பக்கம் எண் :

158பாரதம்ஆரணிய பருவம்

மாயையினாற்செய்யும் வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள், மறுக-மனம்
வேறுபடும்படி, வெம் புண்ணின்மேல் தீயை ஒப்பன - மிக வருத்துகின்ற
விரணத்தின்மேல் வைத்த நெருப்பை ஒப்பனவாகிய, சில் உரை-சில
வார்த்தைகளை,சொல்லுவான் - சொல்பவனானான்(எ-று.)-அது
மேற்கவியிற் கூறுகின்றார்.

     முன்னேதேர்நாணிகளின் தொனிகளைக்கேட்டுத் தேவராசன்
போருக்கு வருகிறானென்றெண்ணிச்சீற்றங்கொண்ட அவ்வசுரர்களுக்கு
மனிதனொருவன்போர்க்கு வந்துள்ளானென்று தூதன் சொல்லும் வார்த்தை
அவ்வருத்தத்தின்மேல் மிகவருத்தத்தை மூட்டு மாதலால், 'புண்ணின்மேல்
தீயையொப்பன'என்றார்:"இயம்பியசொல்மருமத்தி னெறிவேல் பாய்ந்த,
புண்ணிலாம் பெரும்புழையிற்கன னுழைந்தாலெனச் செவியிற் புகுதலோடும்"
என்றார்கம்பரும். போய, யகரவொற்று-இறந்தகாலவிடைநிலை. மாயம்-
ஒருமந்திரசக்தி.                                          (220)

45.-அருச்சுனனோடுபொரவருமாறு அவுணரிடம்
தூதன் கூறுதல்.

ஒருகுலத்தினில் வேந்துமொவ்வாதுயர்
குருகுலத்திற் குனிசிலைவீரற்குத்
தருகயுத்தந் திறலுடைத்தானவர்
வருகமற்றும் வரூதினிதன்னொடும்.

                   இரண்டு கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.)'ஒருகுலத்தினில் வேந்துஉம் ஒவ்வாது - எந்தக் குலத்திற்
பிறந்த எவ்வரசனும் ஒப்பாகாமல், உயர் - சிறந்துள்ள, குரு குலத்தில் குனி
சிலைவீரற்கு - குருகுலத்திற்பிறந்த வளைந்தவில்லையுடைய அருச்சுனனுக்கு,
திறல் உடை தானவர் - வலிமையுடைய அசுரர்கள், யுத்தம் தருக - போரைக்
கொடுப்பாராக;மற்றுஉம் - மேலும், வரூதினி தன்னொடுஉம்வருக -
சேனையோடும்வருவார்களாக;'(எ-று.)

     அசுரர்களே! நீங்கள் உண்மையாகப் போர்செய்யுந்
திறமையையுடையீராயின் சேனையோடுவந்து எங்கள் அருச்சுனனோடு
போர் செய்து வெல்லுங்கள், பார்ப்போம் என்றான். குரு என்பவன்,
சந்திரகுலத்திற் பிறந்த பிரசித்திபெற்ற ஓரரசன்: இவனால்,அக்குலம்
'குருகுலம்'என்றும், அந்நாடு 'குருக்ஷேத்திரம்'என்றும், அக்குலத்தவர்
'கௌரவர்'என்றும் பேர்கொண்டமை காண்க.  தானவர் - தனுவின்
மக்கள், தத்தி தாந் தநாமம்; இது, முன்னிலையிற்படர்க்கைவந்த
இடவழுவமைதி; 
அண்மைவிளியுமாம்.                        (221)

46.-அதுகேட்டஅசுரர் ஏளனஞ்செய்து சொல்லலுறல்.

என்றுதூதனிசைத்ததுகேட்டலும்
நன்றெனக்கை புடைத்துநகைத்திடாக்