பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்151

      தோற்றம் - தோன்றற்பாடு: தொழிற்பெயர்; வலிமையுமாம். திண்திறல் -
ஒருபொருட்பன்மொழி.                                        (207)

32.-எட்டுக்கவிகள்-தோயமாபுரத்தசுரரியல்பை
மாதலிகூறுவன.

தெழித்தசொல்லினர் சீற்றவெந்தீயுக
விழித்தகண்ணினர் விண்முகிலைக்கவின்
அழித்தமேனிய ராழ்வெம்பிலத்தையும்
பழித்தகன்ற பெரும்பகுவாயினார்.

             பத்துக்கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) (அவ்வசுரர்கள்),-தெழித்தசொல்லினர் - அதட்டிக் கூறுகின்ற
சொற்களையுடையவர்;சீற்றம் வெம் தீ உக விழித்த கண்ணினர்-கோபத்தாற்
கொடிய நெருப்புச்சிந்த விழிக்கின்ற கண்களையுடையவர்;விண் முகிலை
கவின் அழித்த மேனியர்-(தமது கருநிறத்தால்) ஆகாயத்திற்செல்கின்ற
காளமேகத்தை நிறங்கெடச்செய்த உடம்பை யுடையவர்;ஆழ்
வெம்பிலத்தைஉம் பழித்து அகன்ற பெரு பகு வாயினார்-ஆழ்ந்து
பயங்கரமாகவுள்ள பிலத்துவாரத்தையும் (தமக்கு ஒப்பாகாதென்று) நிந்தித்து
(அதனிலும்) பரந்த பெரிய திறந்த வாயையுடையவர்;(எ-று.)

     தெழித்தல் - பேரொலிசெய்தலுமாம்.  விண்முகிலைக்கவின் அழித்த
மேனியர் என்பதற்கு - நீர்கொண்டமேகத்தினுங் கரிய உடம்புள்ளவர் என்று
கருத்து.  சொல்லினர் முதலிய பயனிலைகளுக்கெல்லாம்'அவ்வசுரர்கள்'
எனத் தோன்றாஎழுவாய்வருவிக்க;அன்றி இவற்றை, மேல்38-ஆம்
கவியிலுள்ள 'மூன்றுகோடியசுரர்'என்பதற்கு விசேஷணமாகக் கொள்ளினும்
அமையும்.  பிலம் - பாதாளவழி.  பகுவாய் - பேழ்வாய்           (208)

33.மண்ணுநீரும் அனலுமருத்துடன்
விண்ணும்வேண்டின்விரைவின்முருக்குவார்
எண்ணெயூட்டிவிருட்குழம்பாலெழில்
பண்ணியாக்கைவகுத்தன்னபான்மையார்.

     (இ-ள்.)மண்உம் - பிருதிவியும், நீர்உம்-அப்புவும், அனல்உம்-
அக்கினியும், மருத்துடன்-வாயுவும், விண்உம் - ஆகாசமும், (ஆகிய
பஞ்சமகாபூதங்களையும்),வேண்டின்-(அழிக்க), விரும்பினால்,விரைவின்-
சீக்கிரத்தில், முருக்குவார் - அழிக்கவல்லவர்: இருள் குழம்பால்-இருளாகிய
குழைசேற்றினால்,எழில் பண்ணி - வளர்ச்சி பெறச் செய்து, எண்ணெய்
ஊட்டி-(மேலே) எண்ணெயைத் தடவி, வகுத்து அன்ன-அமைத்தாற்
போன்ற, யாக்கை பான்மையார்-உடம்பின் தன்மையையுடையவர்;(எ-று.)

     லயகாலத்தில்நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்புக் காற்றிலும்,
காற்று விசும்பிலும் ஒடுங்கு மென்பது நூல்வழக்காத