கோதை -கைக்கவசமுமாம்; "பூப்புனைமாலையும்மாலைபுனை மாதரும், தோற்புனைவின்னாண்டொடர்கைக் கட்டியுங், கோச்சேரன்பெயிர் மயிர் காற்றுங் கோதை"என்பது திவாகரமாதலின். மணி - அடிக்கும்மணி; கண்டை: இது - அழகிற்காகவும், வெற்றியை விளக்குதற்காகவுந் தேரிற் கட்டப்படும்;இனி மணித்தேர்-இரத்தினங்களைப்பதித்ததேர் எனவும், உறுதியமைந்த தேர் எனவுமாம். சூதன் - ஸூதன்;வடசொல். எத்திசைக்கேயென்றான்என்று பிரதிபேதம். (197) 22.-நிவாதகவசரின்இயல்பைக்கூறிவிட்டு மாதலி தேர்தூண்டுதல். தோயமாபுரமென்றுண்டு தொடுகடலழுவத்தொன்று மாயமாபுரமேயொக்கு மப்புரமதனில்வாழ்வோர் தீயவரென்றுசெப்பிச் சித்திரசேனன்றன்னைத் தூயநன்னெறிகாட்டென்று சூதன்றேர்தூண்டுமெல்லை. |
இதுவும், மேற்கவியும் - ஒருதொடர். (இ-ள்.)'தொடுகடல் அழுவத்து-(சகரசக்கரவர்த்தியினது புத்திரர்களால்) தோண்டப்பட்ட கீழ்கடலினது பரப்பிலே, தோயமாபுரம் என்று - (நீரிடையேயுள்ள பெருநகரமாதலால்) தோயமாபுரமென்று பேர் கூறப்பட்டு, ஒன்று - ஒரு நகரம், உண்டு - உளது;(அது), மாயம் மா புரம் ஏ ஒக்கும்-வஞ்சனையமைந்ததொருபெரிய பட்டணத்தையே ஒக்கும்;அ புரம் அதனில் வாழ்வோர்-அந்நகரத்தில் வாழ்பவர்கள், தீயவர் - கொடுந்தன்மை யுடையவர்கள்,'என்று செப்பி-என்று (அருச்சுனனுக்குச்) சொல்லி, சித்திரசேனன் தன்னை-சித்திரசேனனென்பானொருகந்தருவனை நோக்கி, தூய நல் நெறி காட்டு என்று-குற்றமில்லாத நல்ல வழியைக் காண்பிப்பா யென்றுஞ்சொல்லி, சூதன்-மாதலி, தேர் தூண்டும் எல்லை- தேரைச் செலுத்துமளவில்,-(எ-று.)-"வானவமகளிரெல்லாம் நக்கார்"என மேற்கவியில் முடியும். சூரியகுலத்தில்தோன்றிய சகரனென்னும் அரசன் தனது மூத்தமனைவியின் மகனும் மிகுந்த துர்க்குணமுடையவனுமாகிய அஸமஞ்சனென்பவனைக்காட்டுக்குத் துரத்திவிட்டு அவன் மகனாகிய அம்சுமான் என்பவனோடும்தனது இளையமனைவியின்மைந்தர் அறுபதினாயிரவரோடும்அரசாண்டு வருகையில் அசுவமேதயாகஞ்செய்யத் தொடங்கிப் பூமிப்பிர தக்ஷிணத்தின் பொருட்டு நல்லிலக்கணமமைந்தவொரு குதிரையைச் செலுத்த, அதனைஇந்திரன் மாயையாற்கவர்ந்து பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த கபிலமகாமுனிவரது புறத்திலே ஒளித்துவைக்க, அது தேடும்பொருட்டுச் சென்ற சகரகுமாரர்கள் மண்ணுலகத்தும் விண்ணுலகத்துங் காணாமற்கலங்கிப் பூமியை வடகீழ்த்திசையில் நூறு யோசனைவிஸ்தாரம் தமது கைந்நகங்களால் தோண்டிப் பள்ளமாக்கி அதன் வழியாய்ப் பாதாளஞ் சென்றனரென்றும், அவர்கள் |