இடுமணிக்கவசமெய்யிலெழிலுறப்புனைந்துதன்னைத் திடமுடைச்சிங்கமன்னான்செருத்தொழிற்கோலஞ்செய்தான். |
(இ-ள்.)திடம் உடை சிங்கம் அன்னான்-வலிமையையுடையஆண் சிங்கத்தை யொத்தவனாகிய,வெம் சிலைவினோதம்வீரன் - கொடிய வில்லின் தொழிலையேபொழுதுபோக்காகவுடைய வீரனாகியஅருச்சுனன், விடை என-(உனக்கு) நியமனம் என்று (இந்திரன் சொல்லி) விடுப்ப, தொழுது-அஞ்சலிசெய்து, போந்து-புறப்பட்டு [சபையைவிட்டுவெளிவந்து], சுடு சரம்தூணி-(பகைவர்களை)அழிக்கின்ற அம்புகளையுடைய தூணீரங்களை,கொற்றம் புயத்தினில்-வெற்றியையுடைய தோள்களிலே, துதைய தூக்கி-அழுந்தக் கட்டி,-இடுமணி கவசம்-பதித்துள்ள இரத்தினங்களையுடையகவசத்தை, மெய்யில்-உடம்பிலே, எழில்உற- அழகுமிக, புனைந்து-தரித்து,-(இவ்வாறு),தன்னை-,செருதொழில் கோலம் செய்தான்-போர்த்தொழிலுக்கு உரிய அலங்காரத்தைச் செய்து கொண்டான்; (எ-று.) அருச்சுனன்சவ்வியசாசி யாதலால், 'தூணீரங்களைத்தோள்களிற்கட்டி', என்றது. சுடு சரம் - நெருப்பில்வைத்துக் காய்ச்சி வடித்துக் கூர்செய்த அம்பு என்றுமாம். தூணி - பாணப்புட்டில். தூக்கி - தொங்கவிட்டு. சிங்கம் நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமை.(196) 21.-அருச்சுனன்நிவாதகவசரைக்குறித்துவினவ, மாதலி அவர்களியல்பைக்கூறலுறுதல். மோதுபோர்தனக்குவேண்டு முரட்படைபலவுங்கொள்ளாக் கோதைவிற்றடக்கைவீரன் கொடிமணித்தெர்மேற்கொண்டு மாதலிப்பெயராயந்த வஞ்சரெத்திசையரென்றான் சூதனுமவனுக்கன்னோரியல்பெலாந்தோன்றச்சொல்வான். |
(இ-ள்.)கோதை - நாணியையுடைய, வில் - காண்டீவத்தையேந்திய, தட - பெரிய, கை - கையையுடைய, வீரன்-அருச்சுனன், மோது போர்தனக்கு வேண்டும் - (பகைவர்களைத்)தாக்குகின்ற யுத்தத்திற்கு அவசியமான, முரண் படை பலஉம் - வலிமையையுடைய ஆயுதங்கள் பலவற்றையும், கொள்ளா-எடுத்துக்கொண்டு,-கொடிமணி தேர் மேல் கொண்டு-துவசத்தையும் மணிகளையுமுடைய(அவ்விந்திரனது) தேரின்மேலேறிக்கொண்டு, (சாரதியை நோக்கி), 'மாதலிபெயராய் - மாதலியென்னும் பேருள்ளவனே! அந்த வஞ்சர் - வஞ்சனையையுடைய அந்த நிவாதகவசர்கள், எ திசையர்-எந்தத்திக்கிலே யுள்ளவர்கள்?' என்றான்-என்றுவினாவினான்: சூதன்உம் - அத்தேர்ப்பாகனும், அவனுக்கு - அவ்வருச்சுனனுக்கு, அன்னோர்இயல்பு எலாம் - அவ்வசுரர்களுடைய (இருப்பிடம் முதலிய) தன்மைகளையெல்லாம்,தோன்ற - விளங்க, சொல்வான் - சொல்வானானான், (எ - று.)-அதுமேற்கவியிற் காண்க. |