்த, வீரம் - வீரத்தன்மை, புலவோர்க்கும் அதிசயித்து புகலல் ஆமோ-விசேஷஞானமுடைய தேவர்களும் கொண்டாடிச் சொல்லக் கூடியதோ? [அன்று என்றபடி]: (எ - று.) |