11. சூதுபோர்ச் சருக்கம்

யாகம் முற்றியபின் துரியோதனன் தன் துணைவர்
முதலியவருடன் அத்தினாபுரியை அடைதல்

தாமரை அனைய செங் கண் தரணிபன் இராயசூய
மா மகம் முற்றி, தங்கள் மா நகர் புகுந்த பின்னர்,
நா மரு பனுவல் மாலை நாக ஏறு உயர்த்த செல்வக்
கோமகன், இளைஞரோடும், குறித்தது கூறலுற்றாம்:

1
உரை
   


கணை வரும் வரி வில் வாழ்க்கைக் கடுங் கனல்
                         அனைய தோற்றத்
துணைவரும் தானும், கங்கா சுதனும், மற்று எவரும், சூழ,-
இணை வரும் அரசர் இல்லா இகல் அரிஏறு போல்வான்-
கிணை வரும் ஓதை மூதூர்க் கிளர் நெடும் புரிசை புக்கான்.

2
உரை
   


அரசவையில் துரியோதனன் மன்னர் சூழ வீற்றிருத்தல்

சென்றுழி, எவரும் தம்தம் செழு மனை எய்தி, வாசம்
துன்றிய அமளி, கங்குல் துயில் புரிந்து, எழுந்த பின்னை,
நின்ற வெம் பரிதித் தோற்றம் தொழுது, தம் நியமம் முற்றி,
வன் திறல் அரசன் கோயில் மன் அவை வந்து சேர்ந்தார்.

3
உரை
   

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து,
                           எதிர்ந்த வேந்தர்
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில்,
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும்
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:
4
உரை
   


கன்னன், சகுனி, துச்சாதனன், மூவரும் முறையே
எழுந்து பேசுதல்

'தாது அவிழ் குவளை மாலைத் தருமன் மா
               மதலை பெற்ற
மேதகு வேள்விச் செல்வம் வேந்தரில்
               யாவர் பெற்றார்?
ஏது அளவு, அவன்தன் வாழ்க்கை? யார் இனி எதிர்
               உண்டு?' என்று
பாதக நினைவைத் தானும் பகர்ந்தனன், பரிவு கூர.

5
உரை
   


விதரண வினோதன் சொன்ன வார்த்தையும்,
               வேந்தர் வேந்தன்
இதயமும் ஒன்றாய் நின்ற இயற்கையைச்
               சகுனி கண்டு,
'புதை நக மடங்கல், நாளும் புறம் செலாது,
               ஒடுங்குமானால்,
மத கரி விடுமோ?' என்றான்-வசை இசையாகக்
               கொள்வான்.

6
உரை
   

சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி,
வில் இடை நின்று, தம்முன் வெம் மனம்
                         களிக்கச் சொன்னான்-
'அல் இடை நிறைந்ததேனும், அமுத வெண்
                         கிரணத் திங்கள்
எல்லிடை இரவி முன்னர் எவ்வுழி நிகர்க்கும்?' என்றே.
7
உரை
   


மயனது கருத்தைத் துச்சாதனன் வலியுறுத்திப் பேசுதல்

தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து, நீதி
அமைதரு தந்தை கேட்ப, அவன் பெருந்தாதை கேட்ப,
கமை பெறு விதுரன் கேட்ப, கார்முகக் கன்னன் கேட்ப,
இமையவன் துரோணன் கேட்ப, யாவரும்
                         கேட்ப, சொல்வான்:

8
உரை
   


'இந்திரன் முதலா உள்ள இமையவர் சிறப்புச் செய்ய,
சுந்தரப் பொன்-தோள் வேந்தர் தொழில் புரிந்து
                         ஏவல் செய்ய,
மந்திர முனிவர் வேள்வி மறை நெறி முறையின் செய்ய,
தந்திர வெள்ளச் சேனைத் தருமனே தலைவன் ஆனான்;

9

உரை
   

'இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்
                         வாழ்வும் கொள்ளும்;
துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;
முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,
நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே?
10
உரை
   


போது உற விரைந்து, மற்று அப் புரவலன் செல்வம் யாவும்
பேதுறக் கவர்ந்திலேனேல், பின்னை யார் முடிக்க வல்லார்?
மோதுறப் பொருதே ஆதல், மொழி ஒணா வஞ்சம் ஒன்று
தீது உறப் புரிந்தே ஆதல், கொள்வதே சிந்தை' என்றான்.

11
உரை
   


தமையனது கருத்தைத் துச்சாதனன் வலியுறுத்திப் பேசுதல்

என்னலும், உரிய தம்பி, 'எழுவதே கருமம், இன்றே;
செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான்
நென்னல் அங்கு எய்த, வீமன் நகைத்ததும், நேயமான
கன்னல் இன் மொழியாள் மூரல் விளைத்ததும், கண்டிலீரோ?

12
உரை
   


'எத்தனை தரணி வேந்தர், யாக நல் விழாவில் வந்தார்?
அத்தனை பேரில் யாமும் ஒருவராய் அடங்கி நின்றேம்;
கொத்து அனை உகளும் நல் நீர்க் குரு நிலக் கோமான், அந்த
முத்தனை அன்றி, பின்னை, யாரையே முதன்மை செய்தான்?

13
உரை
   

'நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு,
வந்த கோ வெள்ளம் சேர வாய் திறவாமல் நிற்ப,
'எந்தகோ, இவனுக்கு இந்த முதன்மை!' என்று எதிர்ந்து, மாற்றம்
தந்த கோ மடியுமாறு சமரமும் விளைப்பித்திட்டான்.
14
உரை
   


'தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே,
                         வேள்வி செய்தான்.

15
உரை
   


'எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்தானும்
சல்லியம் மிகு போர் செய்யச் சல்லியன் தன்மேல் சென்றான்;
சொல்லிய கருமம் வாய்ப்ப, சூழ் வலைப் படுத்திக் கொண்ட
வல்லியம் என்ன, சூழ்ந்து, மலைவதே கருமம்' என்றான்.

16
உரை
   


துரியோதனன் ஐவரை அடக்குவதற்கு உரைத்த உபாயம்

வேந்தனும் ஒருப்பட்டு, 'அந்த வெண்ணெய் வாய்க்
               கள்வன் மீளப்
போந்து, இவர்தமக்கும் இன்று பொரு துணைஆக மாட்டான்;
சாந்து அணி குவவுத் தோளான் சல்லியன் வலியன்; இப்போது
ஆம் தகவு எண்ணில், வல்லே ஐவரை அடர்க்கலாமே.

17
உரை
   


'வஞ்சனை கொண்டே ஆதல், வாரணம்,
               மணித் தேர், வாசி,
நஞ்சு அனையவரால் ஆதல், நாளையே
               அழித்தல் வேண்டும்;
கஞ்சனை மலைய எண்ணி, கரிய பேய்
               முலைப்பால் உண்ட
நெஞ்சினன் எய்தாமுன்னம், நீர் விரைந்து
               எழுமின்!' என்றான்.

18
உரை
   


'போர் வழியே யன்றி வஞ்சனை வழி ஆகாது'
எனக் கன்னன் மறுத்தல்

'வெஞ் சிலை குனித்து ஓர் அம்பு யான் விடின்,
                         வெகுண்ட வேந்தர்
எஞ்சி, விண் புகுவர் அல்லால், யாவரே எதிர்க்க வல்லார்?
வஞ்சனை கொண்டு வெல்ல மதிப்பது, வாளால் வெல்ல
அஞ்சினம்ஆயின் அன்றோ?' என்றனன்-அங்கர் கோமான்.

19
உரை
   


'மாயச் சூதினாலே ஐவரை அடக்குதல் வேண்டும்'
எனச் சகுனி உரைத்தல்

யாவரும் மொழிந்த வார்த்தை இன்புறக் கேட்டு, பின்னும்
தா வரு புரவித் திண் தேர்த் தானையான் சகுனி சொல்வான்:
'மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்த போதும்,
கோ வரு முன்றிலானை, கொடுஞ் சமர், வெல்லலாமோ?

20
உரை
   


'இடிம்பனை, பகனை, வை வேல் இகல் சராசந்தன்தன்னை,
நெடும் பணைப் புயத்தால் வென்ற நிகர் இலா வீமன் நிற்க,
கடும் படைப் பெருமையால் வென் காணலாம் என்பர் ஆயின்,
தொடும் படைத் தடக் கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ?

21
உரை
   


'துப்பு உறழ் அமுதச் செவ் வாய்த் திரௌபதி துணைத்
                         தோள் வேட்டு,
கைப் படு சிலையினோடும் காவலர் கலங்கி வீழ,
மெய்ப் படு முனியாய் வந்து, விசயன் வில் வளைத்த போதும்,
இப்பொழுது இருந்த வீரர் யாவரும் இருந்திலேமோ?

22
உரை
   


'இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்' என்றான்.

23
உரை
   

துச்சாதனன் சகுனியின் சூது உபாயத்திற்கு உடன்படுதல்

தன் பெரு மாமன் சொல்ல, தரணிபன் தம்பிதானும்,
'வன் பெருஞ் சேனைகொண்டு மலைவதற்கு அவர்கள் அஞ்சார்;
இன் பெரு நேயம் மிக்க இவன் மொழிப்படியே, மாயப்
புன் பெருஞ் சூதுகொண்டு, பொருவதே புந்தி' என்றான்.

24
உரை
   


துரியோதனன் சகுனியை அருகில் அமரச் செய்து சூதால்
வெல்லும் வகையைக் கேட்க, சகுனி உரைத்த உபாயம்

கோமகன் நெஞ்சும் நாவும் குளிர்ந்து, பேர் உவகை கூர்ந்து,
மாமனை, 'தவிசின் கண்ணே வருதி!' என்று இருத்திக்கொண்டு,
'பா மரு பனுவல் மாலைப் பாண்டவர்தம்மை நின் கைக்
காமரு சூதால் வெல்லும் கருத்து எனக்கு உரைத்தி' என்றான்.

25
உரை
   


'மன்ன! நின் செல்வக் கோயில், மண்டபம்
               ஒன்று, "தேவர்
பொன்னுலகினுக்கும் இல்லை!" என்பது ஓர்
               பொற்பிற்று ஆக,
பன்னு நூல் சிற்பம் குன்றாப் பல் தொழில்
               வினைஞர்தம்மால்,
நல் நில விரிவு உண்டாக, நாளையே
               இயற்றுவிப்பாய்.

26
உரை
   


' "மண்டபம் காண, எம்முன் வருக!" என்று அழைத்து வந்தால்,
கண்டு, கண் களித்து, மற்று அக் காவலர் இருந்த போதில்,
"புண்டர விசால நெற்றிப் புரவல! பொழுது போக,
அண்டரும் விரும்பும் வன் சூது ஆடுதும்; வருக!' என்பேம்.

27
உரை
   


'அதிர் முரசு உயர்த்த கோவும், "ஐ!" எனத் துணியும்; பின்னை,
மதி மருள் இயற்கைத்து ஆகும் மாய வெஞ் சூதுதன்னால்,
விதி எனப் பொருது, வாழ்வும், மேதகும் அரசும், தங்கள்
பதி முதல் பலவும், தோற்கும்படி செகுத்திடுவல்' என்றான்.

28
உரை
   


துரியோதனன் முதலியோரின் மகிழ்ச்சி

'இன்னதே கருமம்!' என்று என்று, இளைஞரும்
              
        விழைந்து சொன்னார்;
அன்னதே கருமம் ஆக, அவர் வழி ஒழுகும் நீரான்,
"தன்னதே ஆகும், இந்தத் தலம்' எனும் கருத்தால், மாமன்
சொன்னதே துணிந்து, மார்பும் தோள்களும் பூரித்திட்டான்.

29
உரை
   


துரியோதனன் சகுனி உரைத்த உபாயத்தை விதுரனுக்குக் கூற,
அவன் மறுத்து மொழிதல்

வில்லினால் உயர்ந்த வென்றி விதுரனை நோக்கி, கொற்ற
மல்லினால் உயர்ந்த பொன்-தோள் வலம்புரி மாலை வேந்தன்
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான்; அவனும் கேட்டு, சொல் எதிர் சொல்லலுற்றான்:

30
உரை
   


'வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றே.

31
உரை
   


'தந்தைதன் ஏவலாலே தருமனும் தம்பிமாரும்
இந்த மண் ஆடல் கைவிட்டு, எரி கெழு கானம் சேர்வர்;
முந்துற நுமதே ஆகும், முழுதும் வாழ்வு; எழுதும் செம் பூண்
பைந் தொடை அரசர் கேட்டால், பாவமும் பழியும் ஆகா.

32
உரை
   


'தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!'

33
உரை
   


துரியோதனன் விதுரன் கருத்தை மறுத்துச் சினத்துடன்
மொழிய, அவனும் சினத்துடன் துரியோதனனுக்குப்
பரிந்து அறவுரை கூறுதல்

என்று அவன் உரைப்பக் கேட்டே, எரி எழும் மனத்தன் ஆகி,
'ஒன்றிய கேண்மைத் தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ?
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி, இன்று எமக்குத் தந்தால்,
புன் தொழில் வசையே அன்றி, புகழ்கொலோ புகல்வது? அம்மா!

34
உரை
   


'நினக்கு இது தொழிலால்; என்றும் நேயமும்
               அவர்கள்மேலே;
"எனக்கு உயிர்த் தந்தை நீ" என்று யான் உனை
               மகிழ்ந்து காண்பன்;
உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும்
               வாழ்வும் இங்கே;
மனக் கருத்து அங்கே' என்றான்-மாசுணத்
               துவசன் மாதோ.

35
உரை
   


மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர, பின்னும்
வெந் திறல் விதுரன் உற்று விளம்புவன் என்ப மாதோ:
'புந்தியில் மறு இலாதோய்! "புதல்வரில் ஒரு சார் அன்பு
தந்தையர்க்கு இல்லை' என்றாய்; யானும், அத்
                         தந்தை அன்றோ?

36
உரை
   


'நீங்களும் அவரும், நேய நெறிமுறை தவறாது, என்றும்
வாங்கு நீர் உததி ஆடை மண்ணின்மேல் வாழ்தல் உற்றால்,
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து, நும் வாயில் நிற்பர்;
ஓங்கிய புகழும் வாழ்வும் ஒருப்பட வளரும் அன்றே.

37
உரை
   


'உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து,
               எதிர்த்தீர் ஆனால்,
'தங்களின் எதிர்ந்தார் அம்மா, குருகுலத்
               தலைவர்!' என்னா,
பொங்கு அளி நிகழும் கஞ்சப் புரவலன்
               ஒழிவு கண்ட
திங்களின் உயர்ச்சி போலத் தெவ்வரும்
               திகழ்வர் அன்றே.

38
உரை
   


'ஆதலால், உறுதி சொன்னேன்; ஆம் முறை தெரிந்து கோடி!
ஏதிலார்போல, யானும், இனி உனக்கு யாதும் சொல்லேன்;
தீது அலாது உணரா வஞ்சச் சிந்தையார் பரிந்து கூறும்
கோது அலாது உனக்கு இங்கு ஏலாது' என, சில கூறினானே.

39
உரை
   


விதுரன் மனம் வருந்தத் துரியோதனன் நகையாடுதலும்,
அது பொறாது விதுரன் எழுந்து தன்
இருப்பிடம் சேறலும்

'நிறுத்து அறம் வளர்ப்போன் நெஞ்சில் நீதியும்,
               குரவர் ஏவல்
மறுத்து எதிர் உரைக்கும் என்பால் வடுவும், நீ
               வரைந்து கண்டாய்;
செறுத்தவர் ஆவி கொள்வாய்! அடியனேன்
               செய்தது எல்லாம்
பொறுத்தருள்!' என்ன, கையால் போற்றினன்,
               முறுவல் செய்தான்.

40
உரை
   


செழுந் திரு விரும்பும் மார்பன் செப்பிய
               கொடுமை கேட்டு,
விழும் திரள் மாலைத் திண் தோள் விதுரனும்
               வெகுண்டு, முன்னித்
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு
               இசைவுறாமல்,
எழுந்து, தன் கோயில் புக்கான்-இகல் அரிஏறு
               போல்வான்.

41
உரை
   


துரியோதனன் ஆணைப்படி அழகியதோர் மண்டபம் சமைத்தல்

புரிவு இலா மொழி விதுரன் போகலும், புரிவில் ஒன்றும்
சரிவு இலா வஞ்ச மாயச் சகுனியும், தம்பிமாரும்,
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே
                         விசாரம் ஆக,
வரி விலான், 'விரைவின், ஈண்டு ஓர் மண்டபம்
                         சமைக்க!' என்றான்.

42
உரை
   


பெருந்தகை ஏவல் மாற்றம் பிற்பட, முற்பட்டு ஓடி,
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின்
                         இயன்ற எல்லாம்
அருந் திறல் மள்ளராலும், அணி மணித் தேரினாலும்,
பொருந்தவே கொணர்வித்து, ஆங்கண் பொற்
                         சுவர் இயற்றினாரே.

43
உரை
   


சங்கை இல் சிற்ப நுண் நூல் தபதியர் தகவு கூர,
செங் கையின் அமைத்த கோலச் சித்திரத் தூணம் நாட்டி,
அம் கையில் அருண ரத்நத்து அணிகொள் உத்தரமும் ஏற்றி,
கங்கையின் உயர்ந்த முத்தின் கற்றையால்
                         முற்றும் வேய்ந்தார்.

44
உரை
   


ஓவியம் சிறக்கத் தீட்டி, ஒண் கொடி நிரைத்து, செஞ் சொற்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி,
வாவிய புரவித் திண் தேர் மன்னவன் நினைவுக்கு ஏற்ப,
ஏவிய வினைஞர் தம்மால் இயல்புறச் சமைந்தது அன்றே.

45
உரை
   


மண்டபம் அமைத்தமையைத் தந்தைக்குத் துரியோதனன்
சொல்லி, பாண்டவரை வரவழைக்கத் தூது அனுப்ப வேண்டுதல்

'மன் அவைக்கு ஆன பைம் பொன் மண்டபம்
               சமைந்தது' என்று,
தன் அவைக்கு உரியோர் சொல்ல, சகுனியும்
               தானும் நோக்கி,
'சொல் நவைக்கு ஏற்றது' என்று, தொழுதகு
               தாதைதன்பால்,
மின்னை வைத்து ஒளிரும் வேலான் மேவினன்,
               விளம்பலுற்றான்:

46
உரை
   


'அரும் பெறல் ஐய! கேட்டி! அடியனேன்
               கருத்து முற்ற,
கரும் புயல் தவழும் சென்னிக் கதிர் மணிக்
               கூடம் ஒன்று
பெரும் புகழ் நகரின் ஈண்டுச் சமைத்தனன்;
               பெருமை காண
வரும்படி, தூது ஒன்று ஏவு, உன் மைந்தரை,
               விரைவின்' என்றான்.

47
உரை
   

திருதராட்டிரன் மகிழ்ந்து, விதுரனைத் தூது அனுப்புதல்

மகன் மொழி நயந்து கேட்டு, வாழ்வு உறு தந்தைதானும்
மிக நயந்து உருகி, 'நல்ல விரகினால் வெல்லல் உற்றீர்!
அகம் நெடும் போர் செய்தாலும், ஐவரை அடர்க்க ஓணாது!
சகுனியை அன்றி, வேறு ஆர் தரவல்லார், தரணி?' என்றான்.

48
உரை
   


விழி இலா வென்றி வேந்தன் விதுரனை அழைத்து,
              'நீ போய்
மொழியில், ஆர் உலகில் மற்று உன் மொழியினை
              மறுக்க வல்லார்?
பழி இலா இசை கொள் நீதிப் பாண்டவர் வந்து,
              உன் மைந்தர்
வழியில் ஆய் ஒழுகும்வண்ணம் மருட்டி, நீ
              கொணர்தி!' என்றான்.





49
உரை
   


'தம்பியர் விழைவால் கூடம் சமைத்த பேர் அழகு காண,
இம்பர் வந்து, எமையும் எய்தி, ஏகுக விரைவின்!' என்ன,
பைம் பொனின் ஓலைமீது பண்புற எழுதி, 'இன்னே
எம்பியும் ஏகுக!' என்றான்; ஏவலின், அவனும் போனான்.

50
உரை
   


பரிவாரங்கள் சூழ, விதுரன் பாண்டவர் வாழ் நகரை அடைதல்

கார் எனக் களிறு சுற்ற, காற்று எனப் புரவி ஈண்ட,
தேரினுக்கு ஒருவன்தன்னைச் சிலம்பு எனத் தேர்கள் சூழ,
வீரரில் பலரும் போற்ற, விதுரனும், இரண்டு நாளால்,
பாரினுக்கு உயிரே போலும் பாண்டவர் நகரி சேர்ந்தான்.

51
உரை
   


இந்திரப்பிரத்த நகரின் எழில்

புரியும் ஒண் கதிர் கவினுறு பொலிவினால் பொன்னுலகு
               ஆம் என்ன,
அரிய பைம்பொனின் மணிகளின் நிறைந்த சீர் அளகை
               மாநகர் என்ன,
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ
               வான் பதி என்ன,
விரியும் வெண் கொடிப் புரிசை சூழ் வள நகர், விழி
               களித்திட, கண்டான்.

52
உரை
   


ஊடு எலாம் நறும் பொய்கை; நீள் வாவியின் உடம்பு எலாம்
               மலர்; பூவின்
தோடு எலாம் எழு சுரும்பினம்; மதுகரச் சொல் எலாம்
               செழுங் கீதம்;
பாடு எலாம் இளஞ் சோலை; மென் பொங்கரின் பணை எலாம்
               குயில் ஓசை;
நாடு எலாம் நெடும் புனல் வயல்; கழனியின் நடுவு எலாம்
               விளை செந்நெல்;

53
உரை
   


அருகுஎலாம் மணி மண்டபம்; அவிர் ஒளி அரங்கு எலாம்
               சிலம்பு ஓசை;
குருகு எலாம் வளர்பழனம்; அப் புள் எலாம் கூடல்,
               இன்புற ஊடல்;
முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம்; வெண் முத்து எலாம்
               நிலா வெள்ளம்;
பருகலாம் புனல் நதிஎலாம், நீர்எலாம், பங்கயப் பசுங் கானம்;

54
உரை
   


ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து, ஆதுலர்க்கு
               அமுது அன்ன
போனகம் பரிந்து இடு நெடுஞ் சாலையே, புகுந்த மா
               மறுகு எல்லாம்;
'வானகம்தனை அமையும்!' என்று, உம்பரும் மண்ணின்மேல்
               வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ?

55
உரை
   


பாண்டவர் விதுரனை எதிர்கொண்டு உபசரித்தல்

'வந்தனன், சிலை விதுரன்' என்று ஓடி, முன் வந்தவர்
               உரையாமுன்,
தந்தை தன் தனி வரவு அறிந்து, இளைஞரும் தருமனும்
               எதிர் கொண்டார்;
சிந்தை அன்புடன் தொழத் தொழ, மைந்தரைச் செங்கையால்
               தழீஇக் கொண்டே,
அம் தண் அம்புலி கண்ட பைங் கடல் என, அவனும் மெய்
               குளிர்ந்திட்டான்.

56
உரை
   


கொண்டு தந்தையைத் தாமும், வண் கொடி மதில் கோபுர
               நெடு வீதி
அண்டர் ஆலயம் எனத் தகு கோயில் சென்று அடைந்தபின்,
               அடல் வேந்தர்
வண்டு தாமரை மலர் எனச்  சுழலும்  மா  மலர்  அடி
               பணிந்து ஏத்த,
கண்டு, வாழ்வுடன் அவர்க்கு அருள் புரிந்து, தன் கருத்தினால்
               விடை ஈந்தான்.

57
உரை
   


விதுரன் தான் வந்த காரியத்தை உணர்த்துதல்

தானும், மைந்தர் ஓர் ஐவரும், ஒரு புடை தனித்து
               இருந்துழி வண்டு
தேன் நுகர்ந்து இசை முரல் பசுந் தொடையலான்
               திருத்தக மொழிகின்றான்:
'கோன் உவந்து, தன் திருமுகம் எழுதி, 'நீ கொணர்க
               மைந்தரை!' என்ன
யானும் வந்தனன், ஏவலால்; அழைத்ததற்கு ஏதுவும்
               உளது அன்றே.

58
உரை
   


'நீ புரிந்த நல் வேள்வியின் கடன் கழித்து, யாவரும்
               நெடு மாடக்
கோபுரம்  திகழ்  மூதெயில்  வளநகர்க்  கோயில்
               புக்கனம் ஆக,
'நூபுரம் திகழ் இணை அடி அரம்பையர் நோக்க அருங்
               கவின் கொண்ட
மா புரந்தரன் இவன்' என இருந்தனன், வலம்புரி மலர்த் தாரான்.





59
உரை
   


'தம்பிமாரொடும்,  தகை  இலாத்  துன்மதிச்
               சகுனிதன்னொடும் எண்ணி,
'கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண்
               கூடம் ஒன்று அமைக்க' என்ன,
"அம்பு ராசி சூழ் மண்தலத்து அரசு எலாம்
               அடங்கு பேர் அவைத்துஆக,
உம்பர் ஆலயம் நிகர்" எனச் சமைத்தனர்,
               ஒட்ப நூல் உணர்வுற்றார்.

60
உரை
   


'பெற்ற தந்தையோடு உள் உறும் உணர்வுஎலாம்
               பேசி, மண்டபம்தன்னில்
கொற்றவன் குடி புகும்பொழுது, உன்னையும் கூட்டி
               மன் அவை முன்னர்,
மற்ற மாதுலன் நெஞ்சமோ, வஞ்சமோ, மாயமோ,
               வகுத்து, ஆங்கு,
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன்; கருத்து
               இனித் தெரியாதே?

61
உரை
   


விதுரன் கொடுத்த திருதராட்டிரன் திருமுகச் செய்தி
உணர்ந்து, தருமன் பேசுதல்

'திருதராட்டிரன்  திருமுகம்  இது'  என,  சென்று
               இறைஞ்சினன் வாங்கி,
விரதம் ஆக்கம் என்று அறிந்து, அறம் பேணுவான்
               வினைஞர் கைக் கொடுத்திட்டான்;
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும்,
               அது கேட்டு,
வரதனால் பணிப்புறு தொழில் யாவர், நாம் மறுக்க?'
               என்று உரைசெய்தான்.

62
உரை
   


மூத்த தாதைதன் ஓலையும், இளையவன் மொழியும்,
               ஒத்தமை நோக்கி,
வார்த்தை வேறு மற்று ஒன்றையும் உரைத்திலன்,
               மனுநெறி வழுவாதோன்;
'சேர்த்த நாக வெங் கொடியவன் கொடிய வன் சிந்தையின்
               நிலை தோன்ற,
கோத்த கோவை நன்று ஆயினும் தகுவதோ,
               குருகுலம்தனக்கு?' என்றான்.

63
உரை
   


'அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும், அழகும்,
               வென்றியும், தம்தம்
குடியும், மானமும், செல்வமும், பெருமையும், குலமும்,
               இன்பமும், தேசும்,
படியும், மா மறை ஒழுக்கமும், புகழும், முன் பயின்ற
               கல்வியும், சேர
மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின்மேல் வைப்பரோ
               மனம்? வையார்.

64
உரை
   


'குழகர் ஆய் இள மடந்தையர்க்கு உருகுவோர், குறிப்பு
               இலாமையின், நாளும்
பழகுவார்,  மிகச்  சிந்தை  நோய்  தாங்களே
               படுக்குமாறு உணராமல்;
அழகு பேர் அறிவாகவே கொண்டவர், அறத்
               தொழில் புரியாமல்,
கழகம் ஆடவும் பெறுவரோ? இதனினும் கள் உணல்
               இனிது அன்றே!

65
உரை
   


'மேதகத் தெரி ஞானநூல் புலவரும், வேத்து நூல்
               அறிந்தோரும்,
பாதகத்தில் ஒன்று என்னவே, முன்னமே, பலபடப்
               பழித்திட்டார்;
தீது அகப்படு புன் தொழில் இளைஞரின் சிந்தனை
               சிறிது இன்றி,
தோதகத்துடன் என்னையோ, சகுனிதன் சூதினுக்கு
               எதிர்?' என்றான்.

66
உரை
   


தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இம் முறை தருமன்
               மைந்தனும் கூறி,
'என் கருத்தினால் பெறுவது என்? விதியினை யாவரே
               எதிர் வெல்வார்?
மன் கருத்தையும், அவன் திருவுளம் நிகர் மகன்
               கருத்தையும், நோக்கி,
நின் கருத்தை நீ உரை' என, விதுரனும் நிகழ்ந்தன
               உரைக்கின்றான்:

67
உரை
   


'நின் கருத்து உரை' என வேண்டிய தருமனுக்கு
விதுரன் கூறிய மாற்றம்

'இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும், யானும்
               அன்னவர் கேட்ப,
அங்கு நீர்மையின் மொழிந்தனன்; என் மொழி
               யார்கொலோ மதிக்கிற்பார்?
பொங்கு நீருடைப் பூதலத் தலைவ! கேள்; புனைந்த
               நின் இதயத்துத்
தங்கு நீர்மையின் புரிக!' எனப்புதல்வனைத் தந்தையும்
               தகச் சொன்னான்.

68
உரை
   


வீமன் தன் கருத்தை உரைத்தல்

'அன்று தாழ் புனல் துறையினில் கழு நிரைத்து, அரிய
               வஞ்சனை செய்தான்;
குன்றுபோல் உயர் வாழ் மனைக் கொடுந் தழல் கொளுத்தி,
               வன் கொலை சூழ்ந்தான்;
வென்று சூதினில் யாவையும் கவரவே, விரகினால்
               அழைத்திட்டான்;
என்றுதான் நமக்கு அன்புடைத் துணைவனாய் இருந்தது,
               அவ் இகலோனே?





69
உரை
   


'முளையிலே உயிர் கொல்வது ஓர் கடுவிடம் முற்றி, வன்
               காழ் ஏறி,
விளையில் ஏது செய்யாது? மற்று அவருடன் விழையும் நண்பு
               இனி வேண்டா;
வளையில், ஏதமே புரிந்து, மேல் மலைந்திடும்; வன் படை
               கொடு மோதிக்
களையிலே நமக்கு இருப்பு உளது' என்றனன்-காற்று அருள்
               கூற்று அன்னான்.

70
உரை
   


விசயன் முதலிய தம்பியரும் அத்தினபுரிக்குச் செல்லுதலை
மறுத்துரைக்க, தருமன்; 'தந்தை சொல் மறுப்பது தகாது' எனல்

' "தேறலார்தமைத் தேறலும், தேறினர்த் தேறலாமையும், என்றும்
மாறலாருடன் மலைதலும், மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே
ஆறு அலாதன அரசருக்கு' என்று கொண்டு, அரச
               நீதியில் சொன்னார்;
கூறலாதன சொல்வது என்? செல்வது என், கொடியவன்
               அருகு?' என்றான்.

71
உரை
   


விசையன் இவ் வகை மொழிந்ததும், முந்துறு வீமன்
               மாற்றமும் கேட்டே,
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும், 'ஏகுதல்
               தகாது' என்றார்;
'வசை அறும் புகழ்த் துணைவர் இன்று உரைத்ததே வார்த்தை
               ஆயினும், பெற்ற
அசைவு இல் அன்புடைத் தந்தை சொல் மறுப்பதோ?'
               என்றனன், அறம் செய்வான்.

72
உரை
   


'ஆவி யார் நிலைபெறுபவர், நீதி கூர் அரிய வான்
               புகழ் அன்றி?
பாவியானது அங்கு அணுகுறாது ஒழியினும் பலித்திடும்,
               நினைவு இன்றி;
மேவிஆளுடை ஐயன் வந்திருக்கவும், வேரி வண்டு
               எழும் மன்றல்
காவி ஆர் தொடைக் காவலன் ஏவல் நாம் மறுப்பது
               கடன் அன்றே!

73
உரை
   

தருமன் ஆணைப்படி அத்தினாபுரி செல்ல,
படைத்தலைவர் முதலியோர் திரளுதல்

'நாளை ஏகுதும், எந்தை வாழ் அத்தினா நகர்க்கு'
               எனத் தருமன்தன்
காளை ஏவலின், முரசு அறைந்து, எங்கணும் காவலர்
               குழூஉக் கொண்டார்;
வேளை ஏறிய அரும் படைத் தலைவரும், மேல்
               வரும் புனலூடு
வாளை ஏறு தண் பழன நாட்டு எறி படை மன்னரும்,
               வந்துற்றார்.

74
உரை
   


மாதுரங்கமம், மணி நெடுந் தேர், மத வாரணம், வய வீரர்,
சாதுரங்கமும், தந்திரத் தலைவரும், தரணி மன்னரும், சூழ,
மீது உரம் கவின் கெழு பெருஞ் சேனை சூழ் வேந்தன்
               மா நகர் உற்ற
போது, உரங்கமும் நெளிந்தன, பல் தலை பொறாமையின்
               இரு-நான்கும்.

75
உரை
   


ஐவரும் தேர்மீது ஏற, நாற்படைகளும் சூழ்தல்

ஐந்து பூதமே நிகர் என, புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன,
ஐந்து காவுமே பொரு என, பணி முடி ஐந்துமே நேர் என்ன,
ஐந்து வாளியே உறழ்வுஎன, வேள்வி ஓர் ஐந்துமே ஒப்பு என்ன,
ஐந்து வாசமே தரம் என, ஐவரும், ஐந்து தேர்மேற் கொண்டார்,

76
உரை
   


விழியின், நெஞ்சின், வால் நெருப்பின், நீடு உததியின், விதி
               படைப்பினின், தோன்றி,
பொழியும் வெண்கதிர் ஐவகை மதியும் அப்பொழுது
               உதித்தன என்ன,
மொழியும் ஐந்து பொன் தனிக் குடை நிழற்றின; முழு
               மதி வடிவின்கண்
இழியும் வெண் சுடர்க் கற்றையின் சாமரம் இரட்டின,
               இருபாலும்.

77
உரை
   


மைத் திறத்தின் நின்று அதிர்வன; முதிர்வன வரைத்
               திறத்தினும் ஓங்கும்
மெய்த் திறத்தன; எழு திறத்தினும் மிக விடுவன, மததாரை;
எத் திறத்தினும் பொரு தொழில் புரிவன; ஏழ் உறுப்பு
               உறத் தாழ்ந்த
முத் திறத்தன; எண் நலப் பிறப்பின-மூரி வெங் களி யானை.

78
உரை
   


வன் தபோதனரினும் மிகு பொறையன, வலன்
               உயர்வன, எண் கோ
என்ற போதகத் தானையின் பெருமையை
               எங்ஙனம் புகல்கிற்பாம்!
நின்ற போது உடல் முகிலிடை மறைந்தது; நிரை
               நிரை நெறிப்பட்டுச்
சென்றபோது, வெம் படைக் கடல் செய்தது ஓர்
               சேதுபந்தனம் போலும்!




79
உரை
   


சுற்றும் நீளமும் உயரமும் நிகர்ப்பன; சுழியின்
               மிக்கன; தீமை
அற்று  மேதகு  நிறத்தன;  கவினுடை
               அவயவத்தன ஆகி,
எற்று மா மணி, முரசமும், சங்கமும், எனும் குரல்
               மிகுத்து, இப் பார்
முற்றும், மாதிரத்து அளவும், ஐங் கதியினால் முடிப்பன,
               இமைப்போதில்;

80
உரை
   


ஆளின் நெஞ்சமும், வார்த்தையும், செங் கையும்,
               ஆசனத்தொடு தாளும்,
கோளில் இன்புறக் குறிப்பன; எவற்றினும் குறைகள்
               அற்றன ஆகி,
யாளி, குஞ்சரம், வானரம், முதலிய இயக்கினால்,
               விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன-நெடுந் துரகதம்,
               பல கோடி.

81
உரை
   


வடிவுடைச்  சில  குரகதம்  மரகத  வண்ணம்
              மிக்கன ஆகி,
படியினில் சிறிது அமைவுற மிதித்தில, பவன
               வெங் கதிபோல;
முடிவில் இப்படிமிசை வரக் கருதியே முனிவரன்
               உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது; படைத்தது, இங்கு இவற்றினுக்கு
               அவயவம் குறையாமல்.

82
உரை
   


'நீடு மால் வரை அடங்கலும் நிலைபெற நிற்கும் மால்
               வரை; மண் மேல்
ஓடும் மால் வரை இவை!' என, தனித்தனி ஊர்ந்த தேர்
               பல கோடி,
'நாடு,  மால்  வரை,  கடல்,  வனம்,  எனும் நிலன்
               நாலுமே ஒன்றாகக்
கூடுமால்; வரை இல்' எனப் பரந்தனர், கொடிய வெம்
               படை வீரர்.

83
உரை
   


அதிர் முழக்கின கரு முகில் ஏழுடை அண்டர் கோன்
               அகல் வானுக்கு
எதிர் முழக்கு என முழங்கின, தனித் தனி, இன் இயம்,
               இடம்தோறும்;
முதிர் முழக்கு இபம் அவற்றினும் மும் மடி முழங்கின;
               அவைதாமும்
பிதிர் முழக்கு என, முழங்கின, வலம்புரி; உரகரில்
               பிழைத்தோர் யார்?

84
உரை
   


எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும்
               நெருங்கி, கீழ்ப்
படுத்த வானமே வானமா மறைந்தது, மீதுறப் பகிர் அண்டம்;
அடுத்த பூ நதி, வான் நதிக்கு இலது என, அன்புடன் உபகாரம்
கொடுத்த மீன் என, கால் பொரப் பரந்து போய்க் குளித்தன
               குளிர் தோயம்.

85
உரை
   


அழுந்த மேல் இடு சேனையால் மிகவும் நொந்து, அமரருக்கு
               உரை செய்ய,
செழுந்  தராதல  மடந்தை  பொன்னுலகிடைச்
               செல்லுகின்றதுபோல், மேல்
எழுந்த தூளிகள், இடை விடாது, எங்கணும் எழுந்து எழுந்து,
               எதிர் ஓடி,
விழுந்த தூளியும் தடுத்தன, நிலன் உற, விசும்பு உறும்படி நின்றே.

86
உரை
   


தம்பியர் சூழத் தருமன் புறப்படுதல்

முன்னர் மாருத மதலையும் சேனையும் முடுகி வன்பொடு போத,
பின்னர் வாசவன் மதலையும் தானையும் பெருந் தகவுடன் போத;
'அந் நராதிபர் இருவரும் இருபுறத்து அரும் படையுடன் செல்ல,
மன்னர் ஆதிபன் தாரகா கணத்திடை மதி எனப் புறப்பட்டான்.

87
உரை
   


அரச மகளிர்கள் பிடியின் மேலும், திரௌபதி
சிவிகையிலும் செல்லுதல்

அம் கண் மாநிலத்து அரசர்தம் மகளிர் பேர் அரும்
               பிடிமிசை போத,
செங் கண் மாமயில் யாகபத்தினியும் வண் சிவிகையின்
               மிசை போத,
வெங் கண் மா மணி முரசு உயர்த்தருளிய மெய் தவா
               மொழி வேந்தன்
தங்கள் மா நகர் கடந்து, வண் சாயையும் தபனனும்
               எனச் சென்றான்.

88
உரை
   


ஏவின, பல்லியும்; இடத்திலே வரத்
தாவின, குக்கிலும்; தருமன்தன் எதிர்
வாவின, நெடுங் கலை; வரத நூல் வலோர்
ஓவினர், உரைக்கவும் உணர்கலாமையால்.




89
உரை
   


வழியிலுள்ள ஒரு சோலையில் இளைப்பாறி, மேலே செல்லுதல்

மடந்தையர் அளகமும், மாந்தர் மாலையும்,
உடைந்து உகு கட கரி மதமும், உன்னியே,
தடம்தொறும் முரல் அளி, தமரின் நண்புஉறத்
தொடர்ந்து, உடன் வர வர, சோலை எய்தினார்.

90
உரை
   


சம்பகம், பாடலம், தமால நாள்மலர்,
வம்பு எழ மிலைச்சுவார்; வாவி ஆடுவார்;
செம் பலவு, ஆமிரம், கதலித் தீம் கனி,
உம்பரின் அமிழ்துஎன, உடன் அருந்துவார்.

91
உரை
   


நால் வகை நிலக் காட்சிகள்

பச்சிளங் கமுகின் மென் பாளை சூடுவார்;
அச் செழுங் காய் கனி கவர்ந்து அருந்துவார்;
கொச்சை அம் கடைசியர் குழுமி வாழ்த்தவே,
வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார்.

92
உரை
   


தடா நிறை வெண்ணெயும், தயிரும் கொண்டு, எதிர்
அடா, முடை நாறுதோள் ஆயர் கைதொழ,
படா முதல் முல்லையின் பரிமளம் கொளா,
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார்.

93
உரை
   


தேன்இனம் செறிதரு தெரியல் வேலினான்-
தான் இரங்கு அருள் மிகு தருமன் ஆதலால்,
கானில் அங்கு உறைதரு கலைகளோடு இள
மான்இனம் பேர்கலா, மருங்கு வைகுமால்.

94
உரை
   


செரு இளங் காளையர் சேனையின் திறம்
வெருவு இளம் பொதுவியர் விழைந்து காண்பபோல்,
மரு விளங்கு இதழி நீள் வனமும், மா மலர்க்
கருவிளங் கண்கொடு, கலந்து கண்டவே.

95
உரை
   


புழை நெடுந் தடக் கை வெம் போதகங்களை
மழை முகில் என, களி மயில்கள் ஆடின-
தழல் எழு கானகம் தண்ணெனும்படி
செழு மத அருவியின் திவலை வீசவே.

96
உரை
   


வன நெறி கடந்து போய், மன்னவர்க்கு எலாம்
தினகரன் எனத் தகு செய்ய கோலினன்,
இனமுகில் தவழ்தலின், இரங்கு பேர் இசைத்
தனித வண் கிரி நெடுஞ் சாரல் எய்தினான்.

97
உரை
   


குன்று உறை கட கரிக் குழாங்கள், சேனையின்
ஒன்றிய களிறு கண்டு, உட்கி, ஓடின;
துன்றிய புற இபச் சுவடு கண்டு, உடன்
சென்றில, வெகுண்டு, இவன் சேனை யானையே.

98
உரை
   


வாளியின் வரும் பரிமாவின் வண் குரத்
தூளிகள் விசும்புறத் துன்றி ஓங்கலால்,
ஆளிகள் சிகரம் என்று அதிர்ந்து பாய்வன,
மீளியர் வேலின்வாய் வீழ்ந்து மாய்ந்தவே.




99
உரை
   


கார் தவழ் கொடு முடிக் கான மால் வரை
வார் தவழ் முலை அரமாதரார் செவி,
தார் தவழ் தடம் புயத் தரணி மன்னவர்
தேர் தவழ் ஓதையின், செவிடு பட்டவால்.

100
உரை
   


வரை நிலம் கழிந்து, எறி மகர வாரிதித்
திரை நிலம் புகுந்தனன், சேனை சூழ்வர-
புரை நிலம் கடந்து அறம் புரியும் நீர்மையான்,
உரை நிலம் கடந்த சீர் உரைகொள் பேரினான்.

101
உரை
   


ஒளி நலம் திகழ் வளை உறங்கு நல் நிழல்,
களி நறுஞ் சுரும்பு இமிர், கண்டல் வேலி சூழ்
புளினமும், கானலும், பொற்ப நோக்கினான்-
நளினமும் புறந்தரு நயன வேந்தனே.

102
உரை
   


'பெருங் கட மலைக்குலம் பெயர்த்தும் வந்தன,
மருங்கு அடர் பேர் அணை வகுக்கவே' எனா,
இருங் கட களிறு, தேர், எண் இல் சேனை, கண்டு,
அருங் கடல் வாய் திறந்து, அலறி ஆர்த்ததே.

103
உரை
   


நல் நெடுந் துறை எலாம் நாளிகேரமோடு
இன் நெடும் பனங் கனி எடுத்து அருந்தினார்;
புன்னையின் புது மலர் புனைந்து, கைதையின்
மென் நிழல் வைகினார்;-விலாச வீரரே.

104
உரை
   


அத்தினபுரியின் புறத்தே சேனைகளுடன்
பாண்டவர் தங்கியிருத்தல்

நா நலம் புனல் கெழு நாடும், கானமும்,
ஏனல் அம் புனக்கிரி இடமும், நெய்தல் அம்
கானலும், இவ் வகை கடந்து, காவலன்
தூநலம் திகழ் பதி தோன்ற, எய்தினார்.

105
உரை
   


அத்தினபுரிதனக்கு அருகு வால் வளை
முத்துஇனம் நிலவு எழ, முகைக்கும் தாமரைத்
தொத்தின பொய்கையும், சுரும்பு அறா மலர்க்
கொத்தின சோலையும், குறுகி, வைகினார்.

106
உரை
   


மொட்டின பரு மணி முடிகொள் தேர்ப் பரி,
வெட்டின பரிகளும், வெம்மை ஆறின;
மட்டின பரிமள மரங்கள் யாவையும்
கட்டின, கழை பொரு கவள யானையே.

107
உரை
   

தரித்தனர், வீரரும், தம்தம் மாதரும்;
சரித்தன, சும்மைகள் தங்கு பண்டியும்;
பரித்தன நல் நிறப் படங்கு வீடுகள்
விரித்தனர், இடம்தொறும் வேந்தர் எய்தினார்.

108
உரை
   


கை வரு தண்டுடைக் காளை, வெஞ் சிலை
தைவரு செங் கையான், தாரை வெம் பரி
மெய் வரு குமரன், வேல் விடலை, வேந்தனோடு,
ஐவரும் அமர்ந்தனர், ஆண்மை ஏறு அனார்.

109
உரை
   


'மறத்து இருந் தானையான் வஞ்சம் எண்ணினான்,
அறத்து இருந்திலன்' எனா அஞ்சி, அந்த ஊர்
புறத்து இருந்தது என, புனிதன் பாசறை
நிறத்து இருந்தது; பிற நிகர்ப்ப இல்லையே.

110
உரை
   


பாண்டவர் வரவு அறிந்து,
துரியோதனாதியர் மகிழ்தல்

மீண்டவர், வரி சிலை விதுரன் ஏவலால்,
பாண்டவர் வரவு, முன் பணிந்து, கூறவே,
மாண்டவர் குறிப்புறா மாய வஞ்சகம்
பூண்டவர் களித்து, மெய் புளகம் ஏறினார்.

111
உரை
   


தேசு அறை இடங்களும், தேம் கொள் கானமும்,
மூசு அறை மதுகரம் மொய்த்த சோலையும்,
வீசு அறல் வன நதி விதமும், மேல்கொளப்
பாசறை இருந்தவா பகரல் ஆகுமோ?

112
உரை
   


சூரியன் மறைவும் சந்திரன் தோற்றமும்

விருந்துறு சேனை வெவ் வீரர் இன் அமுது
அருந்தினர் மெய் குளிர்ந்து, அசைவு தீர்தலும்;
'வருந்தினர் இவர் துயில் வதிய வேண்டும்' என்று,
இருந் தபனனும் இவர்க்கு இரவு நல்கினான்.

113
உரை
   


மண் வளர் பெரும் புகழ் மன்னர் ஐவரும்,
பண் வளர் நல் இசைப் பல மகீபரும்,
கண் வளர் பாளையம் காண எண்ணியே,
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான்.

114
உரை
   


மருள் மிகு சுரும்புஇனம் மணந்த சோலையின்
இருள்களின் இடை இடை எறித்த வெண் நிலா,
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர்
புரி குழல் நெகிழ்ந்த வெண் போது போலுமே.

115
உரை
   


கானிடை, சில சில கடி கொள் தேன் உமிழ்
தூ நிற முல்லைகள் மலர்ந்து தோன்றுமால்-
வானிடை முறை முறை வளரும் மா மதி
மேனியின் அமிழ்து உமிழ் விந்து என்னவே.

116
உரை
   


பொரு இல் வெண் துகில்கொடு பொதிந்தது என்னவே,
பரி நெடுந் தேர்மிசைப் பால் நிலா எழ,
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர்
இருள் என விளங்கின, யானை வெள்ளமே.

117
உரை
   


சேனையில் நிகழ்ந்த சில செயல்கள்

பரியன கந்துகம் பரிந்து, மா மதக்
கரி சில பாகையும் கை கடந்தன;
அரிவையர் பலர் துயில் அனந்தலோடு, தம்
சுரி குழல் மேகலை சோர, ஓடினார்.

118
உரை
   


நீடுறு தருக்களின் நிரைத்த மா அதன்
கோடுஇற எறிந்து கைக்கொள்ளும் ஓதையால்,
மாடு உறு பொங்கர்வாய் வதிந்த புள் வெரீஇ,
பேடொடு சேவல் மெய் பிரிந்து, தேடுமால்.




119
உரை
   


ஊதையின் மரன் அசைவுற, பொறா வடம்
மோதுறு முளையுடன், முடுகு வேட்டமாய்,
தீது அறு பரி சில செல்வன் பாசறை
மாதிரம் உற, பல வாளி போதுமால்.

120
உரை
   


ஆடுவர் சிலர் சிலர்; ஐவர் வான் புகழ்
பாடுவர், சிலர் சிலர்; பாயல் இன்புறக்
கூடுவர், சிலர் சிலர்; கோதை மாதரோடு
ஊடுவர், சிலர் சிலர்;-ஓகை வீரரே.

121
உரை
   


சூரியன் தோன்ற, படைகளைப் பாசறையில் நிறுத்தி,
பாண்டவர் அத்தினாபுரிக்குச் செல்லுதல்

பஞ்சவர் வாழ்வுறு பதம் பொறாமையின்,
வஞ்சகம் இயற்றுவான் மனம்கொல் என்னவே,
மிஞ்சிய குளிர் மதிமேல் பொறாது, இகல்
செஞ் சுடரவன் குணதிசையில் தோன்றினான்.

122
உரை
   


துயில் உணர்ந்து, பைந் தொடையல் மார்பினான்
வெயில் எழுந்து தன் விரதம் உற்றபின்,
பயில் பெருஞ் சனம் பாசறைப் படுத்து,
எயில் வளைந்த மா நகரி எய்தினான்.

123
உரை
   


திருதராட்டிரனைப் பாண்டவர் வணங்குதலும்,
அவன் மைந்தரைத் தழுவி, நயவுரை கூறுதலும்

இரு மருங்கினும் இளைஞர் நால்வரும்,
தரும வல்லியும் தானும் ஆகவே,
அரு மடங்கல்ஏறு அனைய ஆண்மையான்
குரவன் இன்புறும் கோயில் நண்ணினான்.

124
உரை
   


சிந்தை அன்புற, செல்வ வாயிலோர்,
வந்த மைந்தர்தம் வரவு கூறவே,
முந்தை ஏவலால் மொழிய, உள் புகுந்து,
அந்த மீளி சேவடி வணங்கினார்.

125
உரை
   


தம்பி மைந்தரைத் தழுவி, 'நும்மை இன்று
எம்பி காண நல்வினை இயன்றிலான்;
உம்பிமாரொடும் ஒத்து வாழ்க, நீர்,
நம்பி!' என்று, நல் நயம் விளம்பினான்.

126
உரை
   


வணங்கிய திரௌபதியைக் காந்தாரியிடம்
செல்லப் பணித்து, மைந்தருடன் அளவளாவுதல்

பாவை தன் செழும் பணிவு கூறலும்,
'மேவி வாழ்க!' எனா, மெய் களிக்கவே,
'தேவி தன்னுழைச் செல்க!' என்றுகொண்டு
ஏவி, மைந்தரோடு இவை விளம்பினான்:

127
உரை
   


'கருமம், நீதி, சீர், கல்வி, மந்திரம்,
பெருமை, ஆண்மை, தாள், பீடு, நீடு பேர்,
தருமம், யாவும், நும் தன்மைஆதலால்,
அருமை இன்றியே அரசு செல்லுமே.

128
உரை
   


'இகல் எறிந்து, நீள் இராயசூய மா
மகம் உழந்ததும், வண்மை செய்ததும்,
திகை அடங்கலும் திறை கொணர்ந்ததும்,
தொகுதி கொண்ட நும் துணைவர் கூறினார்.




129
உரை
   


'எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும், முன் குருகுலத்து உளோர்;
துண்டியாமல், நும் துணைவர் தம்மொடும்,
பண்டு போல, மண் பரவ, வைகுவீர்.

130

உரை
   


'சேண் இருந்து, நும் சீர் செவிப்படுத்து,
யாணர் அன்பு கூர் இனிமை அன்றியே,
பூண் நலம் பெறும் பொற்பொடு உங்களைக்
காணுமாறு செங் கண் படைத்திலேன்!'

131
உரை
   


நேயம் உண்டுபோல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரைச் சொல்லி, 'நீவிர் போய்,
யாயையும் பணிந்து, எந்தை தாள் மலர்ச்
சேய பங்கயம் சேர்மின்' என்னவே.

132
உரை
   


காந்தாரியை வணங்கி, அவளுடைய வாழ்த்தை
மைந்தர் பெறுதல்

இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று,
அருந்ததிக்கு நேர் அன்னைதன்னையும்
பரிந்து இறைஞ்சினார்; பயில வாழ்த்தினாள்,
திருந்து பூணினாள், சிறுவர் தம்மையே.

133
உரை
   


முந்த வந்து, தாள் முளரி கைதொழும்
அம் தண் வல்லியும், ஐவர் மைந்தரும்,
வந்து நிற்றலும், மகிழ்வொடு உன்னினாள்,
'குந்தி செய் தவம் கூரும்!' என்னவே.

134
உரை
   


திரௌபதியைக் காந்தாரியிடத்து இருத்தி, பாண்டவர்
சென்று வீடுமன் முதலியோரை வணங்குதல்

வேயை வென்ற தோள் மின்னை அங்கு வைத்து,
யாயையும் பணிந்து, எழில் கொள் தோளினார்
போய், அகண்டமும், போற்று கங்கையாள்
சேயை, அன்புடன் சென்று, இறைஞ்சினார்.

135
உரை
   


வேந்து அழைத்ததும், விதுரன் ஏவலின்
போந்து அழைத்ததும், புகல வந்ததும்,
தாம் தழைக்கவே, தந்தை தந்தை முன்,-
தேம் தழைத்த தார்ச் செல்வர்-கூறினார்.

136
உரை
   


புள் அலங்கலார் புரிவு உரைத்திட,
கொள்ளை வன் திறல் குருகுலேசனும்,
'கள்ள வஞ்சர் வெங் கருவி செய்யினும்,
உள்ளது உண்டு' எனா, உண்மை கூறினான்.

137
உரை
   


தாதை தாதையைத் தாம் அகன்று, பின்
கோதை வெஞ் சிலைக் குருவை, மைந்தனை,
கீத நான்மறைக் கிருபனை, செழும்
பாதநம் செய்தார், பரிவொடு ஏகியே.

138
உரை
   


பாண்டவர் விதுரன் மாளிகையில் புகுந்து
தங்க, சூரியன் மறைதல்

சதுர மா மறைத் தலைவர்தங்களால்
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே,
மதுர மன்றல் நாள்மாலை மன்னரும்
விதுரன் மந்திரம் மீள மன்னினார்.






139
உரை
   


தமது இல் மெய்யுறத் தம்மது ஆகவே
அமிழ்து அருந்தி, அங்கு அவர் இருந்த பின்-
திமிர நாசனன், செய்ய மேனியன்,
கமல நாயகன், கடலில் மூழ்கினான்.

140
உரை
   


மாலைப் பொழுதில் விதுரன் மாளிகையின் தோற்றம்

தினகரன் கரம் திகழ் கமண்டலம்,
பனிகொள் செக்கர் தம் படமது ஆகவே,
இனிய வந்தனைக்கு எறியும் வேலை சேர்
புனிதர் ஒத்தது-அப் புன்கண் மாலையே.

141
உரை
   


காய்ந்த மெய்ச் செழுங் கதிரவன் கரம்
ஏய்ந்த அப் பதத்து எழில் எறித்தலால்,
ஆய்ந்து, பத்தி கொண்டு, அடர் பசும் பொனால்
வேய்ந்தது ஒக்குமால், வேந்தன் மாடமே.

142
உரை
   


சந்திரனது தோற்றக் காட்சி

'மன் குலத்துஉளோர் வஞ்சகம் செயார்;
என் குலத்துஉளோர் என்கொல், ஈது?' என,
தன் குலத்துஉளோர் தமை விலக்கவோ,
நன் குலத்து உளோன் உதயம் நண்ணினான்?

143
உரை
   


'குருகுலாதிபன் கொடிய நெஞ்சமே
இருள் நிறைந்தது' என்று யாம் வெறுக்கவோ?
மரபில் ஆதியாம் மதியும், எண்ணின், உள்
கரியன் என்னுமா காணல் ஆனதே.

144
உரை
   


உள் நிலாவு பேர் ஒளி மழுங்கு நீள்
வெண் நிலாவினால், வெளுத்த, எங்கணும்;-
கண் இலான் மகன் கடுமை அஞ்சி, இம்
மண்ணில் ஆர், வெளா வடிவம் எய்தினார்?

145
உரை
   


திரௌபதியும் விதுரன் மாளிகை வந்து சேர்தல்

விந்தை வாழ்வு கூர் விறல் மிகுத்த தோள்
முந்தை ஓதை மா முரசு உயர்த்தவன்
சிந்தை காமுற, தெரிவை வந்து, இளந்
தந்தை கோயிலில் தானும் நண்ணினாள்.

146
உரை
   


விதுரன் மாளிகையில் இரவைக் கழித்தபின், காலைக்கடன்
கழித்து, தம்பியருடன் தருமன் இனிது இருந்து, முனிவரர்
முதலியோர்க்குத் தானம் முதலியன வழங்குதல்

மங்குல் சுற்றும் மா மண்டபத்திடைக்
கங்குலில் தடங் கண் துயின்றபின்,
பொங்கு உலைப்படும் பொன்-தசும்பென,
செங் குலக் கதிர்த் திகிரி தோன்றவே,

147
உரை
   


பாயல் மன்னு கண்படை உணர்ந்து, உளம்
தூயவன் பொலஞ் சுடர் பணிந்தபின்,
சாயை அன்ன தன் தம்பிமாரொடும்,
சீயம் என்னவே, திகழ வைகினான்.

148
உரை
   


முனிவரர்க்கு எலாம் முதன்மை ஆகவே,
தனதனின் பெருந் தானம் உய்த்திடும்;
பனுவல் வித்தகப் பாவலர்க்கு எலாம்
கனம் எனத் தரும், கனக மாரியே.




149
உரை
   


கண்டு கண்டு, தன் கழல் வணங்கும் மா
மண்டலேசரும், மாலை மன்னரும்,
கொண்டு வாழ்வுற, குரகதம், குடை,
தண்டு, சாமரம், தந்தி, நல்குமே.

150
உரை
   


பூந் தண் மா மலர்ப் பூவை கொங்கை தோய்,
ஏந்து தோளினான் இவண் இருந்துழி,
பாந்தளம்அம் கொடிப் பார் மகீபனைச்
சேர்ந்த மன்னர்தம் செயல் விளம்புவாம்:

151
உரை
   


புதிய மண்டபத்தில் யாவரும் ஈண்டி இருக்கும்போது,
பாண்டவரை அழைத்து வருமாறு பிராதிகாமி
என்பவனைத் துரியோதனன் அனுப்புதல்

தானும், மாமனும், குறித்த தம்பிமாரும், அங்கர்தம்
கோனும், மாசு இல் தந்தை தந்தை, கொடுமரக் கை விதுரனும்,
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும், துரோணனும்,
ஏனையோரும் வந்து கூடி, இனிது இருந்த எல்லையே.

152
உரை
   


பிராதிகாமி பாண்டவர்க்குச் செய்தி தெரிவித்தல்

'மண்டபத்தின் அழகு காண, மன்னர் ஐவர்தம்மை நீ
கொண்டு, இமைப்பின் வருக' என்று கொற்றவன் பணிக்கவே,
வண்டு சுற்று மாலை மார்பன் வண் பிராதிகாமி, வான்
அண்டர் கற்பம் என இருந்த அரசர்தம்மை அணுகினான்.

153
உரை
   


சென்று யாகபதி கழல்-திருப் பதம்
              பணிந்து, கீழ்
நின்று, வாய் புதைத்து, 'அறங்கள் நிலைபெறும்
             சொல் நீதியாய்!
வென்றி வீரன், "மண்டபத்தின் விரிவு காண
              வேண்டும், நீ"
என்று கூறி, ஏவினான், இங்கு என்னை'
              என்று இயம்பினான்.

154
உரை
   


திரௌபதியைத் தந்தை இல்லிற்கு அனுப்பி,
துணைவருடன் தருமன் சபையை அடைதல

ராயசூய பன்னிதன்னை, 'எந்தை இல்லில் யாயொடும்
போய் இருந்து வருக' என்று, புரை இலா மனத்தினான்
சீயம் அன்ன துணைவரோடு சென்று புக்கு, நன்றி இல்
பேய் இருந்தது என இருந்த பீடு-இலானை எய்தினான்.

155
உரை
   


தருமன் வீடுமன் முதலியோரை முறைப்படி வணங்கி,
ஆசனத்து அமர்ந்து, அம் மண்டபத்தின் அழகை
வியந்து கூறுதல்

மன் இருந்த பேர் அவைக்கண் வந்து,
              முந்தை வரிசையால்,
முன் இருந்த தாதை, வம்ச முதல்வன், ஞான
              விதுரன், என்று,
இன்(ன) இருந்த தலைவர் தாள் இறைஞ்சி, முன்னர்
              இட்டது ஓர்
மின் இருந்த ஆசனத்தின்மீது இருந்து,
              வினவினான்.

156
உரை
   


'இந்த மண்டபம் சமைந்த இனிமைதன்னை
              என் சொல்வேன்!
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான
              தேவர் ஊர்
அந்த மண்டபத்தும் இல்லை, அதனை
              அன்றி மண்ணின்மேல்
எந்த மண்டபத்தும் இல்லை, இதனின் உள்ள
              எழில்அரோ!'

157
உரை
   


என வியந்து, தருமராசன் இனிது இயம்ப, யாளி, வெஞ்
சின விலங்கல், என்னுமாறு சேரவந்த இளைஞரும்,
மனு விளங்கு முறைமையான் வணங்கி, மன்னர் மன்னன்முன்
தனதன் அங்கு இருப்பது அன்ன தவிசின்மீது வைகினார்.

158
உரை
   


துரியோதனன் தருமனைச் சூதாடத் தூண்டுதல்

'புரை கொள் பாவமே நிறைந்து, புண்ணியம் குறைந்து, நீள்
நரகின் ஊழிகாலம் வாழ்தி! நாகர் வாழ்வின் உள்ளதும்
தரணிமீது பெறுக!' என்று, தந்தது ஒக்கும், வான் உளோர்-
அரவஏறு உயர்த்த வீரன் அன்று இருந்த பெருமையே.






159
உரை
   


'மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும்
நீயும், இன்று, சூதுகொண்டு நிகழ் விலாசம் அயர்விரோ-
ஆய வென்றி ஐயன் இல்லில் அமுதம் அன்ன போனகம்
போய் அருந்தும் அளவும், இங்கு இருந்து போது போகவே?'

160
உரை
   


தருமன் சூதாடுதலை வெறுத்து உரைத்தல்

' "மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல், பிறர் பெருங்
கோது எடுத்து உரைத்தல், நண்புகொண்டு அயிர்த்தல்,
              கொடிய வெஞ்
சூது எடுத்து விழைதல், உற்ற சூள் பிழைத்தல், இன்னவே
தீது எடுத்த நூலில் முன்பு தீய" என்று செப்பினார்.

161
உரை
   


'வாது கொண்டு காதல் கூரும் மாமனோடு வஞ்சனைச்
சூதுகொண்டு பொருது அழிந்து, தோல்வி எய்த வேண்டுமோ?
தாதுகொண்டு தேன் இரங்கு தாம மார்ப! நெஞ்சில் நீர்
ஏது கொண்டது? அது நுமக்கு அளிப்பன், இம்பர்' என்னவே,

162
உரை
   


சகுனி நயவுரைகளால் தருமனைச் சூதாட அழைத்தல்

ஒப்பு இலாத வேள்வி மன்னன் உரை உணர்ந்து, சகுனியும்,
'தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால்;
வைப்பில் ஆண்மை அன்றி, வேறு வஞ்சம் இல்லை;
              உண்டு எனச்
செப்பில், ஆர்கொல் இவனை ஆட வருக என்று செப்புவார்?

163
உரை
   


'வேணும் ஆகில், வேணும்; அன்றி, விரகு எனக் கழன்று தான்
நாணும் ஆகில், "விடுதியே நடக்க' என்று நவிலுவீர்;
பூணும் ஆகில், இனிமையோடு பொருது, மற்று இருந்த நீர்
காணுமாறு நானும் இன்று கற்றவாறு இயற்றலாம்.

164
உரை
   


'நீடுகின்ற தரும நீதி நிருப! கேள்: விழைந்து, நாம்
ஆடுகின்ற சூதில் வெற்றி, அழிவு, நம்மில் ஒக்குமால்;
வாடுகின்ற மிடியர் போல வஞ்சம் என்று உரைத்து, நீ
ஓடுகின்றது, ஒட்டுகின்ற ஒண் பொருட்கு உலோபியோ?

165
உரை
   


'யான் எறிந்த கவறு வெல்லின், இசைவு எனக்கு அளித்தி; நீ-
தான் எறிந்த கவறு வெல்லின், அதின் இரட்டி தருகுவேன்;
தேன் எறிந்து, தேன் நுகர்ந்து, தேன் எடுக்கும், மாலையாய்!
ஆன் எறிந்த கொலைஞர் போல அஞ்சல்! வருதி, ஆடவே!'

166
உரை
   


சகுனியின் உரைக்கு மாறு உரையாது உதிட்டிரன் இருக்க,
விசயனும் வருந்துமாறு கன்னன் தருமனை
நோக்கி உரை பகர்தல்

என்று மாமன் உற்று உரைப்ப, இவைதமக்கு அவ்
              அவையில் வேறு
ஒன்றும் மாறு உரைத்திடாது, உதிட்டிரன் இருக்கவும்,
வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு, உளம்
கன்றுமாறு உரைத்தனன் சொல், கன்னன் என்னும் மன்னனே:

167
உரை
   


' "போது போகுமாறு இருந்து பொருதும்; வருதி!" என்னவும்,
சூது போரும் அஞ்சியே, தொலைந்து, உளம் துளங்குவாய்!
மோது போரில் எங்ஙன் உய்தி? இளைஞரோடும் முடுகு தேர்-
மீது போய், உன் நகரிதன்னில் விரைவின் எய்துக!' என்னவே,

168
உரை
   


வெகுண்டு எழுந்த விசயனை அடக்கி, தருமன்
சூதாடுதற்கு ஒருப்படுதல்

'இல் எடுத்து, விரகினோடும் எமை அழைத்து, மாயை கூர்
வல் எடுத்து வருதலால், மறுத்தனன், மகீபனும்;
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன்' என்று கன்னன்மேல்
வில் எடுத்தனன், பொறாமல்,-வீர வாளி விசயனே.






169
உரை
   


'ஏதிலாரின், எம்பி! நீ இருக்க' என்று இருத்தி, 'முன்
காதில் ஆர் என்னுடன் முனைந்து, கண் விழிக்க
              வல்ல பேர்?
ஓதில், ஆண்மை குன்றும்' என்று, உருத்து எழுந்து,
              'மாய நின்
சூதில் ஆடல் புரிதும்' என்று, தருமனும் தொடங்கினான்.

170
உரை
   


துரியோதனன் சகுனிக்காக ஒட்டம் வைப்பதாகக் கூறி,
தருமனையும் ஈடுபடுத்துதல்

'நின்னை வெல்லின், ஒட்டம் யாவும் நீ கொடுக்க; நீ இவன்-
தன்னை வெல்லின், யான் விரைந்து தருவன்'
              என்று, 'தருமனைப்
பின்னை வெல்ல ஒணாது' எனப் பிணிப்புடன் மருட்டினான்-
மின்னை வெல்லும் வெய்ய சோதி வேல் இராசராசனே.

171
உரை
   


தருமனும் சகுனியும் சூதாடுதல்

அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து, பூந்
தவிசில் ஒன்றிடப் புகுந்து, தருமன் வைக, மாமனும்
நவிர் அறும் திசைப் புறத்து நல் நிலம் குறித்து, நீள்
புவி பெறும் கருத்தினோடு இருந்தனன், பொருந்தவே.

172
உரை
   


கவள யானை பணையின் யாளி கால் வகுத்த பலகையில்,
பவளமான, நீலமான, கருவி முன் பரப்பினார்;
தவளமான கவறு கை தரித்து, மெய் தரித்த தார்
துவள, மான நிருபர் தம்மில் ஆடவே தொடங்கினார்.

173
உரை
   


ஈரம் வைத்த சிந்தை மன்னன், இசைவு எனக்
              கழுத்தின் முத்து
ஆரம் வைத்து, 'நீயும் மாறு அழைக்க' என்ன, மாமன்மேல்
வாரம் வைத்த நெஞ்சினானும், 'வருக!' என்று, 'மா மணிச்
சாரம் வைத்த வலயம் ஒன்று' தானும் முன்னர் வைக்கவே,

174
உரை
   


இருவரும் கவற்றினால் எறிந்தபோது, எறிந்தவாறு
ஒருவரும் குறிக்கலா உபாயமாய் இருத்தலான்,
மரு வரும் புயத்து அலங்கல் மாமன் வெல்ல, மன்னர் உள்
வெரு வரும் களிற்றினானும் மேல் விருப்பம் மிஞ்சினான்.

175
உரை
   


வைத்த ஆரம் அவன் எடுக்க, மாயவன் கொடுத்த நல்
மெய்த் தவாத தேர் குறித்து, மீளவும் பரப்பினான்;
மொய்த்த வாச மாலை மார்பின் முடி மகீபன் மகிழ்தர,
பொய்த்த ஆடல் வல்ல மீளி, பொருது, வென்றி புனையவே,

176
உரை
   


தேர் கொடுத்த பின்னும், மாறு செப்பி, உள்ள தேர் மதக்
கார் கொடுத்தும், எண்இலாத கவன மாக் கொடுத்தும், அப்
பார் கொடுத்தும், அரசு கூர் பதம் கொடுத்தும், உரிய தம்
ஊர் கொடுத்தும், அதனின் உள்ளம் ஒழிவுறாமல் ஓடவே.

177
உரை
   


வெங் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன்
அங்கு இரா மகிழ்ந்து அளித்த ஆடல் மாவும், அளக நீள்
பொங்கு இரா மணம் சிறந்த போக மாதர் பலரும், அன்று
இங்கு இரா, நரேசன், உற்ற இசைவினால் அளிக்கவே,

178
உரை
   


யாவற்றையும் தருமன் சூதில் இழந்துவிட, மன்னன்
குறிப்பின் வண்ணம் பாண்டவர்களையே பணையமாக
வைக்கச் சகுனி தூண்டுதல்

யாவையும் கொடுத்து இருப்ப, 'இளைஞரோடு மெய்த் தவக்
கோவையும் குறிக்க' என்று, குருகுலேசன் மொழியவே,
ஈவையும் குறித்து, வெற்றி எய்த எய்த இவர்கள்தம்
வீவையும் குறித்து, வென்ற மேன்மையான் விளம்புவான்:






179
உரை
   


'உன்னையும் குறித்து வன்பு உரைத்த தம்பிமார்இனம்
தன்னையும் குறித்து, இசைந்து தருக; வந்து பொருக!' என,
பின்னையும் குறிப்பு உறாது, பொருது, கை பிழைக்க, மேல்
'என்னை உம் குறிப்பு?' எனா, முன், விரகினால் இயம்பினான்:

180
உரை
   


தருமன் தங்கள் ஐவரையும் சூதில் ஒட்டித் தோல்வியுற,
சகுனி திரௌபதியைப் பணையமாக வைக்கத் தூண்டுதல்

'மெய் வரும் திறத்தில் உம்மை வெல்லுமாறு வேறலால்,
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர்;
மை வருங் தடங் கண் வேள்வி மாதுதன்னை ஒட்டி, நீ
கைவரும் கவற்றின், இன்னம் எறிக!' என்று கழறினான்.

181
உரை
   


விதுரன் மனம் வருந்தித் திருதராட்டிரனை
நோக்கிச் சில கூறுதல்

அன்ன போதில், அருள் விதூரன், அந்தனைப் புகன்று எழா,
'நின் அபோதம் அன்றி, வேறு நிருபர்தாம் நினைப்பரோ?
'இன்ன போதுமோ, நமக்கு? இயற்கை அன்று இது' என்று, நீ
சொன்ன போது, நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ?

182
உரை
   


'திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!

183
உரை
   


'பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே,
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால்
              அடர்ப்பரோ?
அன்பு இறந்ததேனும், நீதி அழிய நீ நடத்தினால்,
என் பிறந்து முடியும் மண்ணில், எண் இல்
              காலம், இன்னுமே?

184
உரை
   


'வருமம் மிஞ்ச இவனை வென்ற வஞ்சம் அன்றி,
              மற்று, 'இவன்
தரும வஞ்சிதனை இசைந்து பொருதும்' என்கை தருமமோ?
கருமம் அன்று; உனக்கு நாச காலம் வந்ததுஆகலின்,
பெரும! தஞ்சம் இன்றி, நெஞ்சு பேரும்' என்று பேசினான்.

185
உரை
   


விதுரன் நொந்து, நீதி கூற, விழி இலாமை அன்றியே,
வெதிரனும்கொல் என்னுமாறு விழியிலானும் வைகினான்;
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து, தருமனும்,
அதிர வஞ்சம் முதிர வந்த அருள் இலானொடு ஆடினான்.

186
உரை
   


தருமன் திரௌபதியையும் சூதில் இழந்து,
சிறிதும் கலங்காதிருத்தல்

காயம் முற்றும் வஞ்சமே கலந்தது அன்ன கள்வன்மேல்
நேயம் உற்று நின்று, தானும் நிகர் பிடித்தது என்னவே,
மாயம் உற்ற கவறும், அந்த மாமன் வல்லபத்திலே
தாயம் உற்று, இடம் கொடாது, தருமனைச் சதித்ததே.

187
உரை
   


'இன்ன தாயம் வேண்டும்' என்று எறிந்தபோது, மற்று அவன்
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின்,
தன்னது ஆய அரசு, வாழ்வு, தரணி மன்னன் நல்கினான்;
அன்னது ஆயபோதும், நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.

188
உரை
   


தருமனது தோல்வி கண்டு, அவையோர்
வருந்தி மொழிதல்

முரசினை உயர்த்த கோமான் மொழிந்தன முழுதும் தோற்று,
பரசுவது ஒன்றும் இல்லாப் பான்மையோடு இருந்த காலை,
விரை செறி அலங்கல் சோர, மெய் குலைந்து, உள்ளம் வெம்பி,
அரசவை இருந்தோர் தம்மில் அருளினால் அழிந்து நொந்தார்.






189
உரை
   


'குரு மரபு உடைய வேந்தன் கொடியன்! ஓ
              கொடியன்!' என்பார்;
'மருமகன் உயிருக்கு இந்த மாமனோ
               மறலி!' என்பார்;
'தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்
              பொய்யோ?' என்பார்;
'உருமினும் கொடிய வீமன் உருத்து இனி
               எழுமோ?' என்பார்;

190
உரை
   


'பாந்தள் ஏறு உயர்த்த வேந்தன் பார்த்திலன்,
               உறவும்' என்பார்;
'மாய்ந்தவே,  அறமும்,  தேசும், மனுநெறி
               வழக்கும்!' என்பார்;
'பூந் தழல் பிறந்த பாவை புண்ணியம்
               பொய்யாது!' என்பார்;
'சேந்தனன் இருகண், பாரீர், தேவர்கோன்
               மதலை!' என்பார்.

191
உரை
   


'பழியுடைத்  தந்தை  ஒன்றும்  பகர்கலாது
               இருக்கும்' என்பார்;
'விழியுடையவரை அன்றோ மேன்மையோர்
               வெறுப்பது?' என்பார்;
'அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்
               செல்வம்' என்பார்;
'வழிவழியாக  நிற்கும்  வசை,  இவன்
               புரிந்தது!' என்பார்.

192
உரை
   


துரியோதனன் வீடுமனை நோக்கிக் கூறிய தகாத உரை

இன்னன, தரணி வேந்தர் இருந்துழி இருந்து, கூற,
மன்னனும், தம்பிதானும், மாமனும், மாறா வண்மைக்
கன்னனும்,  தம்மின்  எண்ணி,  கங்கை  மா
               மகனை நோக்கி,
பன்னக  துவசன்,  கேட்டோர்  பலரும் மெய்
               பனிக்க, சொல்வான்:

193
உரை
   


'தண்ணிய தருமன் செய்த பாவமோ? சகுனி செய்த
புண்ணிய நெறியோ? அந்தப் பொதுமகள் யாக சாலை
நண்ணிய தவறோ? மற்றை நால்வரும் தகைமை கூர
எண்ணிய மதியோ? எண்ணின், இங்ஙனம்
               விளைந்தது' என்றான்.

194
உரை
   


வீடுமன் அறிவுரையைத் துரியோதனன் செவிக்
கொள்ளாது, வெகுளி மிக, விதுரனை நோக்கிக்
கூறிய மொழிகள்

தகா மொழி தலைவன் கூற, தவத்தினால் உயர்ந்த கோவும்,
நகா, 'மரபு இயற்கை அன்று, நம்மில் நாம் புன்மை கூறல்;
மிகாது, இனி நிகழ்ந்த செற்றம் விடுக!' என, செவியில் சற்றும்
புகாது, உளம் வெகுளி கூர, புரிந்தனன், போதம் இல்லான்.

195
உரை
   


இரங்கி நின்று உருகும் நெஞ்சின் இளைய தன் பிதாவை நோக்கி,
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்:
'உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்குத் தோற்ற
துரங்கமும், களிறும், தேரும், துறை துறை கவரச் சொற்றி;

196
உரை
   


'தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;
நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;
சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி;

197
உரை
   


'இவர்தமக்கு உரியள் ஆகி, யாக பத்தினியும் ஆன,
துவர் இதழ்த் தவள மூரல் சுரிகுழல்தன்னை, இன்னே,
உவர் அலைப் புணரி ஆடை உலகுடை வேந்தர் காண,
கவர்தரப் புகறி' என்றான்-கண் அருள் சிறிதும் இல்லான்.

198
உரை
   


விதுரன் துரியோதனனது செய்கையை இடித்து மொழிதல்

'அறம் தரும் மைந்தன்தன்னை அறன் அலாது இயற்றி, நம்பி!
திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்;
மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று;
நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.






199
உரை
   


'திருத் தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும், செவ்வி
மருத் தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர்,
உருத் தகு கற்பினாளை உரை அலாது உரைக்கும் மாற்றம்
கருத்தினில் நினையல், கண்டாய்; கடவுளர் கற்பம் வாழ்வாய்.

200
உரை
   


'விண்ணில் அங்கு அருகித் தோன்றும் மேதகு
               வடமீன் அன்றி,
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர்
               யாரும் இல்லா,
பண் நலம் கடந்த மென் சொல், பாவையைப் பழிக்க,
               நீ இன்று
எண்ணின், முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன்
               எண்ணம்' என்றான்.

201
உரை
   


'நீ கேட்ட சொல் என்?' என்ற துரியோதனனுக்கு
விதுரன் விரித்து உரைத்தல்

கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப, மீண்டும்,
வாட்டம் இல் அன்பினோடு மனம் கனிந்து உருகி வீழ,
நாட்டமும் நல் நீர் மல்க, நா அமிழ்து ஊற, பின்னும்
கோட்டம் இல் சிந்தையானும் குரிசிலுக்கு உரைக்கலுற்றான்:

202
உரை
   


' 'தானவர் ஆகி, உம்மை, தனித்தனி இறந்தோர் யாரும்,
மானவர் ஆகி, இம்மை வந்தனர், இம்பர்' என்றே,
தான் அவர் பொறை பொறாமல், தராதலம் என்னும் செங் கண்
மான் நவ ராக வேத மலர் முனிதனக்குச் சொன்னாள்:

203
உரை
   


'நான்முகன்தானும், ஏனை நாகரும், நாகர் கோனும்,
பால் முகந்து எறியும் வேலைப் பாம்பு-அணைப்
               பள்ளி கொள்ளும்
தேன் முகம் களிக்கும் பச்சைச் செவ்வி வண் துளப மாலை
மால் முகம் கண்டு, கூற, வந்தவா மாலும் கேட்டான்.

204
உரை
   


'மின் இடை விளங்கும் மேக மேனியான், அவனி மானை,
'நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்,
முன், இடை, கடை, ஒன்று இன்றி, முற்றும், வெம் முரண்
               கொள் காலன்-
தன்னிடை விடுதும்' என்று சாற்றியே, தளர்வு தீர்த்தான்.

205
உரை
   


' 'அந்த வன் திகிரியானும் நம்மில் ஓர் அரசன் ஆகி,
வந்து அவதரித்தான்' என்று, மண் எலாம் வார்த்தை ஆனது;
'எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும்?' என்று,
               இதற்கே சால
நொந்து, கண் துயில் பெறாதே, நோதகப் புரிந்தேன் மன்னோ.

206
உரை
   


'ஒரு திறத்து அவனி முற்றும் ஒருமையால் புரக்கும் நீவிர்
இரு திறத்தவரும், நும்மில் இகலுறும் மனத்திர் ஆனால்,
வரு திறத் தானை வேந்தர் வகைபடக் குழூஉக்கொண்டு ஓடி,
பொருது, இறப்பதற்கே, சற்றும் புரிவிலீர்! புரிகின்றீரே.'

207
உரை
   


விதுரனைத் துரியோதனன் நகையாடி அவமதித்து,
அருகில் நின்ற பிராதிகாமியிடம் திரௌபதியை
அழைத்துவரப் பணித்தல்

என்று அவன் உரைப்ப, தானும் எறிந்து கை, நகை கொண்டாடி,
அன்று அவன் இதயம் வெம்ப, அவமதி பலவும் கூறி,
நின்றவன் ஒருவன்தன்னை, 'நீ நனி விரைவின் ஓடிச்
சென்று, அவண் இருந்த கோலத் தெரிவையைக்
               கொணர்தி' என்றான்.

208
உரை
   


பிராதிகாமி திரௌபதி இருக்குமிடம் செல்லாமலே
மீண்டு வந்து, அவள் கூற்றாகச்சிலவற்றைப்
படைத்து மொழிதல்

பெருந்தகை ஏவலோடும் பிராதிகாமியும் அங்கு ஏகி,
வருந்திய மனத்தன் ஆகி, மாசு அறு மரபின் வல்லி
இருந்துழி எய்துறாமல், இடைவழிநின்றும் மீள
விரைந்தனன் ஓடி வந்து, வேந்தனுக்கு ஏற்பச் சொன்னான்:






209
உரை
   


' 'என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
               தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
               என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
               முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
               பெறாது' என்றாள்.

210

உரை
   

துரியோதனன் மனம் பொறாமல், திரௌபதியை அழைத்துவரத் துச்சாதனனுக்குக் கட்டளையிடுதல்

'செல்வப் பாவை திருவுள்ளம் இது' என்று,
               அந்தத் தேர்ப்பாகன்
சொல்ல, பாவி தரியாமல், துச்சாதனனை
               முகம் நோக்கி,
'அல்லல் பான்மை பெற்று அழிந்த ஐவர்க்கு ஒருத்தி
               ஆகிய அம்
மல்லல் பானல் விழியாளை மன் பேர் அவையின்
               அழை' என்றான்.

211
உரை
   


திரௌபதி இருந்த இடத்தை அணுகி, துச்சாதனன்
அவளை அழைத்து, 'என் பின்னே போதுக!'
என அவளது கையைப் பற்றுதல்

நோன் தாள் வெங் கண் கட களிற்று நுழை வேல்
               அரசன் நுவறலுமே,
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெஞ்
               சொல்,அறன் இல்லான்,
தோன்றா நயனத் துணைவனைப்போல் துணைக்கண்
               துகிலின் சூழ்ந்திருந்த
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி,
               இவை சொல்வான்:

212
உரை
   


'தானே சூது பொருது அழிந்து, தலைவன்தனக்கு
               உன் பதியான
கோனே சொல்லி, யாவையும் முன் கொடுத்தான்;
               கொடுத்தபின், 'இசைவு'
யானே' என்றும், 'வீமன் முதல் இளையோர்' என்றும்,
               'என் வேள்வி
மானே' என்றும், குறித்து, இழந்தான்; வழக்கால்
               வென்றோம்; வருவாயே.

213
உரை
   


'பொன்னைச் சிரிக்கும் பூங் கோயில், 'புனல் வாவி இல்'
              என்று எங்கள் குல
மன்னைச் சிரித்த செங் கனி வாய் மாறாது இரங்கி,
               அழுது அரற்ற,
மின்னைச் சிரிக்கும் நுண் இடையாய்! வேந்தர்க்கு எதிர், உன்
              மெய்க் கணவன்-
தன்னைச் சிரிக்க இருக்கின்ற சளம் நீ காணில் தரியாயே.

214
உரை
   


'தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவித்
               தழுவி, தனித்தனியே
நலத்துப் பொய்யே மெய் போல நடிக்கும் செவ்வி
               நலன் உடையாய்!
குலத்தில் பிறந்தாய் ஆம் ஆகில், கூசாது,
               என்பின் போதுக!'
எனப் பெலத்தில் செங் கை மலர் தீண்டிப் பிடித்தான்,
               சூழ்ச்சி முடித்தானே.

215
உரை
   


திரௌபதி காந்தாரியின் அருகில் செல்ல, அவள்,
'துச்சாதனன் பின் அஞ்சாது போ' என்று கூறுதல்

சிலை வாய் அங்கை அவன் தீண்ட, செல்லாள் ஆகி,
               அல்லல் உழந்து,
உலைவாய் அழல்போல் நெடிது உயிரா, உள்ளம் தளரா,
               உடல் நடுங்கா,
கொலைவாய் எயினர் கொல்லும் நிலம் குறித்துச் செறித்த
               கொடிய நெடு
வலைவாய் ஒருதான் அகப்பட்ட மான்போல், மாமி
               மருங்கு உற்றாள்.

216
உரை
   


பூ வார் குழலி தளர்வொடு தன் புறம் சேர் பொழுதும்
               சிறிது இரங்காள்,
'நீ வா' என்றே அருகு இருத்தி, நெடுங் கண் பொழியும்
               நீர் துடையாள்'
'மேவார் அல்லர்; தமர் அழைத்தால், மேல் உன்
               கருத்து விளம்பிவர,
பாவாய்! அஞ்சாது ஏகு!' என்றாள்-பல பாதகரைப் பயந்தாளே.

217
உரை
   


திரௌபதி கூந்தலைச் செண்டால் பற்றி இழுத்து
அவை நோக்கிச் செல்லுதல்

தண் தார் விடலை தாய் உரைப்ப, தாய் முன் அணுகி,
               தாமரைக் கைச்
செண்டால் அவள் பைங் குழல் பற்றி, தீண்டான்
               ஆகிச் செல்கின்றான்;
வண்டு ஆர் குழலும் உடன் குலைய, மானம் குலைய,
               மனம் குலைய,
'கொண்டார் இருப்பர்' என்று நெறிக் கொண்டாள்,
               அந்தோ! கொடியாளே.

218
உரை
   


'சூழும் கனல்வாய் உரும் அன்றி, துளிவாய்
               முகிலும் மகிதலத்து
வீழும் கொல்லோ? உற்பாதம் விரவிற்று'
               என்றே வெரூஉக்கொள்ள,
தாழும் பெரிய கரிய குழல் தாரோடு அலைய,
               தழீஇக் கொண்டு,
வாழும் சுரும்பு சுழன்று அரற்ற, மண்மேல்
               இழுத்து வருகின்றான்.

219
உரை
   


திரௌபதியின் நிலை கண்டோர் பலரும் வருந்தி மொழிதல்

'தழலோ என்னும் கற்புடைய தனி நாயகிதன்
               தாம நறுங்
குழலோ, உரகக் கொடி வேந்தன் குலமோ, குலைந்தது,
               இவண்!' என்பார்;
'நிழலோ, புவிக்கு நெருப்பு அன்றோ, நெறி ஒன்று இல்லா
               நீடு பொலங்
கழலோன் மதி வெண் குடை?' என்பார்; கையால் கண்ட
               கண் புடைப்பார்;

220
உரை
   


'காட்டும் திறல் வெஞ் சிலை விசயன் கையால் வகிர்ந்து, கடி
               கொள் மலர்
சூட்டும் பனிச்சை, இவண் புழுதித் துகள் ஏறியது' என்று
               அழுது நைவார்;
'மீட்டும் தடாமல், 'ஏகு' என்று விட்டாள்; மைந்தர் இட்ட
வினை கேட்டும், கொடியள் காந்தாரி; கிளையோடு இன்றே
               கெடும்' என்பார்;

221
உரை
   


'இரும்போ நெஞ்சம்? மாமன் இதற்கு இசைந்தான் ஒக்க
               இருந்து!' என்பார்;
'பெரும் போர் அரசர் பெண்ணுடனே பிறந்தும், சீறப்
               பெறார்!' என்பார்;
'பொரும் போர் வீமன் பொறுத்தாலும், பொன்-தேர் விசயன்
               பொறான்' என்பார்;
'அரும் போர் அரசர், 'தகாது' என்றால் வருமோ, இந்த
               அழிவு!' என்பார்.

222
உரை
   


'என்னே, குடியில் பிறந்தாருக்கு இருப்பு அன்று இவ் ஊர்
               இனி!' என்பார்;
'முன்னே ஓடி முறையிட்டால், முனியும்கொல்லோ,
               எமை?' என்பார்;
பின்னே இரங்கி, அழுது அழுது, பேதுற்று, இன்னல்
               பெரிது உழைப்பார்;
'அன்னே! துன்பம் களைந்து, இன்பம் ஆவாய்!' என்றே
               அருள் புரிவார்;

223
உரை
   


'பறை வன் களிற்றுப் பல் புரவிப் பைம் பொன் தடந்
               தேர்ப் பாஞ்சாலர்க்கு
இறைவன் பாவை, யாம் காண இவையோ படுவது!'
               என்று உரைப்பார்;
'பொறை வண் சிந்தைத் தருமனுக்குப் பொய்ச் சூது அறிந்தும்
               பொர, என்ன
குறை வந்தது? தன் விதி வலியால் குறைந்தான், யாவும்
               கொடுத்து' என்பார்.

224
உரை
   


திரௌபதி அவையில் புக, திருதராட்டிரன் முதலியோர் வாளா
இருத்தலும், ஏனைய மன்னர் துயருறுதலும்

நெடு மா நகரில் சனம் அனைத்தும், நேயம் பெறக் கண்டு,
               இவை கூற,
வடு மா மரபிற்கு உறத் தேடும் மன் பேர் அவையின்
               முன் புக்காள்-
கொடு மா மலர்க் கண் புனல் சோர, குலைந்தே கிடந்த
               குழல் சோர,
தடுமாறு உள்ளம் தனி சோர, தலை நாள் அளித்த
               தழல் போல்வாள்.

225
உரை
   


'நாணே முதலாம் நாற்குணனும், நண்ணும் கற்பும்,
               நயந்து அணிந்த
பூணே அனையாள் அழுது அரற்றி, புன் பேர் அவையில்
               புகும் சோகம்
காணேம்' என்று, நிலன் நோக்கி, கதிர் வேல் நிருபர்
               இருந்து இரங்க,
கோணே நேர்பாடாய்  இருந்தான்,  குருடு என்று
               உரைக்கும் கொடியோனே.

226
உரை
   


மேகம் குருதி பொழிந்து, அகல் வான் மீனும் பகலே
               மிக விளங்கி,
கம்பமும் உற்று, உற்பாதம், போது, யாவும் புரிந்தனவால்;
நாகம் புனை பொன் துவசனுடன் நவிலாநின்ற நால்வருமே
சோகம்  பிறவாது  இருந்தார்;  மற்று ஒழிந்தார்
               யாரும் சோகித்தார்.

227
உரை
   


தம்பியரின் கிளர்ந்தெழுந்த சினத்தைத் தருமன் தணிவித்தல்

வீமன் கதைமேல் கை வைக்க, விசயன் சிலைமேல்
               விழி வைக்க,
தாமம் புனை தோள் இளையோரும் தம்தம் கருத்தில்
               சினம் மூட்ட,
தூமம் படு செந் தழல் அவியச் சோனை மேகம்
               சொரிவதுபோல்,
நாமம் தருமன் எனத் தக்கோன் இளையோர் ஆற,
               நவிலுற்றான்:

228
உரை
   


'தேம் போது அனைத்தும் மெய் சாயும், சில போது;
               அலரும், சிலபோது;
வேம் போது, அங்கு வாழ்வ எலாம் வெங்
               கானுடனே வேவாவோ?
ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,
               அம் முறையே,
போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;
              இன்னம் பொறும்' என்றான்.





229
உரை
   


துயருடன் அலறும் திரௌபதியை நோக்கி,
துச்சாதனன் சுடுமொழி சொல்லுதல்

வாரும் கண்ணீர் வளர் கொங்கை வரைமேல் அருவி
               என வீழ,
தாரும் குழலும் மின்னுடனே தலம் சேர் கொண்டல்
               என வீழ,
கூரும் துயரினுடன் வீழ்ந்து, 'கோ கோ!' என்று
               கோச் சபையில்,
சோரும் கொடியை முகம் நோக்கி, துச்சாதனன் மெய்
               சுடச் சொன்னான்:

230
உரை
   


'மன் வந்து இருந்த சங்கத்து, உன் மாமன் இருந்தான்;
               ஐவரும் உன்
முன் வந்திருந்தார், முன் கொண்ட முறையால் முயங்கும்
               முடி வேந்தர்;
மின் வந்தனைய நுண் இடையாய்! விழி நீர் சொரிந்து,
               மெலிய, உனக்கு
என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு அரிதோ, விழி நீர்?
               எளிது!' என்றான்.

231
உரை
   


திரௌபதியின் முறையீடும், வீடுமன் மறுமொழியும்

பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
               இதற்கு ஒன்றும
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
               அழுதாள், சோர்வுற்றாள்;
'மல்  ஆர்  திண்  தோள்  மாமாவோ!
               மந்தாகினியாள் மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
               இயல்பு?' என்றாள்.

232
உரை
   


இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்தனைக் கண்டு,
               இரக்கம் உறா,
'மன்னற்கு இளையோய்! தவறு உரைத்தல் வழக்கோ,
               வடமீன் அனையாளை?'
என்னக் கழறி, 'நீ உரைத்த எல்லாம் அரசற்கு
               இயம்பு' என்றான்-
முன்னர்ப் புகலும் குருகுலத்தோர் முதல் ஆம்
               வாய்மை மொழியோனே.

233
உரை
   


திரௌபதி அவையோரை நோக்கி, நீதி வேண்டி முறையிட,
அவையோர் ஓவியம் போல அசைவற்றிருத்தல்

'மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில், வழக்கால் கொண்மின்;
                 மன் அவையில்
முன் தோற்றனனோ, என்னையும்? தான் முன்னே இசைந்து
                 தனைத் தோற்ற
பின் தோற்றனனோ? கரியாகப் பெரியோர் உண்மை
                 பேசுக!' என,
மின் தோற்றனைய நுண் இடையாள், விழி நீர்
                 வெள்ளமிசை வீழ்ந்தாள்.

234
உரை
   


மையோடு அரிக் கண் மழை பொழிய, வாடும் கொடியின்
                 மொழிக்கு ஆகார்;
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்; விறல் வேல்
                 வேந்தர் வெரூஉக்கொண்டு,
பொய்யோ  அன்று,  மெய்யாக,  புனை
                 ஓவியம்போல் இருந்தாரை,
ஐயோ! அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு
                 அதி பாவம்!

235
உரை
   


விகருணன் சபையோரை நோக்கி உரைத்தல்

அல் ஆர் கூந்தல் விரித்த மயில் அனையாள் அரற்ற,
                 அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத் தொல் போர்
                 வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம் வாய்மைக் கடவுள்,
                 'வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும் போகாவண்ணம் புகல்வீரே!

236
உரை
   


' 'முறையோ!' என்று என்று, அவனிதலம் முழுதும் உடையான்
                 முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர், நினைவுற்று இருந்தீர்;
                 நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ? இருந்தால், உறுதி
                 எடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும் குலத்துப் பிறந்தோர் கூறாரோ?

237
உரை
   


'தன் நேர் இல்லா நெறித் தருமன் தன என்று
                 உரைக்கத்தக்க எலாம்
முன்னே தோற்று, தங்களையும் முறையே
                 தோற்று, முடிவுற்றான்;
சொல் நேர் உரைக்கு, 'தான் பிறர்க்குத்
                 தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்
பின்னே தோற்க உரிமையினால் பெறுமோ?'
                 என்று பேசீரோ?'

238
உரை
   


கன்னன் விகருணனைக் கடிந்து உரைத்து,
அவையோரை நோக்கிக் கூறியவை

என்னா, மன்னர் முகம் நோக்கி, எல்லார்
                 இதயங்களும் மகிழச்
சொன்னான்; எவரும், 'தக்கோன்' என்று அவனுக்கு ஒரு பேர்
                 சூட்டினர்; பின்,
நல் நா மனத்தோடு அழல் மூள, நயனம் சிவக்க,
                 நஞ்சின் வடிவு
அன்னான் இளவல் முகம் நோக்கி, அருக்கன்
                 குமரன் அறைகின்றான்:

239
உரை
   


'இருக்கின்ற தரணிபரில் நின் அறிவால் உயர்ந்தனையோ? இராச
நீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ? நின் ஒழிந்தால், வழக்கு
                 ஒருவர் குறிப்பார் அற்றோ?
'மருக் கொண்ட தொடை முடியாய்! மொழிக!' என நின்னுடன்
                 கேட்கவந்தார் உண்டோ?
உரைக்கும்போது எவருடனும் உணர்ந்தன்றோ உரைப்பது?' என
                 உருத்தான் மன்னோ.

240
உரை
   


'தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களுடன்
                 தோற்று, தனையும் தோற்றான்;
மீன் படைத்த மதி முகத்தாள் இவன் படைத்த தனம்
                 அன்றி வேறேகொல்லோ?
வான் படைத்த நெடும் புரிசை மா நகரும் தனது இல்லும்
                 வழங்கும் ஆயின்,
யான் படைத்த மொழி அன்றே? எங்கணும், 'இல்' எனப
                பட்டாள் இல்லாள் அன்றோ?

241
உரை
   


பொல்லா வசையே, புகழ் பூணாப் புல்லன் புகல,
                 இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேர் அவையைத் தொழுதாள்,
                 அழுதாள், சோர்வுற்றாள்;
'மல் ஆர் திண் தோள் மாமாவோ! மந்தாகினியாள்
                 மதலாயோ!
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, இதுவோ மண்ணில்
                 இயல்பு'' என்றாள்.

242
உரை
   


ஐவரையும் திரௌபதியையும் துகில் உரியுமாறு
தம்பிக்குத் துரியோதனன் பணித்தல்

என்ன வெகுண்டிடுகின்ற எல்லைதனில் எழு உறழ்
                 தோள் இராசராசன்,
தன் அனைய கொடுங் கோபத் தம்பியை, 'இன்று உம்பிதனைத்
                 தக்கோன் என்ற
மன் அவையின் எதிரே, இம் மானம் இலா ஐவரையும்,
                 வழக்கு வார்த்தை
சொன்ன கிளிமொழியினையும், துகில் உரிதி' என உருமின்
                 சொன்னான் மன்னோ.

243
உரை
   


சினம் கொண்ட தம்பியரைத் தருமன் அடக்குதல்

இத் தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க,
                 இருந்த வேந்தர்
தம்தம் மனம் மடிந்து உருக, தருமன் மதிமுகம் நோக்கி,
                 தம்மின் நோக்கி,
வித்தக வெங் கதை நோக்க விறல் வீமன், விசயனும் தன்
                 வில்லை நோக்க,
ஒத்தமனனுடை இளையோர் உருப்பம் அடக்கினன், உண்மைக்கு
                 உறுதி போல்வான்.

244
உரை
   


ஐவரும் தமது உத்தரீயங்களைத் தாமே கழற்றிக் கொடுக்க,
திரௌபதியின் துகில் உரியத் துச்சாதனன் நெருங்குதல்

'தருக, துகில்!' என எழுந்து, தங்களை வன்பொடு
                 துச்சாதனன் சொலாமுன்,
'வருக!' என, வரை மார்பின் வாங்காத உத்தரியம்
                 வாங்கி ஈந்தார்;
அருகு அணுகி, மடவரலை அஞ்சாமல் துகில் உரிவான்
                 அமைந்த போதில்,
இருகை நறு மலர் தகைய, எம்பெருமான் இணை அடிக்கே
                 இதயம் சேர்த்தாள்.

245
உரை
   


'கோவிந்தா!' என்று உளம் உருகித் திரௌபதி கதற,
கண்ணன் அருள் செய்தல்

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,
                 அளகம் சோர,
வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு
                 ஓர் சொல்லும்
கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி,
                 குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்
                 எலாம் உருகினாளே.

246
உரை
   


அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க
                 அமரர் போற்றும்
திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி
                 சென்று இசைத்த காலை,
மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே
                 வந்து தோன்றி,
கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,
                 கருணை செய்தான்.

247
உரை
   


துச்சாதனன் அவளது துகிலை உரிந்து கை ஓய்தல்

உடுத்த துகில் உணர்வுஇல்லான் உரிந்திடவும், மாளாமல்,
                 ஒன்றுக்கு ஒன்று, ஆங்கு
அடுத்த நிறம் பற்பல பெற்று, ஆயிரம் ஆயிரம்
                 கோடி ஆடையாகக்
கொடுத்தருள, உரிந்தன பட்டு இருந்த பெருந் தனிக் கூடம்
                 கொள்ளாது, ஓடி,
எடுத்தனர், பற்பல வீரர்; உரிந்தோனும் சலித்து, இரு கை
                 இளைத்து நின்றான்!

248
உரை
   


வீடுமன் முதலியோர் திரௌபதியைப் புகழ்தலும் வானோர்
மலர்மழை பொழிதலும்

கங்கை மகன் முதலான காவலர் மெய் உளம் நடுங்கி,
                 கண்ணீர் சோர,
செங் கை மலர் குவித்து, 'இவளே கற்பினுக்கும் மரபினுக்கும்
                 தெய்வம்!' என்றார்.
அம் கண் அகல் வானோரும், ஆனகமும் வலம்புரியும்
                 அதிர, தங்கள்
பைங் கனக தருவின் மலர் மழை பொழிந்து, கருணையினால்
                 பரிவு கூர்ந்தார்.

249
உரை
   


வீமன் சினம் மிக்கு, நூற்றுவரைப் போருக்கு அழைத்தல்

அழுது அழுது, கொடும் புலிவாய் அகப்பட்ட
                 மான்பிணைபோல் அரற்றாநின்ற,
எழுத அரிய, மடப் பாவை தங்கள் முகங்களை
                 நோக்கி, இரங்கி வீழ்ந்த
பொழுது, மனம் புகை மூள, பூந் தடங் கண் அனல் மூள,
                 போரில் மூளப்
பழுது படா அடல் ஆண்மைப் பவன குமரன் தடக் கை
                 படைமேல் வைத்தான்.

250
உரை
   


'அருள் ஆரும் தருமபதி, 'ஆகாது' என்று எமைப் பலகால்
                 அடக்க, யாமும்
இருளால் வெம் பரிதி வடிவு ஒளிப்பதுபோல், அமர்
                 புரியாது இருக்கின்றேமால்;
மருளால் மெய்ம் மயங்கி ஒரு வலியுடையோர்தமைப் போல
                 மதத்த நீங்கள்
பொருளாக இருந்தனமோ? நூற்றுவரும் வருக! எதிர்
                 பொருக!' என்றான்.

251
உரை
   


திரௌபதியைத் தன் மடிமீது இருத்துமாறு
துச்சாதனனுக்குத் துரியோதனன் பணித்தல்

கொந்து அளக மலர் சரியக் கூப்பிடுவாள் கொடுங் கற்பும்,
                 கூறை மாளா
மந்திரமும், அடல் வீமன் மானம் இலாது உரைக்கின்ற
                 வலியும், காண,
தந்தை விழி இருள்போலத் தகு மனத்தோனும் துச்சாதனனை
நோக்கி, 'பைந்தொடியைக் கொணர்ந்து, இனி என் மடியின்மிசை
                 இருத்துக!' எனப் பணித்திட்டானே.

252
உரை
   


திரௌபதி துரியோதனனுக்கு இட்ட
சாபமும், மொழிந்த சபதமும்

என்ற பொழுது, அருந்ததிக்கும் எய்தாத
                 கற்புடையாள்-இடி ஏறுண்ட
வன் தலை வெம் பணி போல நடுநடுங்கி, மாயனையும்
                 மறவாள் ஆகி,
'புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை
                 வழியே புள வாய் குத்தச்
சென்றிடுக, ஆர் உயிர்!' என்று, எவரும் வெருவுறச்
                 சபித்தாள்-தெய்வம் அன்னாள்.

253
உரை
   


'அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி,
                 அளகம் தீண்டி,
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர்,
                 தகாதனவே விளம்புவோரை,
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங்
                 குருதி பொழிய,
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

254
உரை
   


வீமன் வஞ்சினம் மொழிதல்

'பாஞ்சாலிக்கு அரசவையில் பழுது உரைத்தோன் உடல் எனது
                 படையாம் மேழி
போம் சாலின் நிணம் சொரிய, துணைவரொடு குலம் மாள,
                 பொருவேன் யானே;
தீம் சாலி விளை பழனத் திருநாட்டீர்! கேண்மின்' என,
                 செந் தீ மூள
வேம் சாலின் நறு நெய்போல், வெஞ்சினத்தான்
                 வஞ்சினமும் விளம்புவானே:

255
உரை
   


'வண்டு ஆரும் குழல் பிடித்துத் துகில் உரிந்தோன் உடல்
                 குருதி வாரி அள்ளி,
உண்டு ஆகம் குளிர்வதன்முன் இக் கரத்தால் புனல்
                 உண்ணேன்; ஒருகால் என் கைத்
தண்டால் வெம் புனல் எற்றி, மீது எழுந்து விழும் திவலை
                 தண்ணீர் ஆகக்
கொண்டு, ஆவி புரந்திடுவன்; இது விரதம் எனக்கு!'
                 எனவும் கூறினானே.

256
உரை
   


அருச்சுனனும் நகுல சகாதேவர்களும் உரைத்த சபதம்

'பகலவன்தன் மதலை உயிர் பகைப் புலத்துக் கவர்வன்'
                 எனப் பார்த்தன் சொன்னான்;
நகுலனும், மற்று 'என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு
                 நாசம்' என்றான்;
'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
                 சமரில்' என்றான்;
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு, 'எளிதோ, இக் கொடும்
                 பழி? என்று ஏங்கினாரே.

257
உரை
   


அங்கு நிகழ்ந்த உற்பாதங்கள்

மேகங்கள் வழங்காமல், விண் அதிர்ந்திட்டு, ஊர் கோளும்
                 வெயிலைச் சூழ்ந்து,
பூகம்பம் பிறந்து, உடுவும் அரும் பகலே விழுந்து, உடனே,
                 பொய்கை வாடி,
யாகம் செய் நெடுஞ் சாலை இன் பாலும் செந்நீர் ஆய்,
                 இருந்த வேந்தர்
ஆகங்கள் ஒளி மழுங்கிற்று-'அவிதா!' என்று, அணங்கு
                 அனையாள் அழுதபோதே.

258
உரை
   


திருதராட்டிரன் திரௌபதியைப் பணிந்து, நிகழ்ந்த
பிழை பொறுக்க வேண்டுதல்

'உற்பாதம் பெரிது!' என நெஞ்சு உகுவாரும், 'என் ஆம், இவ்
                 ஊர்?' என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
                 நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
                 கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, 'அபராதம் புரிந்த எலாம்
                 பொறுத்தி!' என்றான்.

259
உரை
   


'உத்தமம் ஆம் குல மயிலே! என் சிறுவர் அறியாமல்,
                 உனக்கு நேரே,
மைத்துனர் ஆம் முறையால், இவ் வழக்கு அலாதன செய்தார்,
                 மதி இலாமல்;
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும், அவை ஒன்றும்
                 எண்ணாது, இன்னே,
'பித்தர் மொழி' எனக் கருதி, மறந்தருள்!' என்று, ஒரு
                 கோடி பிதற்றினானே.

260

உரை
   


பாண்டவரின் கோபத்தை அகற்றி, சூதில் இழந்த
பொருள்களை மீண்டும் கொடுத்து, ஊருக்குச்
செல்ல விடை கொடுத்தல்

மை வரையும் தடங் கண்ணாள் மனச் சோகம் பல முகத்தால்
                 மாற்றி, மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு, கொடுங் கோபம்
                 அகற்றி, 'நீங்கள்
மெய் வரையும் பொரு புயத்தீர்! வல்-போரில் இழந்த வியன்
                 நிலமும், தேரும்,
கைவரையும், பரிமாவும், செல்வமும், யாவையும்,
                 மீண்டும் கைக்கொள்வீரே.

261
உரை
   


'கோமன்றில் அருந்ததியைக் கொண்டு, இனி நீர் நில்லாமல்,
                 குறுக ஊரே
போம்' என்று, வரவழைத்து, தழீஇக்கொண்டு, 'என் கண்மலரே
                 போல்வான் எம்பி;
யாம் என்றும், அவன் என்றும், இரண்டு இல்லை; விளையாட்டு
                என்று இருந்தேன்; இவ்வாறு
ஆம் என்பது எனக்கு ஒருவர் உரைத்திலரால்; யானும்
                 முதல் அறிந்திலேனே.

262
உரை
   


'என் மைந்தர் இவர்; நீங்கள் அவன் மைந்தர் என
                நினையேன்; இவரே எம்பி-
தன் மைந்தர்; உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன்;
                 சம்பு நாட்டு
மன் மைந்தர் உங்களைப்போல் வேறுபடாது, இத்தனை நாள்,
                 வளர்ந்தார் உண்டோ?
வில் மைந்தர் நடக்க!' என விடை கொடுத்தான்-விரகினுக்கு ஓர்
                 வீடு போல்வான்.

263
உரை
   

பாண்டவர் வாழ்வு பெற்றது கண்டு,
சகுனி மனம் பொறாது கூறுதல்

'படை கொடுத்தான்; இவன் இழந்த பார் கொடுத்தான்; அரசு
                ஆளப் பண்டுபோல் வெண்-
குடை கொடுத்தான்; குருகுலத்தே குலம் கொடுத்தான்;
                ஐவருக்கும் குலத்தே கொண்ட
தடை கொடுத்தான்; அகப்பட்டும் தலையழிக்க நினையாமல்,
                 தானே அம்ம!
விடை கொடுத்தான்; இனி விடுமோ? வயப் புலியை வால்
                 உருவி விடுகின்றீரே!

264
உரை
   


' 'யாது ஒரு கருமமேனும் எண்ணியே
                 துணிக' என்றும்,
'காதலின் துணிந்து செய்தால், எண்ணுதல் கடன்
                 அன்று' என்றும்,
ஓது நூல் புலவர் சொன்னார்; உமக்கு உள உணர்வு
                 அற்று அன்றே;
பேதுற அடர்த்தும், பின்னை உருகி, நீர்
                 பிழை செய்தீரே.

265
உரை
   


'தீயினால் சுட்ட செம் புண் ஆறும்; அத்
                 தீயின் தீய
வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ?
                 வடுவே அன்றோ?
பேயினால் புடையுண்டாரோ? மறப்பரோ,
                 பெரியோர்?' என்றான்-
வீயினால் தொடுத்த தண் தார் வேந்தர்க்கு
                 வேந்தன் மாமன்.

266
உரை
   


துரியோதனன் ஆணைப்படி, துச்சாதனன்
தருமனுடன் வழக்கு உரைத்தல்

சகுனி சொல் மருகன் கேட்டு, தம்பியும், அங்கர் கோவும்,
முகம் முகம் நோக்கி, எண்ணி, 'எம்பி நீ மொழிக!' என்றான்;
துகிலினை உரிந்த வன் கைச் சூரனும், தருமராசன்
மகனுடன், வெகுளி தோன்ற, வழக்குற மொழிதலுற்றான்:

267
உரை
   


'சரதம் என்று உண்மையாகச் சபையில் நீ இசைந்து தோற்ற
இரதமும், களிறும், மாவும், யாவையும், மீண்டும் தாரோம்;
சுரத மென் கொடியும் நீரும் தொண்டு ஒழிந்து, உரியீர் ஆமின்;
விரதம் உன் அறத்துக்கு என்றும் பொய்கொலோ?
                 மெய்யே அன்றோ?

268
உரை
   


'உற்பாதம் பெரிது!' என நெஞ்சு உகுவாரும், 'என் ஆம், இவ்
                ஊர்'' என்று அஞ்சி,
நிற்பாரும், போம் வழிமேல் நினைவாரும், பலர் ஆகி
                 நிகழ்ந்த காலை-
கற்பால் மிக்கு, உயர் வேள்விக் கனல் சுமந்த மடவரலை,
                 கண் இலாதோன்
பொற் பாதம் பணிந்து ஏத்தி, 'அபராதம் புரிந்த எலாம்
                 பொறுத்தி!' என்றான்.





269
உரை
   


துச்சாதனன் வார்த்தை கேட்டு, திருதராட்டிரன் வீடுமன்,
விதுரன் முதலியோருடன் உசாவுதல்

என்றலும், தந்தை, மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு,
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி, மீண்டும்,
வென்றி கொள் அரசனோடும், வெஞ் சிலை விதுரனோடும்,
ஒன்றிய அமைச்சரோடும், உறுவன உசாவலுற்றான்.

270
உரை
   


துரோணன் உண்மை நிலையை எடுத்துரைத்தல்

'மேல் வரு கருமம் எண்ணா, வெகுளியால் மிக்க, வீரர்
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்;
சேல் வரும் பழன நாட! செயல் அறிந்து எண்ணி, வேத்து
நூல் வரு முறை சொல்' என்றான்-நோன் சிலை
                 நூலின் மிக்கோன்.

271
உரை
   


துரோணன் கருத்தையே ஏனையோரும் கூற,
திருதராட்டிரன் தருமனுக்கு இட்ட ஆணை

வில் மகன் உரைக்க, ஏனை அமைச்சரும், விதுரன்தானும்,
'மன் முறை தவறின், இன்றே வசையும் வந்து
               இசையும்' என்றார்;
கல் மன நெடுங் குன்று அன்னான் கருதி, அக் கணத்தே, மீள,
தன் மனை, யாவர் நெஞ்சும் சருகு என, தழைக்க, சொன்னான்:

272
உரை
   


'உன் உணர்வு உனக்கே உள்ளது; உன் பெருந் துணைவர் ஆன
கொல் நுனை வேலோர் வென்று கொண்டன
                கொடுத்தல் ஒல்லார்;
பின்னுற உரிமை யாவும் பெறுதி; நின் பெருமைக்கு ஏற்ப,
முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக' என்றான்.

273
உரை
   

அரசன் மாற்றத்தைத் துரோணன் தருமனுக்கு
விளங்க உரைத்தலும், வீடுமன் முதலியோர்
அதற்கு உடன்பட்டு மொழிதலும்

அரசன் மற்று உரைத்த மாற்றம் அந்தணன் உணர்ந்து, செல்வ
முரசு அதிர் அயோத்தி மூதூர் முன்னவன் கதையும் கூறி,
'உரைசெய்தபடியே உங்கள் உலகினை இழந்து, சில நாள்
வரை செறி கானில் வைகி, வருவதே வழக்கும்' என்றான்.

274
உரை
   


'அரிவையோடு அகன்று, நீவிர் ஐவரும் அடவி எய்தி,
சுரர் தினம் ஈர்-ஆறு அங் கண் துன்னுதிர்;
                மன்னும் நாட்டில்
ஒருவரும் அறியாவண்ணம் ஒரு தினம் உறைதிர்; உங்கள்
பெரு விறல் அரசும் வாழ்வும் பின்னுறப் பெறுதிர்' என்றான்.

275
உரை
   


'மறைந்து உறை நாளில் நும்மை மற்றுளோர், 'ஈண்டு
                உளார்' என்று
அறிந்திடின், மீண்டும் இவ்வாறு அரணியம்
                அடைதிர்' என்றான்;
பிறந்த இம் மாற்றம் கேட்டு, பிதாமகன்
                முதலாய் உள்ளோர்,
'சிறந்தது ஒன்று இதனின் இல்லை; இசைத்ததே
                செய்மின்' என்றார்.

276
உரை
   


திரௌபதி, 'உரிமை பெற மீண்டும் சூதாட வேண்டும்'
என, தருமன் மன்னவர் காண மறு சூது ஆடுதல்

சுரி குழல் குலைய நின்ற திரௌபதி, சுருதி முந்நூல்
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும், வணங்கி, 'ஐவர்
அரசரும், எனது மைந்தர் ஐவரும், யானும், மீண்டும்
உரிமை இன்று எய்த, வெஞ் சூது ஆடுதல் உறுதி' என்றாள்.

277
உரை
   


தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு, 'நாங்கள்
கையறு தொண்டர் ஆகிக் கான் புகல் வழக்கும் அன்றால்;
ஐயுறாது ஒருகால் இன்னம் ஆடுதும், அருஞ் சூது' என்றான்;
மெய்யுற இருந்த வேந்தர், மீளவும் காணலுற்றார்.

278
உரை
   


தருமன் தன் புண்ணியத்தை ஒட்டமாக வைத்துக் கவறு
ஆடி, தன் உரிமையை மீண்டும் பெறுதல்

சத்திய விரதன்தானும் தன் பெருந்தேவி சொல்ல,
பத்தியால் வணங்கி, மாயன் பன்னிரு நாமம் ஏத்தி,
ஒத்த வெண் கவறு வாங்க, சகுனி, 'யாது ஒட்டம்?' என்றான்;
புத்தியால் அவனும், 'யான் செய் புண்ணியம்
                அனைத்தும்' என்றான்:

279
உரை
   


உருட்டிய கவறு, நேமி உடையவன் அருளினாலே,
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை,
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர,
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்.

280
உரை
   


தருமன் இளைஞர் முதலியோருடன் குரவரை
வணங்கி, காட்டிற்குச் செல்லுதல்

வென்று, தன் இளைஞரோடும், மேதகு புதல்வரோடும்,
மன்றல் அம் தெரிவையோடும், மற்றுளோர் தங்களோடும்,
அன்று தன் குரவர் பொன்-தாள் அன்புடன் வணங்கி, கானம்
சென்றனன் என்ப மன்னோ-செழு நிலம் உடைய கோமான்.

281
உரை
   


பாண்டவர் பிரிவினால் நகரமாந்தர் வருந்திப் புலம்புதல்

ஒழிவு செய் கருணை நால்வர் உள்ளமும் ஒழிய, ஏனை
வழுவு அறு மன்னர் உள்ளம் மம்மரோடு அயர்ந்து விம்ம,
குழைவினால் நுகர்தல் இன்றி, கொற்ற மா நகரி மாக்கள்
தழல் என உயிர்த்து, மாழ்கி, தனித் தனி புலம்பலுற்றார்.

282
உரை
   


தருமன் கானகம் சென்ற போதும், கலக்கம்
இன்றி உவகையுடன் இருத்தல்

நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை
                     கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.

283
உரை