தொடக்கம் |
|
|
35. ஏழாம் போர்ச் சருக்கம்
கடவுள் வாழ்த்து உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை கண்டு உருக, வாழ்வு கூர் தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து வைத்து, ஆடும் மாயனார், விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத் தவழ்ந்தருளி, மீளவும் புரியும் நீள் கடைக்கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே. | 1 |
|
|
உரை
|
|
|
|
|
இரு திறத்தார் சேனைகளும் களம் எய்த, கண்ணன் பாம்பு வியூகமும் வீடுமன் சகட
இருவர் சேனையும், சேனை மன்னரும், இகலியே, பல திசைகள் எங்கணும், முரசம் ஆதி வெம் பணை முழங்கவே, முன்னை வெங் களம் பின்னும் எய்தினார்- மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும், தரணி காவலன்தன் பிதாமகன் சகட வியூகமும் தான் வகுக்கவே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
பாண்டியன் துரோணனுக்குத் தோற்றோட, கடோற்கசன் மீண்டும் வருதல்
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான், மாறன், மீனவன், வழுதி, பஞ்சவன், அன்று பஞ்சவர்க்காகவே உடன்று, அந்தணற்கு உடைந்து, அஞ்சி ஓடினான்; துன்று மாய மால் யானை கொண்டு போர் யானை மன்னரைத் தொல் அமர்க்கணே வென்று, கண்டு அவர் புறம், அவர்க்கு இடான், மீள வந்தனன், வீமன் மைந்தனே. | 3 |
|
|
உரை
|
|
|
|
|
சாத்தகிக்குச் சுதாயு தோற்க, சகுனி, சல்லியன், முதலானோரை வென்று வீமன் வாகை சூடுதல்
முகில் நிறம் கொள் மா மேனி மாயனார் முன் பிறக்கவே பின் பிறந்தவன் புகு நிலந்தனில், சற்றும் நின்றிலன், பொரு சுதாயு; தன் போர் பொறாமையின், சகுனியும், பெருஞ் சேனை முன் வரத் தக்க சல்லியன்தானும், ஓடவே, மிகு நிறம் கொள் பைந் தாம வாகை போர் வென்று சூடினான், வீமசேனனே. | 4 |
|
|
உரை
|
|
|
|
|
விசயனும் வீடுமனும் விற்போர் விளைத்தல்
உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்கு தேர் உலகு அளந்த தாள் வலவன் ஊரவே, செயந்தன் மா பெருந் துணைவன், வன் பெருஞ் சேனைதன்னொடும் சென்று பற்றினான்; வியந்த தேரின்மேல் முப்புரங்களும் வென்ற மீளிபோல் நின்ற வீடுமன் இயைந்து, போரினுக்கு எதிர, வில் வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே. | 5 |
|
|
உரை
|
|
|
|
|
ஒருவர் எய்த அம்பு ஒருவர்மேல் உறாது, ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு, இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ- வரி வில் வெங் கட கரியின் வந்த தாரகனும் மா மயில் குகனும் அன்றியே, மருவு வெங் குரல் கொண்டல் வாகனும் வலனும், ராம ராவணரும் என்னவே?
| 6 |
|
|
உரை
|
|
|
|
|
கரி அணிக்குள் எக் கரிகள் புண் படா! கடவு தேரில் எத் தேர் கலக்குறா! பரி நிரைக்குள் எப் பரி துணிப்புறா! பாகர்தம்மில் எப் பாகர் வீழ்கலார்! நரனும் வெற்றி கூர் வசுவும் உற்ற போர் நவிலுகிற்கினும், நா நடுங்குமால்; இரு தளத்தினும், இருவர் அம்பினும், ஏவுணாத பேர் எந்த மன்னரே!
| 7 |
|
|
உரை
|
|
|
|
|
விசய வீடுமர்களால் முந்திய போரினும் மிகப் பல வீரர் மாளுதல்
வேறு போர் இனிப் பொருதல் வேண்டுமோ? விசயன் வீடுமன் என்னும் வீரர்தம் சீறு போரிடை, திசை அடங்கலும் சிவந்த கோல மெய்க் கவந்தம் ஆடுமால்; கூறு போர் பொரக் கருதி, வெங் களம் கொண்டு, தங்களில் கொல்லலுற்ற நாள் ஆறு போரினும் பட்ட பேரினும் அறு மடங்கு பேர் அன்று பட்டதே. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
சூரியன் மேல் கடலில் மறைந்து, உதய கிரியில் தோன்றுதல்
பார வாளினும் கூர வேலினும் பகழி வாயினும் பட்ட பட்ட போர்- வீரர் வானின்மேல் வழி நடத்தலான், மெய் தளர்ந்து, வேதனை மிகுத்த பின், 'சேர நீரும் நும் பாடி எய்துவீர்; செருவில் நொந்தது, இச் சேனை' என்று, போய், ஆரவாரம் நீடு ஆழி எய்தினான், ஆழி ஒன்றுடைத் தேர் அருக்கனே. | 9 |
|
|
உரை
|
|
|
|
|
வெங் களம்தனில் பகல் மலைந்த போர் மெய் விடாய் கெட, கைவிடாது போய், திங்களின் குலத்து இருவர்தம் பெருஞ் சேனை மன்னரும் பாடி எய்தினார்; இங்கு அளந்தவாறு, அப் புறத்து வான் எல்லை தான் அளந்து, இந்த மன்னவர்- தங்கள் வெஞ் சமம் காண, மா மணிச் சயிலம் எய்தினான், தபனன் மீளவே.
| 10 |
|
|
உரை
|
|
|
|