பக்கம் எண் :

152பாரதம்ஆரணிய பருவம்

லால், 'மண்ணுநீருமனலு மருத்துடன் விண்ணும்' என வைத்தார்.
மேனியினது கருமையும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி,
'எண்ணெயூட்டியிருட்குழம்பாலெழில் பண்ணியாக்கை வகுத்தன்னபான்மையார்'
என்றது: தற்குறிப்பேற்றம்.  எழிலாவது - வளர்ந்தமைந்த பருவத்தும் இது
வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்.    (209)

34.மற்புயாசலத் தின்வலியாலிகல்
சற்பராசன் றலைச்சுமைமாற்றுவார்
அற்பவாழ்வுடையம்போருகத்தர்தம்
கற்பகோடிகடையுறக்காண்குவார்.

     (இ-ள்.) மல்- மற்போரிற்பயின்ற, புய அசலத்தின் - மலைபோலும்
(தமது) தோள்களின், வலியால்-பலத்தினால்,இகல் சற்பராசன் தலைசுமை
மாற்றுவார்-(கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) வலிமையையுடைய
பாம்புகளுக்கு அரசனாகியஆதிசேஷனது தலையின்பாரத்தைத் (தாம்
பூமியைத் தாங்கித்) தவிர்க்க வல்லவர்: அற்பம் வாழ்வு உடை
அம்போருகத்தர்தம் - மிகச் சிறிய வாழ்நாளையுடையபிரமர்கள் பலரது,
கற்பம் கோடி-ஆயுள்நாள் பலவற்றை, கடை உற-முடிவுபோக, காண்குவார்
- பார்க்குந் தன்மையுள்ளவர்;(எ-று.)

     மல்தொழிலாவது- ஆயுதமின்றிக்கே கை கால் முதலிய
உறுப்புக்களினாற்போர்செய்தல்.  புஜ + அசலம்=புஜாசலம்: தீர்க்கசந்தி:
அது புயாசலம் எனத் திரிந்தது.  அசலம் - சலியாதது.  சற்பம் - ஸர்ப்பம்:
எதுகை நோக்கிய விகாரம்.  சுமை-சுமக்கப்படுவது: ஐ - செயப்படுபொருளீறு.
மற்றை யெல்லாப் பிராணிகளுடைய வாழ்நாளினும் பெரிதாகிய பிரமனது
ஆயுளும் இவ்வசுரர்களது தீர்க்காயுசை நோக்குமிடத்துச் சிறிதாகத்
தோன்றுமென்பார், 'அற்பவாழ்வுடை யம்போருகத்தர்'என்றார். வாழ்வு-வாழும்
நாளுக்குத் தொழிலாகுபெயர். அம்போருகம்=அம்போருஹம்: தாமரை;நீரில்
முளைப்பதுஎன்று பொருள்: இது-காரணங் கருதியபொழுது அல்லி ஆம்பல்
குவளைநெய்தல் முதலிய நீர்ப்பூங்கொடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும்,
காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்த் தாமரைக்கே செல்லுதலாலும்
காரணவிடுகுறிப்பெயர். இக்கொடியின் பெயர், அதன்மலருக்குப்
பொருளாகுபெயர்; முதலாகுபெயரெனினும் ஒக்கும்: இதுபோல்வனவற்றை
முதலுக்குஞ் சினைக்கும்பொதுவென்பாரு முளர்.  அம்போருகமலரில்
உதித்தவர், அம்போருகத்தர். கற்பம் - பிரமனாயுள்;பெரியதொரு
காலவரையறை. கோடி - இங்கே, மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எடுத்துக்
காட்டியவாறு.                                               (210)

35.பாழியாடக வெற்பிற்படச்சிரங்
கீழதாகக்கிளர்மூச்சடக்கிநின்று
ஊழிநாளுந்தவ முயன்றோங்குவார்
ஆழிநீருமளவிடுந்தாளினார்.