வையும், தீ கதிசெலாத - கெட்டநடை நடவாதனவும், தூய- தூய்மையுள்ளவையுமாகிய,-(எ-று.)-'பரி'என மேலைக்கவியோடுஇயையும். கடிய, கொடிய,தூய என்னும் பலவின்பால் வினையாலணையும்பெயர்கள், 'பரி' என்னும் பால்பகா அஃறிணைப்பெயருக்குவிசேஷணமாம். வென்று எனப் பிரித்து - (போமிடங்களிலெல்லாம்) வெற்றிகொண்டு எனவுமாம். பத்துத் திக்குக்களுள் ஒன்றாதலால், வானத்தை 'மேற்றிசை'என்றார். மேற்றிசை எல்லை எல்லாம் வீதி போய் - (இந்திரன் திக்காகிய கிழக்கிலிருந்து) மேற்குத்திக்கினிடம் முழுவதிலும் ஆகாயவீதியிலே நேராக ஓடி என்றும் உரைக்கலாம். ஒல்லை- விரைவுப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்; வல்லை,வல்லே என்பனவும் இவ்வாறே. கூற்றம், அம்-சாரியை. கூற்று - (பிராணிகளின் உடம்பையும் உயிரையும் வேறுபிரித்துக்) கூறுபடுத்துங் கடவுள். 'தேவர்களைஇருதிணைகளாலுங்கூறலாம்'ஆதலின், 'கூற்றம்' என்றான். உத்தம அச்சுவலக்ஷணம் முழுவதும் அமைந்தன வென்பார், 'தூய'என்றார். (194) 19. | ஆயிரம்பத்துவெம்போ ரடற்பரிபூண்டதேரும் மாயிருங்கலையின்மிக்கமாதலிதனையுநல்கிக் காயிருங்கிரணச்செம்பொற் கவசமுங்கொடுத்துப்பின்னர் வேயிருந்தெரியலாற்குச் சுரபதிவிடையுமீந்தான். |
(இ-ள்.) வெம்போர் - கொடுமையான யுத்தத்திற்குஉரிய, அடல் - வலிமையையுடைய, ஆயிரம் பத்து பரி - பதினாயிரம்குதிரைகளை,பூண்ட, - பூட்டியுள்ள, தேர்உம் - (தனது) இரதத்தையும் மா இரு கலையில்மிக்க - மிகவும் பெரிய குதிரை நூலுணர்ச்சியிற் சிறந்த, மாதலிதனைஉம்- மாதலி என்னும் (தனது) தேர்ப்பாகனையும்நல்கி - கொடுத்து,-காய்இரு கிரணம் - சுவலிக்கின்ற மிக்க ஒளியினையுடைய,செம் பொன் கவசம்உம் - சிவந்த பொன்னினாலாகியதொருகவசத்தையும், கொடுத்து-,பின்னர் - பின்பு, சுரபதி - தேவேந்திரன், வேய் இரு தெரியலாற்கு - அணிந்த பெரிய (கற்பகப் பூ) மாலையையுடையஅருச்சுனனுக்கு, விடைஉம் ஈந்தான்- (போருக்குச் செல்லுதற்கு) உத்தரவையுங் கொடுத்தான்; போர்க்குச்செல்ல, தேவேந்திரன், அருச்சுனனுக்குத் தேர் முதலியன கொடுத்து விடையுங் கொடுத்தானென்க. "விவ்விரவாதவாசத் தாமமும் விழைந்து சூட்டி"என்று கீழ்க்கூறியதற்கு ஏற்ப, 'வேயிருந்தெரியலான்' என்றார்;அன்றியும் போருக்கு உரிய தும்பைப்பூமாலையைஇப்பொழுது அணிந்துள்ளவ னென்றுமாம். தெரியல் - விளங்குவது: மாலை. கலை- குதிரையோட்டுங்கல்வி. கிரணரத்நகவசம் என்றும் பாடம். (195) 20.-விடைபெற்றஅருச்சுனன் போர்க்கோலம் புனைதல். விடையெனத்தொழுதுபோந்து வெஞ்சிலைவினோதவீரன் சுடுசரத்தூணிகொற்றப் புயத்தினிற்றுதையத்தூக்கி |
|