தொடக்கம் |
|
|
28. படை எழுச்சிச் சருக்கம்
கடவுள் வாழ்த்து படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக, கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல் இணை சிவப்பு ஏற, தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக துவசன் மா நகர்த் தூது நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே. | 1 |
|
|
உரை
|
|
|
|
|
தருமன் தனக்குத் துணைவராம் அரசர்க்குத் தரால் செய்தி அனுப்ப, அரசர் பலரும் வந்து திரளுதல் முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே, முரசு உயர்த்தவன் முன்னி, மிகுந்த கோபமோடு, 'இக் கணம் முடிப்பன் யான், வெம் பகை, இனி!' என்னா, தகும் தராதிபர், தன்னுடன் இயைந்தவர் தமக்கு வெஞ் சமர் மூளப் புகுந்தவாறு எலாம் தூதரின் போக்கினான், ஓலையின் புறத்து அம்மா! | 2 |
|
|
உரை
|
|
|
|
|
எட்டுத் திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான்; திட்டத்துய்மனும், திட்டகேதுவும், விறல் சிகண்டியும், முறை வந்தார்; ஒட்டிப் போர் பொரும் உத்தமோசாவும், வேல் உதாமனும், உடன் வந்தார்; பட்டப் போதகம், தேர், பரி, ஆள், எனும் படையுடைப் பாஞ்சாலர். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
விராட பூபனும், சதானிக நிருபனும், விறல் சிவேதனும், ஆதி வராக கேதுவும், உத்தரகுமாரனும், மச்சநாட்டவர் வந்தார்; பராவு பேருடைச் சேர செம்பியருடன் பாண்டியன் முதலோரும், குரா நறும் பொழில் கேகயத் தலைவரும், குந்தி போசரும் வந்தார்.
| 4 |
|
|
உரை
|
|
|
|
|
அரக்கி தந்தருள் கடோற்கசக் காளையும், அபிமனோடு இராவானும், விரிக்கும் வெண்குடை விந்தனும், சோமனும், வீர கீர்த்தியும், போரில் செருக்கு நெஞ்சுடைப் புண்டலன், செயசெனன், செருவிடைத் தெவ் ஓடத் துரக்கும் வெம் பரித் துரௌபதர் ஐவரும், சூழ் படையுடன் வந்தார்.
| 5 |
|
|
உரை
|
|
|
|
|
சீனர், சாவகர், மத்திரர், மாளவர், தெலுங்கர், வெங் கலிங்கேசர், சோனகாதிபர், கன்னடர், மாகதர், துலுக்கர், குச்சரர், ஒட்டர், ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ-இரண்டு எண் பூமித் தானை மன்னரும் வந்தனர்; இந்த மண்தலத்தில் ஆர் வாராதார்?
| 6 |
|
|
உரை
|
|
|
|
|
பாங்கினால் வரு மகுட வர்த்தனருடன் பட்டவர்த்தனர் உள்ளார், வாங்கும் வெஞ் சிலை மன்னவ குமரரின் மண்டலீகரின் உள்ளார், தாங்கும் மா மொழி மந்திரிகளின் இகல் தந்திரிகளின் உள்ளார், ஓங்கு நீள் கொடிப் பதாகினி திரண்டவாறு உன்னி, யார் உரைக்கிற்பார்?
| 7 |
|
|
உரை
|
|
|
|
|
யானை, தேர், பரி, ஆள், எனும் திறத்தினால், இலக்கணத்து எண்பட்ட சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன, திரைக் கடல் ஏழ் என்ன; சோனை மா முகில் ஏழும் ஒத்து அதிர்ந்தன, துந்தபிக் குலம்; வந்த தானை மன்னரைத் தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
வந்த மன்னவரைத் தருமன் எதிர்கொண்டு, துரியோதனன் நாடு தர மறுத்துப் போர் புரிய முன் வந்ததைக் கூறுதல்
தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத் தழீஇக் கொண்டு, தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று, அவர் முகம் நோக்கி, 'யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, "எனது பார் எனக்கு" என்ன, வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து, "அமர் புரிக!" என்றான். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
'கேண்மையால், "எனது அரசு நீ தருக!" எனக் கேட்கவும், மதியாமல், ஆண்மையால் அவன் மறுத்தமை எனக்கு உயிர் அனைய நீர் அறிமின்கள்; வாண்மையால், வரி வின்மையால், மேன்மையால், வலி உரைக்கலன்; உங்கள் தோண்மையால் அமர் தொலைத்து, அடல் வாகையும் சூடுவன், இனி' என்றான | 10 |
|
|
உரை
|
|
|
|
|
அரசர்கள் தருமனுக்கு உறுதிமொழி கூறுதல்
வெங் கண் மா முரசு உயர்த்தவன் இம் மொழி விளம்பலும், விளக்கம் செய் திங்கள் சூழ்தரு தாரையின் கணம் எனச் சேர்ந்த மன்னவர் எல்லாம்,- 'எங்கள் ஆவியும், எம் பெருஞ் சேனையும், யாவையும், நின' என்றார்- தங்கள் வீரமும், மானமும், மரபும், நல் வாய்மையும், தவறு இல்லார். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
தருமன் சிவேதனைச் சேனாபதி யாக்குதலும், இராவான் தன் ஆண்மை எடுத்துரைத்தலும்
'கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன் காதல் மைந்தன் தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ ஆளத் தருவன், இன்றே; மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன், உனை வெறாதவண்ணம், வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே வழங்குமே | 12 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி, ஈண்டு இருந்தனர், இவ்வுழி, செருக் குறித்து, எழிலி மேனியனோடும்; தூண்டும் வெம் பரித் தேர்த் துரியோதனன், தூது போய்ப் பரந்தாமன் மீண்டு வந்தபின், அவ்வுழிப் புரிந்தன விளம்புகின்றனம் மன்னோ: | 13 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் படைத்துணை வேண்டி அரசர்களுக்கு ஓலை அனுப்ப, பல நாட்டு அரசர்களும் வந்து திரளுதல்
'முந்து அரவு உயர்த்தோன் ஓலை முடியுடை அரசர் காண்க! வெந் திறல் ஐவரோடும் வெஞ் சமர் விளைந்ததாலே, தந்தம கிளைஞரோடும், சாதுரங்கத்தினோடும், வந்தவர்தமக்கே வாழ்வு முழுதும்!' என்று எழுதிவிட்டான். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
மித்திரர் ஆன மன்னர் விறலுடைத் துணைவரோடும், புத்திரரோடும், தத்தம் போர் புரி சேனையோடும், சத்திர நிழல் விடாத தன்மையர் ஆகிச் சூழ, மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தான். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
இடைப்படு நெறியில், வைகும் இவனது வரவு கேட்டு, தொடைப்படு தும்பை மாலைச் சுயோதனன் சூழ்ச்சி ஆக, மடைப்படு விதியின் செய்த விருந்தினால் மருண்டு, அவற்கே படைப்படு சேனையோடும் படைத் துணை ஆயினானே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
சல்லியன் தானும், மாயச் சகுனியும், தறுகண் வெம் போர் வல்லியம் அனைய வென்றி மாகத பதியும், கொற்ற வில் இயல் கடகத் திண் தோள் விந்தரன், விந்தன், என்று சொல்லிய நிருபர் தானை ஆறொடும், கடலின் சூழ்ந்தார். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
கலிங்கர்கோன், சோமதத்தன், கௌசிகன், காம்பிலீசன், தெலுங்கர்கோன், போசன், ஆதிகேகயன், திகத்த பூபன், வலம் கொள் வேல் கவுடராசன், மாளவன், வளவன், சேரன், துலங்கு நீர் ஓகனீகன், எனும் பல வேந்தர் தொக்கார். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
பங்களம், குகுரம், சீனம், பப்பரம், கொப்பம், வங்கம், சிங்களம், துளுவம், அங்கம், ஆரியம், திகத்தம், சேதி, கொங்கணம், கடாரம், கொங்கம், கூபகம், இரட்டம், ஒட்டம், எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி, மொய்த்தார்.
| 19 |
|
|
உரை
|
|
|
|
|
அண்ணல் அம் துரகத்தாமா ஆதியாம் குமரராலும், எண்-இரு பத்து நூறாம் யாதவ குமரராலும், வண்ண வேல் பூரி, கௌரிமா, முதல் குமரராலும், எண்ண அருஞ் சேனை வெள்ளம், எங்கணும் பரந்த மாதோ.
| 20 |
|
|
உரை
|
|
|
|
|
தம்பியர் அனைவரும், துச்சாதனன் முதலா உள்ளோர், வெம் பரி, தடந் தேர், வேழம், வேல், சிலை, வடி வாள், வல்லோர், அம்பரத்து அளவும், முந் நீர் அம்பரம் எழுந்தது என்ன, உம்பரும் இம்பராரும் உரகரும் வெருவ, வந்தார். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
வீடுமன், கிருபன், கன்னன், விற் கை ஆசிரியன், வையம் பாடு சீர் விகத்தசேனன், பகதத்தன், முதலா உள்ளோர், ஆடல் வெம் பரி, தேர், யானை, அனீகினித் தலைவர், செம் பொன் கோடு உயர் குன்றம் சூழ்ந்த குலகிரி ஏழும் ஒத்தார். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
நதி எனைப் பலவும் வந்து, சிந்துவில் நண்ணுமாபோல், எதிர் அறப் பொருது, வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம், சதமகற்கு உவமை சாலும் தரணிபன்தன்னைச் சூழ்ந்து, பதினோர் அக்குரோணி சேனை பார்மிசைப் பரந்த அன்றே! | 23 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் வீடுமனைச் சேனாபதி யாக்குதல்
பரசுடை இராமன் பாத பங்கயம் சென்னி ஏந்தி, வரி சிலை வேதம் கற்று, மற்று அவன்தனையும் வென்ற குரிசிலை, கங்கை தந்த குருகுலக் கோமான்தன்னை, அரசன், வெஞ் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினானே. | 24 |
|
|
உரை
|
|
|
|
|
வீடுமனிடம் களப்பலிக்கு உரியாரையும், அதற்கு உரிய நாளையும் துரியோதனன் கேட்க, அவன் மறுமொழி பகர்தல்
'அளப்பு இலாச் சேனை நாதன் அடி பணிந்து, அவனி வேந்தன், 'களப்பலிக்கு உரியார் யாவர்? கடவ நாள் யாவது?' என்ன, 'தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை; உளப் பொலிவு உடையாய் இன்றே உற்று, அவற் கேண்மின்' என்றான். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
'ஒன்ற நம் படைகள் எல்லாம் ஒரு பகல் பொழுதில் கொல்வான் நின்றனன், இராவான் என்பான்; நீ அவன்தன்னை வேண்டில், "கொன்று, எனைப் பலி கொடு" என்று கூறும்; அக் குமரற் கொன்றால், வென்று, உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின்' என்றான். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
வீடுமன் உரைத்தபடி துரியோதனன் சகாதேவனிடம் சென்று நாள் கேட்டல்
என்றலும், அவனும் ஆங்கு, ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து, சென்றனன்; அவனும் கேட்டு, 'சிலையில் வெங் கதிரைத் திங்கள் ஒன்றிய பகல் இராவில் களப்பலி ஊட்டின்அல்லால், வென்றிடல் அரிது' என்றிட்டான்-கிளைஞரை வேறு இடாதான். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் கேட்க, இராவான் தன்னைப் பலியிட ஒப்புக்கொள்ளுதல்
ஐவரில் இளையோன்தன்பால் முகூர்த்தம் கேட்டு, அவர் சேய் ஆன பை வரு முடியோன்தன்பால் சேறலும், பணிந்து, தாதை உய்வரு வரம் கேட்டு, 'என்னை ஊட்டுக, பலி நீ!' என்றான்; எய் வரி சிலையினானும், 'பெற்றனன்!' என்று மீண்டான். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
கண்ணன் துரியோதனன் முகூர்த்த நாள் குறித்த செய்தியைக் கேட்டு, தருமனுக்கு நிகழ்ந்தன கூறி, தன்னைக் களப்பலி ஊட்டுமாறு கூறுதல்
'கொடுத்தனன் பலிக்குத் தன்னைக் குமரன்' என்று அறிந்து, குன்றம் எடுத்தவன், 'திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக!' என்று தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன்; சுடர்கள் தம்மில் அடுத்து, 'இது என்னை?' என்ன, அன்று அது ஆயது அன்றே. | 29 |
|
|
உரை
|
|
|
|
|
ஆய பின் தருமற்கு உற்றவாறெலாம் விளம்பி, 'இன்று நீ அவன்தனக்கு முன்னே களம் கொள நேரின்அல்லால், போய் அவன்தன்னை வேறல் அரிது' எனப் புகன்று, செங் கண் மாயவன், 'என்னை வல்லே வன் பலி ஊட்டுக!' என்றான். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டவர் வருந்தி உரைக்க, இராவான் தன்னைப் பலி கொடுக்கக் கூறி, போரைச் சில நாள் கண்டபின் மடியுமாறு அருள் எனக் கண்ணனை வேண்டுதல்
தருமனும், தம்பிமாரும், சாற்றிய மாற்றம் கேட்டே, உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து, உள்ளாய் நின்ற கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து, 'வாழ்வும் பொருமுனை வயமும் வேண்டேம்; பொன்றுதல் அமையும்' என்றார். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
அப்பொழுது அரவ மைந்தன், 'அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன்; இப்பொழுது உமக்கு நேர்ந்தேன்; எனைப் பலி இடுமின்' என்ன, மைப் புயல் வண்ணன், 'நின்னை அல்லது மண்ணில் என்னை ஒப்பவர் இல்லை; நம்மில் ஒருவரே வேண்டும்' என்றான்.
| 32 |
|
|
உரை
|
|
|
|
|
'அடியனேன் இருக்க, நீயே அரும் பலிக்கு இசைவாய்? போரில் மடிய நேரலரைக் கொன்று, வாழ்வு இவர்க்கு அளிக்க நின்றாய்; கடிய, நேர் பலி தந்தாலும், காய் அமர் சில நாள் கண்டு, முடிய நேரலர், வெம் போரில் முடிவு எனக்கு அருளுக!' என்றான்.
| 33 |
|
|
உரை
|
|
|
|
|
காளி கோயில் முன்னர் இராவான் தன்னைப் பலி கொடுத்தல்
அவ் வரம் அவற்கு நல்கி, அத் தினத்து, அவ் இராவில், தெவ்வரை ஒளித்து, தங்கள் சென்ம தேயத்தில் சென்றார்; மெய் வரு காளி முன்னர் மெய் உறுப்பு அனைத்தும் வீரன் கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ! | 34 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டவர் பகடு முதலிய பிற பலிகளையும் கொடுத்து, வரம் வேண்டி மீளுதல்
ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து, காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான்; பாண்டவர் யாமளத்தின்படி பகடு ஆதிஆக வேண்டிய பலிகள் ஈந்து, வென்றியும் வேண்டி, மீண்டார். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
கண்ணன் சிவேதனை நோக்கி, வஞ்சி சூடிப் படையெடுத்துச் செல்லுமாறு கூறுதல்
மற்றை நாள் வசுதேவன் மா மகன், மண்டலீகரும் மன்னரும், செற்று, நீடு அவை புக்கு இருந்த சிவேதனோடு இவை செப்பினான்: 'இற்றை நாள் அதிரதர், மகாரதர், சமரதாதியர், எவரொடும் கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக, குருநிலத்திடை!' என்னவே. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
சிவேதன் பாண்டவர் சேனையை அணிவகுத்தல்
அதிரதாதிபர் தானும், வீமனும், விசயனும், திறல் அபிமனும்; சிதைவு இலாத சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன், விராடர்கோன், மதுரமா மொழித் தருமனோடு இவர், மாரதாதிபர்; சமரதப் பதிகள் ஆனவர், யாகசேனன், உதாமன், உத்தமபானுவே; | 37 |
|
|
உரை
|
|
|
|
|
நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும், சகதேவனும், எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும், ஆகவே; மண்ணகத்து அணி அணிகள் ஆக, மகீபர் தம்மை வகுத்துளான்- விண்ணகத்து அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரனே.
| 38 |
|
|
உரை
|
|
|
|
|
ஐவரும் கண்ணனும் போருக்கு முனைய, பலராமன் தீர்த்த யாத்திரை போதல்
நெருங்கு வெம் படை கண்டு வந்த பின், ஐம் புலன்களும் நெஞ்சமும் ஒருங்கு சென்றென, மன்னர் ஐவரும் மாலும் வெஞ்சமம் உன்னவே, மருங்கு நின்ற இராமனும், 'பின் மதித்த போர் முடிவளவும் யான் பொரும் கடும் புனல் நதிகள் ஆடுவன்' என்று, நண்பொடு போயினான். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
பலராமனும் விதுரனும் எங்கெங்குமுள்ள தீர்த்தங்கள் சென்று ஆடுதல்
போன வெம் பலபத்திரன், 'பொரு பூசலில் புகுதேன்' எனா, மான வெஞ் சிலை முன் இறுத்த விதூரனோடு, மகிழ்ந்து, போய், கானகங்களில், வரையில், வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே, நானம் எங்கணும் ஆடுவான், இரு-நாலு திக்கினும் நண்ணினான். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
நாற்படைகள் நின்ற நிலை
இடி படப்பட வரு முகில்குலம் என, நிரைக்கடல் என, நெடுங் கடி படப்பட அதிர் பணைக் குலம் என, அதிர்ப்பன; கறைகள்போல் அடி படப்பட, உரகர் பைத்தலை அணி மணிக்கணம் அடையவும், பொடி படப்பட, உடன் நடப்பன-புகர் முகக் கரி நிகரமே. | 41 |
|
|
உரை
|
|
|
|
|
உருள் மணித் திகிரியின் முனைப்படில் உயர் பொருப்பையும், உரகர் வாழ் இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன; இவுளியின் குர துகள் கொடு கலகம் இட்டு, அணி கொடி நிரைத் துகில்கொடு பொலம் தரு நிலத்தவர் விழி துடைப்பன, சரதம் இப்படி-இரதமே. | 42 |
|
|
உரை
|
|
|
|
|
பல வகைப்படு கவன மெய்க் கதி பவனம் ஒப்பன; பரவை சூழ் உலகு அனைத்தையும் வெளியில் உய்த்தலின் உரகருக்கும் ஓர் உதவியாய், இலகு சக்கர சிகரி சுற்றுஅடி, என வளைப்பன; எழு பெயர்க் குல முகில் தலை கிழிய வைப்பன; குர விதத்தன;-புரவியே.
| 43 |
|
|
உரை
|
|
|
|
|
புருவ வில் குனிவு எழ, உயிர்ப்பொடு, புகை எழ, துகிர் புரையும்வாய் மருவும் முத்து இள நிலவு எழ, தனி மனம் நெருப்பு எழ, வளர் தடக் கரதலத்து அயில் வெயில் எழ, புனை கலன் வனப்பு எழ, மிளிரும் நீள் நிரை இமைப்பு அறு விழி சிவப்பு எழ, நிருதர் ஒத்தனர்-விருதரே.
| 44 |
|
|
உரை
|
|
|
|
|
கொடி நெருக்கவும், மதி எனத் திகழ் குடை நெருக்கவும், நடை கொள் ஆள் அடி நெருக்கவும், இபம் நெருக்கவும், அயம் நெருக்கவும், எழு துகள் பொடி நெருக்கவும், வளர் புயத்தொடு புயம் நெருக்கவும், ஒளிஅறா முடி நெருக்கவும், முறை நெருக்கினர்-முரசம் ஒத்த சொல் அரசரே.
| 45 |
|
|
உரை
|
|
|
|
|
பகல் மறைத்து, இருள் வர விடுத்து, எறி பவன மெய்க் கதியுடன் உலாய் அகல் நிலத்திடை வரு நதிப் புனல் அருவருத்து, உயர் நதியின்வாய் உகள் வரிக் கயல்இனமும் ஒத்தன; உடு குலத்துடன் ஒளிர் பெருங் ககனவட்டமும் மறைய இட்டன கவசம் ஒத்தன-துவசமே.
| 46 |
|
|
உரை
|
|
|
|
|
அறுவகைப் படைகளும் அணி வகுத்து நிற்க, முரசு, குடை, கொடி, முதலியன நெருங்குதல்
உறவின் மிக்கவர், பகையின் எய்த்தவர், உதவும் அப் படை, குடை நிழல் செறி தலத்தினில் வளர் நகர்ப்படை, திரள் வனப் படை, பொருள் விலைத் தறுகண் மெய்ப்படை, உறுதியில் பொரு தமது அகப்படை,-என விராய், அறுவகைப் படைகளும் வகுத்தன, அணிகள்; உட்கின, பணிகளே. | 47 |
|
|
உரை
|
|
|
|
|
சதி எனைப் பல என முழக்கின சத விதப் பணை; தவள மா மதி எனைப் பல என நிழற்றின, மகிபர் பொற் குடை; மழை கொள் வான் நதி எனைப் பல என நிரைத்தன, நவ மணிக் கொடி; நளின வெம் பதி எனைப் பல என எறித்தன, பல வகைப் படை குலவவே.
| 48 |
|
|
உரை
|
|
|
|
|
பிடர் வலிக் கடகரிகளின், செறி பிடிகளின், புனை முடிகளின், படர் நிழல் கவிகையின், மிசைத் துகள் பரவி மொய்த்து எழு புரவியின், சுடர் விதப் படைகளின், நிரைப் படு துகிலுடைக் கொடிகளின், விராய், அடர் பொருப்புஇனம் இடை இடைப் பயில் அடவி ஒத்தது, புடவியே.
| 49 |
|
|
உரை
|
|
|
|
|
வளை முழக்கின; கிடுகு கொட்டின; வயிர் ஒலித்தன; மகுடியின் கிளை இமிழ்த்தன; முழவு அதிர்த்தன; கிணை உரற்றின; பல விதத் துளை இசைத்தன; முரசு இரைத்தன; துடி அரற்றின; செவிடுபட்டு உளைய, இப்படி படை புறப்பட, உலகம் உற்றது, கலகமே.
| 50 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டவர் சேனை உயிருள்ள உடம்பு போன்று விளங்குதல்
செங்கண் மால் உயிர்; தருமன் மார்பு; சிவேதன் ஆனனம்; இரு புயம் வெங் கண் வீமனும் விசயனும்; திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள்; அம் கண் மா முடி அரசர் மற்று உள அவயவாதிகள்;-ஆகவே தங்கள் பூமியில் ஆனபோது, ஒரு வடிவம் ஒத்தது, தானையே. | 51 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் வீடுமனுக்கு அணி வகுக்கக் கூறுதல்
இங்கு இவர் வயப் படை குறித்த குரு பூமியிடை இவ் வகை எழுந்தது; இனிமேல், அங்கு அவர் செயப் படை எழுச்சி, உரை செய்குவம்: அருந் திதி மயக்கி, விரையக் கங்குலின் அழைத்து, உரக கன்னி மகனைப் புகல் களப்பலி கொடுத்தனர் என, செங் கண் அரவத் துவச மீளியும் உணர்ந்து, தன சேனை முதல்வற்கு உரை செய்வான்: | 52 |
|
|
உரை
|
|
|
|
|
'கொதி கொள் சின நெஞ்சின் வலி இன்றி, அவர் அஞ்சுபு, கொடுத்தனர் களப்பலி; நமக்கு எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன்; நீ அறிவையே; அதிரதர்கள், மா இரதர், சமரதர்கள், அர்த்தரதர் ஆக நம் அனீகினியின் மா மதுகை முடி மன்னரை வகுத்து, எழுக!'என்றனன்-மனத்து அசைவு இலாத வலியோன் | 53 |
|
|
உரை
|
|
|
|
|
வீடுமன் அணிவகுத்தலும், கன்னன் வீடுமனொடு முனிந்து, 'நீ இறக்குமளவும் படை எடேன்!' எனச் சூளுரைத்தலும்
'ஆனது' என வீடுமனும், 'அதிரதரில் மிக்க தனு ஆசிரியனும், புதல்வனும், தானும், உயர் பூரிசரவாவும், இவர்; சோம வர தத்த, பகதத்தர்கள், வழா மானம் மிகு துன்மருடணன், தலைவர் மாரதரில்; வன் கிருதபன்ம அரசன், ஞான கிருபன், சகுனி, சல்லிய, சயத்திரதர், நன் சமரதத் தலைவரே. | 54 |
|
|
உரை
|
|
|
|
|
'அங்கர் பெருமான், விருட சேனன், அரசற்கு உரிய அநுசர், இவர் அர்த்தரதரில் துங்க வயவீரர்' என இம் முறை வகுத்து, உரக துவசனுடனே உரை செய்தான்; கங்கை மகனோடு பல கூறி நனி சீறி, 'உயிர் காய்வன!' என, வாள் உருவி, 'நீ பொங்கு அமரில் மாளும் அளவும் படை தொடேன்!' என மொழிந்தனன், நிசாரி புதல்வன்.
| 55 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் படைகள் அணியணியாகப் போருக்கு எழுதல்
யானைமிசை, தேரின்மிசை, இவுளிமிசை, போம் வயவர், ஏதி, சிலை, வேல், வயவரில், தானைகள் ஒர் ஆறும், முகில் ஏழும் என வன் பணை தயங்கு திசை சூழ வரவும், ஏனை நரபாலர், அணிதோறும், வெயில் வாள் இரவி என்ன இருபாலும் வரவும், சேனைமுதல் நாதனொடு மெய்த் துணைவர் தங்களொடு சென்றனன், இராச திலகன். | 56 |
|
|
உரை
|
|
|
|
|
பொழியும் முகில் பற்றி, எழும் இள வெயில் எறித்தனைய புகரன, பனைக்கைகொடு கார் கிழியும்வகை எற்றி, மிசை ஒளிறு நவரத்ன கண கிரண உடுவைக் கவர்வ, போர் விழி வழி நெருப்பு உருகி வழிய, நுதலில் திலகம் வெயில் வழிய, முற்றும் நிலவே வழியும் மதியத்தின் வகிர் நிகர் பணை மருப்பினிடை மகரிகை தரித்த-மதமா.
| 57 |
|
|
உரை
|
|
|
|
|
நடு நிலம் உரைக்கில், உயர் அவனிதலம் ஒக்கும்; மிசை நவ மணி அழுத்தியன, வான் உடு நிகரம் ஒக்கும்; உருள் உருளைகள் அருக்கனுடன் உடுபதியை ஒக்கும்; மகுடம் கொடுமுடிகள் ஒக்கும்; இவுளிகள் திசை அனைத்தும் எறி குரை பவனம் ஒக்கும்; அடைவே, இடு துகில் நிரைத்த கொடி, சொரி அருவி ஒக்கும்; எழு குல கிரிகள் ஒக்கும், இரதம்.
| 58 |
|
|
உரை
|
|
|
|
|
யவனச வனத்தினிடை வளர்வன; கதத்தினொடும் இரவி புரவிக்கு நிகர்வ; புவனதலம் முற்றும் உடன் வளைய ஓர் இமைப்பொழுதில் வருவன; புறப் புணரியைக் கவனமொடு எழுப்பி, விடு துகள்கொடு நிறைப்ப; விரை கதிகளின் விதத்தை மொழியின், பவன கதியைத் தொடர்வ; பரிமள உயிர்ப்புடைய;-பல வகை நிறத்த பரிமா.
| 59 |
|
|
உரை
|
|
|
|
|
அரவின் விடம் ஒத்த எரி சினமும், நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும், புரவியுடன் ஒத்த கதி விரைவும், உரும் ஒத்த அதிர் குரலும், எழு ஒத்த புயமும், உர அனிலம் ஒத்த வலி உரமும், மதன் ஒத்த ஒளி உருவமும், அனைத்தும் மருவி, பரவை மணல் ஒத்த பல அணிபட வகுத்த பல படையுடன் நடக்கும் நடையார்.
| 60 |
|
|
உரை
|
|
|
|
|
குடை நிலவு எறிக்க, இரு புறமும் அசை பொற் கவரி குளிர் நிலவு எறிக்க; எறி கைப் படை வெயில் எறிக்க, அணி முடியுடன் மணிப் பணிகள் பல வெயில் எறிக்க; உடனே இடை இடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க, எழு துகள் இருள் எறிக்க, எழு பார் அடைய ஒர் தினத்தின் வலம் வரு திகிரி ஒத்தனர்கள்- அவனிபர் எனைப் பலருமே.
| 61 |
|
|
உரை
|
|
|
|
|
முழவு முதல் எற்றுவன கடிபடு பணைக் கருவி, முழு மணி முதல் கருவி, பைங் குழல் முதல் அமைத்த பல வகைபடு துளைக் கருவி, குல வளை, நரப்பு நிரையால் உழைமுதல் எழுப்புவன இசைப்படும் இசைக் கருவி, உழை உழை அதிர்த்த உடனே- எழு கடல் கொதித்தது என, எழு புவி மறித்தது என, எழு முகில் இடித்தது எனவே.
| 62 |
|
|
உரை
|
|
|
|
|
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன்-துவச முதல்வன் உயிர் மைத்துனமையால் விறல் உதவுதற்கு வரு கரியவன் மணித் துவச மிசை கருடன் நிற்கும் எனவோ;, எறியும் உருமுத் துவசன் மதலை விதலைச் சமரின் இறுதியை விளைக்கும் எனவோ;, அறை வளி எதிர்த்து வர, வெருவொடு புறக்கிடுவது, அரசன் உரகத் துவசமே?
| 63 |
|
|
உரை
|
|
|
|
|
தூளி எழ, இரு திறத்துச் சேனைகளும் வந்து நெருங்குதல்
'உயர் முறைமை தப்புமவர் குடை நிழலில் இற்றை அளவு உள குறை அகற்றி, இனி நான் இயல்புடை நெறித் தருமன் ஒரு குடை நிழற்ற, அவ னிடை இனிது இருக்குவன்' எனா, வியல் நதி முழுப் புனலில் முழுகி வருதற்கு, அவனி, மிசையுற நடப்பது எனவே, பயில் படை நடக்க, அகல் முகடுற நிரைத்து, அரிய பகலையும் மறைத்த துகளே. | 64 |
|
|
உரை
|
|
|
|
|
.பொரு படை, கொடிப் படை, புறப் படு பெரும் படை, புகுந்து குரு பூமி உறவே, இரு படையும் ஒத்துடன் நெருங்கின, சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே; ஒரு படை எனப் படம் ஓர் ஆயிரமும் நொந்து, உரகன் உரம் நெரிய, ஏழ் உலகமும் வரு படை நிலத்தினிடை வந்த அளவிலே, உததி வையம் எனதாய் முடியுமே!
| 65 |
|
|
உரை
|
|
|
|
|
'போர் முடிய எத்தனை நாள் செல்லும்?' என்று வினாவிய துரியோதனனுக்கு வீடுமன் விடைபகர்தல்
எண் அறு பரப்பினிடை, யோசனை களத்தினிடை, இரு படையும் நிற்ப, எவரும் துண்ணென வெருக்கொள, முன் நின்றருள் பகீரதி சுதன்தனை வியாள துவசன், 'கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி, உயிர் கவர, எது நாள் செலும்?' என, பண் அளி நெருக்கு ஒழிய, மாதர் இரு கண் அளி படாத தொடை மீளி பகர்வான்: | 66 |
|
|
உரை
|
|
|
|
|
'ஒரு பகலில் யான் மலைவன்; முப் பகலிலே மலைவன், உபநிடத விற் கை முனியும்; வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன், பரிதி மைந்தன்; முனி மைந்தன் ஒரு நாழிகையினில், பொரு படை அடங்க மலையும்; புவியும், வானொடு புரந்தரன் இருந்த உலகும், வெருவர முனைந்து, ஒரு கணத்தினிடையே மலைவன், வில் விசயன்' என்றனன்அரோ
| 67 |
|
|
உரை
|
|
|
|
|
விசயன் எதிர்ப்பக்கத்தேயுள்ள குரவரையும் துணைவரையும் கண்டு, மனம் அழிந்து பின்னடைய, கண்ணன் உரைசெய்தல்
யானையொடு, தேர், புரவி, ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே, சேனை முதலாய், முனையில் நின்றருள் பிதாமகனும், மற்று உள செழுங் குரவரும், தானை நெடு வாரியிடை தேரிடை அருக்கன் என நின்ற துரியோதனனும், வான் மீனை நிகர் கேளிரும், அணிந்த நிலை கண்டு, உருகி, விபுதர்பதி மைந்தன் மொழிவான்: | 68 |
|
|
உரை
|
|
|
|
|
'நின்று அமர் தொடங்க நினைகிற்பவர் பிதாமகனும், நீள் கிளைஞரும், துணைவரும்; கொன்று, இவரை வாகு வலியின் கவர்வது இத் தரணி; கொள்பவனும், என் துணைவனே!' என்று பல பேசி, அதி பாதகம் எனக் கருதி, 'யான் மலைவுறேன், இனி' எனா, அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான்; அமரில் அவனும் இவனோடு உரை செய்வான்:
| 69 |
|
|
உரை
|
|
|
|
|
சாள மன்னனும், (கேகய) நிருபனும், சனகனை ஒழிந்தோரும் வேளையே நிகர் மாகத...விறல் மகீபரும் வந்தார்; சோளபூபனுஞ் சோமனும் வந்தனர்; தொடுத்து எதிர் அணிந்தோர்தம் மூளை வாய் உக, பொரு படைப் பதாகினி முடிவிலது உடன் அம்மா.
| 4-1 |
|
|
|
|
|
|
|
வல்லியம் அனைய வென்றி மாகத பதி சாதேவன், சல்லியன், கிருத வர்மன், தற் பொரு சகுனி என்பான், வில்லியல் கடந்த திண்தோள் விந்தரன், விந்தன், என்றும் சொல்லிய நிருபர், தானை நாலொடும், கடலின் சூழ்ந்தார். | 14-1 |
|
|
|
|
|
|
|
கயம் படு மனத்தன் ஆய கண் இலா அரசன் மைந்தன் வயம்பட நினைந்து, கங்குல் வகுத்தது ஓர் சூழ்ச்சிதன்னால், பயம் படு மல்லரோடு பாதலம் மடிய நீண்ட கயம் படு கமலத் தாள் என் தலை மிசை அகல்கிலாவே. | 24-1 |
|
|
|
|
|
|
|
குன்று எடுத்து, ஆயர் மாதர் குரவை கொண்டு, ஒரு விளாவில் `` கன்று எடுத்து எறிந்து, வெய்ய காளியற்கு இரு தாள் நல்கி, அன்று எடுத்து இறுத்த வில்லே அனைய வில் விழவு காண்பான், சென்று எடுத்து, இறுத்து நின்ற செங்கண் மால் எங்கள் கோவே. | 28-1 |
|
|
|
|
|
|