43. பதினைந்தாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

சித்து அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத்
தத்துவத்தின் முடிவு கண்ட சதுர் மறைப் புரோகிதன்,
கொத்து அவிழ்த்த சோலை மன்னு குருகை ஆதி, நெஞ்சிலே
வைத்த முத்தி நாதன் அன்றி, வான நாடர் முதல்வன் யார்?

1
உரை
   


இரு பக்கத்தாரும் சினந்து களம் குறுகுதல்

எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக, ஏழு மாத்
தொடுத்த தேர் அருக்கர் சோதி தொழுது, தங்கள் தொழில் கழித்து,
எடுத்த கோபம் மூள நின்று, இரண்டு சேனை அரசரும்
கடுத்து உளம் கறுத்து, வெய்ய கண் சிவந்து, கடுகினார்.

2
உரை
   


நாலு சாப நிலையும் வல்ல நரனும், வீமன், நகுலனும்,
நாலு பாகம் ஆன சேனை நாதனும், சிரங்களா,
நாலு கூறு செய்து, தானும் நரனும் முந்த நடவினான்-
நாலு வேத முடிவினுக்கும் ஆதியான நாரணன்.

3
உரை
   


விசயன் கணைகளால் வாலவீமனும்
சோமதத்தனும் மாளுதல்

வாலவீமன் என்று பார் மதித்த ஆண்மை மன்னனும்,
சூலபாசபாணிதன்னொடு ஒத்த சோமதத்தனும்,
ஆலகாலம் என உருத்து அடர்த்த போரில் முந்துறக்
காலன் ஊரில் ஏகினார், கிரீடி ஏவு கணைகளால்.

4
உரை
   

'என் முன், என் முன்!' என்று மன்னர் யாரும் யாரும் இகலவே,
முன் முன் நின்று, யாவரோடும் மூரி வில் வணக்கினான்-
வில் முன் எண்ண வில்லும் இல்லை, வெஞ் சமத்து மற்று இவன்-
தன்முன் எண்ண வீரர் இல்லை, என வரும் தனஞ்சயன்.
5
உரை
   


துரோணனும் குந்திபோசனும் பொருதல்

ஈர்-இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள்
ஈர்-இரண்டும் வேறு வேறு பட்டு வென்னிடப் புடைத்து,
ஈர்-இரண்டு ஒர் தொடையில் வாளி ஏவி ஏவி இகல் செய்தான்-
ஈர்-இரண்ஐ-இரண்டும் ஆன விஞ்சை எய்தினான்..

6
உரை
   


புந்தி கூர் துரோணனுக்கு யாவரும் புறந்தர,
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு
உந்தி, மீள முடுகி, அந்த முனிவனோடு உடன்ற போது,
அந்தி வானம் ஒத்தது அம்ம, அமர் புரிந்த ஆகவம்.

7
உரை
   


மத்திரன் முதலியோரும் இருவர் இருவராய்ப் பொருதல்

குருவொடு உற்று அடர்ந்து குந்திபோசன் வில் குனிக்கவே,
வரு சமத்து மத்திரன் தன் மருகனோடு முடுகினான்,
முரண் மிகுத்த கோப அங்கி மூள வந்த மாளவன்
கரு நிறத்து அனந்தசாயி இளவலோடு கடுகினான்.

8
உரை
   

முனிவன் மைந்தன் இந்திரன்தன் மைந்தனோடு முடுகினான்;
தினகரன்தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான்;
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான்-
இனி அகண்டமும் சிதைக்கும் இறுதி காலம் என்னவே.
9
உரை
   

எந்த எந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார்
அந்த அந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ?
முந்த முந்த வென்று வென்று மோகரித்த தெவ்வர்தாம்
வந்த வந்த வழி மடங்க நின்றது, அவ் வரூதினி.
10
உரை
   


தருமன் தானை முனிவனுக்கு உடைந்து போதல்

தேயு வாளி, வருணன் வாளி, தேவர் வாளி, திண்மை கூர்
வாயு வாளி, முதல் அனைத்து வாளியாலும் மலைதலால்,
ஆயு நூல் முனிக்கு உடைந்தது-அன்பு மிக்க தந்தையும்
தாயும் ஆகி மண் புரந்த தருமன் விட்ட தானையே.

11
உரை
   


மரீசி, அகத்தியன் முதலிய பல முனிவர் வந்து,
துரோணனுக்கு உபதேசம் செய்து மீளுதல்

குருவும், அக் குருகுலேசன் கொற்ற வெஞ் சேனைதானும்,
பொரு களம் கொண்டு வாகை புனைந்து, அவண் நின்ற போதில்,
ஒருவரை ஒருவர் ஒவ்வா உம்பர் மா முனிவர் யாரும்
துருவனும் உவமை சாலாத் துரோணனை வந்து சூழ்ந்தார்.

12
உரை
   


மகத்து இயல் மரீசி ஆதி எழுவரும், மலயச் சாரல்
அகத்தியன் முதலா உள்ள அனைவரும், வருதல் கண்டு,
செகத்தினில் நிறைந்த கேள்விச் சிலை முனி, எதிர் சென்று ஏத்தி,
முகத்தினால் இறைஞ்சி நிற்ப, மொழிந்தனர், மொழிகள் வல்லார்.

13
உரை
   


'மறை கெழு நூலும், தேசும், மாசு இலாத் தவமும், ஞானம்
முறை வரும் உணர்வும், அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ?
துறை கெழு கலைகள் வல்லாய்! துன்னலர்ச் செகுக்கும் போரும்,
நிறைதரு வலியும், வாழ்வும், நிருபர்தம் இயற்கை அன்றோ?

14
உரை
   

'தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று
படுக!' என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார்.
15
உரை
   


முனிவர்களின் உபதேசத்தால் துரோணன்
சாந்தத்தை மேற்கொண்டு நிற்றல்

ஆன போது, ஆசான் நெஞ்சில் அரு மறை அந்தத்து உள்ள
ஞானமும் பிறந்து, போரில் ஆசையும் நடத்தல் இன்றி,
தூ நலம் திகழும் சோதிச் சோமியம் அடைந்து நின்றான்-
யானமும் விமானம் அல்லால், இரதமேல் விருப்பு இலாதான்.

16
உரை
   


கண்ணன் துரோணன் மாளுதற்குக் காலம் வந்தது
என்று கருதி, தருமனிடம் அவனை மாய்த்தற்கு
உபாயம் உரைத்தல்

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர்
ஓடையாம் என்ன நின்றோன் முன்னரே உரைத்த வார்த்தை,
'மாடையால் இந்த்ர நீல மணி வரை வளைத்தாலன்ன
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது' என்று கொண்டான்.

17
உரை
   


கடல் வடிம்பு அலம்ப நின்ற கைதவன்தன்னோடு ஓதி,
சுடு கனல் அளித்த திட்டத்துய்மனை அவன்மேல் ஏவி,
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும்
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளிச் செய்வான்:

18
உரை
   

'மந்தரம் அனைய பொன்-தோள் மாருதி மாளவக் கோன்
இந்திரவன்மாமேல் சென்று எரி கணை தொடுத்த போரில்,
அந்தரம் அடைந்தது ஐய! அச்சுவத்தாமா என்னும்
சிந்துரம்; அதனை வென்றித் திசைக் களிறு ஒப்பது அன்றே:
19
உரை
   

'மதலை பேர் எடுத்துப் போரில் மடிந்தவாறு உரைத்த போதே,
விதலையன் ஆகி, பின்னை வில் எடான், வீதல் திண்ணம்;
முதல் அமர்தன்னில் அந்த முனிவரன் மொழிந்த மாற்றம்
நுதலுதி; நீயே சென்று நுவலுதி, விரைவின்!' என்றான்.
20
உரை
   


'பொய்யுரையேன்' என்று தருமன் மறுக்க,
கண்ணன் ஏதுக்காட்டி வற்புறுத்தல்

வையினால் விளங்கும் நேமி வலம்புரி வயங்கு செம் பொன்
கையினான், அந்தணாளன் கையறல் புகன்ற காலை,
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு,
'பொய்யினால் ஆள்வது இந்தப் புவிகொலோ?' என்று நக்கான்.

21
உரை
   


'அண்ணிய கிளையும், இல்லும், அரும் பெறல் மகவும், அன்பும்,
திண்ணிய அறிவும், சீரும், செல்வமும், திறலும், தேசும்,
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும், ஏனைப்
புண்ணியம் அனைத்தும் சேர, பொய்மையால் பொன்றும் அன்றே.'

22
உரை
   


என்று கொண்டு, இனம் கொள் கோவின் இடர் கெட எழிலி ஏழும்
குன்று கொண்டு அடர்த்த மாயன் கூறவும், மறுத்துக் கூற,
கன்று கொண்டு எறிந்து, வெள்ளில் கனி நனி உதிர்த்து, வஞ்சம்
வென்று கொண்டவனும், மீள விளம்புவன் என்ப மாதோ:

23
உரை
   


'உம்மையில் மறுமைதன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ!

24
உரை
   

'வல்லவர் அனந்த கோடி மறைகளின்படியே ஆய்ந்து,
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடைத் தொக்க ஆற்றால்,
புல்லிய பொய் ஒன்று என் ஆம்? பொரு பெரு நெருப்புக்கு ஈரம்
இல்லை; நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி, இதனை!' என்றான்.
25
உரை
   


தருமன் துரோணனை அடுத்து, 'அச்சுவத்தாமா என்னும்
வாணத்துக்கு வீமன் சிங்கமானான்' என்று உரைக்க,
முனிவன் படைக்கலத்தை விடுத்து நிற்றல்

போர் அற மலைந்து வென்று, போதத்தால் பவங்கள் ஏழும்
வேர் அற வெல்ல நிற்பான், வீடு உற நின்ற எல்லை,
வார் அற வய மா ஓட்டி, வயங்கு தேர் கடவிச் சென்று,
பேர் அறன் மைந்தன், நாவின் பிழை அறப் பேசுவானே:

26
உரை
   


'அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு, ஐயோ! மாருதி சிங்கம் ஆனான்;
எத்தனை கோடி சேனை இக் களத்து இறந்தது! அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது!' என்றான்.

27
உரை
   


தீது இலான் உரைத்த மாற்றம் செவிப் படும் அளவில், நெஞ்சில்
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெங் கணையும் வீழ்த்தி,
'போது இலான், இறந்தான் போலும், புதல்வன்!' என்று
                                இனைதல் இன்றி,
ஏதிலான் போல நின்றான், யார்கணும் பந்தம் இல்லான்.

28
உரை
   


திட்டத்துய்மன் எய்த வாளியால் துரோணன் படுதல்

முள் இயல் நாளக் கோயில் முனி நடுத் தலையை முன்னம்
கிள்ளிய பினாக பாணி, கிரீசனொடு ஒத்த வீரன்,
துள்ளிய பரித் தேர்த் திட்டத்துய்மனது அம்பு சென்று,
தள்ளியது அப்போது, அந்தத் தவ முனி தலையை அந்தோ!.

29
உரை
   


துரியோதனன் சேனை பின்னிட, அசுவத்தாமன் சென்று,
இறந்த தந்தையைக் கண்டு வருந்துதல்

பட்டனன் வாசபதி நிகர் சேனாபதி என்ன,
கெட்டது, நாககேதனன் வீரம் கிளர் சேனை;
தொட்ட வில் ஆண்மைத் துரகததாமா எதிர் ஓடி,
கட்டு அழல் வேள்வித் தாதை இறந்த களம் கண்டான்.

30
உரை
   


கண்டான், வீழ்ந்தான்; அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி, கண் பொழி நீரில் குளித்திட்டான்;
வண் தார் சோர, மண் உடல் கூர, வல் நஞ்சம்
உண்டார் போல, எண்ணம் அழிந்தான், உளம் நொந்தான்.

31
உரை
   


'வன்பின் மிக்க வீடுமன் உன்னை, 'மன் ஆகு!' என்று,
அன்பின் இப் பார் அளவும், அன்றே அருள்செய்தான்;
முன் பின் எண்ண உவமை இலாதாய்! முடிவாயோ!
உன் பின் வந்தேன், உன்னை ஒழிந்தும், உய்வேனோ!

32
உரை
   


'வில்லாய் நீ; வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ;
சொல்லாய் நீ; தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ;
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே!
எல்லாம் இன்றே பொன்றின, உன்னோடு; எந்தாயே!

33
உரை
   


'கற் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த
                            மொழிப்படியே, கருதார் போரில்,
முன் கொண்ட விரதம் மறந்து, யாரும் கேட்ப, முரசு உயர்த்தோன்
                            பொய் சொன்னான்; முடிவில், அந்தச்
சொற் கொண்டு, வெறுங் கையன் ஆம் அளவில், திட்டத்துய்மன்
                            என நின்ற குருத் துரோகி கொன்றான்;
விற் கொண்டு பொர நினைந்தால், இவனே அல்ல; விண்ணவர்க்கும்
                            எந்தைதனை வெல்லல் ஆமோ?'

34
உரை
   


துரியோதனன் தேற்ற, அசுவத்தாமன் தேறி,
'யாவரையும் வெல்வேன்!' என வில் வளைத்தல்

இப் புதல்வன் திருத் தாதை பாடு நோக்கி இவ் வகையே இரங்குதலும்,
                          இராசராசன்
அப் புதல்வன்தன்னை எடுத்து ஆற்றித் தேற்றி, அம்புயக் கண்
                          அருவி துடைத்து, அளி செய் காலை,
'எப் புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி
                          துணித்து, யாகசேனன்
மெய்ப் புதல்வன்தனையும் அற மலைவன்' என்னா, வில்
                          வளைத்தான், சொல் வளையா வேத நாவான்.

35
உரை
   


கண்ணன் படைக்கலமும் வாகனமும் இன்றியிருக்குமாறு
பணிக்க, வீமனை ஒழிந்தோர் அங்ஙனமே
தரையில் நிற்றல்

பாகசாதனன் மதலை தெய்வப் பாகன், பாகு அடரும் நெடும் பனைக்
                                கைப் பகட்டின் மேலான்,
மேக மேனியன், விரைவில், தங்கள் சேனை வேந்தையெல்லாம் சென்று
                                எய்தி, 'வில் வாள் வேலும்
வாகனாதியும் அகற்றி, நின்மின்!' என்ன, மாருதி மைந்தனை ஒழிந்தோர்
                                மண்ணின் மீது,
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரைப்போல் நிராயுதராய்
                                ஒடுங்கி, நின்றார்.

36
உரை
   

அசுவத்தாமன் நாராயணன் வாளி தொடுத்தலும்,
அதை வீரர்கள் வணங்க, அது வீமனைச் சென்று சேர்தல்


மாற்று அரிய மறையொடு நாராயணன்தன் வாளி தொடுத்தலும், அந்த
                              வாளி ஊழிக்
காற்று எரியோடு எழுந்தது என, கார்கோள் மொண்டு கார் ஏழும்
                              அதிர்ந்தது என, கனன்று பொங்கி,
ஏற்று அரிபோல் குழாம் கொண்ட வயவர்தம்மை எய்திய போது,
                              அனைவரும் தம் இதயம் ஒன்றிச்
சாற்று அரிய உணர்வினராய், ஏத்தி ஏத்தி, தாள் தோய் செங் கர
                              முகுளம் தலை வைத்தாரே.

37
உரை
   


பார் உருவி, திசை உருவி, அண்டகூடம் பாதலத்தினுடன் உருவி,
                              பரந்து சீறி
ஓர் ஒருவர் உடலின்மிசை மயிர்க்கால்தோறும் ஓர்ஒரு வெங்
                              கணையாய் வந்து உற்ற காலை,
நேர் ஒருவர் மலையாமல், தருமன் சேனை நிருபர் எலாம் நிராயுதராய்
                              நிற்றல் கண்டு,
போர் உருவ முனிமைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள்
                              மாருதிமேல் போனதாலோ.

38
உரை
   


வீமன் எதிர் வந்த படைகளை வெவ்வேறு
படைகளால் மாற்றுதல்

காற்றின் மதலையும், தனது தடந் தேர் உந்தி, கண் சிவந்து, மனம்
                                கருகி, கால் வில் வாங்கி,
கூற்றம் என எதிர் சென்று, முனிவன் மைந்தன் கொடுங் கணையை
                                மதியாமல், கடுங்கணாளன்
வேற்று உருவம் கொடு கனலி முதலா உள்ள விண்ணவர்தம் பகழிகளாய்
                                மேன்மேல் வந்த
மாற்று அரிய பகழிகளை ஒன்றுக்கு ஒன்று மாறான பகழிகளால்,
                                மாற்றினானே.

39
உரை
   


மூச்சினால் அடியுண்டும், கடுங் கண் கோப முது கனலால் எரியுண்டும்
                                  முனை கொள் வாளி
ஓச்சினால் ஒடியுண்டும், குனித்த விற் கால் உதையினால்
                                  உதையுண்டும்,நெடு நாண் ஓசை
வீச்சினால் அறையுண்டும், கடக வாகு வெற்பினால் இடியுண்டும்,
                                  வெகுளி கூரும் பேச்சினால்
வெருவுண்டும், படாதது உண்டோ, பேர் அனிலன் மகனால்,
                                  அப் பெருமான் வாளி?

40
உரை
   


கண்ணன் வீமன் கை வில்லும், வாகனமும் மாற்ற,
நாராயணன் வாளி நாணியது

தாள் வலியால் எனைப் பல பல் வினை செய்தாலும், தப்ப ஒணா விதி
                            போலத் தடந் தோள் வீமன்
தோள் வலியால் விலக்கவும், அத் தொடை போய், வாசத் தொடை மிடை
                            மார்பகம் அணுகு, சுராரி தோள்கள்
வாள் வலியால் அரிந்த பிரான், கையில் வில்லும் வாளியும் வாகனமும்
                            உடன் மாற்றுவித்தான்;
நாள் வலியார்தமைச் சிலரால் கொல்லல் ஆமோ? நாரணன் சாயகம்
                            மிகவும் நாணிற்று அன்றே!

41
உரை
   


அசுவத்தாமன் பாசுபதம் விட நினைக்க,
வியாத முனி அவனிடத்திற்கு வருதல்

விட்ட வெம் பகழி நாணி மீளுதலும் வில்லின் வேதம்
                                உணர் முனிமகன்
வட்ட வெஞ் சிலையின்மீது பாசுபத வாளி வைப்பது மனம் செயா,
முட்ட வன்பினொடு நின்ற காலையில், வியாதன் என்று உரை
                                கொள் முனிவரன்,
தொட்ட தண்டும் மிதியடியும் ஆகி, உயர் சுருதி வாய்மையொடு
                                தோன்றினான்.

42
உரை
   


முனிவன் அசுவத்தாமனுக்கு அறிவுரை பகர்ந்து
செல்லுதலும், சூரியன் மறைதலும்

நின்ற சாப முனி மைந்தன், வந்த முனி நிருபனைப் பரமன் நிகர் எனச்
                                சென்று கைதொழுது, பரசிட,
பரிவு தீர் கருத்தினொடு செப்பினான்-
'அன்று, போரில் அழி யாகசேனன் மகன் அழலினூடு வரு சாபமும்,
வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே.

43
உரை
   


'வரத்தினால் உனது தந்தை போரினில் மடிந்தது அன்றி, ஒரு
                                வயவர் தம்
சரத்தினால் அவனை வெல்ல வல்லவர் தராதலத்தின்மிசை
                                இல்லையால்;
உரத்தினால் விறல் மயூரவாகனனை ஒத்த வீர! இனி உள் உறச்
சிரத்தினால் அரனை அடி வணங்கி, இடர் தீருமாறு நனி சிந்தியாய்!

44
உரை
   


'ஒன்ற ஐம் புலனை வென்று நீடு தவம் உரிமையின் புரிதி, உற்பவம்
பொன்ற' என்று உறுதி கூறி, அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும்,
'மன்ற என்றும் இவர் செற்றதின் சத மடங்கு செற்றனர்கள்
                                இன்று' எனா,
நின்ற என்றும், வெளி நிற்றல் அஞ்சி, நெடு நீல வேலையில்
                                மறைந்ததே.

45
உரை
   


தருமனும் துரியோதனனும் தத்தம்
படைகளுடன் பாசறை அடைதல்

'இருள் பரந்தது, இனி; அமையும் இற்றை அமர்' என்று, துன்று கழல்
                                இட்ட தாள்
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை
                                அடைந்தபின்,
உருள் பரந்த ரத துரக குஞ்சர பதாதியோடு கடிது ஓடினான்,
மருள் பரந்த தனி நெஞ்சன் ஆகி அடல் மன்னர் மன்னன்
                                எனும் மன்னனே.

46
உரை
   

துரியோதனன் சஞ்சயனை அழைத்து, துரோணன்
மறைவையும், கன்னன் சேனாதிபதி ஆதலையும்
தந்தைக்கு உரைத்து வருமாறு அனுப்புதல்


தனது பாசறையில் ஆன அக் குரிசில், சஞ்சயன்தனை அழைத்து, 'நீ
நினது காதல் உயிர் அனைய எந்தைதனை நிசிதனில் கடிதின் எய்தியே,
புனை துழாய்மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை
                                பொய்த்ததும்,
எனது வாழ்வு, வலி, வென்றி, தேசு, உறுதி, யாவும் ஆம் முனி இறந்ததும்,

47
உரை
   


'தனஞ்சயன் தலை துணிக்க நின்ற வரி சாப கோப முதிர் சாயகத்
தினம் செய் நாதன் அருள் செல்வ மா மதலை சேனை நாதன்
                                இனி ஆவதும்,
இனம் செய் வண்டு முரல் தாம மார்பனொடு இயம்பி, மேல்
                                நிகழ்வ யாவையும்
மனம் செய்து, இவ் இரவு புலரும் முன், கடிதின் வருக!'
                                என்றனன், வணங்கியே.

48
உரை
   


சஞ்சயன் திருதராட்டிரனுக்கு உரைத்து, துரியோதனனிடம்
மீளுதலும், சூரியன் உதித்தலும்

அந்த அந்தணனும் அந்தனோடு இவை அனைத்தும் ஓதிய
                                பின், அந்தனும்
சிந்தை நொந்து அழுது இரங்கி, 'யாவும் வினை செய்து
                                இரங்குவது தீது' எனா
மந்தணம் பெருக, எண்ணி மீள விட, வந்து நள்
                                இருளில் மைந்தனுக்கு,
'உந்தை தந்த உரை இது' எனப் புரை இல் உரை புரோகிதனும்
                                ஓதினான்.

49
உரை
   


புதல்வன் ஆன திறல் அங்கர் பூபன் இருள் புலரும் முன் பொரு
                                படைக்கு மா
முதல்வன் ஆம் என மகிழ்ந்து, வாள் இரவி முந்து தேர்
                                கடவி உந்தினான்-
'அதலம் ஆதி உலகு ஏழும் ஆளுடைய அரவின் மா மணி
                                அனைத்தும் வந்து,
உதய மால் வரையின் உச்சி உற்றதுகொல்!' என்ன மேதினி
                                உரைக்கவே.

50
உரை