தொடக்கம் |
|
|
சிறப்புப் பாயிரம்
பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை- நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு, அம்புசாதன் முகத்தினில் வாழும் அந்த மொய்குழல், அருளினாலே, பகைத்து எதிர் பொருத தெய்வப் பாரத கதை, இம் முந்நீர்ச் செகத்தினில், விருத்த யாப்பால் செய்க!' என, செய்தது அன்றே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
'தேடினார் யாவரேகொல், எழு வகையானும் சீர்த்தி' நீடினார் அவரே! எனபர், நீள் நிலத்து உயர்ந்த மாந்தர்; 'பாடினார் யாவர்' யாவர் பாடுவித்தார் கொல்'' என்று நாடினார் தெளியும்வண்ணம், நவை அற, நவிலலுற்றேன்.
| 3 |
|
|
உரை
|
|
|
|
|
நாள் நிரைத்து, அநேக தாரகாகணம் ஆம் நவ மணியுடன் நவ விதம் கொள் கோள் நிரைத்து, ஈர்-ஏழ் புவனமும் வலம் செய் கொற்ற நேமியின் வரு கொண்டல், வாள் நிரைத்து இரவி விதிர்ப்பபோல் மின்னி, வான் முகடு உற நெடும் பளிக்குத் தூண் நிரைப்பனபோல், நந்தி மால் வரையின் சூழலில் தாரை கொண்டதுவே. | 4 |
|
|
உரை
|
|
|
|
|
வம்பு அறா மலரும், செம் பொனும், மணியும், மருங்கு எலாம் நெருங்கும் அக் குன்றின். உம்பர், ஆர்ப்பு எழ, பார் அளவும் நின்று ஒங்கி, உள்ளுறத் துள்ளி, வீழ் அருவி- அம்புராசியை மால் மந்தரம் சுழற்றி, அமுது எழக் கடைந்த நாள், அதற்குத் தம்பமாம் மதியை அதனுடன் பெயர்த்துச் சார்த்தி வைத்தென்னலாம் தகைத்தே. | 5 |
|
|
உரை
|
|
|
|
|
வெண்ணெயே கமழும் பவளமாய் விமலன மெய் எனக் கருகி, மெல்லியலார் கண்ணையே அனைய நெடுங் கடல் முகந்து, ககனமும் திசைகளும் விழுங்கி, பண்ணை சூழ்ந்து இலகும் திருமுனைப்பாடிப் பழைய நாடு அனைத்தையும், ஒருதன் பெண்ணையே கொண்டு போகம் உய்த்திடுமால், புயல் எனும் பெயருடையப் பெரியோன். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
தொடுத்த நாள்மலர், வேய்ந்து, அகில் அளைந்து, உந்திச் சுழிவயின் இலங்க, மெய்த்தனங்கள் எடுத்து மேல் வீசி, மணி மருங்கு அலைய, இனம் கொள் வண்டொடு சிலம்பு இரங்க, அடுத்த நீள் சுரத மகளிரின் தடங் கண் நிறம் சிவப்புற, கரை அழிந்து, படுத்த பேர் அணைப் போர் புரிந்ததால்- அந்தப் பண்ணை அம் கானல் சூழ் பெண்ணை. | 7 |
|
|
உரை
|
|
|
|
|
அவ்வை பாடலுக்கு நறு நெய் பால் பெருகி, அருந் தமிழ் அறிவினால் சிறந்து, பௌவ நீர் ஆடைத் தரணிமான் மார்பில் பயிலும் உத்தரியமும் போன்று, மொய் வரால், கெண்டை, வாளை, சேல், மலங்கு, முதலிய சனம் எதிர்கொள்ள, தெய்வ மா நதி நீர் பரக்கும் நாடு அந்தத் திருமுனைப்பாடி நல் நாடு. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
பா அருந் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர், பாதி நாள் இரவில், மூவரும் நெருக்கி, மொழிவிளக்கு ஏற்றி, முகுதனைத் தொழுத நல் நாடு; தேவரும் மறையும் இன்னமும் காணாச் செஞ் சடைக்கடவுளைப் பாடி, யாவரும் மதித்தோர் மூவரில், இருவர் பிறந்த நாடு, இந்த நல் நாடு.
| 9 |
|
|
உரை
|
|
|
|
|
அந்தத் திருநாட்டு, அந்த நதி அமுதம் பெருகி, இரு கரையும் சந்தத்துடன் கார் அகில் கமழ, தடங் கா அகம் சூழ் தடம் நிறைப்ப, கந்தக் குவளை மேய் பகட்டின் காலால் நெரிந்து, கதிர் முத்தம் சிந்தச் சிந்த, கொழு முனைக்கு முன் ஏர் உழுவ, செய்ச் சங்கம். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
கொழு நீர் மது உண் கடைசியர் தம் குழை தோய் விழியின் எழு நிழலைக் கழுநீர் மலர் என்று, ஒரு பகலும் காலால் மயக்கிக் களை துவைப்பார், முழு நீரூடு தமது நிழல் முழுதும் கண்டு, தொழுது, இறைஞ்சி, செழு நீர் அரமங்கையர் என்று திகைப்பார், நகைப்பார், செறுவெல்லாம்,
| 11 |
|
|
உரை
|
|
|
|
|
கரும்பும் கமுகும் தலைதெரியாக் கழனிச் செநநெற் களையாகி, அரும்பும் குவளை நறு மலர்த் தேன் ஆறாய், எங்கும் சேறாக, விரும்பும் சுருதி இசை கேட்டு, வேலைக் கழிக் கானல்அம் கைதை, சுரும்பும் தும்பிகளும் அருந்த, மாறாது என்றும் சோறு இடுமால்.
| 12 |
|
|
உரை
|
|
|
|
|
கம்பலைக் கழனிச் சேனைக் காவலர் கரங்கள் நீக்கி, பைம் புலத்து உழுநர் தங்கள் பல வகை விளைவும் ஈட்டி, ஐம்புலத்தவர்க்கும் ஈந்து, ஆங்கு அறத்தினை வளர்த்தலாலே, செம் புலக்கிழத்திக்கு ஆவி அன்னது, அச் செல்வ நாடே.
| 13 |
|
|
உரை
|
|
|
|
|
எண்ணும் மா கடல் ஏழும் அன்று இரு கடலாக, பெண்ணை மா நதி நெய் பால் பெருகும் அப் பழனப் பண்ணை நீள் வளம் பல்கு சீர்ப் பழைய நல் நாட்டில், வண்ணம் நான்கினும் உய்ந்துளோன் ஒரு முனி வந்தான். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
ஐந்து பாவுடை நால் வகைக் கவிக்கு அதிபதியாய், வந்து, வட்டமாமணியினன் மணி முடி புனைந்து, பைந் துழாய் முடிப் பரமனைப் பல கவித் துறையும் சிந்தையான் மொழிந்து, அன்பர்தம் திருவுளம் பெற்றோன்; | 15 |
|
|
உரை
|
|
|
|
|
தென்னர், சேரலர், செம்பியர், எனப் பெயர் சிறந்த மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்; முன்னர் எண்ணிய முத் தமிழ்ப் பாவலர் எவரும் பின்னர் வந்து ஒரு வடிவு கொண்டனர் எனப் பிறந்தோன்;
| 16 |
|
|
உரை
|
|
|
|
|
தாரகாயண வண்டு அலை தண்டலைச் சனியூர் வீரராகவன் அருள் பெறு வில்லிபுத்தூரன், ஊர் அரா முடி மண்மிசை உயர் புகழ் நிறுத்தி, தீர காகளம் பெறுதலின், யாரினும் சிறந்தோன்.
| 17 |
|
|
உரை
|
|
|
|
|
எங்கும் இவன் இசை பரப்பி வரும் நாளில், யாம் உரைத்த இந்த நாட்டில், கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்று், ஒரு வண்மைக் குரிசில் தோன்றி, வெங் கலியின் மூழ்காமல், கருநடப் பேர் வெள்ளத்து விழாமல், நான்காம் சங்கம் என முச் சங்கத் தண் தமிழ் நூல் கலங்காம்ல, தலைக்கண்டானே. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
மற்று அவன், இப் புவி ஆளும் வளவனுக்கு முடி கவித்து, வழுதித் தெவ்வைச் செற்று, அவனுக்கு அவனி எல்லாம் செங்கோன்மை நிலையிட்டு, செல்வம் எல்லாம் கற்றவருக்கு இரு கையுடைக் கற்பகம்போல் இனிது அளித்து, கமல மாதும் கொற்றவையும் மனம் களிப்ப, தன் நாமம் மேருவினும் கோட்டினானே. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
தென் நாட்டில், வட நாட்டில், குட நாட்டில், குண நாட்டில், தெவ்வர் ஒட, கல் நாட்டி, அமர் பொருது, கங்கை நீர் ஊட்டுவித்து, கண்டன் வேங்கை எந் நாட்டும் எழுதி, அவன் திரு மரபோர் பெற்ற புகழ் யாவர் பெற்றார்' அந் நாட்டுக் கொற்றம் எல்லாம் அக் குரிசில் புகழொடு அவதரித்தது அன்றோ. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
ஆற்றிய மெய்ச் செல்வத்தால் அளகையை வென்று இருங் கவினால் அமரர் ஊரை மாற்றிய பொன் தட மதில் சூழ் வக்கபாகையின், அறத்தின் வடிவம் போலத் தோன்றிய அக் கொங்கர்பிரான், சூழ் தமிழான் ஆட்கொண்டான், சுற்றத்தோடு் போற்றிய இப் புவி முழுதும் தன் திருப்பேர் மொழி கொண்டே புரந்தான் அம்மா. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
பிறந்து, உய்யக் கொண்டவன், இப் பேர் உலகம் பெரு வாழ்வு கூரும் நாளில், நிறைந்த புகழ்ச் சனி நகர் வாழ் வில்லிபுத்தூரனை நோக்கி, 'நீயும் நானும் பிறந்த திசைக்கு இசை நிற்ப, பாரதமாம் பெருங் கதையை, பெரியோர்தங்கள் சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ் மொழியின் விருத்தத்தால் செய்க!' என்றான். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
இருக்கு ஆதி மறை மொழிந்தோன் இயம்பிய இப் பெருங் கதையை யாரும் கேட்ப, சுருக்காகப் புராண முறை சொல்லுக!' என்றலின், அவனும் சொல்லலுற்றான்; பெருக்காளர் முதலாய பெருங் குலத்தோர் இக் கதையின் பெற்றி கேட்டார்; செருக்காக அவன் மைந்தன் வரந்தருவான் இப் பதிகம் செப்பினானே. | 23 |
|
|
உரை
|
|
|
|