பக்கம் எண் :

50பாரதம்ஆதி பருவம்

றும் குறிப்பொடு - கலக்கமுற்ற எண்ணத்தோடு, நோக்கி - பார்த்து,
(சந்தனுமன்னவன்), கரிந்த பாதவம்போல் - தீய்ந்த மரம்போல, நின்ற -
வாடிநின்ற, அ பொழுதில்-, -கால் பொர குனித்த கார் முகம்உம் - (இரண்டு)
முனையும் பொருந்த வளைத்தவில்லும், தெரிந்து - ஆராய்ந்து எடுத்து,
மென்மேலும்-, தொடுத்த - பிரயோகித்த,சாயகம்உம் - அம்பும், சிலம்பு என
திரண்ட தோள் இணைஉம் - மலைபோலத்திரண்டுள்ள தோள்கள் இரண்டும்,
விரிந்த - பரந்த, நூல் மார்புஉம் - பூணூலைப்பூண்ட மார்பும், ஆகி -
உடையவனாகி, விழி களித்திட - (தன்) கண்கள் களிப்ப, ஒருவீரன்-, முன்
நடந்தான் - எதிரே வந்தான்; (எ -று.)

     சந்தனு மனக்கலக்கத்தோடு அந்தக்கங்கைப்பெருக்கைப் பார்த்துக் கொண்டு
வாட்டமுற்று நின்ற சமயத்தில், அங்கு ஒரு வீரன் அவ்வரசன் கண்களிக்கும்படி
எதிரேவந்தன னென்க. பகீரதி = பாகீரதி: பகீரதனாற் பூமியிற் கொணரப்பட்டவள்.
கார்முகம் - போர்த் தொழிலிற் சிறப்பது. பகீரதிநோக்கிப் பெருந்தகை
பெருந்திகைப்பெய்தி என்றும் பாடம்.                            (90)

83.- வந்த வீரனைக் கண்டு தன் புத்திரனென்று அறியாமல் அரசன்
கொண்டாடுதல்.

வியந்திடவருமக்குரிசிலையிவனே விடையவன் குமரனென்ற
                                          யிர்க்கும்,
வயந்தனினுலவுமதன்கொலோவென்னும் வாசவன்மதலை
                                    யென்றெண்ணும்,
உயர்ந்தவரிவனின்வின்மையினில்லை  யொருவரு
                                முலகின்மேலென்னும்,
பயந்ததன்வடிவின்படியெனத்திகழும்பான் மையைநினைந்திலன்
                                        பயந்தோன்.

     (இ - ள்.) பயந்தோன்- (அந்தக் குமாரனைப்) பெற்ற மன்னவன், பயந்த -
பெற்ற, தன் - தன்னுடைய, வடிவின்படி என - வடிவத்தின் மாதிரிவடிவம் என்று,
திகழும் - விளங்குகின்ற, பான்மையை - தன்மையை, நினைந்திலன் -
நினையாதவனாகி, - வியந்திட - கொண்டாடும்படி, வரும் - வருகின்ற, அ
குரிசிலை -அந்த வீரனைப்பற்றி, 'இவன்-, விடையவன் குமரன் ஏ -
விருஷபத்தைவாகனமாகவுடைய சிவபெருமானுடைய குமரன் தானோ?' என்று-,
அயிர்க்கும் -சந்தேகிப்பான்: 'வயந்தனின் - வசந்த காலத்திலே, உலவும் -
சஞ்சரிக்கின்ற, மதன்கொல்ஓ - மன்மதனோ? என்னும் - என்பான்: வாசவன்
மதலை (கொல்) என்றுஎண்ணும் - 'இந்திரகுமாரன்தானோ?' என்று எண்ணுவான்:
'வின்மையின் - வில்தொழிலில், இவனின் உயர்ந்தவர் - இவனைக்காட்டிலும்
மேம்பட்டவர், உலகின்மேல் - இவ்வுலகில், ஒருவரும்-, இல்லை-,' என்னும் -
என்பான்; (எ - று.)

     குமரன் = குமாரன்; மன்மதனையும் குற்சிதனாக [இழிந்தவனாக] (த்
தன்வடிவழகினாற்) செய்பவனென்பது, உறுப்புப்பொருள்: இவ்வடசொல் - முதலில்
முருகக்கடவுளுக்குஆகி, பிறகு அவன் போல் அழகுஆற்றல்களையுடையபுத்
திரனைக்காட்டும். வயந்தன் = வஸந்தன். வயந்தம் - சித்திரை
வைகாசிமாதங்கள். வயந்தனின் உலவுமதன்கொலோஎன்பதற்கு - தென்றலாகிய
தேரிலே யுலாவுகின்ற மன்மதனோ? என்ற பொருள்கொள்ளினுமாம்; இவ்