பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்103

தத்தஞ்செய்தநீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாய்ஆகாயத்தை
அளாவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்ஓரடியால் விண்ணையும்
அளந்து மற்றோரடியால்அவனையும்பாதாளத்தில் அழுத்தி அடக்கினா
ரென்பது கதை.  சிறை-காவலிடம்:பாதாளத்தில் பலி சக்கரவர்த்தி உள்ள
இடத்துக்கு விஷ்ணு காவலாக வாயிலி லிருக்கிறாரென்றுஉணர்க.
பூவிரிந்தது எனவும் பாடம்.                                (137)

138.-இதுவும் மேலைக்கவியும்-ஒருதொடர்:
அருச்சுனனும்இந்திரனும் அமராவதியிற் சேர்ந்து
சுதர்மையில்ஓராசனத்து அமர்தலைக்கூறும்.

பொலிவுறுமந்நகர்புகுந்துதாதையும்
சிலைகணைபெறுதிறற்றெய்வமைந்தனும்
மெலிவுறுமின்னிடைநுடங்கமீனினும்
பலரரமாதரார்பரிவுகூரவே.

     (இ - ள்.)தாதைஉம் - தந்தையாகிய இந்திரனும், சிலைகணைபெறு
- (சிவபிரானிடத்து) வில்லையும்அம்பையும் பெற்ற, திறல் -
பராக்கிரமத்தையுடைய, தெய்வம் - தெய்வத்தன்மையையுடைய,
மைந்தன்உம் - புத்திரனானஅருச்சுனனும், பொலிவு உறும் அ நகர் புகுந்து
- அழகு மிகுந்த அவ்வமராவதிபுரியை அடைந்து,-மீனின்உம் பலர் -
ஆகாயத்தில் விளங்குகின்ற நக்ஷத்திரங்களைக்காட்டிலும் அநேகராகிய,
அர மாதரார்-தெய்வப் பெண்கள், மெலிவு உறு மின் இடை நுடங்க -
இளைத்தல்மிகுந்த மின்னல் போன்ற (தமது) இடை அசையவும், பரிவு கூர
- (தம்மைக்கண்டு) அன்பு மிகவும்,-(எ-று.)-"சிலம்பொலிகூரும் மண்டபத்,
தொரு மணியாசனத் தோங்கிவைகினார்"என்று அடுத்த கவியில் முடியும்.

     மைந்தனுக்குத்தெய்வத்தன்மை - இந்திரனது புத்திரனும் சிவனது
பக்தனுமாதல்:மின்னுவது மீன் என நட்சத்திரத்திற்குக் காரணக்குறி.  (138)

139.பருமணிவெயிலெழப் பணிலமாநிரை
தருமணிநிலவெழத்தமனியப்பெருங்
குருமணிச்சிலம்பொலிகூருமண்டபத்து
ஒருமணியாசனத்தோங்கிவைகினார்.

     (இ - ள்.) பருமணி வெயில் எழ - (தாம் தாம் அணிந்துள்ள
ஆபரணங்களிற் பதித்த) பருத்த சிவந்த இரத்தினங்களினின்று
சூரியனொளிபோன்றஒளி வீசவும், மா பணிலம் நிரை தரு மணி நிலவு எழ
- பெரிய (சிறந்த) சங்குகளின் கூட்டம் பெற்ற முத்துக்களினின்று
சந்திரனொளிபோன்றஒளி வீசவும்,-தமனியம் பெரு குருமணி சிலம்பு ஒலி
கூரும் - பொன்னாற்செய்துபெரிய நிறமுள்ள இரத்தினங்களைப்பதித்த
சிலம்பென்னும் காலணி ஓசைமிகும்படி (தேவமாதர்) நடிக்கப்பெற்ற,
மண்டபத்து - மண்டபத்திலே, ஒரு மணி ஆசனத்து -
இரத்தினங்களிழைத்ததொரு சிங்காசனத்தில், ஓங்கி வைகினார்- (யாவரினும்)
சிறந்து வீற்றிருந்தார்;(எ - று.)