பக்கம் எண் :

74பாரதம்ஆதி பருவம்

சோனைமாமதஞ் சோருங்கடதட
யானையென்ன விளவலொடேகினான்.

     (இ-ள்.) (காசிராசன்கன்னியர் மனத்துச் சங்கைகொண்டு மாலை சூட்டப்
பின்வாங்குகையில்), ஏனை வேந்தர் எதிர் - மற்றை யரசரெதிரில்தானே,
இவரை -இந்தக்கன்னிமார்மூவரையும், பெருந்தானை சூழ் - பெருஞ் சேனையாற்
சூழப்பெற்ற,மணி சந்தனத்து ஏற்றி - அழகிய தேரின்மீது ஏற்றிக்கொண்டு,-
சோனை மா மதம்சோரும்-  விடாப்பெருமழைபோல மிக்கமதம் பெருகப்பெற்ற,
கடதடம் - மதம்பெருகும் கபோலத்தையுடைய, யானை என்ன - யானை போல,
(வெகுவிரைவாக), இளவலொடு - தம்பியுடனே, ஏகினான்-;

125.- மன்னவர்திரண்டுபொர, கணையால் வீடுமன்
அவர்களை ஓட்டுதல்.

முறையினாலன்றி மொய்ம்பிற்கவர்வதெக்
குறையினாலெனக் கோக்குலங்கூடிவந்து
இறைவனோடெதி ரெற்றவவ்வீரரைப்
பிறைமுகக்கணையாற் பிளந்தோட்டினான்.

     (இ-ள்.) 'முறையினால்அன்றி, - முறைமையினாலல்லாமல், மொய்ம்பின் -
வலிமையினால், கவர்வது - பறித்துக்கொண்டுசெல்வது, எ குறைவினால் -
(நம்மிடத்துள்ள) எந்தக்குறைவினால்?' என - என்று சொல்லிக்கொண்டு,
கோகுலம் -அரசரின்திரள், கூடிவந்து - ஒன்று சேர்ந்துவந்து, இறைவனோடு -
வீடுமனோடு, எதிர்எற்ற - எதிராகப் பொராநிற்க,- (அப்போதுவீடுமன்),- அ
வீரரை- (தன்னை யெதிர்த்த)வீரரான அம் மன்னவர்களை, பிறைமுகம்
கணையால் - அர்த்தசந்திரபாணங்களால்,பிளந்து - காயப்படுத்தி, ஓட்டினான்-
ஓடச்செய்தான்; (எ -று.)

     நாம் வலிமையாற் குறைவற்றவராக இருக்கையில் நம்முன் இக்கன்னியரைக்
கவர்ந்துசெல்வது தக்கதன்று என்ற கருத்தினால் 'மொய்ம்பிற்கவர்வ
தெக்குறையினால்' என்றனர். 'ஏற்றவவ்வீரரை, ஏற்றவில்வீரரை' என்றும் பாடம். (133)

126.- வீடுமன் வெற்றிபெற்றுக் கன்னிமாரைக் உடன் கொண்டு தன் நகர் சார்தல்.

முந்துறப்பெறு மூவரொடாடமர்
விந்தைதன்னையும் வேந்தர்கொடுத்தலால்
சந்தனுப்பெயர்த் தார்முடிமன்னவன்
மைந்தர்தங்கள் வளநகர்மன்னினார்
.

     (இ-ள்.) முந்துற பெறும் - முன்னமே பெற்ற, மூவரொடு -
(அந்தக்கன்னிமார்).மூவருடனே, ஆடு அமர் விந்தைதன்னைஉம் - (பகையைக்)
கொல்லுதலையுடையபோர்க்குஉரியவீரலட்சுமியையும், வேந்தர் - (எதிர்த்த)
மன்னவர், கொடுத்தலால்-, -சந்தனு பெயர் தார் முடி மன்னவன் மைந்தர் -
சந்தனு வென்ற பெயரொடுமாலையையும் கிரீடத்தையும் அணிந்தவனான
மன்னவனுடைய புதல்வராகிய