பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்87

தென்புலத்தவர் யாவர்உம் களி கூர - தென்திசையிலுள்ளவரான
பிதிருதேவதைகள்எல்லாரும் மகிழ்ச்சிமிக, சிறந்த நான்மறை விதியினால் -
சிறப்புற்ற வேதவிதிப்படி,உலகு இயல் - உலகில் நிகழும் இயல்பின்படியே,
செய்தபின்-,- செழுந்திங்கள்மறைந்த யாமினி நிகர் என - விளங்குந்
தன்மையுள்ள சந்திரன் மறையப் பெற்ற இரவுஒப்பு என்னுமாறு, குரு குலம் மன்-
குருகுலத்தலைவனான வீடுமன், மயக்குஉறும்எல்லை - சோகமயக்கத்தை
அடையும்போது,- அறம்தவா வகை - (பிதாவின்விருப்பத்தை
நிறைவேற்றுதலென்ற) தருமம் தவறாதவாறு, துறந்த -(மண்பெண்ணாசைகளைத்)
துறந்தவனான, வாள் - ஒளிபொருந்திய, அரசனுக்கு -வீடுமராசனுக்கு, அன்னை -
சந்தனுவின் மனைவியான காளி. மற்று-பின்பு, இது-இவ்வார்த்தைகளை,
சொன்னாள்-; (எ -று.)- அன்னை சொல்லியதை, மேலிருகவிகளிற் காண்க.

     உரிய - பெயர்: பெயரெச்சமெனக்கொண்டு, உலகியல் - சடங்கு என்றுமாம்.
விசித்திரவீரியனிறந்த துயரினால் மயங்கும் வீடுமனுக்கு, சந்திரன் நீங்கியதனாலான
இருளினால் விளக்கமற்றிருக்கும் யாமினி உவமை. துறந்து வாழரசனுக்குஎன்றும்பாடம்.                                     (157)

3.-இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர்:காளி கொழுந்தி
யரிடத்து மகவை யுண்டாக்குமாறு வீடுமனிடம் சொல்ல,
வீடுமன் மறுத்துக்கூறலைத் தெரிவிக்கும்.

மைந்தகேட்டிநின்றுணைவன் வானடைந்தபின்மதிமுதலெனத்தக்க
இந்தமாமரபரும்பனிப் பகைச்சிரத்தெழலியொத்ததுமன்னோ
முந்தைநான்மறைமுதலிய நூல்களின்முறைமைநீயுணர்கிற்றி
எந்தநீர்மையினுய்வதென் றறிகிலேனிடரினுக்கிருப்பானேன்.

     (இ-ள்.) மைந்த - குமாரனே! கேட்டி - கேட்பாய்: நின் துணைவன் - உனது
உடன்பிறந்தான், வான் அடைந்தபின் - விண்ணுலகத்தை யடைந்தபின்பு, 'மதி
முதல்சந்திரனே குலமுதல்வன்,' என தக்க - என்று சொல்லுந் தகுதிபெற்ற, இந்த
மா மரபு - இந்தச்சிறந்தவமிசமானது, (இடையறாமைக்குக் காரணமான
புதல்வரையில்லாமையால்),எழிலி சிரத்து - முகிலின்மேல், [மேகத்தினால்
மறைக்கப்பட்ட என்றபடி], அரும்பனிபகை-சூரியனை, ஒத்தது - நீ-, முந்தை
நான்மறை முதலிய நூல்களின் முறைமைஉணர்கிற்றி-பழமையான நான்குவேதம்
முதலிய நூல்களின்முறைமையையுணரவல்லாய்: எந்த நீர்மையின் உய்வது -
எந்தமுறைமையினால்(இந்தக்குலம்) அழியாமல் நிற்கவல்லது? என்று -
என்பதைபற்றி, அறிகிலேன் -அறியும்வல்லமையில்லேன்: (அதனால்), இடரினுக்கு-
துன்பத்திற்கு, இருப்பு ஆனேன்- இருப்பிடமானேன்; (எ-று.)- மன்ஓ - அசை.

     சூரியன் மேகத்தினால் மறைப்புண்டு மழுங்கிக்கிடப்பதுபோல, உன் தம்பி
யிறந்தபின் இந்தச்சந்திரகுலம் மழுங்கிக்கிடக்கின்றதென்பது,
முதலிரண்டடியின்பொருள். "அரும்பனியச்சிரத்து" என்ற பாடத்துக்கு -
பனியைக்கொண்ட முன்பனிக்காலத்து,எழிலி [மேகத்தை] யொத்தது என்க:
முன்பனிக்காலம் பனியால்மூடி மழுங்கியிருக்குமென்க.அச்சிரம் - முன்பனிக்காலம்.
                                                             (158)