41.-விண்ணிற்செல்லுந்தேரைப் பூமியில் மாதலி செலுத்த, அருச்சுனன்நாணோசையெழுப்புதல். விண்ணின்மீது விரைவுறுந்தேரினை மண்ணின்மீது நடத்தினன்மாதலி அண்ணலுந்த னருஞ்சிலைநாணியின் துண்ணெனோதைதொடரத்துரத்தினான். |
(இ-ள்.)மாதலி - அந்த இந்திரன்சாரதி, விண்ணின்மீது விரைவு உறும் தேரினை-ஆகாயத்திலேவேகமாகச் செல்லுதலைப்பொருந்திய இரதத்தை, மண்ணின்மீது-பூமியின்மேலே, நடத்தினன்-(மந்தகதியாகச்) செலுத்தினான்: அண்ணல்உம்- பெருந்தன்மையுடைய அருச்சுனனும்,-தன்அரு சிலை- (பெறுதற்கு) அரிய தனதுவில்லினது, நாணியின்-நாணினது, துண்ணென் ஓதை-(கேட்போர்க்கு) அச்சத்தை விளைக்கின்றஓசை, தொடர - (சித்திரசேனனைத்தொடர்ந்து) செல்லும்படி, துரத்தினான்-(அவ்வோசையை) விரைவிற் செலுத்தினான்;(எ-று.) வில்நாணியைக்கைவிரலால் தெறித்துப் பகைஞர் செவியிற்படும்படி பேரோசையைவிளைத்தானென்பதாம். தொடரத் துரத்தினான்என்றதனால் பின்னே புறப்பட்ட ஓசை முந்திச்சென்றமை பெறப்படும்: ஆனதுபற்றியே, 43-ஆங் கவியில் தூதர்க்குமுன் நாணோசைசெவிப்புகுந்தமை கூறப்படுகின்றது. விண்ணின்மீது, மீது - ஏழனுருபு. அண்ணல் - ஆண்பாற்சிறப்புப்பெயர். துண்ணெனல் - அச்சக்குறிப்பு. துரத்து - துர என்பதன் பிறவினை: து - பிறவினைவிகுதி. (217) 42.-தேரொலியோடுநாணொலிசேர்ந்துதிசையெங்கும் பேரொலியாதல். தேரினார்ப்பொலியுஞ்சிறுநாணெனும் காரினார்ப்பொலியுங்கலந்தெங்கணும் பாருமேற்றிசை யும்பகிரண்டமும் சேருநாற்றிசை யுஞ்செவிடாக்கவே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.)தேரின் - (அருச்சுனன் ஏறிவந்த) இரதத்தினது, ஆர்ப்பு ஒலிஉம்-ஆரவாரமாகிய ஓசையும், சிறு நாண் எனும் காரின்-(அவன் கை வில்லினது) சிறிய நாணியென்கிற மேகத்தினது, ஆர்ப்பு ஒலிஉம்- (இடிபோன்ற) ஆரவாரமாகிய ஓசையும், பார்உம் - பூமியிலும், மேல் திசைஉம்-ஆகாயத்திலும், சேரும் நால் திசைஉம்-பொருந்திய நான்கு திக்குக்களிலும், பகிர் அண்டம்உம் - (ஆக இவ்வண்டத்தில்மாத்திரமே யன்றி) வெளியண்டங்களிலும், எங்கண்உம்-எவ்விடத்தும், கலந்து - சென்றுசேர்ந்து, செவிடு ஆக்க-(அங்கங்கேயுள்ள எல்லாப் பிராணிகளையும் அதிர்ச்சி மிகுதி |