தொடக்கம் |
|
|
36. எட்டாம் போர்ச் சருக்கம்
கடவுள் வாழ்த்து பூத்த நாபி அம் தாமரைப் பூவில் வந்து பல் பூதமும் சேர்த்த நான்முகப் புனிதனும், முனிவர் யாவரும், தேவரும், ஏத்த, நாலு வேதங்களும் தேட, நின்ற தாள் எம்பிரான் பார்த்தன் மா மணித் தேர் விடும் பாகன் ஆனது எப் பான்மையே! | 1 |
|
|
உரை
|
|
|
|
|
வீடுமன் சூசி வியூகமும், கண்ணன் சகட வியூகமும் வகுக்க , தருமனும் துரியோதனனும் போர்க்களத்தை அணுகுதல்
'நெருநல் இப் பெருஞ் சேனையோ நிலை தளர்ந்தது; அச் சேனையைப் பொரு நிலத்தினில் புறமிடப் பொருதும்!' என்று உறக் கருதியே, வரு நிலத்து எழும் தூளியால் வான யாறு நீர் வற்றவும், தரு நிலத்துளோர் காணவும், தருமன் வந்தனன் சமரிலே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
வென்று போன போர் மேன்மையால் விலோதனப் பணிக் காவலன், 'இன்றும் வேறும்' என்று, அக் களத்து எண் இல் சேனையோடு எய்தினான்- துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும், துளப மால் வென்றி கூர் பெருஞ் சகடமாம் வெய்ய யூகமும், செய்யவே.
| 3 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் துணைவர்களுடன் கூடி வீமனை வளைத்தல்
தொலைவு இல் அம் கழல் துணைவரே துணைவர் ஆக, வெஞ் சூறைபோல் கொலை வில் அம் கையன், பிறை முகக் கூர வாளியன், தேரினன், மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து, எதிர் திளைத்தனன்- தலை விலங்கலுக்கு அரசு எனத் தகும் வலம்புரித் தாரினான். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் தம்பிமாரில் எண்மரை வீமன் வானுலகிற்கு ஏற்றுதல்
தும்பிமேல் மதத்திடை விழும் தும்பிபோல் விறல் தோன்றலும், தம்பிமாரும், உற்று எய்த வெஞ் சாயகங்கள் மெய் தைக்கவே, வெம்பி வீமனும், தன் சரம், 'விண்தலத்தில் இவ் வேந்தனுக்கு எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க!' என்று ஏவினான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே, சுந்தரன், விசாலக்கணன், வீர வாசி, பௌதுண்டனும், அந்த மா மகோதரனுடன், மாகவிந்துவும், அபயனும், சிந்தினார் களம்தன்னில், ஆதித்தகேதுவும், சேரவே.
| 6 |
|
|
உரை
|
|
|
|
|
துரியோதனன் வீடுமனை அடுத்து, தம்பிமார் இறந்தமைக்கு இரங்கி, நெஞ்சழிய, வீடுமன் அவனைப் பல வகையால் தேற்றுதல்
அற்ற கந்தரம் உயிரினோடு அந்தரம் புகத் துள்ளவும், இற்ற பேர் உடம்பு அவனிமேல் எடுத்த வில்லுடன் வீழவும், உற்ற தம்பியர் மாய்தல் கண்டு, உள் உடைந்துபோய், உரனுடைக் கொற்றவன் பெருங் குருகுலக் குரிசில் நின்றுழிக் குறுகினான். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலிமேல் வைத்து நின்று, 'உன் பிதாவின்மேல் அன்பினால் உலகம் உம்பியர்க்கு உதவுவாய்; என் பிதாவும் நீ, யாயும் நீ' என்று இருந்தனன்; எம்பிமார் முன் பிதா மருத்து என்னும் அம் முதல்வனால் முடிவு எய்தினார்.
| 8 |
|
|
உரை
|
|
|
|
|
"நீ வினைத்தலைச் சேனையின் தலைவன் ஆகி முன் நிற்கவே, வீவு எனக்கு வேறு இல்லை" என்று எண்ணினேன்' என வேந்தர் வேந்து, ஓவியத்தின் மெய் உணர்வு அழிந்து, உள் அழிந்துகொண்டு, உரை செய்தான்- வாவி நித்திலம் என்னவே, மலர்ந்த கண்கள் நீர் மல்கவே.
| 9 |
|
|
உரை
|
|
|
|
|
'இரங்கல் நீ சிறிதும், ஐய! எறி படை எடுப்பது, யாரும் உரங்கள் போய் அமரில் சாகாது, உய்ந்தனர் ஓட அன்றே; சரங்களால், அயிலால், வாளால், தம் பகை செகுத்து, தாமும் சிரங்கள் வேறு உடல்கள் வேறாக் கிடப்பதே, செல்வம் அம்மா!
| 10 |
|
|
உரை
|
|
|
|
|
'இருந் தனம் படைத்த மாக்கள் இன்பமும் அறனும் அஞ்சார்; விருந்து எதிர் சிறிதும் அஞ்சார், மேம்பட வாழும் இல்லோர்; பொருந்திய இறப்பை அஞ்சார், போத மெய் உணர்ந்த மாந்தர்; அருந் தவம் முனிவர் அஞ்சார்; அரசரும் அடு போர் அஞ்சார். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
'இன்னம் ஒன்று உரைப்பக் கேண்மோ, இரு செவிக்கு ஏறாதேனும்: முன் அரசு ஆண்ட வேந்தர் முறைமையின் சிதைந்தது உண்டோ? மன் அவைதன்னில் நின்ற மாசு இலா வடமீன் போல்வாள்- தன் இரு கண்ணீர் இன்னம் இவைகொலோ தருவது அம்மா! | 12 |
|
|
உரை
|
|
|
|
|
'கால் வரு கவன மான் தேர்க் கன்னனும், கன்னபாக மால் வரு கலுழி வேக மா வலான் சகுனிதானும், நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும், நீயும், இந்த நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும், ஐயா! | 13 |
|
|
உரை
|
|
|
|
|
'விதுரனும் வெஞ் சொல் ஆற்றான், வில்லினை ஒடித்து நின்றான்; அதிரதன் ஆனால் அன்றி, அங்கர்கோன் அமரில் வாரான்; முதிர் படை விசயன், வீமன், மூண்டு அமர் புரியும்காலை, எதிர் இனி நானும் நீயும் அல்லது, இங்கு இலக்கு வேறு ஆர்?
| 14 |
|
|
உரை
|
|
|
|
|
'புரிந்து அறம் வளர்க்கும் நீதிப் பொய் இலா மெய்யன், அங்கே; செருந்து அவிழ் துளப மாலைத் திருநெடுமாலும் அங்கே; அருந் திறல் அமரில் பொன்றாது அங்கு இருந்தவரை இங்கும் இருந்தவர் காண்பது அல்லால், யார்கொலோ இறக்கலாதார்? | 15 |
|
|
உரை
|
|
|
|
|
'விடுக, நீ கவல வேண்டா; மேல் உனக்கு உறுதி சொன்னேன்; முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே அடுக, மற்று ஒன்றில்! ஒன்றில், ஆங்கு அவர்தங்கள் கையால் படுக! வா!' என்று தேர்மேல் சென்றனன், பரிதி போல்வான்.
| 16 |
|
|
உரை
|
|
|
|
|
கடோற்கசனும் இராவானும் பல வடிவு கொண்டு போர் செய்ய, பகனது தம்பி அலம்புசன் வீமன்மேல் வெகுண்டு பொருதல்
காய் இருங் களிற்றின் மேலான் கடோற்கசக் காளைதான் ஓர் ஆயிரம் வடிவாய், முந்தி, அரசர் பேர் அணியை எல்லாம் தோய் இருட் பிழம்போடு உற்ற சோனை அம் புயலின் தோன்றி, மா இரு விசும்பில் தாராகணம் என, மாய்த்து வந்தான். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
ஒரு புடை இவன் போர் செய்ய, ஒரு புடை, உரக கன்னி அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி, இரு புடையினும் போர் வேந்தர் எலிகள்போல் ஏங்கி, அம்பால் பொரு படை உருண்டு போக, பொரு இல் வெம் பூசல் செய்தான். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
'இப் பகல் முடியும் முன்னே யாரையும் முடிப்பன்!' என்னா, பைப் பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி, அப் பகல் அடு போர் செய்ய, அன்று, அமர் அழிந்து மாய்ந்த மெய்ப் பகன் இளவல் அந்த வீமன்மேல் வெகுண்டு வந்தான்.
| 19 |
|
|
உரை
|
|
|
|
|
அலம்புசன் இராவானுக்குத் தோற்று ஓடுதல்
'என் உடன்பிறந்தோன் தன்னை யுதிட்டிரன் இளவல் கொன்றான்; தன் உடல் பிளப்பேன்!' என்று, தானை வல் அரக்கரோடு மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து, எதிர் மலைந்த காலை, மின்னுடை முகில்போல் சென்றான், வீமனுக்கு இளையோன் மைந்தன். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
வலம்புரித் தாம வேந்துக்காகவே மலைவான் வந்த அலம்புசனோடும் சென்றோர் அடங்கலும், அரக்கர் மாயக் குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் புலம்புறப் பொருதான், அந்த அரக்கனும் புறந்தந்தானே. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
அலம்புசன் கருடனாகி மீண்டு வந்து, இராவானை வாளினால் கொல்லுதல்
அஞ்சினன் போன பின்னர், அரவினை அடர்க்கும் மாய வெஞ் சினக் கலுழன் ஆகி, உரும் என, மீள வந்தான்; நஞ்சினை உமிழும் வெவ் வாய் நாகங்கள் அனைத்தும் ஒன்றாய் எஞ்சின போல நின்றான், நிருதருக்கு இறுதி செய்தான். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
நின்றவன்தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சி, கொன்றனன்; கொன்றானாக, குருகுலத்து அரசன் சேனை, 'வென்றனன் அரக்கன்' என்று, விரி கடல் போல ஆர்த்தது;- அன்று அவன் அடர்த்த மாயம் ஆர்கொலோ அடர்க்க வல்லார்? | 23 |
|
|
உரை
|
|
|
|
|
துரோணனும் அசுவத்தாமனும் பாஞ்சாலர்மேல் அம்பு தொடுத்தல்
பூஞ் சாயகன் கைப் பொரு சாபம் பொசிந்து, கண்ணால் தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலிப் பாஞ்சால நாடர் பலரும் பட, பாணம் விட்டார்- தாம் சாபம் வாங்கி, மறை மைந்தனும் தந்தைதானும். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
இராவான் மறைவு கேட்டு, அபிமன், வீமன் முதலியோர் வெகுளி பொங்க வந்து பொருதல்
பட்டான் துணைவன் எனக் கேட்டு, பரிவு பொங்க, விட்டான் மணித் தேர், வளைத்தான் தனி வெய்ய சாபம், தொட்டான் பகழி, அபிமன்னு; தொடுத்தலோடும், கெட்டார், அரசன் பெருஞ் சேனையில் கேடு இல் வேந்தர். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
'மைந்தன் களத்தில் மடிந்தான்' என, வாயு மைந்தன் தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன, வெந்து அங்கம் முற்றும், மனம் தீ எழ, மேல் நடந்தான்- சிந்தம் திகழ எழுதும் திறல் சிங்கம் அன்னான். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
தம்பியரோடும் மன்னர்களுடனும் வந்து துரியோதனன் வீமனை வளைக்க, வீமன் அம்பால் அவன் தம்பியர் எழுவர் மாளுதலும் அவன் பின்னிடுதலும்
'சினத்தோடு நம்மேல் வருகின்றனன் செம்மல்!' என்னா, இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன, மனத்தோடு இயைந்த திருத்தம்பியரோடும், மன்னர் சனத்தோடும், வந்தான்-எதிர் சீறித் தரணி வேந்தன். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
திளைத்தார் அரசர், திகிரிக்கிரி என்ன ஓடி, வளைத்தார், கனக வரைபோல் வரு மன்னன்தன்னை; உளைத்தார் அனைவோர்களும், ஓர் ஒரு பாணம் ஏவித் துளைத்தார், கிளைத்தார், விளைத்தார், அமர் தூண்டு தேரார். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
எடுத்தான் ஒரு தன் சிலை, வீமனும்; எண் இல் பாணம் தொடுத்தான் அவர்மேல்; இமைப்போதையில் சூழ்ந்துளோரைக் கெடுத்தான்; அரசற்கு இளையோர் எதிர் கிட்டி, மீண்டும் படுத்தான், எழுவர்; இவன் வாளியின் பட்டு வீழ்ந்தார். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
அறம் மிக்க சொல் குண்டலபோசன், அனாதியக்கன், திறம் மிக்க தீர்க்கநயனன், சிலைத் திம்மவாகு, மறம் மிக்க வேல் குண்டலன், குண்டலதாரன், மன் நூல் துறை மிக்க கேள்விக் கனகத்துசன் ஆன தோன்றல் | 30 |
|
|
உரை
|
|
|
|
|
இப் பேர் எழுவர் சிரம் ஏழும் எழுந்து துள்ளி, மைப் பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை, 'ஒப்பு ஏது?' என வாசவன் கேட்டலும், 'ஓங்கல் விந்தை கைப் பேர் எழில் பைங் கழங்கு' என்றனர், கண்ட வானோர். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
'அறம் தந்த வாழ்க்கை முடிக்கின்றனை ஆகி, நீயும் இறந்து அந்தரத்தில் இனி ஏகுக!' என்று சீறி, மறம் தந்த சீயக் கொடியோன், கொடி மாசுணத்தோன் புறந்தந்த போரில் புறம் தந்தனன், போகலுற்றான். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
சூரியன் மேல்பால் மறைதல்
கந்தே அனைய புய வீமன் கணைகள் பட்டுத் தம் தேர் அழிந்து படு மன்னவன் தானை என்ன, மந்தேகர் எல்லாம் மலைவுற்று மடிந்து வீழ, செந் தேர் அருக்கன் குடபால் திசை சென்று சேர்ந்தான். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
படுகளக் காட்சிகள்
தளவு ஒத்த மூரல் தல மானை, தருமன் மைந்தன், வளம் மிக்க வெம் போர்க் களம் வென்று, வதுவை செய்வான், உளம் உற்று அளித்த கலன் போலும், உகு கலன்கள்; பிளவு உற்ற வேழ நுதல் நித்திலப் பெட்டி போலும். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
பூட்டு அற்ற வில்லின்மிசை சோரிப் புனலின் வீரர் வாட்டு அற்ற ஈரல் பல சுற்றி வயங்கு தோற்றம், வேட்டற் பொருட்டால் புவிமானுக்கு வேந்து சூட்டும் சூட்டு அற்று; முற்றும் குடர், வாசத் தொடையல் அற்றே. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
குல மா நிருபர் உடல் சோரும் குருதி வெள்ளப் பல மா நதி போய்த் திரை வேலையில் பாய்ந்த தோற்றம், நிலமான், விளிம்பு சிவப்பு ஏறிய நீல ஆடை, நலமாக, மன்றற்கு உடுத்தென்ன நவிலலாமே. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
இரு திறத்தாரும் தத்தம் பாடி வீடு அடைதல்
தன் பாடி புக்கான் புறம் தந்த தரணி வேந்தன்; மின் பாடு இலங்கும் கணை வெஞ் சிலை வீமனோடு மன் பாடி புக்கான்; பெரும் போரிடை மாய்ந்த மன்னர் தென் பாடி புக்கார்; குடிபுக்கது, சேர்ந்த கங்குல். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
'இராவான் மறைவுக்கு இரங்கலீர்!' எனக் கண்ணன் ஐவரையும் தேற்றுதல்
'அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன் இன்றே இறந்தான்; இதற்கு உன்னி, இரங்கலீர்' என்று, ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும் குன்றே கவித்த குடைக் கோவலன் கூறினானே. | 38 |
|
|
உரை
|
|
|
|
|
பரிதி குண திசையில் தோன்றுதல்
உன்னி, களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன் சென்னிக் கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் தன்னில் கவர்ந்தான் என, பண்டையின் தாம மேனி மின்னி, பரிதி குணபால் திசை மேவினானே. | 39 |
|
|
உரை
|
|
|
|