பாண்டவர் முன்னிலையில் மயன் வந்து வணங்கி, குருபதிக்கு மண்டபம் ஒன்று அமைத்துத் தருவதாகக் கூறுதல்
வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று, எழில் கொள் விசும்பில் மேவ, நயனங்கள் முதலான ஐம் புலனும் மனமும்போல் நகரி எய்தி, பயன் மிஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை, மயன் என்பான் வாய் புதைத்து, வளம் பட, வந்து, ஒரு மாற்றம் வழங்கினானே:
'உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன்; நீர் தந்த உயிர்க்கு வேறு ஓர் கைம்மாறு வேறு இல்லை;-குருகுலம்போல் எக் குலமும் காக்குகிற்பீர்!- தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மைக் குரு பதிக்கு, சிற்பம் வல்லோர், 'அம்மா!' என்று அதிசயிப்ப, அரிய மணி மண்டபம் ஒன்று அமைக்கின்றேனே.
''மேல் நாள், இவ் வுலகு ஆண்ட விடபருவன், அசுர குல வேந்தர் வேந்தன், தான் ஆண்மையுடன் பொருது, தரியலரைத் திறை கொணர்ந்த தாரா பந்தி- போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும் பொய்கைதன்னில் ஆனாமல் கிடப்பன உண்டு; அவை இதற்கே உபதானம் ஆகும் என்றான்.
மயன் குறித்தபடி மணிகள் கொணருமாறு தருமன் ஏவ, விரைவில் ஏவலர் கொண்டுவருதல்
என்பதன் முன் முப்பதின்மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் வன்புடனே தரித்து, வரை அசைந்தாலும் அசையாத வயிரத் தோளார். அன்பு மிகும் விழிக் கருணை அறன் புதல்வன் ஏவலினால், அசுரத் தச்சன் தன் பணி ஈது எனப் பணிப்ப, ஒரு நொடியில் கொடு வந்தார்; தளர்வு இலாதார்.
மயன் மண்டபம் கட்டி முடித்து, தருமன் தம்பியர்க்குக் கதையும் சங்கும் கொடுத்தல்
மீது அடுக்கிப் பசும் பொன்னால் சுவர் செய்து, மரகதத் தூண் வீதி போக்கி, ஓது இடத்தில் சுருங்காமல் செழுந் துகிர் உத்தரம் பரப்பி, உலகு ஓர் ஏழும், 'மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது!' என்ன, வரம்பு இல் கேள்விச் சோதிடத்தோர் நாள் உரைப்ப, சுதன்மையினும் முதன்மை பெறத் தொடங்கினானே.
மனத்தாலும், திருத் தகு நூல் வரம்பாலும், உரம் பயில் தோள் வலியினாலும், இனத்தாலும், தெரிந்து, தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப, எண் இல் கோடித் தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்-ஏழ் திங்கள் செய்தான்; தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்குத் தண்டுடன் வெண் சங்கும் ஈந்தான்.
அத் தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின் அளவு நீளம் வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும், கண்டோர்கள், வியந்து கூற, கொத்து அலர் தார் மணி முரசுக் கொடி உயர்த்தோன் கனற் பிறந்த கொடியும் தானும், எத் தமரும் மன மகிழ, குடி புகுந்தான்-இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான்.
நாரதன் அவைக்கு எழுந்தருள, தருமன் எதிர் சென்று வணங்கி உபசரித்தல்
தம்பியர்கள் நால்வருடன், தண் துழாய் முடியோனும் தானும் ஏனை அம் புவி மன்னரும், முனிவர் அனைவரும், சூழ்தர இருந்த அமயம்தன்னில், தும்புரு நாரதன் என்னும் இருவரினும், நாரதனாம் தோன்றல் தோன்ற, பைம் பொன் மலர் தூய், எதிர் போய்ப் பணிந்து, இறைஞ்சி, என் செய்தான் பாண்டு மைந்தன்?
யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார், அவனிபரில்?- இசையின் வீணைத் தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய்! மான் புரிந்த திருக் கரத்து, மதி இருந்த நதி வேணி, மங்கை பாகன் தான் புரிந்த திருக் கூத்துக்கு இசைய, மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி!'
இராயசூயம் செய்யுமாறு பாண்டு மொழிந்தான்' என்று தருமனிடம் நாரதன் தெரிவித்தல்
எனத் தருமன் மகன் கூற, இளையோர்கள் தனித்தனி நின்று இறைஞ்ச, நீலக் கனத்து அனைய திருமேனிக் கண்ணனும் தன் மனம் களிப்பக் கண்ணின் நோக்க, மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு, 'இம் மாட கூடம் தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது!' என்று சாற்றினானே.
"மண்மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி அரங்கில், மண் உளோரும் விண்மிசை வாழ்நரும் நெருங்க, விராய அரு மறைச் சடங்கின் இராயசூயம் கண்மிசை மா மணி நிகர் என் கான்முளையைப் புரிவி' என, 'காலன் ஊரில்'' பண்மிசை வீணையின் கிழவன்-'பாண்டு மொழிந்தனன்' எனவும் பகர்வுற்றானே.
நாரதன் அகன்றபின், கண்ணன், 'வேள்வி தொடங்கும்முன் சராசந்தனைக் கொல்ல வேண்டும்' எனல்
தந்தை மொழி தனயருக்குச் சாற்றி, முனி அகன்றதன் பின் தம்பி ஆன இந்திரனும், தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணிக் கூறும்: 'அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை அடைய வாரி, பந்தம் உறு பெருஞ் சிறையில் படை கெழு வேல் சராசந்தன் படுத்தினானே.
'சதகோடிதனக்கு ஒளித்துத் தடங்கடலில் புகும் கிரிபோல், தளர்ச்சி கூர்ந்து, சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார், சமருக்கு ஆற்றார்; சத கோடி சுரும்பு அரற்றும் தாராய்! அச் சராசந்தன்தன்னை இன்னே சத கோடி இப மதுகைச் சதாகதிசேய்தனை ஒழியச் சாதிப்பார் யார்?
தருமன் ஒருப்பட, கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும் வேதியர் வடிவில் சென்று, சராசந்தனின் அவையைச் சார்தல்
'ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும், அலையின் கூல வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி மற்றும் உண்டோ? போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார்? போதும், இப்போது ஆரண மா முனிவரராய்' எனப் புகன்றான்; அறன் மகனும், 'அஃதே' என்றான்.
அரி விரசும் துழாய் மகுடத்து அரியும், இரண்டு அரிகள் அருள் ஆண்மையோரும், எரி விரசும் நெடுங் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி, எண் இல் காவல் கிரிவிரச நகர் எய்தி, கிரித் தடந் தோள் மகதேசன் கிளரும் கோயில் கரி விரசும் கோபுரப் பொன் திரு வாயில் புகுந்து, உரைத்தார், காவலோர்க்கே.
'நீவிர் அந்தணர் அல்லீர்; வேறு யார்?' என்ற சராசந்தனுக்குத் தாம் வந்த காரணத்தைக் கண்ணன் எடுத்துரைத்தல்
'யான் விது குலத்தில் யாதவன்; இவரோ, குருகுலத் தலைவனுக்கு இளையோர்; மான்மத மலர்த் தார் மன்ன! கேள்: ஒருவன் வாயுவின் மதலை; மற்று ஒருவன், வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை; நின் வள நகர் காண்பான், கான் மதக் களிற்றாய்! முனிவராய் வந்தோம், காவலர்க்கு அணுக ஒணாமையினால்.'
வெகுளி பொங்கச் சராசந்தன் வீமனைப் போருக்கு வலிய அழைத்து, தன் மகன் சகதேவனுக்கு மணி முடி சூட்டிவிட்டு, போருக்கு எழுதல்
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப, இரு புய வலியின், எண் திசையும் சென்றுகொண்டு அடர்த்து, தெவ்வர்தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து, வென்றுகொண்டு, அணிந்த வாகையோன், 'தினவு மிக்கன, எமது இணை மேறுக் குன்றுகொண்டு அமைந்த தோள்கள்; எம்முடன் நீர் குறித்து அமர் புரியும்' என்று உரையா.
'நீ எனில், ஆண்டு ஓர் ஒன்பதிற்று-இரட்டி, நெடுஞ் சிறைக் கலுழன் முன் நெறிக்கொள் ஈ என ஓடி, மதுரை விட்டு, ஆழி எயில் துவாரகைப் பதி புகுந்தாய்: நோய் என அசுரர்க்கு உடைந்து, பொன்-காவில் நுழை தரும் நூறு மா மகத்தோன் சேய் எனின், இளையன்; வீமனை விசும்பில் சேர்த்துவன்!' என விழி சிவவா,
தெளிவு பெற்று எழுந்த வீமன் சராசந்தனது உடலை இரு கூறாகப் பிளந்து எறிதல்
கொல்ல என்று எண்ணும் இருவரும், ஒருவர் ஒருவரைக் கொல்லொணாமையினால், மல் அமர் வலியும் இரு புயவலியும் இழந்து, மா மகிதலத்து உறலும், கல் அடர் செம் பொன் வரையின் முக் குவடு காலுடன் பறித்த கால் கண்டு, நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த, நலத்துடன் நல்கியது அன்றே.
சீறி, அக் குரிசில் கீண்ட பேர் உடலை, 'சென்னி தாள் செவ்வையின் இடாமல் மாறி இட்டிடுக!' என்று, ஆர் உயிர்த் துணையாய் வந்த மா மரகத வடிவோன் கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப, குறிப்பை அக் குறிப்பினால் குறித்து, வேறு இடப் புவியின்மிசை எறிந்தனனால்; வீமன் வல்லபத்தை யார் உரைப்பார்!
இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன் உடலம் ஒன்றியதும், ஒன்றாது இரண்டு பட்டதும், யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்- குன்றால் அன்று மழை தடுத்த கொற்றக் கவிகைக் கோபாலா!' என்றான்; என்ற பொழுது, அவனும் இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான்:
'எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக, மண் இத்தனையும் தன் குடைக்கீழ் வைக்கும்படி, மா மகம் புரிவான் கண்ணி, சிறையினிடை வைத்தான்; கண் ஆயிரத்தோன் முதலாக விண்ணில் பயிலும் தேவர்களும், இவன் பேர் சொல்ல வெருவுவரால்!
'இவனைப் பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி, சண்டகௌசிகப்பேர்த் தவனைப் பணிந்து, வரம் வேண்ட, தவனும், தான் வாழ் தடஞ் சூதத்து, அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான்; அளித்த அக் கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்கு நல்கினனால்.
'காசித் தலைவன் கன்னியர், தம் கண்போல் வடு முற்றிய கனியை ஆசின் பிளந்து, தம் கொழுநன் அருளால், அமுது ஒத்து இனிது அருந்த, மாசு அற்று இலங்கும் மகவு இருவர்வயினும் பகிர்ந்து வளர்ந்ததன் பின், பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார், வடிவில் பப்பாதி.
'ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம் வெருவி, மகத குல வேந்தன் வியல் மா நகரின் புறத்து எறிய, புரிசை வாயில், கண்டு, அவற்றைப் புசிப்பாள் எடுத்து, பொருத்தினளால்- தருமம் உணரா மனத்தி, ஒரு தசை வாய் அரக்கி, சரை என்பாள்.
'தன்னால் ஒன்றுபடுதலும் அத் தனயன்தன்னை, 'சராசந்தன் என்னா அழைத்தி' என, மகதத்து இறைவற்கு அளித்து, அங்கு ஏகினளால்; அந் நாள் முதல் அப் பெயர் படைத்தான்; அதனால், இவ்வாறு ஆனது' எனச் சொன்னான்; அது கேட்டு, உளம் மகிழ்ந்தார், சுரர் கோ மகனும் துணைவனுமே.
கருதற்கு அரிய நிதி அனத்ம் கவர்ந்"தார் காட்ட, கண்டு உவந்த முரசக் கொடி"யான் முன், "வதம் மொழிந்"தான் முதலாம் முனிவரரும் அரசக் குழாமும் ஈண்டிய "பர் அவயில், கடவுள் அரசு ஈன்ற வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும் வக உரத்தான்:
'சுருதிப் படி"ய வர ராயசூயப் பெயர் மா மகம் தொடங்கக் கருதி, குணபால் எம்முன்னும், வட பால் யானும், கால்-திசக்கும் நிருதித் திசக்கும் நடு எம்பி இவனும், சில "வள் நிர மணித் "தர் வரு திக்கினில் இவ் இள"யானும், மலவான் எழுக வருக!' எனா.
வீமன் முதலிய நால்வரும் திக்குவிசயத்திற்குப் புறப்படுதலும், கண்ணன் வாரகய அடதலும்
எண்ணும் "சன"டன் விரவின் எழுந்தார், இவர் ஈர்-இரு"வாரும்; விண்ணும், கடவுள் ஆலயமும் முதலா உள்ள "மல் உலகும், மண்ணும், புயங்க தலம் முதலாம் மற்று எவ் உலகும், மாதிரமும், ண்ணென்றிட்ட, ஐந் வகப் பெரும் "பர் இயத்தின் வனியினால்.
அந்த அந்த அவனிபர் எலாம், 'அபயம், அபயம்!' என்று அடி வணங்க"வ, வந்த வந்த நிதி யாவ"ம் சிகர வட மகீதரம் எனக் குவித், 'எந்த எந்த நரபாலர் பாரில் நிகர்' என்ன என்ன, அவர் இற எனத் தந்த தந்த வித தந்திமீ கொடு, தங்கள் மா நகரி சார"வ.
விசைய வெம் பகழி விசயன், வெவ் விசயொடு, இரு நிதிக் கிழவன் "மவி வாழ் திசை அடந், கதிர் இரவி என்னும்வக சீறி, மாறு பொரு தெவ்வர் ஆம் நிசை அழிந் வெளி ஆக, நால் வக நெருங்கு "சனயொடு நிலனும் நின்று அசைய, வன்பினுடன் ஏகினான்-எழு பராகம் எண் திச அடக்க"வ.
பாரதப் பெயர் கொள் வருடம் ஆதி, பல பாரின் உள்ள நரபாலர, பேர் அற, குலமும் "வரற, பொரு, பிஞ்ஞகன் கிரி"ம் இமயமும் சேர மொத்தி, அவண் உள்ள கந்தருவர் கின்ன"ரசர் பலர் திற இட, போர் அடர்த், உகம் முடிந்தகால எழு புணரி என்ன நனி பொங்கியே,
வடா சென்ற வரி சில மகீபனினும் எழு மடங்கு மிகு வலி"டன் குடா சென்று, இளய வீர மா நகுலன், 'நகுலன்!' என்று குலகுலய"வ' அடாத மன்னரை அடர்த், அடுத்தவர, 'அஞ்சல்!' என்று அமர் உடற்றினான் இடாதவன் தனம் எனக் கரந்தனர்கள், ஏன மன்னவர்கள் யாரு"ம.
கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு குமரனும்,- காற்று இசைக்கும் என வருணனும், தனி கருக் குலைந்து, உளம் வெருக் கொள, தோற்றுஇசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி, அம் மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான், நிகர் இல் வீரனே.
அளவு இலாத திறையோடும், அத் திசை உதித்து ஓர் இரவி ஆம் என, துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி, உயர் சுருதியின் கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது, கேசரித் துவச வீரனுக்கு இளவல், மீளவும், அரிப்பிரத்த நகர் எய்தி, மன்னனை இறைஞ்சினான்.
குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ இறைகொள்ளவும், நின்று இசைத்துவரு பல பணைக் குலம் இரைக்கவும், கொடி நிரைக்கவும், துன்று இசைப் பனி நிலா எழக் கவிகை எண் இலாதன துலங்கவும், தென் திசைப் படர்தல் மேயினான்-நகுல நிருபனுக்கு இளைய செம்மலே.
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி, எதிர்பொங்கி, மேல் வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க, வெம் புகை இயங்கவே, கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு, வெங் கனல் அவிப்பது ஓர் இந்து மா முக சரங்கள், ஏழு நெடு நாவினான் அழிய, ஏவினான்.
அஞ்சி, அந்த அழலோனும், அப்பொழுது ஒர் அந்தணாளன் வடிவு ஆகியே, வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர, வந்த மா முனியை, மன்னன், 'நீ எஞ்சி நின்று, சுடுகின்ற காரணம் இது என்னை?' என்னலும் இயம்பினான்- மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும், நீலன் வழிபாடுமே.
சென்னி நாடு, குட கொங்க நாடு, திறை கொண்டு, தென்னன் உறை செந்தமிழ்க் கன்னி நாடு உறவுடன் புகுந்து, மணி நித்திலக் குவைகள் கைக் கொளா மன்னி, நாடு கடல் கொண்ட கைம் முனிவன் வைகும் மா மலயம் நண்ணினான்- மின்னி நாடுற விளங்கு வெஞ் சமர வீர வாகை பெறு வேலினான்.
செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய காளையொடு சேனை அந் நகத்து இயைந்த பொழுது, அவனி பவ்வம் உறு நவ் எனத் தலை நடுங்கவே, மிகத் தியங்கி, நெடு மேரு வெற்பின்மிசை மேவு வானவர்கள், மீளவும் அகத்தியன்தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள், சமமாகவே.
கல் நிலம்கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்தனை அழைத்து, 'நீ தென்இலங்கை திறைகொண்டு, மீள்க!' என, இளைய தாதை உரைசெய்யவே, மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன்- தன் நிலம் கொதிகொளப் புகுந்து, ஒரு சழக்கு அற, சமர் உழக்கினான்.
'அற்பு அனைத்து உலகும் எண்ணவே, அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் கற்பனைக்கு உதவி தருக!' என, பழைய கால் விழுத்த நெடு வேலை வீழ் வெற்பனைப் புகல, அந்த வீடணன் அளித்த நீடு உயர் வியன்தலைப் பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து, கழல் போற்றியே,
மீள வந்து இளைய தாதை பாதம் முடிமீது வைத்து, ஒளி விளங்கு பொன் பாளை அம் பனைகள், பற்பராகம் முதலான பல் மணி, பரப்பினான், நாள் இரண்டில்; இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும், நல் அறன் காளை பைங் கழல் வணங்கினன், தனது பதி புகுந்து நனி கடுகியே.
ஆல் வரும் புரவித் திண் தேர் அறன் மகன், அநுசர் ஆன நால்வரும் சென்று, திக்கு ஓர் நால்-இரண்டினும் தன் செய்ய கோல் வரும் படியே ஆக்கி, கொணர்ந்தன திறைகள் கண்டான். மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்பக் கேண்மோ:
தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பந்தன்னை வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின், வேந்தர் ஆனவர் எவரும் ஈண்டி, அந்தணர் எவரும் ஈண்டி, மானவர் எவரும் ஈண்டி, வரம்பு அற நெருங்கினாரே.
வந்தோர்களை வரவேற்று, கண்ணனையும் பலராமனையும் தம்பியருடன் சென்று தருமன் எதிர்கொள்ளுதல்
வர வர, வந்த வந்த முனிவரை வணங்கி, ஆசி திரமுறப் பெற்று, வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி, நரபதிதானும் மற்றை நால்வரும், நீலமேனி இரவியை அனையான்தன்னை, உவகையோடு, எதிர்கொண்டானே.
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத, நிருபதி தேரில் போத, நேமியான் களிற்றில் போத, சுரர் பெருந் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார்; வரு திருப் பவனி கேட்டார், வள நகர் மாதர் எல்லாம்.
ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார், எழுதும் முன்னர், ஓர் அடி எழுதி, மின்போல் ஒல்கி வந்து, இறைஞ்சுவாரும்; ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற சீரிய கோலும், கையும், திருத்தகத் தோன்றுவாரும்;
வார் குழைப் பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும்; நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும்; கார் இளங் கமுகும், பச்சைக் கதலியும், நிரைத்து, தோள் ஆம் தோரணம் நாட்டுவாரும்; தூ மலர் சிந்துவாரும்;
இவ் வகை குழுக்கொண்டு ஆங்கண், எழுவகைப் பருவ மாதர், செவ்வியும், அழகும், தேசும், செய்ய பூந் திருவோடு ஒப்பார், மெய் வழி நின்ற போக மேகமே அனையான்தன்னை மை வழி கண்ணின் நோக்கி, மனன் உற வணங்கினாரே.
வண்டு மலர் கரும்பு ஆம் வண்ணப் படையானைக் கண்டனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன், செண்டு தரித்தோன், திருப்பவளத்து ஆர் அமுதம் உண்டு, மனத்தினால், உய்ந்தார்-சில மாதர்.
கண்ணன் குந்தியைப் பணிந்த பின், அரசவையில் வீற்றிருந்து, பாண்டவருடன் அளவளாவுதல்
மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின் இங்கித இன்பம் எய்தி, இன் உயிரோடு நிற்ப, பங்கு உற வந்த அந்தப் பாண்டவர் ஐவரோடும், கொங்கு அவிழ் துளபத் தாரான், குந்தி வாழ் கோயில் புக்கான்.
கொற்றவர் ஐவர்தம்மைக் குருகுலம் விளங்குமாறு பெற்றவள் பாதம் போற்றி, பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன், மற்று அவள் வாழ்த்த வாழ்த்த, மனம் மகிழ்ந்து, அழலின் வந்த பொற்றொடி பணிவும், ஏனைப் பூவையர் பணிவும், கொண்டான்.
அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி, வெற்றி முரசுடைத் துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை, விரை செயப் புரவித் திண் தேர் வீமனை முதலோர், எங்கும் உரை செலக் கவர்ந்த செல்வம் காட்டி நின்று, உரைசெய்தாரே.
சராசந்தன் மகனும் வீடுமன் முதலிய வேந்தர்களும் வருதல்
முன் நரமேதம் செய்வான் முடிச் சராசந்தன் என்னும் கின்னரர் பாடும் சீரான், கிளப்ப அருஞ் சிறையில் வைத்த அந் நரபதிகளோடும், அவன் மகன் மாகதேசன், எந் நரபதிகளுக்கும் இரவியே என்ன, வந்தான்.
இந்திரபுரிக்கும், இந்த இந்திரபுரிக்கும், தேவர், அந்தரம் அறிவுறாமல், அதிசயித்து உவகை கூர, செந்திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர வந்தது போலும், வேள்வி மா நகர்த் தோற்றம் அம்மா!
சுடும் அனல் கலுழனாக, சுருதியின்படியே, கோட்டி, நடுவுற, திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி, வடு அறச் சமைத்த சாலை மண்டபம்தன்னை நோக்கின், கடவுளர்க்கு அமைத்த யாக தலம் எனக் கவினிற்று அம்மா!
'ஓர் ஒரு தலைவராய், ஓர் ஒர் ஆண்டு, உளம் கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர்; ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்குப் பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள்.
'மைந்தர் நீர் நால்வரும்; மகம் செய் வேந்தனே தந்தையும்; தாயும், இத் தரும வல்லியே; இந்த வான் பிறப்பினுக்கு, இற்றை நாள் முதல், குந்தியும் பாண்டுவும் என்று கொண்மினே.'
கட கரி உரிவை போர்த்த கண்ணுதற் கடவுள், மாறி, இடம் வலமாக, பாகத்து இறைவியோடு இருந்தவாபோல், உடல் கலை உறுப்புத் தோலின் ஒளித்திடப் போர்த்து, வேள்விக் கடனினுக்கு உரிய எல்லாம் கவினுறச் சாத்தினானே.
தருமன் மா மதலை, அந்தச் சடங்கு சொற்படியே தொட்டு, புரிவுடைத் திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து, விரி சுடர்த் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக, சுருவையால் முகந்த நெய்யை, சுருதியால், ஓமம் செய்தான்.
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும், என்றும் அழிவு இலா மலரோன் ஆதி அமரர்தம் குழாமும், சூழ, எழு சுடர் முத் தீப் பொங்க, எழு பகல் ஓமம் செய்தான் - பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான்.
வேள்வி முடிவில் தருமன் தானமும் தியாகமும் செய்து, அபவிரதம் ஆடுதல்
இம் முறை, இராயசூய மா மகத்துக்கு எழுதொணா நான்மறை உரைத்த அம் முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி, மும் முறை வலம் வந்து, இருவரும் சுவாகை-முதல்வனை முடி உற வணங்கி, தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான்.
'முதற்பூசைக்கு உரியார் யார்'' என வீடுமனைத் தருமன் வினாவுதல்
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண்-இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி, உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன், உயர் குலப் பாவையும் தானும், மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி, அயர்வு அறு கங்கை மகன் பதம் பணிவுற்று, அறன் மகன் வினவினன் அம்மா!
என்ற போது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும் இருந்துழி இருந்து, 'நன்று, நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு நல் உரை!' என்றார். சென்ற போர்தோறும் வென்றியே புனையும் சேதிப பதி சிசுபாலன் கன்றினான், இதயம்; கருகினான், வதனம்; கனல் எனச் சிவந்தனன், கண்ணும்.
'பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், புறங்கானில் வாழ் கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, கொதித்து, ஓதினான்- காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் எய்தி, ஏழ் தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.
'சொற்றவா நன்று, சுகன் திருத் தாதை! சூதிகைத் தோன்றிய பொழுதே, பெற்ற தாய்தானும் பிதாவும் முன் வணங்க, பேசலா உரை எலாம் பேசி, கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப, கார் இருள், காளிந்தி நீந்தி, அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான்.
'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத் தடத்து அணைத்து,அமுதம் போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை உயிர்கொலோ, நுகர்ந்தான்? சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு நெய் பால் அருந்தி, ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன் இருந்து அழுதான்!
'பாடினான் மறுகு, பெரு நகை விளைப்ப; பாவையர் மனைதொறும், வெண்ணெய்க்கு ஆடினான்; அவர்கள் முகம்தொறும் எச்சில் ஆக்கினான்; கன்று முன் ஓட ஓடினான்; ஆவின் பேர் இளங் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் சாடினான்; அரவின் முதுகையும், புள்ளின் தாலுவோடு அலகையும், பிளந்தான்!
'அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான், ஒரு நாள், ஒரு தானே; கொண்டல் கல்மாரியை, முன்னம், கோவர்த்தனமே குடையாக, சண்ட ப்ரசண்ட வேகமுடன், தடுத்தான்; ஏறு படுத்தானே.
'பம்பிப் பரந்த புல் மேயும் பசுவின் கன்றும், கோபாலர்- தம் புத்திரரும், அம்புயத்தோன் தன் மாயையினால் ஒளித்திடும் நாள், 'எம் புத்திரரும், எம் கோவின் இளங் கன்றினமும்' எனத் தெளிய, வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால், யாவர் வல்லாரே!
'அதிரப் பொரும் போர் அஞ்சினனோ? அஞ்சாமைகொலோ? தெரியாது மதுரைப் பதியும், தன் கிளையும், வாழ்வும் துறந்து, வாரிதிவாய் எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில், முதிரப் பொரும் போர்த் தம்முனுடன் இருந்தான், பல் நாள், முரண் அறுத்தே.
'கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான்; வஞ்சனையினால், அமரும் எத்தனை மலைந்தான்? தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே மிஞ்சி, விரகால், உரிய மேதினி புரந்தான்.
'அன்னையும், தாதைதானும் அருஞ் சிறை அகத்து வைக, முன் இரு-மூவர் முன்னோர்தங்களை முருக்குவித்தான்; பின் ஒரு தமையன்தன்னை, "பெற்ற தாய் இருவர்' என்று என்று, இந் நிலம் சொல்ல வைத்தான்; இவனை வேறு யாவர் ஒப்பார்?'
என்றுகொண்டு எண்ணி, நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் ஒன்றின் ஒன்று உச்சமாக, உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற, கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான்-மன்றல் தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே.
கண்ணன் சினத்துடன் தேரில் ஏறி, சிசுபாலனைப் போருக்கு அழைத்தல்
திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன், தன் நெஞ்சில் தீங்கு தோன்ற, எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன் சொற்கள் எலாம் எண்ணி எண்ணி, புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூங் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி, பண்ணிய தன் புரவி நெடும் பரு மணித் தேர் மேற்கொண்டான், பரிதிபோல்வான்.
'எந் நாட்டில் அவனிபரும் ஈண்டிய இத் தொல் அவையின் இசைத்த-சேதி நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால!-நின் மாற்றம் நன்று நன்று! கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும்; கடிது ஏகு!' என்று, தன் நாட்டம் மிகச் சிவந்தான்-கரிய வடிவினில் புனைந்த தண் துழாயோன்.
ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடங் கிரி ஒப்பவே ஈர்-இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் தேர், இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின-தீஇடிக் கார் இரண்டு எதிர் மலையுமாறென அண்ட பித்தி கலங்கவே.
சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி, சேனைவாய், வங்கர், கொங்கணர், துளுவர், ஆரியர், மகதர், ஒட்டியர், மாளவர், கங்கர், கொங்கர், தெலுங்கர், சீனர், கலிங்கர், சிங்களர், கௌசலர், அங்கர், சோனகர், ஆன வீரர் அதிர்ந்து, தங்களின் அமர் செய்தார்.
வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா, இருவர்தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால், மருவி, எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும், திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும், செவிடு ஆனவே.
வெஞ் சினம் முடுக, ஒருவருக்கு ஒருவர் வெல்லலும் தோற்றலும் இன்றி, வஞ்சினம் உரைசெய்து, உள்ளமும், மெய்யும், வாகு பூதரங்களும், பூரித்து, எஞ்சினர்தமைப்போல் இளைத்த பின், இனி வான் ஏற்றுதல் கடன் எனக் கருதி, கஞ்சனை முனிந்தோன், இவன் முடித் தலைமேல், கதிர் மணித் திகிரி ஏவினனே
சேதி மன்னவன்தன் முடியினை நெடியோன் திகிரி சென்று அரிந்திட, ஒரு பொற் சோதி மற்று அவன்தன் உடலின்நின்று எழுந்து, சுடரையும் பிளந்துபோய், மீண்டு, மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி, மண் அளந்தருள் பதம் அடைய, வேதியர் முதலோர் யாவரும், வேள்விப் பேர் அவை வேந்தரும் கண்டார்.
'ஈது ஒரு புதுமை, இருந்தவா!' என்பார்; 'இந்திரசாலமோ?' என்பார்; 'மாது ஒரு பாகன் அல்லது, இக் கண்ணன் மதி குலத்தவன் அலன்!' என்பார்; 'கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும் பொறுப்பரோ?' என்பார்; காது ஒரு குழையோன் இளவலைத் தேர்மேல் கண்டு தம் கண் இணை களிப்பார்.
அதிசயித்து இவ்வாறு இருந்துழி, இருந்தோர் அனைவரும், ஆழியான்தன்னைத் துதி செய, தருமன் சுதன் முதல் எவரும் தொழுது, எதிர் வந்து வந்து இறைஞ்ச, விதி எனப் பொருத வெங் களத்திடை, அவ் வியாத மா முனி எடுத்து உரைப்ப, மதியுடைக் கடவுள்-வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார்.
'மற்று, அவர் இறைவன் மலரடி வணங்கி, 'வான் பிறப்பு ஏழ் உற மாட்டேம்; உற்று முப் பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து, உன் பதம் உறுவேம்; வெற்றிகொள் முதிர் போர் நேமியாய்!" என்றார்; விமலனும், கொடிய வெஞ் சாபம் அற்றிடும் வகை அவ் வரம் அவர்க்கு அளித்தான்; அசுரர் ஆய், அவரும் வந்து, உதித்தார்.
அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி, தரு நிரை பயிலும் தம் தம விபினம் சார்ந்தனர், தகவுடன் மீள; கரு முகில் அனைய மேனி அம் கருணைக் கண்ணனும், கிளையுடன், துவரைத் திரு நகர் அடைந்தான், சென்று, வன் திறல் கூர் சேதிபப் பெரும் பகை செகுத்தே.
அராவ வெங் கொடியோன் ஆதியா உள்ள அரசரும் தம் நகர் அடைந்தார்; விராடனும், யாகசேனனும், முதலாம் வேந்தரும் தம் பதி புகுந்தார்; சராசனத் தடக் கைச் சல்லியன் முதலோர் கிளையுடன் தம் புரம் சார்ந்தார்; பராவ அரும் முதன்மைப் பாண்டவர் கடல் பார் பண்புறத் திருத்தி, ஆண்டிருந்தார்.
முன் குலத்தவர்க்கும், முனி குலத்தவர்க்கும், மும் மதக் கைம் முகக் களிற்று மன் குலத்தவர்க்கும், வான் குலத்தவர்க்கும், வரம்பு இலா வகைக் கலை தெரியும் நன் குலத்தவர்க்கும், பொருள் எலாம் நல்கி, நாள்தொறும் புகழ் மிக வளர்வான், தன் குலக் கதிர்போல் தேய்ந்து ஒளி சிறந்தான்-தண்ணளித் தருமராசனுமே.