தவறுதலில்லாதவார்த்தை. இரண்டாமடியில் வகரத்துக்கு யகரம், இனவெதுகை. விழிசிவவாவுளமழலாஎன்றுபிரதிபேதம். (161) 162. | இந்தத்தனியிரவின்கணின் னிருதோடழுவுறவே வந்துற்றவெனைத்தாயர்தம்வகையிற்புகல்செய்யா நிந்தித்தனைநீசெய்தவநெறியின்பயனெல்லாம் வெந்துற்றருநீறாயெழவிடுவேனெனவெகுளா. |
மூன்றுகவிகள்-ஒருதொடர். (இ - ள்.)இந்த தனி இரவின்கண் - ஏகாந்தமான இவ்விராத் திரிகாலத்தில், நின் இரு தோள் தழுவுறஏ-உனது இரண்டு தோள்களையும் ஆலிங்கனஞ்செய்யும் பொருட்டாகவே, வந்து உற்ற-வந்து சேர்ந்த, எனை- என்னை,தாயர்தம் வகையில் புகல் செய்யா - தாய்மார்முறையிலேவைத்துச் சொல்லி, நிந்தித்தனை-இகழ்ந்தாய்;நீ செய் தவம் நெறியின் பயன் எல்லாம் - நீ செய்த தவமார்க்கத்தின் பயன் முழுவதும், வெந்துற்று அரு நீறு ஆய் எழ - வெந்துபோய் எடுத்தற்கரிய சாம்பலாய் விடும்படி, விடுவேன் - சாபமிட்டு விடுவேன், என - என்று(ஊர்வசி)சொல்லி, வெகுளா - கோபித்து,-(எ - று.)-'என'என்று 164-ஆங் கவியில் தொடரும். மனைவியாகத்தன்னையங்கீகரியாமல்தாயாகவைத்துத் துதித்துக்கூறி மரியாதை செய்ததையே, தன் கருத்துக்கு மாறாகஇருத்தல்பற்றி, நிந்தித்ததாகக் கூறினாள். இந்த இரவின்கண் தனியே வந்துற்ற எனை என்றும் இயைக்கலாம். இடுவேன் என்றும் பதம் பிரிக்கலாம், (162) 163. | நின்போலமர்புரிவாரிரு நிலமன்னரினுண்டோ அன்போடழல்வருபாவையை யடைவுன்னியளித்தாய் பொன்போலிரவிடையாடவர் புகலாமொழிபுகல்வாய் வன்போவருணலமோபெருமிதமோவளர்புகழோ. |
(இ - ள்.) நின் போல் - உன்னைப்போல, அமர் புரிவார்-போரைச் செய்யும் வீரர், இரு நிலம் மன்னரின்-பெரிய பூலோகத்திலுள்ள அரசர்களில், உண்டுஓ-வேறு உளரோ? [இல்லை];(அன்றி யும் நீ), அழல் வரு பாவையை-அக்கினியிற்பிறந்த பதுமை போலழகிய திரௌபதியை, அன்போடு-அன்புடனே, அடைவு உன்னி அளித்தாய்- மனையாளாகும்முறைமையையெண்ணிக்கூடியருளினாய்;பொன் போல் இரவிடை-(காமிகளுக்குப்) பொன்போலருமையான இவ்விராத்திரியிலே, ஆடவர் புகலாமொழி புகல்வாய்-ஆண்தன்மையுடையவர் சொல்லத்தகாதசொல்லைச்சொல்கிறாய்;(நீ இங்ஙனஞ் சொல்வது), வன்புஓ- வலிமையோ? அருள் நலம்ஓ கருணையினதுநன்மையோ? பெருமிதம்ஓ- வீரமோ? வளர் புகழ்ஓ-எங்கும் வளர்கிற கீர்த்தியோ? [இவற்றுள் ஒன்றையுந் தருவதாகாதென்றபடி];(எ - று.) அன்றுதிரௌபதிக்கு உனது இன்பத்தை யருளியது போலவே இன்று எனக்கும் அருளலாகாதோஎன்னுங் கருத்தால் |