பக்கம் எண் :

52பாரதம்ஆதி பருவம்

அந்த வெம் சிலை வினோதன்உம் - அந்தவெவ்விய சிலையைக் கொண்டு
விளையாடுபவனாகிய புத்திரனும், தான்உம்-,- ஓ தம் வெள்திரையின் மதியுடன்
உதித்தஒள் மலர் கொடி என - பெருக்கைக் கொண்ட வெண்ணிறமுள்ள
அலைகளையுடையபாற்கடலினின்று சந்திரனுடனேயுதித்த அழகிய மலரைக்
கொண்ட கொடிபோன்றஇலக்குமிபோல், ஓடி - விரைந்துவந்து, தூதுளைகனி
வாய் மலர்ந்து -தூதுளங்கனியையொத்த [செந்நிறமான] வாயைத் திறந்து, இனிது
அழைத்து  -இனிமையாகக் கூப்பிட்டு, (அந்தச்சந்தனுவை), சூடகம் செம் கையால்
- சூடகமென்றவளையலை யணிந்த (தன்னுடைய) அழகிய கைகளால்,
எடுத்தாள்-; (எ -று.)

     ஓதவெண்டிரை - பாற்கடலுக்கு அன்மொழித்தொகைப் பன்மொழித்தொடர்:
ஒண்மலர்க்கொடி யென்பதும்அவ்வாறே. வெண்ணிறமுள்ள கங்கைநீர்
வெள்ளத்தினின்றுகலைகள்நிரம்பிய புத்திரனுடனே கங்கையாள் வந்தது -
பாற்கடலினின்றுபதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனுடனே இலக்குமி
வெளிவந்ததுபோலுமென விரித்துப் பொருள் காணலாம். "நிதிநேவலக்ஷ்மீ:" என்று
பாலபாரதத்திலிருப்பதற்குஏற்ப, 'நிதியுடனுதித்த வொண்மலர்க்கொடி' எனப்
பாடமிருப்பினுமாம். இனி,சிலைவினோதனும் தானும் எடுத்தாள் - பால் விரவிச்
சிறப்பினால் ஒருமுடிபைப்பெற்றது.                                (93)

86.- கங்கையாள் மன்னவனைத் தழுவிப் புத்திரனைக்
    கொடுத்திட்டுப் பின்வருமாறு கூறலுறுதல்.

வாடியதருவின்மழைபொழிவதுபோன் மடவரல்கருணைநீர்
                                         பொழியக்,
கூடியவுணர்வோடெழுந்தகாவலனைக் கொங்கைமார் புறத்தழீ
                                      இக்கொண்டு,
நாடியகருமம்வாய்த்ததென்றுவகை நலம்பெறத்தந்தை
                                  பைங்கழற்கால்,
சூடியமகவைக்கைக்கொடுத்தவளுந் தோன்றலோடிவையிவை
                                      சொன்னாள்.

     (இ-ள்.) வாடிய தருவில் - (வெயிலின் வெப்பத்தினால்) வாட்ட
மடைந்தமரத்தினிடத்து, மழைபொழிவதுபோல்-, (மூர்ச்சித்துக் கிடக்கும்
மன்னவன்மீது),மடவரல் - கங்காதேவியாகிய பெண், கருணை நீர் பொழிய -
(தான்)கருணைநீரைச்சொரிய, கூடிய - மீண்டு வந்து சேரப்பெற்ற. உணர்வோடு -
உணர்ச்சியுடனே, எழுந்த-, காவலனை - அந்தச்சந்தனுமன்னவனை, கொங்கை
மார்புறதழீஇக் கொண்டு - ஸ்தநங்களோடுகூடிய மார்பிலே கட்டி யணைத்துக்
கொண்டு, 'நாடிய கருமம் வாய்த்தது - (நாம்) கருதிய காரியம் சித்தித்தது,'
என்று-, உவகை -மகிழ்ச்சியோடு, நலம்பெற - அழகு பொருந்த, தந்தை பைங்
கழல் கால் சூடிய மகவை- தந்தையின் பசும்பொன்னாலியன்ற
வீரக்கழலையணிந்த பாதங்களைச்சூடியஅந்தவீரனாகிய புத்திரனை, கைக்கொடுத்து
- (தந்தையின்) கையிலே ஒப்பித்துவிட்டு,அவள்உம் - அந்தக் கங்கையாளும்,
தோன்றலோடு - ஆண்களிற்சிறந்தோனாகியசந்தனுமகாராசாவினிடத்தில், இவை
இவை - இவ்விவ்வார்த்தைகளை, சொன்னாள்-:(எ-று.)- இவை யிவைஎன்று
சுட்டியவற்றை, மேலிரண்டுகவிகளிற் காண்க. காவலனைஎன்றவிடத்துக் காதலனை
என்றும் பாடம்.