(இ-ள்.)மரு வரு கற்பகம் மாலைமௌலிஉம் - வாசனைமிகுந்த கற்பகமரங்களின் மலர்களாலாகிய மாலையைச்சூடியமுடியையுடைய இந்திரனும், விரி புகழ் மைந்தன்உம் - பரவிய கீர்த்தியையுடைய அவன் மகனானஅருச்சுனனும்,-ஒருபெரு மாதலி ஊரும் தேரின்மேல் - ஒப்பற்ற பெரிய மாதலியென்பவன் செலுத்துகின்ற ஒரு தேரின்மேல், இரு மரகதம் கிரி இருந்த என்ன - மரகதரத்தினமயமான இரண்டுமலைகள்ஒருங்கு ஏறியிருந்தனபோல, விளங்கினார்- பிரகாசித்தார்கள்;(எ-று.) கருநிறமும் பருமையும்பற்றிவந்த தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மாதலி - இந்திரன்சாரதி. மருவுஅரு - தேவலோகத்தார்க்கு அன்றிப் பிறர்க்குக் கிடைத்தற்கு அரிய என்றுமாம். கற்பகம் - கல்பகம்: தன்னிடம் வந்தவர்கட்கு நினைத்தவற்றையெல்லாம்கல்பிப்பதென்றுபொருள். மாலை மௌலி - வேற்றுமைத்தொகை யன்மொழி. இருந்ததென்னவே என்றும் பாடம். அரோ-ஈற்றசை. 135.-இதுமுதல்மூன்று கவிகள்-இந்திரலோக வருணனை. ஆயிரம்பொலங்கிரி யழித்துவானின்மேல் மாயிருமொருபுரம் வகுத்ததென்னவே பாயிரமறைபுகழ் பரமன்றேசெனச் சேயிரும்பொன்னகர் திகழ்ந்துதோன்றுமால். |
(இ-ள்.)சேய் இரு பொன் நகர் - நெடுந்தூரத்திலுள்ள பெரிய பொன்மயமான அமராவதிநகரம்,- ஆயிரம் பொலம் கிரி அழித்து-ஆயிரம் பொன்மலைகளைஅழித்து (அவற்றால்),வானின்மேல் மா இரு ஒரு புரம் வகுத்தது என்ன-ஆகாயத்தில் மிகவும் பெரியதொரு பட்டணத்தை நிருமித்ததுபோலவும், பாயிரம் மறை புகழ் பரமன் தேசுஎன - ஸ்தோத்திரரூபமான வேதங்கள் புகழ்கின்ற எம்பெருமானது தேஜோரூபமான பரமபதம் போலவும், திகழ்ந்து தோன்றும்-விளங்கிக் காணப்படும்;(எ-று.) பாயிரமென்பதுபுகழ்ச்சியென்னும் பொருளதாதலை"பாயிரங்கூறிப் படைதொக்காலென் செய்ப" என்னுமிடத்திலுங்காண்க. இனி, பாயிரம்- முகவுரை எனக்கொண்டால், முதலிலுள்ளதாகிய பிரணவத்தோடு கூடிய மறை யென்க. பாயிரம்=பாஹ்யம். பாயிரம் மறை-வரலாற்று முறைமையையுடைய வேதமுமாம். ஸ்ரீவைகுண்டத்தின் திருநாமங்களுள் ஒன்றாகியதன்னுடைச் சோதி யென்பதன் பொருளையுட்கொண்டு, 'பரமன்தேசு' என்றார். பரமபதம் மிக்க ஒளியுடைய தாதலை" மதியாதவன்கதிர்மின்மினிபோ லொளிர் வைகுந்தம்" என்றதனாலுங்காண்க. மாயிரு - ஒரு பொருட்பன்மொழி. பரமதேசென எனவும் பாடம். (135) 136. | விண்ணவர்முனிவருள் விளங்கிவாழ்தலால் நண்ணியமுடிப்பெயர்நாகம்பூணலால் எண்ணருமகபதியிருந்தமாநகர் புண்ணியன்வடிவெனப்பொலிந்திலங்குமால். |
|