பக்கம் எண் :

164பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) முந்துகோபம் அசுரர் - முன்கோபத்தையுடைய அசுரர்கள்,
முடுகு தேர் - விரைந்துசெல்கின்ற தங்கள் தேர்களெல்லாம், உந்து வீரன்
ஒரு தனி தேரினை- (மாதலியாற்) செலுத்தப்படுகின்ற அருச்சுனனது
ஒப்பில்லாத வேறு துணையில்லாததேரொன்றை, வந்து சூழ-வந்து சுற்றி
நிற்க,-மதுமலர் கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தின் - தேனினையுடைய
பூங்கொத்தைச் சுற்றிலும் மொய்க்கின்ற இசைப்பாட்டையுடைய வண்டுகளின்
கூட்டம்போல, வளைத்தார்- (அருச்சுனனைச்)சூழ்ந்துகொண்டார்கள்;
(எ-று.)

     "அத்தினகர மகரமுனையில்லை"என்ற சூத்திரத்து 'அகரமுனை'
என்றதன் உபலக்ஷணத்தால், 'குழாத்தின்'என்பதில் குலாம் என்பதன்
மவ்வீறொற்றழிந்துநின்ற ஆகாரத்தின் முன் அத்துச்சாரியையின்
முதலகரங்கெட்டது;உபலக்ஷணமாவது - ஒருமொழி, ஒழிந்த தன்
இனங்களையுங்குறிப்பது:[நன்-பொது-7.]முந்துதோயவசுரர் என்று
பிரதிபேதம்.                                            (231)

56.-அவுணர்அருச்சுனன்மேற் கணைதூவுதல்.

நீலமால்வரை யொன்றினெருக்கிவீழ்
காலமாமுகி லென்னக்கடியவர்
கோலும்வார்சிலைக்கொண்டலன்னான்மிசைச்
சூலநேமி சுடுசரந்தூவினார்.

     (இ-ள்.)நீலம் மால் வரை ஒன்றில் - நீலநிறமுள்ள பெரியதொரு
மலையின்மேல்,நெருக்கி - (ஒன்றோடொன்றுதம்மில்) நெருக்குண்டு, வீழ் -
இறங்குகின்ற, காலம் மா முகில் என்ன - கார்காலத்துக் கரிய
மேகங்கள்போல, கடியவர் - கொடுந்தன்மையுடைய அசுரர்கள், கோலும்
வார் சிலை- வளைந்தநீண்ட வில்லையுடைய,கொண்டல்
அன்னான்மிசை-மேகம்போன்றஅருச்சுனன் மேலே, சூலம் -
சூலாயுதங்களையும்,நேமி - சக்கரங்களையும்,சுடுசரம் - (பகைவர்களை)
அழிக்கின்ற அம்புகளையும்,தூவினார்-பெய்தார்கள்;(எ-று.)

     நீலமலை- அருச்சுனனுக்கும், காலமுகில்கள் - அசுரர்களுக்கும்
உவமை.  நீலவரை - இந்திர நீலரத்தினமயமானதொரு மலையென
இல்பொருளுவமையுமாம்.  மால் - உரிச்சொல்.  மா-பெரிய என்றுமாம்.
'சிலைக்கொண்டலன்னான்'என்றதனால்,அருச்சுனனது காண்டீவத்துக்கு
இந்திரவில் உவமையா மென அறிக.  "விற்கொண்டமழையனான்" என்றார்
கம்பரும். அருச்சுனனது பெருமை வலிமை அழித்தற்கருமை பற்றி
மலையையும்,அசுரர்களது கருமை பெருந்தோற்றம் ஆரவாரம் அம்புமழை
பொழிதல் பற்றி முகிலையும்உவமை கூறினார்.                   (232)